எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, December 11, 2015

ஃப்ரூட் சாலட் – 154 – 100 பாய்கள் – அன்பை மட்டும் – அம்மா விளம்பரம்

நல்ல மனம் வாழ்க!:

தமிழகத்தின் பல பகுதிகளிலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பல நல்லுள்ளங்கள் பற்றிய தகவல்கள் ஃபேஸ்புக்கில் தொடர்ந்து படித்து வருகிறோம்.  அப்படிப்பட்ட ஒரு செய்தி ஒன்று இங்கே! பகிர்ந்து கொண்ட திரு மானா பாஸ்கர் அவர்களுக்கு நன்றி.21 ஆண்டுகளுக்கு முன்பு என் அண்ணன் இருதய அறுவை சிகிச்சை பலனின்றி... மரணித்தபோது அழுதது. அதன் பிறகு இந்தச் செய்தியை அறிந்தபோது... இப்போதுதான் என்னை அறியாமல் சத்தம்போட்டு அழுதுவிட்டேன்.

இவர்களுக்கு வீடே கிடையாது. மரத்தடியில்தான் இவர்களை நாம் எல்லோரும் பார்த்திருப்போம். எல்லா ஊரும் இவர்களின் ஊரே.

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு 100 பாய்களை வாங்கித் தந்திருக்கிறார்கள்... தற்சமயம் அவிநாசியில் வசிக்கும் நரிகுறவர்கள்.

வீடே இல்லாதவர்கள்... வீட்டை இழந்தவர்களை நோக்கி இதயக் கரம் நீட்டியிருக்கிறார்கள்.

இ.எம்.ஐ துரத்துவதற்காக... ‘‘money... money’’ என ஓடிக்கொண்டிருக்கிற நாமெல்லாம் செஞ்ச உதவி... பாசி மணி ஊசி மணி விற்கிறவங்களுக்கு முன்னால சும்மா சார்!

அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பூங்கொத்துகள்!

அன்பை மட்டும்....

அமுல் வெண்ணை:

காலத்திற்கு ஏற்றபடி விளம்பரம் செய்வதில் அமுல் மாதிரி எந்த நிறுவனமும் செய்ய முடிவதில்லை.  இங்கே பாருங்களேன் இந்த விளம்பரத்தினை.....இதெல்லாம் ஒரு பிரச்சனையா?:


இரண்டு மூணு நாளா வெறும் இன்கமிங் தான்! அவுட்கோயிங் இல்லவே இல்லைன்னு யாராவது சொன்னா, இதெல்லாம் பெரிய பிரச்சனையா?” என்று சொல்லக் கூடும். கஷ்டப்பட்டா தானே தெரியும். இந்த ஆசாமியைப் பாருங்க – ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல, கிட்டத்தட்ட இரண்டு வாரமா “அவுட் கோயிங்க்!”  என்னத்துக்கு ஆகறது! விளம்பரம் தான் என்றாலும்,  கடைசியில் அவருக்கு கிடைக்கும் மன நிம்மதி! PIKU பட அமிதாப் மாதிரி பிரச்சனை ரொம்பவே கஷ்டம் தான்....  பாருங்களேன்!


Google க்கு ஒரு பாடல்:


வானவில் மனிதன்மோகன்ஜி அவர்கள் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட ஒரு காணொளி அதைப் பார்க்காதவர்கள் பார்க்க வேண்டி இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்..... அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும் என்று எண்ணியதால்!

செய்வீர்களா ? நீங்கள் செய்வீர்களா?
---------------------------------------------------------
செம்பரம்பாக்கமென்னும் ஏரித்தாய்
பிரசவித்த செல்வமகள் :
அடையாறேன பெயர் கொண்டு
புக்ககம் சேர்ந்திடவே
தொடங்கினள் நற்பயணம்.
உல்லாசமாய் புறப்பட்ட
பெண்ணவளும் வழியதனில்
எதிர்கொண்டாள் பெரும் துன்பம் .
மாசற்ற அவள் வடிவம்
வாஞ்சையான அவள் வருடல்
வாளிப்பான அவள் தேகம்:
பொறுப்பரோ கயவருமே ?
அவள் பாதையதை சிதைத்தாரே ;
பயணத்தை தடுத்தாரே:
பேதையவள் என் செய்வாள் ?
பொலிவெல்லாம் நலிவுற்று
புக்ககம் வந்தடைந்தாளே !
வண்ணமகள் திருக்கோலம்
கண்டே்தான் கொண்டவனும்
அடைந்திட்டான் பெருங்கோபம் ..
கோபமது உறுமாறி
வஞ்சமென ஆனதுவே.
புக்ககத்தார் ஆசியுடன்
கொண்டவனின் துணைகொண்டு
கூரையேறி சண்டையிட
புறப்பட் டாள் மங்கையவள்.
பொங்கி எழுந்த அவளெதிரே
யாரும் தப்பிட கூடிடுமோ?
ஆசிபெற்றாள் தாயிடமே
மீட்டெடுத்தாள் தன் வழியை
நீக்கினளே மாசனைத்தும்
பெற்றனளே அழகு திருக்கோலம் !
மடையரே உணர்வீரோ - இனியேனும்
நடப்பீரோ மாண்புடனே !
Subhasree Muraleetharan 

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

32 comments:

 1. மழை வெள்ளத்தில் உதவியவர்கள் பற்றிய நிறைய செய்திகள் கண்கலங்க வைத்தன.

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 2. நரிக்குறவர்களுக்கு முன் இன்றைய அரசியல்வாதிகள் தூசு தான் ஜி
  கவிதை நன்று காணொளி கண்டேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 3. சமூகத்தில் அத்துனை மதிப்பும் மரியாதையும் கொடுக்க தயங்கும் இந்த சமூகத்து மக்களின் மனித நேயம் நெகிழ வைக்கிறது.

  இது போன்று செய்திகள் இந்த சமூகத்து மனங்களை மாற்றட்டும்.

  சமீபத்தில் இஸ்லாமிய சகோதரர்கள் பரிமாறும் உணவினை ஐயப்ப பக்த்தர்கள் அன்போடு வாங்கி உண்ணும் காட்சி படமும் என்னை கண் கலங்க வைத்தது ஆனந்தத்தில்.

  பகிர்விற்கு வாழ்த்துக்கள்.

  கோ

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவில் பிள்ளை ஜி!.

   Delete
 4. உதவிய நரிக்குறவர் சகோதரர்களுக்கு நன்றி..
  சுபஸ்ரீ அவர்களின் கவிதை மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   Delete
 5. வீடே இல்லாதவர்கள்
  வீட்டை இழந்தவர்களுக்கு உதவியிருக்கிறார்கள்
  போற்றுதலுக்கு உரிய செயல் ஐயா
  பாரர்ட்டுவோம் போற்றுவோம்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 6. நல்ல உள்ளங்கள் நரிக்குறவர்களுக்கு நன்றிகள் பல. போற்றுவோம் அவர்களையும். இந்த வெள்ள பாதிப்பிலும் கூட பலரும் தண்ணீர்லும் கூட சென்று பலருகும் உதவிய நல்ல உள்ளங்களைப் பற்றி வாசிக்க நேர்ந்த போது மனம் நெகிழ்ந்தது.

  அன்பை மட்டும்: ஆம் உண்மைதான்...

  அமுல் எப்போதுமே அருமையான விளம்பரங்கள்தான்..அமுல் - ஆனந்த் உருவாகிய விதம் பற்றிய படம் கூட அருமையாக எடுக்கப்பட்டிருக்கும்.

  கூகுள் பாடல் எங்கள் தளத்திலும் பகிர்ந்த நினைவு..நாங்கள் ரசித்தவைகளில்

  சுபஸ்ரீ அவர்களின் கவிதை அருமை..


  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 7. நனிக்குறவர்களை என்றாவது மரியாதையாக யாராவது பார்த்திருப்போமா. இந்த நேரம் அவர்கள் செய்த செயலால் மிகவும் உயர்ந்து விட்டான்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூந்தளிர் ஜி!

   Delete
  2. பூந்தளிர் December 12, 2015 at 10:52 AM

   //நனிக்குறவர்களை என்றாவது மரியாதையாக யாராவது பார்த்திருப்போமா. இந்த நேரம் அவர்கள் செய்த செயலால் மிகவும் உயர்ந்து விட்டான்கள்.//

   முதல் வார்த்தை : நனிக்குறவர்கள் இல்லை பூந்தளிர். அது நரிக்குறவர்கள். :)

   அதுபோல கடைசி வார்த்தை: விட்டான்கள் என்பதைவிட ‘விட்டார்கள்’ என்று இருந்தால் இன்னும் நல்லா இருக்கும்.

   இங்கு வந்த இடத்திலும், என் படுத்தல் தாங்கமுடியவில்லை எனப் பூந்தளிர் புலம்புவதும், முணுமுணுப்பதும் எனக்குக் கேட்கிறது. வாழ்க ! :)))))))

   இப்படிக்கு கோ...பூ

   Delete
  3. வந்த இடத்திலும்..... :)))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 8. நரிக்குறவர்களின் இந்த மனிதாபிமான செயலுக்கு தலை வணங்குவோம். தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி! இவ்வார பழக்கலவையை இரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 9. மனமுவந்து உதவ இனம் மொழி, நிலைமை எதுவுமே தடையில்லை. இன்கமிங் அவுட் கோயிங் ரசித்தேன் இப்போதைய அமுல் விளம்பரங்கள் அன்றைய ஏர் இந்தியாவின் விளம்பரங்களுக்குச் சற்றும் சளைக்க வில்லை. நல்லதொரு ஃப்ரூட் சலாடுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 10. அனைத்தையும் ரசித்தேன்.
  த ம 7

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.

   Delete
 11. நரி குறவனுக்கு இருக்கும் அறிவு / இறக்கம் கூட நமது அரசியல் வாதிகளுக்கு இல்லையா ? வெட்கி தலை குனிய வேண்டும் தமிழக அரசியல் வாதிகள்.
  வளர்க உங்கள் தொண்டு.
  கீப் இட் அப்
  விஜய்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 12. அமுல் விளம்பரம் சூப்பர் ,ஸ்டிக்கர் இவ்வளவு சீக்கிரம் பிரபலம் ஆயிடிச்சே:)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 13. சோகம் ததும்பிய ப்ரூட்சாலட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 14. மழை வெள்ளத்தில் உதவியவர்களைப் பற்றி தெரிய முடிந்தது. இல்லாதவர்களிடம் தான் அன்பு மேலோங்கி நிற்கும் என்ற சொல் வழக்கு மீண்டும் ஒரு முறை நிருபணமாகியிருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 15. //மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு 100 பாய்களை வாங்கித் தந்திருக்கிறார்கள்... தற்சமயம் அவிநாசியில் வசிக்கும் நரிகுறவர்கள்.

  வீடே இல்லாதவர்கள்... வீட்டை இழந்தவர்களை நோக்கி இதயக் கரம் நீட்டியிருக்கிறார்கள்.

  இ.எம்.ஐ துரத்துவதற்காக... ‘‘money... money’’ என ஓடிக்கொண்டிருக்கிற நாமெல்லாம் செஞ்ச உதவி... பாசி மணி ஊசி மணி விற்கிறவங்களுக்கு முன்னால சும்மா சார்!//

  நரிக்குறவர்களின் நல்ல மனசு வாழ்க ! பகிர்வுக்கு நன்றிகள், ஜி.

  ReplyDelete
  Replies
  1. நல்ல மனம் வாழ்க.... அதே தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....