திங்கள், 14 டிசம்பர், 2015

திருப்பதி ஏழுமலை வெங்கடேசா – அஹமதாபாத் நகரில்...


பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 26

முந்தைய பகுதிகள் – 1 2 3 4 5 6 7 8 9 10 11  12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25


படம்: நன்றி - https://travelumix.wordpress.com


நண்பர் அலுவலகத்திலிருந்து வந்த பிறகு அவருடன் சற்று நேரம் பேசி கொண்டிருந்தோம். பிறகு அவர் அஹமதாபாத் நகரில் கட்டப்பட்டிருக்கும் பாலாஜி கோவில் பற்றிச் சொல்லி அங்கே அழைத்துப் போவதாகச் சொல்லவே அங்கே செல்வதற்காகத் தயாரானோம். தயாராகிக் கோவிலுக்குச் செல்லும் நேரத்தில் கோவில் பற்றிய சில தகவல்களைப் பார்க்கலாமா....


படம்: இணையத்திலிருந்து நன்றியுடன்.....

நாம் வேங்கடேசன்/வெங்கடேசன் என அழைக்கும் பெருமாளை பெரும்பாலான வட இந்தியர்கள் பாலாஜி என்று தான் அழைக்கிறார்கள். குஜராத்திலும் பாலாஜி தான். படம்: நன்றி - https://travelumix.wordpress.com

திருப்பதி போலவே ஒரு கோவில் என்றாலும், திருமலா திருப்பதி தேவஸ்தானத்தினால் கட்டப்பட்ட பல கோவில்களில் இதுவும் ஒன்று என நினைத்தால் அது தவறு.  இதற்கும் திருமலா திருப்பதி தேவஸ்தானத்திற்கும் சம்பந்தம் இல்லை. அவர்களுடைய சில யோசனைகளைக் கேட்டு கட்டப்பட்டதென்றாலும் கோவிலின் தினசரி பூஜைகள் மற்றும் நடவடிக்கைகளை நடத்த Sri Balaji Temple Development Trust என்ற ஒரு அமைப்பினை ஏற்படுத்தி அதன் மூலம் கோவில் நடத்தப்பட்டு வருகிறது. படம்: நன்றி - https://travelumix.wordpress.com

கோவிலுக்கான நிலம் கிடைத்த மூன்று வருடங்களுக்குப் பிறகு 2003-ஆம் ஆண்டு பூமி பூஜை நடத்தப்பட்டது. திருப்பதி, ஆந்திர மற்றும் தமிழக சிற்பிகள் 100 பேர் திருப்பதியில் தங்கி கோவிலுக்குத் தேவையான சிற்பங்களை தயாரிக்க, மேலும் 80 சிற்பிகள் அஹமதாபாத் நகரில் கோவில் வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  திருமலா திருப்பதி தேவஸ்தானம் கொடுத்த வடிவமைப்பில் மிகச் சிறப்பாக உருவான கோவில் பொதுமக்கள் பார்வைக்கு 2007-ஆம் வருடம் ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி கும்பாபிஷேகம் செய்யப்பட்டு திறக்கப்பட்டது.படம்: இணையத்திலிருந்து நன்றியுடன்.....

விஸ்தாரமான இடத்தில் மிகவும் அழகாகவும் சுத்தமாகவும் பராமரிக்கப்பட்டு வரும் கோவிலுக்கு நாங்கள் சென்று சேர்ந்தோம். வாகன நிறுத்தும் வசதிகள், திருமணம், பூஜைகள் போன்ற நிகழ்வுகளை நடத்த வசதிகள் என பல வித வசதிகள் கொண்டு அமைக்கப்பட்டு இருக்கிறது இக்கோவில்.  வெளியிலேயே “ஃபோட்டோ பாட்னா மனாயி ச்சே!என்று எழுதி இருந்ததால் படம் எடுக்க வாய்ப்பில்லை! நானும் எனது புகைப்படக் கருவியை வீட்டிலேயே விட்டு வந்திருந்தேன் என்பதும் ஒரு காரணம்.   கோவில் உள்ளே நுழைகிறோம்.  அப்பப்பா என்னவொரு சுத்தம்....  மிகச் சிறப்பான பராமரிப்பினை மனதுக்குள் பாராட்டியபடியே உள்ளே நுழைந்தோம். 
படம்: இணையத்திலிருந்து நன்றியுடன்.....

பொதுவாக விழாக்காலங்களில் இங்கே வரும் பக்தர்கள் எண்ணிக்கை மிக அதிகம் என்றாலும், நாங்கள் சென்ற அந்நாளில் எங்களைத் தவிர விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு பக்தர்களே என்பதால் நிம்மதியாக தரிசனம் செய்ய முடிந்தது. கொஞ்சம் மனதாரப் பேசவும் முடிந்தது!  ஆஹா எத்தனை அழகாய்ச் செதுக்கி இருந்தார்கள் சிற்பங்களை.  பார்த்துக் கொண்டே இருக்கலாம் எனும்படியான அழகு.  கூடவே சிலைகளுக்கு அணிவித்திருந்த ஆபரணங்கள்.......  ஒவ்வொன்றும் மதிப்பிட முடியாத அளவுக்கு அழகும் ஜொலிப்பும்..... 

நடுவே பாலாஜி, இரு புறங்களிலும் பத்மாதேவி மற்றும் கோதாதேவி என மிகச் சிறப்பாக வடிவமைத்திருந்தார்கள். எதிரே கருடர் கையைக் கூப்பியபடி இருக்க, கோவிலுக்கு வெளியே ஜெய விஜயர்கள் காவலுக்கு இருக்க, கொடி மரமும் உண்டு.  மிகச் சிறப்பாக அமைந்துள்ள கோவிலில் தரிசனம் முடித்து, பிரகாரத்தினை சுற்றி வரும் வழியில் மிகச் சிறிய தொன்னையில் [ஒரு ஸ்பூன் அளவு] பிரசாதமும் பெற்றுக் கொண்டு அங்கிருந்த அலுவலக அதிகாரியுடன் பேசிக் கொண்டிருந்தோம்.

படம்: இணையத்திலிருந்து நன்றியுடன்.....

கோவிலில் இருக்கும் வசதிகளைப் பற்றிச் சொல்லிய அவர், திருமலா திருப்பதி செல்ல நினைக்கும் குஜராத் மக்களின் வசதிக்காக இக்கோவிலிலேயே தரிசனம், மற்ற பூஜா சேவைகள் மற்றும் தங்குமிடம் பதிவு செய்து கொள்ளும் வசதி இருப்பதைப் பற்றிச் சொன்னார்.  கோவில் சிறப்பாக நடைபெற குஜராத் மக்களும் மற்றவர்களும் போட்டி போட்டுக் கொண்டு பொருளுதவியும், பண உதவியும் செய்வதைப் பற்றியும் சொன்னார்.  கோவிலில் சிற்பங்களுக்குப் போட்டிருக்கும் ஆபரணங்களைப் பார்க்கும் போதே அதைப் பற்றிப் புரிந்து கொள்ள முடிந்தது.

திருப்பதி கோவிலில் நடக்கும் அத்தனை விசேஷங்களும், சம்பிரதாயங்களும் இக்கோவிலிலும் கடைபிடிக்கிறார்கள் என்பதால் திருப்பதி போகாமலே அங்கே இருக்கும் பக்தர்கள் தரிசிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

படம்: இணையத்திலிருந்து நன்றியுடன்.....

கோவிலில் பார்த்த மேலும் ஒரு விஷயம் எனக்கு ரொம்பவும் பிடித்துப் போனது. சாதாரணமான பூட்டுகளைப் பார்த்திருந்த எனக்கு, அங்கே போட்டிருந்த ஒரு பூட்டு மிகவும் பிடித்துப் போனது.  மீன் வடிவில் பூட்டு! கோவிலின் அருகே இருக்கும் மண்டபத்தில் தசாவதார சிலைகளும் மிகப் பெரிய விஸ்வரூபச் சிலையும் உண்டு.  அஹமதாபாத் நகருக்குச் செல்லும் வாய்ப்பிருந்தால் நிச்சயம் இங்கே சென்று வேங்கடேசனை நிம்மதியாக தரிசித்து வரலாம்.

படம்: நன்றி - https://travelumix.wordpress.com

SG Highway என அழைக்கப்படும் Sarkhej Gandhinagar Highway-ல் Nirma Institute எதிரே அமைந்திருக்கும் இக்கோவில் காலை ஏழு மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பது மணி வரையும் திறந்திருக்கும். சனி மறும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் அரை மணி நேரம் அதிக நேரம் திறந்திருக்கும்.  

கோவிலில் தரிசனம் முடித்து நாங்கள் அடுத்ததாகச் சென்றது இரவு உணவு சாப்பிடுவதற்காக....  எங்கே சென்றோம், அங்கே என்ன அனுபவம் கிடைத்தது என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்!

வேறொரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

38 கருத்துகள்:

 1. நேரில் கண்ட உணர்வு ஐயா
  படங்கள் பேசுகின்றன
  நன்றி ஐயா
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள் எடுத்து அவர் தளத்தில் பகிர்ந்து கொண்டிருந்த திரு ஸ்ரீகுமார் அவர்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 2. தங்கள் பெயரிலேயே அவன் புகழை பறை சாற்றும் தங்கள் பாலாஜி தரிசனம் பற்றிய புகைப்படங்களோடு கூடிய இனிய தொகுப்பை இந்த இளம் காலை நேரத்தில் படித்து இன்புற்றோம் . வாழ்க தங்கள் சீரிய தொண்டு வளர்க உங்கள் புகழ்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்தப்பா.....

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 5. அழகான படங்களுடன் பகிர்வு நிறைவாக இருக்கு. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூந்தளிர்.

   நீக்கு
  2. ஆஹா, நம்மாளு பூந்தளிர் இங்கே அதிசயமாகப் பூத்திருக்கே ! மகிழ்ச்சி :)

   நீக்கு
  3. ஆமாம் அவர்களது வருகை அதிசயம் தான் வை.கோ. ஜி!

   நீக்கு
 6. கருடாழ்வார் முறைக்கிறார்! ஆஞ்சி விழிக்கிறார்!!


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 7. கோவில் தரிசனம் அருமை. நீங்கள் சொல்லியிருப்பது, பிராகாரத்தில் உள்ள சிலைகளுக்கா ஆபரணங்கள் அணிவித்துள்ளார்கள் (அல்லது செதுக்கியுள்ளார்கள்?). அமைதியான தரிசனம் இன்னும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரகாரத்தில் உள்ள சிலைகளுக்கு அல்ல.... நகைகள் அனைத்தும் கர்ப்பக் கிரகத்தில் உள்ள சிலைகளுக்கு தான்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 8. கோவிலுக்கு சென்ற உணர்வு. ஆனாலும் நமது பழமையான கோயிலுக்கு செல்லும் போது ஏற்படும் தெய்வீக உணர்வு இந்தக் கோயில்களில் ஏற்படுவதில்லை.
  த ம 6

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பழைய கோவில்கள் போல நிச்சயம் வராது. அவற்றையும் புதுப்பிக்கிறோம் என்ற பெயரில் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   நீக்கு
 9. விரிவான விளக்கங்கள் ஜி அழகிய புகைப்படங்களுடன் நன்றி காணொளி கண்டேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 10. இப்போது புதிதாய் வருகின்ற கோயில்கள் எல்லாமே பல இடங்களில் நன்றாகப் பராமரிக்கின்றார்கள் என்றுதான் தோன்றுகின்றது. நல்ல தகவல். அறியாத ஒன்றைப் பற்றித் தெரிந்து கொண்டோம். நன்றி வெங்கட்ஜி

  கேரளத்துக் கோயில்கள் பழைய கோயில்கள் அனைத்துமெ சுத்தமாகப் பராமரிக்கப் படுகின்றன. முக்கிய காரணம் பிரசாதம் வழங்கப்படாததால் இருக்கலாமோ...பணம் செலுத்தினால் பாத்திரம் கொண்டுபோனால் தருவார்கள் பாயாசம்தானே பெரும்பாலும். உண்ணி அப்பம் உண்டு சில கோயில்களில்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 11. ஒரிஜினல் பாலாஜி அளவுக்கு இங்கே வருமானம் இல்லை போலிருக்கே :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த அளவு வருமானம் இருக்கோ இல்லையோ, இங்கேயும் அதிகம் வருகிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 12. வணக்கம்
  ஐயா

  இறை தரிசனம் நேரில் கிடைத்தது போல ஒரு உணர்வு வாழ்த்துக்கள் ஐயா த.ம10
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   நீக்கு
 13. பார்க்க முடியாத ஆலயத்தை உங்களின் பகிர்வு மூலம் பார்க்கும் தரிசனம் பெற்றேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

   நீக்கு
 14. நல்ல பகிர்வு. பெங்களூரிலும் மக்கள் வசதிக்காக திருமலா தேவஸ்தானம் இப்படி ஒரு கோவிலை நிறுவியுள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருமலா தேவஸ்தானம் இப்போது பல இடங்களில் இப்படி கோவில்களை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள் - குருக்ஷேத்திரா, கௌகாத்தி, தில்லி என பல இடங்களில் இருக்கிறது. ஆனால் அஹமதாபாத் கோவில் திருமலா தேவஸ்தானம் கட்டிய கோவில் அல்ல.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 15. அருமை .ஒவ்வொன்றையும் நினைவு வைத்து பயணக் கட்டுரை எளிதவது எளிதல்ல அது தங்களுக்கு சிறப்பாக வருகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   நீக்கு
 16. ம்ம்ம்ம்ம் இந்தக் கோயில் சமீப காலத்தில் கட்டப்பட்டிருக்கிறது. ஆகையால் நாங்கள் பார்க்கவில்லை. ஆனால் முன்பே தெரிந்திருந்தால் 2010 ஆம் ஆண்டு பரோடா சென்றபோது போய் வந்திருக்கலாம். தெரியலை! :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த முறை பார்த்து விடுங்கள்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.....

   நீக்கு
 17. பாலாஜி கோயில் படங்களும், விபரங்களும் சூப்பராக உள்ளன. பகிர்வுக்கு நன்றிகள், ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 18. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....