செவ்வாய், 5 ஜூன், 2018

கதம்பம் – பழைய சோறு – மறுசுழற்சி – வாழைப்பூ வடாம் - தேர்


இன்றைய உணவு!!!


மண்பாத்திரத்தில் செய்த கறிவேப்பிலைக் குழம்பு, ஜவ்வரிசி வடாம், கோவைப் பயணத்தில் தோழி வாங்கித் தந்த பப்படம்!!
 
பப்படம் சாப்பிட்டு பல வருடங்கள் ஆச்சு. இங்கே அப்பளம் தான். வழக்கம் போல் பதிவின் மூலம் சாப்பிட வாங்க.


பழைய சோறு:திருவானைக்காவல் வழியாகப் பேருந்தில் வரும் போது ஒரு கடையின் பதாகை கண்ணில் பட்டது.

கடையின் அலமாரிகளில் மண் குவளைகள் அடுக்கப்பட்டிருந்தது. வாங்குவதற்கும் ஆட்கள் தயாராக இருந்தனர்.

கடையின் பெயர் பழைய சோறு!!!

ஆம்!! பழைய சோறு தான் இங்கு விற்பனையே!!!

வீட்டில் மீந்த சாதத்தை தண்ணீர் விட்டு வைத்து, கரைத்து சாப்பிட்டது போய், கடையில் வாங்கத் தயாராக இருக்கின்றனர்!

திருவரங்கத்தில் சித்திரைத் தேர்!!!சென்ற மாதம் திருவரங்கத்தில் சித்திரைத் தேர். காலையில் தேரோட்டத்தைப் பார்த்தோம். எங்கும் கும்பல். சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தும், பல ஊர்களிலிருந்தும் மக்கள் வெள்ளம் போல திரண்டிருந்தனர்.

வீதிகளில் படுத்து உறங்கி கிடைக்கும் உணவை சாப்பிட்டு, தங்கள் நேர்த்திக்கடன்களையும், பக்தியையும் ரங்கனிடம் செலுத்தினர். எந்த இடையூறும் இல்லாமல் தேர் சீக்கிரமே நிலைக்கு சென்றது.

நான் நின்ற இடத்தில் ஒழுங்காக விழாமல் நின்று தேரோட்டத்தைப் பார்ப்பதே பெரிய விஷயமாக இருந்ததால், புகைப்படமெடுக்க முடியவில்லை. என்னவர் காலை 6 முதல் வளைத்துக் கட்டி எடுத்த படங்கள் அவருடைய பதிவுகளில் விரைவில் வரும்.

மாலை தேரோடிய நான்கு வீதிகளில் வீதி பிரதட்சணம் செய்தோம். அங்கு போடப்பட்டிருக்கும் கடைகளைப் பார்வையிட்டு ஒருசில பொருட்களையும் வாங்கிக் கொண்டோம். அப்போது மகள் எடுத்த புகைப்படம் இதோ.
 
வாழைப்பூ வடாம்


திருவரங்கத்தில் இங்கே இடியும், காற்றும் பலமா இருந்தது. மழை இப்போ தான் தூறலுடன் ஆரம்பித்த வேளையில்… தேநீருடன் சிவகங்கையில் மாமி கொடுத்த வாழைப்பூ மற்றும் வெங்காய வடாம்!

கடைசி பெஞ்ச்!

மகளுக்கு பள்ளி ஆரம்பித்து விட்டார்கள்! இந்த வருடம் முதல் நாள் பள்ளிக்குச் செல்லும் போது:

கடைசி பெஞ்ச் தான் அப்பாவுக்கும், எனக்கும். நாம உயர ஃபேமிலி. அதனால கடைசில உட்கார வெச்சா டல்லாகக் கூடாது. ஒரே டீச்சர் எல்லா கிளாஸூக்கும் வர மாட்டாங்க! ஃபிரண்ட்ஸ் பிரிஞ்சிட்டா வருத்தப்படக்கூடாது. எதையும் ஈஸியா எடுத்துக்கோ!!

எவ்வளவு வருஷம் ஆனாலும் இதெல்லாம் சொல்ல வேண்டியிருக்கு.

தற்போது வாசிப்பில்!மகள் பஞ்சுவிரட்டும், நான் 12ம் மணிமாறனும்... வயிறு குலுங்கும் சிரிப்பு பக்கமெங்கும். ஒருவருக்கொருவர் அவரவர் ரசித்த வரிகளை பகிர்ந்து கொள்கிறோம். பிரமாதம் கணேஷ் சார். வாழ்த்துக்களும், பாராட்டுகளும்..மேலும் பல படைப்புகள் உங்கள் எழுத்துகளால் மிளிரட்டும்.

ரோஷ்ணி கார்னர்:

பேக்கிங் செய்து வரும் அட்டை டப்பாக்களை ( அ ) பெட்டிகளை வெட்டி தனக்கு வேண்டியவற்றை செய்து கொள்வாள். அவளுடையப் பொருட்களை வைக்கவும், ரிமோட், செல்போன் வைக்கவும், எனக்கு கத்தி, கரண்டிகள் வைக்கவும் என பலவிதத்தில் உபயோகப்படுத்திக் கொள்வாள்.

செருப்பு ( அ ) ஷூ வைத்து தரும் டப்பா முதல், பார்சல் வரும் டப்பா வரை இங்கு எதையும் வீணடிப்பதில்லை. அப்படிச் செய்த சிலவற்றின் புகைப்படங்கள் மேலே!

விரைவில் வேறு சில கதம்பச் செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

ஆதி வெங்கட்

32 கருத்துகள்:

 1. ஆதி, வெங்கட்ஜி இருவருக்கும் இனிய காலை வணக்கம்.

  கீதா

  பதிலளிநீக்கு
 2. ஆஹா! ரோஷ்னி குட்டிக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்!!! ரொம்ப அழகா செஞ்சுருக்காங்க..சூப்பரா இருக்கு. வெரி க்ரியேட்டிவ்...

  எனக்கும் ரோஷ்ணிக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பது போல இருக்கே...ஹா ஹா ஹா ஹா ஹா ஹா...நானும் ஒரு காலத்தில் இப்படித்தான் செய்து வைத்திருப்பேன். அப்புறம் ஊர் ஊராக மாறியதால் கொஞ்சம் குறைந்தது. இப்போதும் என்றாலும் முன்பளவு இல்லை. இப்போது பைகள் தைப்பது ..டோர் மேட் செய்வது மட்டும்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரோஷ்ணிக்கும் உங்களுக்கும் தொடர்பு..... ஹாஹா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 3. வாசிப்பு ஆஹா அவர் கலக்குவாரே நகைச்சுவையில்!!! தொடருங்கள்...பார்க்கணும் நானும்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். கணேஷ் பாலாவின் நகைச்சுவை நாம் ரசிக்கும் விஷயம் ஆயிற்றே.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 4. பப்படம் ஆமாம் இங்கு கிடைக்க மாட்டேங்கிறது. அம்பிகா ஸ்டோரில் கிடைக்கும் சில சமயம். அது தனி சுவை..

  கறிவேப்பிலை குழம்பு செம...மண் சட்டியில்..நாவூறுது. வடாம் ஆஹா

  வெங்காய வடாம் வாழைப்பூ வடாம் அதுவும் சூப்பர் நாவில் நீர்...

  பழைய சோறு விற்பனைக்கு!! இப்பல்லாம் பாரம்பரியம் அப்படின்ற பேர்ல நடக்கும் ஒரு நிகழ்வு....ஒரு சிலது கொள்ளையும் கூட..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தலைநகரில் மலையாளிகள் கடைகளில் பப்படம் கிடைக்கிறது. ஆனால் அத்தனை சுவையில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 5. ரோஷ்ணி குட்டி எடுத்த ஃபோட்டோ சூப்பரா இருக்கு..! அப்பாவுக்குத் தப்பாத புலிக்குட்டி!!!ஹா ஹா ஹா

  உயரஃபேமிலி அட்வைஸ் ரசித்தேன்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உயர ஃபேமிலி ஹாஹா... சில பயன்களும் உண்டு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 6. வாழைப்பூ வடாம் சாப்பிட்டதில்லை. செய்ததும் இல்லை. வாழைப்பூன்னா அடை இல்லைனா பருப்பு உசிலி, சில சமயம் வடை! ரோஷ்ணியின் கைவண்ணம் ஏற்கெனவே அறிந்தாலும் பிரமிக்க வைக்கிறது மீண்டும் மீண்டும். அப்புறமாப் பப்படம் தெற்கு கோபுர வாசலில் ஒரு மலையாளப் பெண்மணியின் கடையில் எப்போதும் கிடைக்கிறது. ஆர்ச் வருமே அதிலிருந்து தெற்கே கொஞ்சம் தள்ளி நாலைந்து கடைகளுக்கு அப்புறமா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த வாழைப்பூ வடாம் ஆதியின் பாட்டி செய்வார்களாம். நீங்கள் சாப்பிட்ட/செய்ததில்லை என்று தெரிந்து ஆச்சரியம் கீதாம்மா!

   பப்படம் - சில இடங்களில் மட்டுமே கிடைக்கிறது.... ஆனாலும் ஏனோ பிடிக்கவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. குட்மார்னிங் மிஸ்டர் அன்ட் மிஸஸ் வெங்கட். சுவையான பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. தங்கள் மகளின் ஆர்வம் போற்றுதலுக்கு உரியது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 9. வணக்கம் சகோதரி

  படங்கள் நன்றாக உள்ளன. கறிவேப்பிலை குழம்பே வெகு ஜோராக இருக்கும். அதுவும் மண் பாத்திரத்தில்... மனதிலேயே சுவை தெரிகிறது. அற்புதம்.

  பழைய சோறுக்கு ஈடு இணை ஏது? கடையின் பெயரே பழைய சோறா.. வித்தியாசமாக இருக்கிறது. அறிமுகத்திற்கு நன்றி.

  தேர் திருவிழா படம் மிகவும் நன்றாக உள்ளது. மக்களின் பக்தியினால் தேரும் இடையூறின்றி நிலைக்குச் சென்றது மகிழ்வான விஷயம்.

  படித்து ரசித்த புத்தகங்கள் பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி.

  நான் வாழைப்பூவில் வடை, அடை என செய்துள்ளேன். வடாம் செய்ததில்லை. வடாமும், அருகில் தேநீருமாக படம் அருமையாக இருந்தது.

  முதலாக பள்ளி செல்லும் முதல் நாளில், தங்களின் அறிவுரை மிகவும் நன்று. அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டியது.

  மகளின் கைவேலைகள் மிகவம் பிரமாதம். ஒவ்வொன்றும் மிக அழகாக உள்ளது. அவருக்கு எனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் சொல்லுங்கள்.

  கதம்பம் இனித்தது.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவில் பகிர்ந்து கொண்ட ஒவ்வொரு விஷயம் பற்றியும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   நீக்கு
 10. முதல் படம் அட்டகாசம் நாவூறுகிறது.

  எதையும் வீணாக்காமல் இப்படி கலைப்பொருளாக்குவது எல்லோருக்கும் வராது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 11. /வீட்டில் மீந்த சாதத்தை தண்ணீர் விட்டு வைத்து, கரைத்து சாப்பிட்டது போய், கடையில் வாங்கத் தயாராக இருக்கின்றனர்!
  /அதுதான் இப்போதெல்லாம்ஃபாஷன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஃபாஷன் - ஆமாம் ஜி.எம்.பி. ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. அனைத்தும் அருமை...

  ரோஷ்ணிக்கு பாராட்டுகள் பல...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் ஜி!

   நீக்கு
 13. ரோஷ்ணி கைவண்ணம் மிக மிக சிறப்பு...


  எனது பாராட்டுக்களை கூறிவிடுங்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   நீக்கு
 14. கறிவேப்பிலைக் குழம்பு, வடாம், அப்புறம் வெங்காய வடாம் - படங்கள் பார்த்தவுடனே குக்கரில் இப்போது வைத்த சுட சுட சாதத்துடன், உங்கள் வீட்டுக் கதவைத் தட்டலாமா என்று தோன்றிற்று.

  வேஸ்ட் பேப்பர் ரீசைக்ளிங் - உங்கள் பெண்ணிடம் உள்ள அருமையான குணம். ஃபோல்டர்லாம் பார்க்கவே நல்லா இருக்கு. நல்ல குணம், திறமை. வாழ்த்துக்கள் ரோஷ்ணி பெண்ணே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுட சுட சாதத்துடன் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டலாமா என்று தோன்றிற்று! ஹாஹா வாங்க வாங்க!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 15. வாசனையான கதம்பம்.

  பழைய சாதம் கடையில் விற்கிறார்களா? மக்கள் எதையெல்லாம் ஏளனமாக நினைத்து ஒதுக்கிவிட்டார்களோ அதையெல்லாம் ரீ-பேக் செய்து அவர்களையே காசு கொடுத்து வாங்க வைக்கின்றனர்.

  பழைய சாதம் எதாவது வெளிநாட்டு பெயரில் டெட்ரா பேக்கில் அமேசான் ப்ளிப்கர்ட் போன்றவற்றில் விற்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை எனத் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹேஷ்.

   நீக்கு
 16. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....