எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, December 15, 2015

சாப்பிட வாங்க: [G]கோபி[b] [k]கி [b]புர்ஜிதலைநகரில் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக குளிர் வந்து விட்டது. கூடவே குளிர் கால காய்கறிகளும்! குளிர் காலம் வந்து விட்டால் தில்லியில் காலி ஃப்ளவர், பச்சைப் பட்டாணி, கேரட், முள்ளங்கி என சில குளிர் கால காய்கறிகள் புத்தம் புதிதாய் கிடைக்க ஆரம்பித்து விடும். இந்தக் காலங்களில் தான் காலி ஃப்ளவர் பயன்படுத்தி சப்பாத்திக்கான விதம் விதமான சப்ஜிகள் செய்ய முடியும். இன்று நாம் பார்க்கப் போகும் [G]கோபி[b] [k]கி [b]புர்ஜி அப்படி ஒரு சப்ஜி தான்!

தேவையான பொருட்கள்:


காலி ஃப்ளவர் [1], பச்சைப் பட்டாணி [1 கப்], பெரிய வெங்காயம் [1], தக்காளி [1], பூண்டு [2 பல்], இஞ்சி [ஒரு சிறிய துண்டு], பச்சை மிளகாய் [1], மல்லிப் பொடி, மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, ஆம்சூர், ஜீரகம், பெருங்காயத் தூள், எண்ணெய், உப்பு [தேவைக்கு ஏற்ப] மற்றும் அலங்கரிக்க கொத்தமல்லி தழை. அம்புட்டு தேன்!

எப்படிச் செய்யணும் மாமு:காலி ஃப்ளவரை தனித் தனிப் பூக்களாக எடுத்த பிறகு அதை மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதனை சிறிய சிறிய துண்டுகளாக கத்தி மூலம் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.  ஒரு வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு, கொஞ்சம் சூடானதும், அதில் ஜீரகம் போட்டு பொரிந்தவுடன், பெருங்காயத்தினைச் சேர்க்கவும். பிறகு சிறிது சிறிதாய் நறுக்கிய வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சியைச் சேர்க்கவும்.  பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

மல்லித் தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றையும் சேர்க்கவும். சற்றே வதக்கிய பிறகு அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியைச் சேர்க்கவும். நன்கு வதக்கிக் கொள்ளவும். அதன் மேலே நறுக்கி வைத்திருக்கும் காலி ஃப்ளவர் மற்றும் பட்டாணியைச் சேர்க்கவும்.  தேவையான அளவு உப்பினை மேலே தூவி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயையும் சேர்த்து நன்கு கலக்கவும். நறுக்கி வைத்திருக்கும் ஒரு மூடியால் மூடி வைக்கவும்.  தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. பத்து பதினைந்து நிமிடங்களுக்கு வேக வைக்கவும். நடுநடுவே கரண்டியால் வதக்கவும்.
பச்சைப் பட்டாணியின் வாசம் மூக்கைத் துளைத்துக்கொண்டிருக்க, சற்றே மூடியைத் திறந்து கொஞ்சமாக ஆம்சூர் பொடியைத் தூவவும். மேலாக ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு கரண்டியால் கலக்கவும்.  இரண்டு மூன்று நிமிடங்களுக்குப் பிறகு அடுப்பினை நிறுத்தி, நாம் செய்து முடித்த [G]கோபி[b] [k]கி [b]புர்ஜியின் மேலாக பொடிப்பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளைத் தூவவும்.

சாதாரணமாகவே குளிர் காலங்களில் மூன்று வேளையும் சப்பாத்தி தான் சாப்பிட வேண்டியிருக்கும்! அரிசி சாதம் சாப்பிட்டால் குளிர் இன்னும் அதிகமாகத் தெரியும்! அதன் கூட [G]கோபி[b] [k]கி [b]புர்ஜி இருந்து விட்டால் இன்னும் இரண்டு சப்பாத்திகள் அதிகமாக உள்ளே இறங்கும் என்பது நிச்சயம்!

என்ன நண்பர்களே, இன்றைக்கு உங்க வீட்ல செய்து பார்த்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்களேன்!

நாளை வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி. 

48 comments:

 1. நல்ல குறிப்பு. செய்து பார்க்கிறேன். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 2. #ஆம்சூர் பொடியைத் தூவவும்.#
  ஆம் ,சூரா நல்லாத்தான் இருக்கும் போலத தெரிகிறது :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 3. குளிருக்கு ஏற்ற குறிப்பு...நாங்களெல்லாம் வரக்கூடாதா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வகுமார்.

   Delete
 4. பார்க்கவே சுவையாக தோன்றுகிறது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 5. எளிமையா தான் இருக்கு செய்து பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   Delete
 6. இந்த ஆம்சூர் பொடிதான் பாஸ் இங்க கிடைக்காது. அது இல்லாமல் ஒருதடவை செய்து பார்த்து விட்டால் அப்புறம் பழக்கமாகி விடும்! ஏன்னா, காலிபிளவர் நமக்குப் பிடித்த ஐட்டமுங்கோ!

  ReplyDelete
  Replies
  1. ஆம்சூர் அங்கேயும் சில கடைகளில் கிடைக்கிறது என கேள்விப்பட்டேன். ஆம்சூர் இல்லாமலும் செய்யலாம்... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 7. இப்படிச் செய்வதுண்டு ஜி! புர்ஜி என்று இப்போதுதான் தெரியும். நல்ல டிஷ். காலிஃப்ளவர் பீஸ் சப்ஜி என்று சொல்லுவதுண்டு. இதில் சிலசமயம் கரம் மசாலா கொஞ்சம் சேர்த்தும் செய்வதுண்டு. பகிர்வுக்கு மிக்க நன்றி வெங்கட்ஜி

  பனீர் புர்ஜியும் செய்வதுண்டு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 8. நல்லா இருக்கு செய்முறை. போற போக்கில் அரிசி சாதம் குளிர்காலத்துக்கு உதவாதுன்னு சொல்லிட்டீங்களே... சீரக சாத்துமது, கார உருளை கறின்னு சாப்பிடற நாங்கள்லாம் இப்போ எங்க போறது? (By the by, தமிழ்'நாட்டில் கோதுமை வர ஆரம்பித்தது 1940க்கு அப்புறம்தான்னு நினைக்கிறேன்.. எங்கேயோ படித்திருக்கிறேன்)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 9. நான் படித்து மட்டும்தான் பார்க்க முடியும் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 10. கோபி கி புர்ஜியின் வாசம் இங்குவரை தூக்கியடிக்கிறது. கட்டாயம் செய்துபார்க்கிறேன். நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 11. வீட்ல செய்து பார்த்துவிட்டு எப்படி இருந்துச்சுன்னு எல்லாம் சொல்லக்கூடாது. நீங்களே எங்களுக்கும் செஞ்சு அனுப்பி வைக்கணுமாக்கும்.

  ReplyDelete
  Replies
  1. அனுப்பி வைத்தால் ஆயிற்று! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 12. நன்றாக இருக்கிறது .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 13. பார்த்தால் பசி தீருவதாகத் தெரியவில்லை.
  என்ன கேமரா வைத்திருக்கிறீர்கள்?

  அருமை.

  தொடர்கிறேன்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோசப் விஜு ஐயா.

   Delete
 14. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சாந்தி மாரியப்பன் ஜி!

   Delete
 15. குளிருக்கு ஏற்ற உணவாகத்தான் தெரிகிறது. முயற்சித்து பார்த்துவிட வேண்டியதுதான்.
  த ம 8

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 16. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 17. சாப்பிட்டோம், அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 18. டில்லியில் விண்டர் காய்கறியின் பசுமையும்,ருசியும் புர்ஜியில் . சுண்டைக்காய் அளவு மட்டரை உறிக்கும் போதே பாதி காலியாகிவிடும். புர்ஜி ருசிஜீ. அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைகும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா......

   Delete
 19. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 20. சூப்பர் ரெசிபி வெங்கட். நானும் அப்பப்போ சுயம்பாகமாக்கும்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்ஜி!

   Delete
 21. கோபி கி புர்ஜி - நீங்கள் பண்ணிச் சாப்பிட்டபின்பு ஏதேனும் ஒத்துக்கொள்ளவில்லையா? பதிவுகள் இன்னும் வரவில்லை? ('நாளை வேறு ஒரு பதிவில்' என்று சொல்லி 2 வாரம் ஆகப்போகிறது)

  ReplyDelete
  Replies
  1. கோபி கி புர்ஜி சாப்பிட்ட பிறகு நலமே! :) இடைவிடாத பணிச் சுமை! அதனால் பதிவுகள் எழுத இயலவில்லை. நாளையே ஒரு பதிவு வரலாம்! :))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 22. பூண்டு இல்லாமல் செய்வதுண்டு. இப்போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் பூண்டும்சேர்க்க வேண்டி இருக்கு! :) ஆனால் ரசமாக வைத்துத் தான் சாப்பிடறோம். :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 23. காலிஃப்ளவர் இத்தனை வெண்மையாக இங்கெல்லாம் கிடைக்காது! :( பட்டாணியும் நல்ல விளைந்த ரகமாக இருக்கிறது. இங்கே சோப்ளாங்கி தான். :( விலையும் அதிகம்.

  ReplyDelete
  Replies
  1. குளிர்காலத்தில் இப்படி ஃப்ரெஷ்-ஆகக் கிடைக்கும். மற்ற சமயங்களில் அவ்வளவாக கிடைப்பதில்லை....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 24. ஆஹா, கம கம வென்று ஓர் சமையல் குறிப்பா! நல்லது.

  காலி ஃப்ளவர் ஏனோ எனக்குப் பிடிப்பது இல்லை. வாங்குவதும் இல்லை. இதுவரை நான் சாப்பிட்டதும் இல்லை. சாப்பிட விரும்புவதும் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. ஒரு சிலருக்கு காலிஃப்ளவர் பிடிப்பதில்லை...... எல்லாமே எல்லோருக்கும் பிடித்திருப்பதில்லையே.... எனக்கும் சில காய்கறிகள் பிடிக்காது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....