இசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 28 பிப்ரவரி, 2026

காஃபி வித் கிட்டு - 228 - எட்வின் சோட்டா - தீராக் கனல் - கடைவீதிப் பிள்ளையார் - மண்டலா - பூனை முடி - Jugalbandi - கேட்காதே


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட என்ன அவசரமோ பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******

சனி, 21 பிப்ரவரி, 2026

காஃபி வித் கிட்டு - 227 - மறதி - பேயும் நாயும் - விக்டோரியா நினைவிடம் - கிடங்கு - மீசப்புலிமலை - துள்ளல் - Smoothie


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அலுவலகம் இனி இல்லை பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******

சனி, 17 ஜனவரி, 2026

காஃபி வித் கிட்டு - 222 - யாருமில்லை… - மொழி அவசியமல்ல - பனிமழை - சிநேகம் - என்ன செய்வீர்கள்? - Celebration of Hope - பத்மநாபன் அண்ணாச்சி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட நடை நல்லது பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******

சனி, 10 அக்டோபர், 2020

காஃபி வித் கிட்டு – தீநுண்மி நாட்கள் – ஹூக்கா – கனவு – ஹனிமூன் தேசம் – புதிர் - திருவாமாத்தூர்

காஃபி வித் கிட்டு – 87 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய நாளை நல்லதோர் வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

முடியும் வரை முயற்சி செய்! உன்னால் முடியும் வரை அல்ல… நீ நினைத்தது முடியும் வரை… 

*****

புதன், 19 ஆகஸ்ட், 2020

You Tube Channel – சில அறிமுகங்கள்

 


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பதிவை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். 

கற்றலை ஒருபோதும் நிறுத்த வேண்டாம்; ஏனென்றால் கற்பிப்பதை வாழ்க்கை ஒருபோதும் நிறுத்துவதில்லை! 

சனி, 25 ஜூலை, 2020

காஃபி வித் கிட்டு - பசித்த காளை - தில்ஜீத் - குடகு - ரகசியம் - மண்டலா ஆர்ட்

காஃபி வித் கிட்டு - 78

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம்.  இன்றைய நாளை நல்லதோர் வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.

இன்னும் எவ்வளவு தொலைவு இருக்கிறது என பார்ப்பதை விட எப்போதும், எவ்வளவு கடந்து வந்திருக்கிறீர்கள் எனப் பாருங்கள். இந்த வேறுபாடு எத்தனை எளிதானது என்பது உங்களை வியப்பில் ஆழ்த்தும் - ஹெய்டி ஜான்சன்.

சனி, 11 ஜூலை, 2020

காஃபி வித் கிட்டு – வார்த்தைப் பஞ்சம் – செர்ரி ஜாம் – வெட்டுக்கிளி – உலக மக்கள் தொகை தினம்


காஃபி வித் கிட்டு – பகுதி 75


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.


இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:


துன்பங்கள் அனுபவித்த காலங்களை மறந்து விடு. ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடங்களை மறந்து விடாதே.

சனி, 18 ஏப்ரல், 2020

காஃபி வித் கிட்டு – சிரிப்பு – பல்பு – சம்பாவின் இசை – மகிழ்ச்சி – பதிலடி - சொர்க்கம்


காஃபி வித் கிட்டு – பகுதி 63

அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

கஷ்டப்படுகிறவன் கிட்ட சிரிப்பு இருக்காது… சிரிக்கிறவன் கிட்ட கஷ்டம் இருக்காது… ஆனால் கஷ்டத்திலும் சிரிக்கிறவன் கிட்ட தோல்வி இருக்காது.

சனி, 7 மார்ச், 2020

காஃபி வித் கிட்டு – கனிமொழி – பை நிறைய பட்டாணி – ப்ரேமம் - ஹோலி - சந்திப்பு



காஃபி வித் கிட்டு – பகுதி 57

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

முடிவுகளைத் தயங்காமல் எடுக்கும் திறன் நம்மிடம் இருந்தால் முன்னேற்றத்திற்கான வாயிற்கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.

சனி, 29 பிப்ரவரி, 2020

காஃபி வித் கிட்டு – ப்ரமோத் மஹாஜன் – ராவண்ஹதா – பொய் – முதிர்கன்னி - வயலின்


காஃபி வித் கிட்டு – பகுதி 56


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

அழகைப் பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். கடமையை பற்றி கனவு காணுங்கள். அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும் – அப்துல் கலாம்.

சனி, 15 பிப்ரவரி, 2020

காஃபி வித் கிட்டு – ஆத்மாவின் குரல் - கரோனா - ஹர்யானாவின் இசை - சாண்டா க்ளாஸ் அலைபேசி எண்


காஃபி வித் கிட்டு – பகுதி 54

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

வெற்றியின் வாசல் தேடி வந்தவர்கள் நிச்சயம் ஆயிரம் தோல்விகளிடம் விலாசம் கேட்டு இருப்பார்கள்.  

சனி, 8 பிப்ரவரி, 2020

காஃபி வித் கிட்டு – புன்னகை – தேர்தல் – ஜுகல்பந்தி – ராஜாராணி - சுஸ்கி

காஃபி வித் கிட்டு – பகுதி 53


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

கண்ணாடியில் புன்னகை செய்யுங்கள். ஒவ்வொரு காலையும் இதைச் செய்யும்போது, நீங்கள் உங்கள் வாழ்வில் ஒரு பெரிய வித்தியாசத்தை உணரத் தொடங்குவீர்கள் – யோகோ ஓனோ.  

சனி, 27 ஏப்ரல், 2019

காஃபி வித் கிட்டு – இரண்டு புதிர்கள் – ஒரு விரல் – மைசூர்பாக் – மனதைத் தொட்ட விளம்பரம்



காஃபி வித் கிட்டு – பகுதி – 30

முகநூலிலிருந்து ஒரு வாசகம்:



தோல்வியால் அழும்போது உங்கள் கண்ணீர்த் துளிகளை துடைத்துத் தெளிக்கும் ஒரு விரல், உங்கள் வெற்றியின் போது ஒன்றாகச் சேர்ந்து கரகோஷம் எழுப்பும் பத்து விரல்களை விட மேலானாது! [ஹிந்தி வாசகத்தின் தமிழாக்கம்….]

படித்ததில் பிடித்தது – இது யார் எழுதியது?

வாழ்க்கையில் என் லக்ஷியம் என்னவென்றால் – ஒன்றும் செய்யாமல் இருப்பதுதான்.

எனக்கு கால்நடையாய் ஊர்களைச் சுற்ற வேண்டுமென்று ஆசை. மூட்டையில்லாமல் முடிச்சில்லாமல் கண்டவிடத்தில் அகப்பட்டதைத் தின்று கையலம்பிவிட்டு வாசல் திண்ணையிலோ மரத்தடியிலோ படுத்துறங்கிவிட்டு…

மேகங்களைக் குன்றுகள் தடுத்து குடங்குடமாய் மழை கொட்டும் மலைநாட்டின் கமுகுச் சோலைகளையும் மாடுகளைப் போல் மந்தை மந்தையாய் யானைகள் மேய்வதையும் பார்க்கவேண்டும். அசைவற்ற மனதில் அமைதி நிறைந்ததாய் பார்த்தவர்கள் சொல்லிக்கொள்ளும் கன்யாகுமரியின் கடற்கரையில் ஓங்கி நிற்கும் மணற்குன்றுகளில் ஒன்றின்மேல் உட்கார்ந்துகொண்டு சூர்யாஸ்தமனத்தைப் பார்க்கவேண்டும் என்று ஒரு ஆசை.

நான் மொத்தத்தில் வேண்டுவது ஒன்றும் வேண்டாம் என்பதே.

இதனால் எனக்கு உலகத்தில் எனக்கு வெறுப்பு அல்லது ஞானப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று இல்லை. எனக்கு வாழ்க்கையில்தான் பற்று. அதைவிட்டால் வேறு நம்பிக்கையில்லை. கண்கண்டதில் நம்பிக்கையில்லை.  அதைத் தள்ளிவிட்டு காணாததைத் தேடி எப்படிப்போவேன்?

படித்ததில் பிடித்ததாக இங்கே எழுதி இருப்பது என்னைப் பற்றிய வாசகங்கள் அல்ல! இப்படி எழுதியது எந்த எழுத்தாளர் எனச் சொல்ல முடியுமா?

இந்த வாரத்தில் ஒரு பாடல் – உயிரில் தொடும்:

இசைக்கு மொழி அவசியமல்ல! எந்த மொழியாக இருந்தாலும் இனிய இசை இருந்தால் நீங்கள் இரசிக்க முடியும்! அப்படி சமீபத்தில் ரசித்த ஒரு மலையாளப் பாடல் – உயிரில் தொடும்…. கேட்டுப் பாருங்களேன்.


ரசித்த நிழற்படமும் ஒரு புதிரும்:



சமீபத்தில் பார்த்து ரசித்த ஒரு நிழற்படம் – எத்தனை அழகாக எடுத்திருக்கிறார் அந்தப் படத்தை எடுத்தவர்! அது சரி இது என்ன என்று சொல்ல முடியுமா?

மனதைத் தொட்ட ஒரு விளம்பரம்:

நிஜத்தில் இப்படியானவர்கள் இருப்பது குறைவே என்றாலும் விளம்பரத்திலாவது இப்படி ஒருவர் இருப்பது போல காண்பிப்பது மனதுக்கு மகிழ்ச்சி. மனதைத் தொட்ட ஒரு விளம்பரம் – பாருங்களேன்.



பின்னோக்கிப் பார்க்கலாம் – இதே வாரத்தில் 2010-ல்:

இதே வாரத்தில் எழுதிய ஒரு பகிர்வு. அப்போது நிறைய பேரால் வாசிக்கப்படாத ஒரு பதிவு! படிக்காதவர்கள் படிக்க வசதியாக, இங்கே அதன் சுட்டி…


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

புதன், 13 பிப்ரவரி, 2019

கதம்பம் – சிறுகிழங்கு – மம்ஜாஸ் – NSB ரோட் உலா – உரத் தயாரிப்பு


வாங்க சாப்பிடலாம் - கூர்க்கங்கிழங்கு (அ) சிறுகிழங்கு – 29 January 2019



வருடத்தில் இந்த தை மாதத்தில் மட்டுமே கிடைக்கும் கூர்க்கங்கிழங்கை சிறுவயதில் பாட்டி செய்து தந்து சுவைத்திருக்கிறேன்.

திங்கள், 3 டிசம்பர், 2018

சித்தி தமால் - ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்த பழங்குடியினர் - நடனம்



சென்ற வருடம் போலவே இந்த வருடமும் தலைநகர் தில்லியில் ஆதி மஹோத்சவம் நடைபெறுகிறது என்பதை இந்த வாரத்தின் கடைசியில் தான் தெரிந்து கொண்டேன்.

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

என்னன்னு சொல்லுங்க – புகைப்பட புதிர் விடைகள்




நேற்றைய பதிவில் மூன்றாவது புகைப்படப் புதிராக ஐந்து படங்களை வெளியிட்டு இருந்தேன். யார் யார் பதிலை சரியாச் சொன்னாங்கன்னு சொல்லப் போறதில்லை! ஆனா சரியான பதில்களை கீழே தந்திருக்கிறேன். வாங்க, நேற்று பகிர்ந்த படங்கள் என்னன்னு பார்க்கலாம்…


படம் – 1

புதன், 22 பிப்ரவரி, 2017

ராகினி…



ராகினி – என்னவொரு இனிமையான பெயர்.  ராகத்திலிருந்து பிறந்தது ராகினி….. ஹிந்தி மொழி பேசும் பகுதிகளில் பல பெண்களுக்கு ராகினி என்ற பெயர் வைப்பதுண்டு.  ராகினி என்ற பெயருக்கு அன்பானவள் என்ற அர்த்தமும் உண்டு. நாம் இன்று பார்க்கப் போகும் ராகினி ஒரு பெண் அல்ல! சில மாதங்களுக்கு முன்னர் ஹிந்தி மொழியில் வந்த ராகினி எம்.எம்.எஸ். படம் பற்றிய பதிவும் அல்ல!  இது வேறு விஷயம். 

ராகினி என்பது ஹரியானா மாநிலத்தின் பாரம்பரியமான இசை.  முன்பெல்லாம் ராகினி என்றழைக்கப்படும் பாடல்கள் மூலம் பாரம்பரியக் கதைகள், புராணங்கள் ஆகியவற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வழியாக வைத்திருந்தார்கள்.  நமது ஊரில் நடக்கும் கதாகாலட்சேபம் மாதிரி, கதையும், நடுநடுவே பாடல்களும் என அருமையான வழியாக வைத்திருந்தார்கள். 

சமீபத்தில் அப்படி ஒரு காணொளி காண நேர்ந்தது.  பள்ளி மாணவிகள் சேர்ந்து பாடிய ஒரு ராகினி அது – கிருஷ்ண பகவான் சுதாமாவிடம், ”நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்திருக்கிறாயே எப்படி இருக்கிறாய்?” என்று கேள்வி கேட்பது போல ஒரு பாடல்.  நீங்களும் கேளுங்களேன்…. ஹரியான்வி மொழியில் இருந்தாலும், உங்களுக்குப் புரியவில்லை என்றாலும் கேட்பதற்கு நன்றாகவே இருக்கும்.


ஆனால் சில காலமாக நமது தமிழகத்தில் அழிந்து வரும் நாட்டுப் புறக் கலைகளைப் போலவே ராகினியும் அழிந்து போனது – அதன் பாரம்பரியத்திலிருந்து வேறு பாதைக்கு மாறி விட்டது.  இப்போது ராகினி வேறு வடிவம் கொண்டுவிட்டது! இப்போது பாடப்படும் ராகினி பெரும்பாலும் ஆபாசத்தினை நோக்கி நகர்ந்து விட்டது.  ராகினி என்ற பெயரில் பாடலுடன் ஆடலும் சேர்ந்து கொண்டுவிட, ஆபாச அசைவுகளே அதிகமாக இருக்கும்படி செய்துவிட்டார்கள். 

அலுவலகத்தில் இருக்கும் நண்பர் ஒருவர் இப்படி ராகினி பாடி ஆடும் ஒரு பெண்ணின் நிகழ்ச்சிக்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்கிறார். சமீபத்தில் அப்படி ஒரு நிகழ்வில் பார்த்த ஒரு விஷயத்தினை ரொம்பவும் பெருமையுடன் சொல்லிக் கொண்டிருந்தார் – இப்போது மிகவும் பிரபலமாக இருக்கும் ராகினி பாடல்/ஆடல் நிகழ்ச்சி நடத்தும் பெண் சப்னா – அவருடைய நிகழ்ச்சிக்கு சென்றபோது ஒருவர் அந்தப் பெண்ணிடம் ”நான் உன்னை விரும்புகிறேன், ஆனால் வேறு பெண்ணுடன் திருமணம் ஆகிவிட்டது…. நான் உன்னை விரும்பியதற்காக, இதோ ஒரு லட்சம் உனக்குத் தருகிறேன்…..” என்று ஒரு லட்ச ரூபாய் கொடுத்தாராம். கூட்டத்தில் ஆரவாரம்…. அடுத்த நிமிடம், இன்னுமொரு ரூபாய் கட்டு எடுத்து, இப்போதும் உன்னை விரும்புகிறேன், இந்தா இன்னுமொரு லட்சம்!” என்று கொடுத்திருக்கிறார்!

பொதுவாகவே வட இந்தியாவில் நடனமாடும்போது, ரூபாய் நோட்டுகளை நடனமாடுபவர் மீது அபிஷேகம் செய்வது பரவலான ஒன்று. அதுவும் பெண் ஆடினால் போதும் ரூபாய் நோட்டுகளை அள்ளி விடுவார்கள் – அதற்காகவே புதிய ரூபாய் நோட்டுகள் வங்கியிலிருந்து மாற்றுபவர்கள் உண்டு. திருமண ஊர்வலமான bபராத் சமயத்தில் சாலையில் நடனமாடுபவர்கள் மீது இப்படி வீசும் நோட்டுகளை எடுத்துக் கொள்ள பெரும் போட்டியே நடக்கும்! திருமண நிகழ்விலேயே இப்படி என்றால் விரச/ஆபாச நடனமென்றால் சும்மா இருப்பார்களா?

மேலே சொன்ன அலுவலக நண்பர், நடனமாடிய சப்னா மீது ஆறாயிரம் ரூபாய் அள்ளி வீசிவிட்டு வந்ததை ரொம்பவும் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தார். நிகழ்ச்சிக்கான நுழைவுக் கட்டணம் தனி! இத்தனைக்கும் அவருக்குத் திருமணம் ஆகி மூன்று குழந்தைகளும் உண்டு. அதில் இரண்டு பெண்கள்!

இணையத்திலும் ஹர்யான்வி ராகினி எனத் தேடினாலே சப்னாவின் காணொளிகள் தான் வருகிறது.  பாரம்பரிய கலைகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவது சோகம் தான்…… அது தமிழகக் கலைகளாக இருந்தாலும் சரி, இந்தியாவின் எந்தப் பகுதி கலையாக இருந்தாலும் சரி….  இதை எல்லாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்…..

நாளை வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

[G]குடும் [B]பாஜா.... – மத்தியப் பிரதேசத்திலிருந்து....


[G]குடும் [B]பாஜா.... ஆஹா பெயரைக் கேட்கும்போதே பிடித்திருக்கிறதே....  இது என்ன?  ஹிந்தியில் [B]பாஜா என்றால் மேளம் போன்ற வாத்தியக் கருவி. இந்த [G]குடும் [B]பாஜாவும் ஒரு வாத்தியக் கருவிதான்.  சோழிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட [G]குடும் எனும் வாத்தியத்தினை இடுப்பில் கட்டிக் கொண்டு அதை இசைத்தபடியே ஆடும் நடனம் ஒன்று தான் இந்த [G]குடும் [B]பாஜா நடனம்.  மத்தியப் பிரதேசத்தின் [D]டிண்[d]டோரி, மாண்ட்லா மற்றும் ஷாஹ்டோல் மாவட்டங்களில் இருக்கும் பூர்வ குடிமக்கள் ஆடும் நடனம் தான் இந்த [G]குடும் [B]பாஜா.

சில வாரங்களாக பகிர்ந்து வரும் நடனங்களைப் பார்த்த அதே National Cultural Festival-ல் தான் இந்த நடனத்தினையும் கண்டு ரசித்தேன். இடுப்பில் வாத்தியத்தினைக் கட்டிக் கொண்டு அதை இசைத்தபடியே ஆடுகிறார்கள். சில நேரங்களில் மெதுவாகவும், சில நேரங்களில் வேகமாகவும், தலையை ஆட்டியபடியே இவர்கள் நடனமாடுவதைப் பார்க்கும்போது நமக்கும் ஒரு வேகம் வந்துவிடுகிறது.  பின்னணியில் Shehnai, Flute, Manjira, Timki போன்ற வாத்தியங்கள் இசைக்க இவர்களும் தங்களது [[G]குடும் வாத்தியத்தினை இசைத்தபடியே நடனமாடுகிறார்கள். 

நடுநடுவே பிரமிட் வடிவங்களை அமைத்து, ஒருவர் மேல் ஒருவர் ஏறி நின்றபடியும் வாத்தியம் இசைக்கிறார்கள். சுற்றிச் சுற்றி ஆடும்போது அவர்களது உழைப்பு பிரமிக்க வைக்கிறது. தொடைகளுக்கு நடுவே மேளத்தினை வைத்துக் கொண்டு இசைப்பது கடினமான ஒரு விஷயம் என்று புரிகிறது.

கைகளில் வாத்தியத்தினை இசைக்கும் குச்சிகள் இருந்தாலும், நடுநடுவே ஒரு கையில் குச்சியை வைத்து வாசிக்கும்போதே மறு பக்கம் தங்களது முழங்கையால் வாத்தியம் இசைக்கிறார்கள். இந்த இசையும் நடனமும் அவர்கள் கொண்டாடும் திருவிழாக்கள், பூஜைகள் மற்றும் சமூக நிகழ்வுகளில் முக்கியமான இடம் பெறுகிறது.  நிகழ்ச்சியில் எடுத்த சில படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.  படங்களைப் பார்த்த பிறகு இந்த நடனம் எப்படி இருக்கும் என்பதையும் பார்க்கலாம்!























சில வருடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி ஒன்றை காணொளியாக சேமித்து வைத்திருக்கிறார் Ami Charan Singh என்பவர்.  அவருக்கு நன்றி. நடனத்தினைப் பாருங்களேன்!




என்ன நண்பர்களே இந்த வாரத்தில் இங்கே பகிர்ந்து கொண்ட படங்களையும் நடனத்தினையும் ரசித்தீர்களா?  பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்......

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.