எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, October 7, 2015

பூனைக்குட்டி பாட்டு - சில காணொளிகள்....


நான் ரசிக்கும் குறும்படங்களை புதன் கிழமைகளில் பகிர்ந்து கொள்வது வழக்கம். அப்படி குறும்படங்கள் பார்க்கும் போது சில விளம்பரங்களும், வேறு சில காணொளிகளும் கூகிள் தேடுதலில் வந்து நம்மைப் பார்க்கச் செய்து விடும்.  அவ்வப்போது இப்படிப் பார்த்த சில காணொளிகளை சேமித்து வைத்துக் கொள்வதுண்டு. ஒரு சில விளம்பரங்கள் மனதைத் தொடும் விதமாகவும், சில நகைச்சுவை உணர்வைத் தூண்டும் விதமாகவும் இருக்கின்றன.  சில நிமிடங்களுக்குள் அவர்கள் சொல்லும் விஷயத்தினைச் சொல்ல வேண்டும் என்பதால் அவர்கள் எத்தனை உழைக்க வேண்டும் என்பது புரிகிறது.

அப்படிப் பார்த்த ஒன்றிரண்டு காணொளிகளை அவ்வப்போது எனது ஃப்ரூட் சாலட் பகுதியில் பகிர்ந்து கொள்வது வழக்கமாகி இருக்கிறது. இன்றைக்கு குறும்படத்திற்கு பதிலாக நான் ரசித்த சில காணொளிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

புகை நமக்குப் பகை

புகைப்பிடிக்கும் நண்பர்கள் உங்களுக்கு உண்டா? இக்காணொளியை அவர்களுக்கு காண்பியுங்கள்!
பூனைக்குட்டி பாட்டு:

இந்த பாட்டு துளசி டீச்சருக்கு நிச்சயம் பிடிக்குமென நினைக்கிறேன்!
கற்றுக் கொடுப்போம்!
லிஃப்டில் ஒரு பயணம்!

சாதாரணமாகவே சிலருக்கு லிஃப்டில் பயணிப்பது கொஞ்சம் பயம் தரும் விஷயம். நான் முன்பு வேலை செய்த அலுவலகத்தில் ஒரு மனிதர்.... அவர் தனியாக லிஃப்டில் பயணிக்கவே மாட்டார். அப்படித் தப்பித் தவறி அவரை தவிர்த்து எல்லோரும் இறங்கி விட, தனியாக பயணிக்கும் போது அலறுவது கேட்கும். இங்கே என்ன நடக்கிறது எனப் பாருங்களேன்!


فل بیغیرتی
Posted by ASR Legend on Monday, September 28, 2015சுத்தம் சோறு போடும்.....

ஜப்பானின் புல்லட் ரயிலில் எப்படி சுத்தம் செய்கிறார்கள் எனக் காண்பிக்கும் காணொளி.... இந்த நிலை இந்தியாவில் வரும் நாள் எந்நாளோ!
என்ன நண்பர்களே இன்றைய காணொளிகளைக் கண்டீர்களா?  வேறு ஒரு பதிவுடன் நாளை சந்திக்கும் வரை....

நட்புடன்26 comments:

 1. புகை பகை, மற்றும் சுத்தம் சோறு போடும் காணொளியும் ஏற்கெனவே பார்த்திருக்கிறேன். மற்றவை புதிது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. கண்ணுக்கு விருந்தாய் மனதுக்கு மருந்தாய் காணொளிக் காலை..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 3. நன்றி ஐயா
  இதோ காணொளியைக் காணச் செல்கின்றேன்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 4. நம்ம ரஜ்ஜுவுக்கும் போட்டுக் காமிச்சேன். காதை ஒரு பக்கம் தூக்கிக் கவனிச்சுட்டு, வீட்டுக்குள்ளே வேறு பூனை வந்துருக்குன்னு தேடிப் போயிருக்கான்:-)

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹஹ்! துளசி அக்கா இதை எதிர்ப்பார்த்தோம்..இந்த உங்க பதிலை...ஹஹஹ இங்கயும் இப்படித்தான் னம்ம வீட்டுல ரெண்டு பௌ பௌ செல்லங்கள்...பௌ பௌ சத்தம் இல்ல மியாவ் சத்தம் இந்த மாதிரி காணொளில கேட்டா காது ரெண்டும் தூக்கிட்டு அலை பாய்வாங்க எங்க எங்கனு..

   கீதா

   Delete
  2. ஹாஹா. பாவம் ரஜ்ஜூ.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 5. மிய்யாவ்.. பாட்டைக் கேட்டதும் - இங்கே வாசலில் சுற்றிக் கொண்டிருந்த பூனைக் குட்டி கலவரமாகி ஓடியே போய் விட்டது...

  சில காணொளிகளைக் கண்டிருக்கின்றேன்..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 6. பூனைப்பாட்டு, புகை காணொளி, சுத்தம் பற்றிய காணொளி கண்டதுண்டு ஜி! அந்த கற்றுக் கொடுத்தல் அருமை....

  சுத்தம் நம்மூர்லயும் வந்தா எவ்வளவு நல்லாருக்கும்...பெரும்பான்மையான சுத்தம் செய்வோர் செய்வதை விட பேசிக் கொண்டே இருப்பதையும் பார்த்திருக்கின்றேன்...நேரம் வீணாக்குவதை..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 7. அருமை,,,,, அனைத்தும், பாட்டு நல்லா இருக்கு சகோ,
  வாழ்த்துக்கள். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   Delete
 8. துளசி டீச்சருக்கு பிடித்தது ஏன் என்று விளங்கவில்ல, புகை பகை ஏற்கனவே பார்த்தது. சுத்தம் பற்றிய காணொளி அருமை.

  ReplyDelete
  Replies
  1. துளசி டீச்சருக்கு பூனை மிகவும் பிடித்தது. போலவே பூனைப்பாட்டும்... அவருடைய “என் செல்வச் செல்லங்கள்” புத்தகம் முடிந்தால் படியுங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 9. பயர்பாக்ஸில் வீடியோ பார்க்க முடியவில்லை! பின்னர் பார்க்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ். முடிந்த போது பாருங்கள்....

   Delete
 10. எல்லாம் அருமை அண்ணா..முக்கியமாகக் கற்றுக்கொடுக்க கற்றுக்கொள்ளவேண்டும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   Delete
 11. லிஃப்ட் காணொளி உண்மையிலேயே அதிர வைத்தது! மற்றவை பார்க்கணும். :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 12. பூனைக்குட்டிப் பாட்டு பாடும் சிறுவர்களின் குரல் வளம் அருமை! புகை பிடிப்பதும் சிரிக்க வைத்தது. :)

  ReplyDelete
  Replies
  1. காணொளிகளை ரசித்து கருத்துரைத்தமைக்கு நன்றி கீதாம்மா..

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....