பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 12
கிருஷ்ணருக்கு
விதம் விதமாய் அலங்காரம் செய்து கொள்ள பிடிக்கும் என நினைக்கிறேன். அதனால் தானே மயிலிறகுகளை
தலைப்பாகையில் வைத்துக் கொள்வதும் வண்ண வண்ண மாலைகளை அணிந்து கொள்வதுமாக
இருந்திருக்கிறான் என்று நாம் படித்தவற்றிலும், காட்சிப்படுத்திய படங்களிலும்
பார்த்திருக்கிறோம். த்வாரகாவிலும் கிருஷ்ணரை விதம் விதமாக
அலங்கரிக்கிறார்கள். அது போலவே வீட்டிலும்
இங்குள்ளவர்கள் “மந்திர்” என்று ஒன்று அமைத்து வைத்து, அதற்குள் இறைவனின்
வண்ணப்படங்களையோ, சிறிய சிலைகளையோ வைத்து வழிபடுவார்கள்.
அப்படி வீட்டில் வைத்து வழிபடும் கிருஷ்ணருக்காக, பல
வித அலங்காரப் பொருட்களை இங்கேயுள்ள கடைகளில் விற்பனை செய்கிறார்கள். அது தவிர
கிருஷ்ணரின் பிறந்த நாளான ஜென்மாஷ்டமி அன்று தொட்டில் கட்டி பலவித அலங்காரங்கள்
செய்து கொண்டாடுவது இங்கே வழக்கம். சென்ற ஜென்மாஷ்டமி அன்று எடுத்த சில
புகைப்படங்களை எனது பக்கத்திலும் பகிர்ந்து கொண்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
அதிலிருந்து ஒரு படம் மட்டும் இங்கே...
அப்படி அலங்காரங்கள் செய்வதற்காக பொருட்களை வாங்கிக்
கொண்டிருந்தார்கள். கற்கள் பதித்த சிறு
சிறு மாலைகள், வெண்மையான மணிகளால் கோர்த்த மாலை, வெண்ணை வைத்திருக்கும் உறிகள்,
சிறிய சிறிய த்வாரகாதீஷ் சிலைகள் என எண்ணிலடங்கா விஷயங்களை இங்கே விற்பனைக்கு
வைத்திருக்கிறார்கள். அவற்றில் சில பல
பொருட்களை நண்பர் வாங்கிக் கொண்டிருந்தார்.
அவற்றில் சிலவற்றின் புகைப்படங்களை இப்பதிவில் சேர்த்திருக்கிறேன்.
கடையை விட்டு அகல மனமே இல்லாது நண்பர் அகல அங்கிருந்து
எங்கள் வாகனம் நிறுத்தி இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம். இந்த அலங்காரப் பொருட்கள் வாங்குவதில்
நண்பருக்கு அதிக ஆர்வம் உண்டு என்பதையும் இங்கே சொல்ல வேண்டும். அவர்கள் வீட்டில்
கொலு வைக்கும்போது பொம்மைகளை அலங்கரிக்க பயன்படும் என பலவற்றை வாங்கிக் கொண்டார்.
அடுத்ததாய் நாங்கள் பார்க்கப்போனது ஒரு சிவஸ்தலம்.
ஜ்யோதிர்லிங்கங்கள் என அழைக்கப்படும் பன்னிரெண்டு இடங்களில் நாங்கள் இரண்டாவதாக
பார்த்தது த்வாரகாவிற்கு வெகு அருகில் இருக்கும் இன்னுமொரு ஜ்யோதிர்லிங்க ஸ்தலமான
நாகேஷ்வர். த்வாரகா நகரிலிருந்து சுமார்
18 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இடத்திற்கு போகும் போது சில கிராமங்களைக்
கடந்து சென்றோம். வழியில் நம் ஊர் மாட்டு வண்டி போலவே ஒட்டக வண்டிகள்! சில
ஒட்டகங்கள் சாலை ஓரங்களில் தன்னிச்சையாக மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.
சில மாடுகளும் பார்த்தோம்.
இப்படியாக காட்சிகளைப் பார்த்தபடியே நாகேஷ்வர் வந்து
சேர்ந்துவிட்டோம். கோவிலின் வாயிலிலேயே
பிரம்மாண்டமான சிவன் சிலை நம்மை வரவேற்கிறது.
வெகுதூரத்திலிருந்தே இச்சிலையைப் பார்க்க முடியும். பிரம்மாண்டமான சிலை
என்பதை படத்திலிருந்தே நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும் என்றாலும் சிலையின்
அளவினையும் இங்கே உங்களுக்குச் சொல்லி விடுகிறேன். சிலையின் மொத்த உயரம் 85 அடி,
அகலம் 40 அடி! எவ்வளவு பிரம்மாண்டமாய் இருக்கும் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள
முடியுமே!
சிலைக்கு அருகிலேயே ஒரு சிறுவன் அமர்ந்து கொண்டு
தானியம் [கம்பு] விற்றுக் கொண்டிருந்தான். ஒரு சிறிய டப்பா அளவு கம்பின் விலை
ரூபாய் 10! சிலைக்கு அருகிலும், சிலையின் மேலும் நிறைய புறாக்கள் அமர்ந்திருக்க,
கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சிறுவனிடம் கம்பு வாங்கி புறாக்களுக்கு
இடுகிறார்கள். புறாக்களும் தங்களுக்குள் சண்டை சச்சரவில்லாது கிடைக்கும்
தானியங்களை உண்பதும், பறப்பதுமாய் இருக்கின்றன.
இப்படி புறாக்களையும் சிவன் சிலையையும் பார்த்துக்
கொண்டிருந்தால் நாகேஷ்வரை தரிசிக்க வேண்டாமா?
வாருங்கள் ஜ்யோதிர்லிங்கங்களில் ஒன்றான நாகேஷ்வரை தரிசிப்போம். நாம் நல்ல நேரத்தில் தான் இங்கே
வந்திருக்கிறோம். அன்றைய நாளின் உச்சிகால பூஜை சமயத்தில் இங்கே வந்து
சேர்ந்திருக்கிறோம். மிகவும் விஸ்தாரமாக உச்சி காலை பூஜை நடக்கப் போகிறது. மிகப்
பெரிய வாயிலின் வழியே உள்ளே நுழைகிறோம்.
அதிக அளவில் பக்தர்கள் இல்லை என்றாலும் 150-200 பேராவது
இருப்பார்கள். கோவிலின் வெளியே புகைப்படம்
எடுக்க அனுமதி உண்டு. உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. புகைப்படக் கருவியை பையினுள்
வைத்து விட்டு கோவிலுக்குள் நுழைந்தோம்.
அங்கே கண்ட காட்சிகள், மற்ற விவரங்கள் அடுத்த பகுதியில்
பார்க்கலாம்!
நட்புடன்
இந்த முறை ரிஷிகேஷில் கீதா பவனில் புகைப்படம் எடுக்க கூடாது என்று எச்சரிக்கை போர்ட் வைத்திருந்தார்கள்..உள்ளே போய் பார்த்தா பகவத் கீதையை ஹிந்தியில் எழுதிவைத்திருக்கிறார்கள். 2 நிமிடம் கூட அங்கு இல்லை வெளியே வந்துவிட்டேன்.
பதிலளிநீக்குஏன்? பகவத்கீதையை ஹிந்தியில் எழுதக் கூடாதா?????????????????? கீதாபவனில் எப்போதுமே புகைப்படம் எடுக்க முடியாது. நாங்க 2 முறை போனப்போவும் இப்படித் தான். பெரும்பாலான வட இந்தியக் கோயில்களில் தோல் பொருட்களுக்கே அனுமதி இல்லை. பெல்டில் இருந்து கழட்டி வைச்சுட்டுத் தான் போகணும். :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வடுவூர் குமார்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....
நீக்குகண்ணன் அலங்காரப் ப்ரியன்.
பதிலளிநீக்குநாகேஷ்வர் சிவனைத் தரிசிக்க ஆவலாய்.... உள்ளே படம் எடுக்க முடியாது என்பது ஏமாற்றம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஅருமை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!
நீக்குதொடருங்கள் அண்ணா...
பதிலளிநீக்குஆஹா... படங்கள் அத்தனையும் அழகோ அழகு அண்ணா...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
தங்களின் பயணஅனுபவத்தை மிகஅழகாக விளக்கியுள்ளீர்கள்
ஒவ்வொரு படங்களும் அற்புதம் வாழ்த்துக்கள் த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.
நீக்குபிருந்தாவனத்துக் கிருஷ்ணனைப் பார்க்கையில் நாமுமே தவழ்ந்து வந்து தான் பார்க்கணும் என்பார்கள். எங்களால் முட்டி போட முடியாது என்பதால் நாங்க அப்படிப் பார்க்கலை. இங்கே அப்படிச் சொல்ல மாட்டார்கள், இந்த துவாரகாதீஷ் சின்ன உருவில், பெரிய உருவிலும் எங்க வீட்டிலும் இருக்கான். :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....
நீக்குஅழகான கலையம்சம் கொண்ட நகைகள், ஆபரணங்கள்! சிவன் சிலை பிரமிக்க வைத்தது! தொடர்கிறேன்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
நீக்குபுகைப்படங்கள் அநைத்தும் ரசித்தேன் ஜி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குமெகா சிவன் சிலையை பெங்களூரிலும் பார்த்த ஞாபகம் :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
நீக்குஅலங்காரப் பொருட்கள் அருமை...நாகேஷ்வர் உள் தரிசனம் கிடைக்கவில்லையே ...தங்கள் புகைப்படம் மூலம் பார்க்கலாம் என்றால்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்குநகை நட்டுகள் ப்ரமாதம். நானும் அங்கே சில பொருட்களை வாங்கினேன்:-)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
நீக்கு