ஞாயிறு, 13 டிசம்பர், 2015

[G]குடும் [B]பாஜா.... – மத்தியப் பிரதேசத்திலிருந்து....


[G]குடும் [B]பாஜா.... ஆஹா பெயரைக் கேட்கும்போதே பிடித்திருக்கிறதே....  இது என்ன?  ஹிந்தியில் [B]பாஜா என்றால் மேளம் போன்ற வாத்தியக் கருவி. இந்த [G]குடும் [B]பாஜாவும் ஒரு வாத்தியக் கருவிதான்.  சோழிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட [G]குடும் எனும் வாத்தியத்தினை இடுப்பில் கட்டிக் கொண்டு அதை இசைத்தபடியே ஆடும் நடனம் ஒன்று தான் இந்த [G]குடும் [B]பாஜா நடனம்.  மத்தியப் பிரதேசத்தின் [D]டிண்[d]டோரி, மாண்ட்லா மற்றும் ஷாஹ்டோல் மாவட்டங்களில் இருக்கும் பூர்வ குடிமக்கள் ஆடும் நடனம் தான் இந்த [G]குடும் [B]பாஜா.

சில வாரங்களாக பகிர்ந்து வரும் நடனங்களைப் பார்த்த அதே National Cultural Festival-ல் தான் இந்த நடனத்தினையும் கண்டு ரசித்தேன். இடுப்பில் வாத்தியத்தினைக் கட்டிக் கொண்டு அதை இசைத்தபடியே ஆடுகிறார்கள். சில நேரங்களில் மெதுவாகவும், சில நேரங்களில் வேகமாகவும், தலையை ஆட்டியபடியே இவர்கள் நடனமாடுவதைப் பார்க்கும்போது நமக்கும் ஒரு வேகம் வந்துவிடுகிறது.  பின்னணியில் Shehnai, Flute, Manjira, Timki போன்ற வாத்தியங்கள் இசைக்க இவர்களும் தங்களது [[G]குடும் வாத்தியத்தினை இசைத்தபடியே நடனமாடுகிறார்கள். 

நடுநடுவே பிரமிட் வடிவங்களை அமைத்து, ஒருவர் மேல் ஒருவர் ஏறி நின்றபடியும் வாத்தியம் இசைக்கிறார்கள். சுற்றிச் சுற்றி ஆடும்போது அவர்களது உழைப்பு பிரமிக்க வைக்கிறது. தொடைகளுக்கு நடுவே மேளத்தினை வைத்துக் கொண்டு இசைப்பது கடினமான ஒரு விஷயம் என்று புரிகிறது.

கைகளில் வாத்தியத்தினை இசைக்கும் குச்சிகள் இருந்தாலும், நடுநடுவே ஒரு கையில் குச்சியை வைத்து வாசிக்கும்போதே மறு பக்கம் தங்களது முழங்கையால் வாத்தியம் இசைக்கிறார்கள். இந்த இசையும் நடனமும் அவர்கள் கொண்டாடும் திருவிழாக்கள், பூஜைகள் மற்றும் சமூக நிகழ்வுகளில் முக்கியமான இடம் பெறுகிறது.  நிகழ்ச்சியில் எடுத்த சில படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.  படங்களைப் பார்த்த பிறகு இந்த நடனம் எப்படி இருக்கும் என்பதையும் பார்க்கலாம்!சில வருடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி ஒன்றை காணொளியாக சேமித்து வைத்திருக்கிறார் Ami Charan Singh என்பவர்.  அவருக்கு நன்றி. நடனத்தினைப் பாருங்களேன்!
என்ன நண்பர்களே இந்த வாரத்தில் இங்கே பகிர்ந்து கொண்ட படங்களையும் நடனத்தினையும் ரசித்தீர்களா?  பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்......

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

34 கருத்துகள்:

 1. நேரிலும் காண வேண்டும் என்னும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன
  தங்களின் படங்களம் காணொளியும்
  நன்றி ஐயா
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 2. [G]குடும் [B]பாஜா... நடனத்தின் படங்களையும் காணொளியையும் இரசித்தேன். அதுவும் அவர்கள் முழங்கையால் அந்த இசைக்கருவியில் இசையைத் தருவது பிரமிப்பாக இருக்கிறது. பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 3. புது மாதிரியான நடனம். ரசிக்க பொறுமை வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 5. கிராமியக் கலைகள், மனிதன் வளர வளர முனைந்து கண்டுபிடித்தது. அவைகள் எல்லாம் அழிந்துவருவது வருத்தத்திற்குறியது. நடனம் அருமை. கிராமிய கலாச்சாரம் அழிவது வருந்தத்தக்கது. இவைகள் எல்லாம் அந்த அந்த இடத்துக்குத் தகுந்தவாறும் அங்கு கிடைக்கும் பொருட்களைக்கொண்டும் வளர்ந்துள்ளது. புதியவைகளைக் கொண்டுவந்து தருவதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 6. வணக்கம்.
  படங்கள்தான் எத்துணை துல்லியம்.!!!

  குடும்பாஜா பற்றி இது வரை அறிந்ததில்லை.

  காணொலியும் ரசித்தேன்.

  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஊமைக்கனவுகள்.

   நீக்கு
 7. கேட்க வித்தியாசமாக ஆனால் நன்றாக இருக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   நீக்கு
 8. எத்தனை எத்தனை வித இசைக்கருவிகள். பழங்குடியினரின் பாரம்பரிய கலைகள் கட்டிக் காக்கப் படவேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு
 9. வித்தியாசமான கலை வடிவம். அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!
  த ம 6

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   நீக்கு
 10. அழகிய புகைப்படங்கள் ஜி காணொளி ரசித்தேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 11. பதில்கள்
  1. சினிமாவில் வந்திருக்கிறதா என்பது தெரியாது.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வலிப்போக்கன்.

   நீக்கு
 12. வணக்கம்
  ஐயா
  அழகிய வர்ணனையுடன் அழகிய புகைப்படங்கள் இரசித்தேன் த.ம 9
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   நீக்கு
 13. புதியதொரு நடன வகை பற்றி அறிய முடிந்தது ஜி. படங்களும் அருமை...

  கீதா: நீங்கள் இது வரை எழுதியிருந்த நடனவகைகளைத் தொகுத்து அதையும் ஒரு புத்தகமாகக் கொண்டுவரலாம் பல பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு உதவியாக இருக்கும். அதுவும் நீங்கள் தகவல் மட்டுமல்லாமல் படங்களுடனும் கொடுப்பதால் அவர்களுக்குப் போட்டிகள் கல்லூரி விழாக்களுக்கு உதவும். நாங்கள் படித்த காலத்தில் இப்படி எல்லாம் இல்லாததால் நிறைய தேட வேண்டி சில பொருட்கள், ஆடைகள் எல்லாம் கிடைக்காமல் கஷ்டப்பட்டதுண்டு. இப்போது அப்படி இல்லையே அதனால்தான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னும் சில நடனங்களை நாங்கள் பார்த்தோம். புகைப்படங்களும் எடுத்தேன். அவை எல்லாவற்றையும் இங்கே பகிர்ந்து கொண்ட பின் மின் புத்தகமாக வெளியிடுவது பற்றி யோசிக்கலாம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 14. புதுமையானதொரு வாத்தியக்கருவியைப் பற்றியும் அதை இசைக்கும் முறை பற்றியும் அறியத் தந்தமைக்கு நன்றி வெங்கட். காணொளி ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   நீக்கு
 15. ஒரு புதிய விஷயத்தை, மிக அழகாக படங்களுன், காணொளியுடன் பதிவிட்டு அசத்திவிட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு
 16. குடும்பாஜா பற்றி இது வரை அறிந்ததில்லை.பகிர்வுக்கு நன்றி. Congrats
  Vijay/Delhi

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   நீக்கு
 17. டும் டும் டும் டும் ...... சூப்பர்.

  கலைஞர்கள் + இசைக்கருவிகள் படங்களும், காணொளியும், பழமை வாய்ந்த பாரம்பர்ய இசைக்கருவிகள் பற்றிய செய்திகளும் பளிச்சுன்னு நல்லா இருக்கு. பகிர்வுக்கு நன்றிகள் ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....