எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, October 21, 2015

முதியோர் இல்லம்.....சமீப காலங்களாகவே முதியோர் இல்லங்கள் அதிகரித்து விட்டன. எங்கு பார்த்தாலும் முதியோர் இல்லங்கள், அவற்றுக்கான விளம்பரங்கள் என பரவி இருக்கிறது. சிறு சிறு நகரங்களில் கூட இப்படிப் பட்ட முதியோர் இல்லங்கள் வர ஆரம்பித்துவிட்டன. பெரு நகரங்களில் பெரிய அளவில், இதை ஒரு தொழிலாகவே செய்ய ஆரம்பித்து விட்டார்கள். தில்லி நகரில் அரசே முதியோர் இல்லங்கள் கட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள். சமீபத்தில் முதியோர் தினத்தன்று ஒன்றிரண்டு கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டதாக செய்தியில் படித்தேன்.

இப்படி முதியோர் இல்லங்கள் பெருகிக் கொண்டிருக்க, அவை தவறு என்பதையும் சிலர் சொல்லி வருகிறார்கள்.  இந்த விஷயம் பற்றியது தான் இன்றைய பதிவு. இரண்டு காணொளிகள் – பாருங்களேன்!


The God Father எனும் குறும்படத்தினைச் சமீபத்தில் பார்த்தேன். தனது தந்தையை மனைவி சொல் கேட்டு முதியோர் இல்லத்தில் கொண்டு சேர்க்கிறார் ஒருவர். அங்கே நடக்கும் சம்பாஷணைகள், முதியோர் இல்லத்தில் கொண்டு விடும்போது கூட மகனுக்கு செலவு அதிகம் வைக்கக் கூடாது என நினைக்கும் அப்பா, தீபாவளி, பொங்கலுக்கு வந்துட போறாரு என சொல்லும் மனைவி என நகர்ந்து கொண்டிருக்கிறது.  முடிவு என்ன? என்பதை காணொளியில் பாருங்களேன்...  மிக அழகாய் எடுத்திருக்கிறார்கள். குறும்படம் எடுத்தவர்களுக்கும் தயாரித்தவர்களுக்கும் வாழ்த்துகள்!

முகப்புத்தகத்தில் பகிர்ந்து கொண்ட நண்பர் ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி!

அமெரிக்கா..... தனது வீட்டுப் பக்கத்தில் வெளியே படுத்திருந்த ஒரு மூதாட்டியைக் கண்ட 37 வயது இளைஞருக்கு மனதில் ஒரு எண்ணம். எப்படியாவது அவருக்கு உதவ வேண்டும்....  உடனே செயலில் இறங்கி அவருக்கு மர வீடு ஒன்றை கட்டிக் கொடுத்திருக்கிறார்.  பாருங்களேன்.....  அந்த மூதாட்டிக்கு என்ன ஒரு சந்தோஷம்!  காணொளி 6 நிமிடம் 35 நொடிகள் என்றாலும், முதல் 3 நிமிடம் 16 நொடிகள் மட்டும் பார்த்தால் போதும் – இரண்டு முறை வருகிறது என்பதால்...


முகப்புத்தகத்தில் பகிர்ந்து கொண்ட நண்பர் பாலாஜி ராஜாராமன் அவர்களுக்கு நன்றி.

என்ன நண்பர்களே... இன்றைக்கு பகிர்ந்து கொண்ட இரண்டு காணொளிகளையும் ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்...

நாளை வேறு பதிவுடன் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்

புது தில்லி

36 comments:

 1. இரண்டுமே பார்த்திருக்கிறேன். முதல் காணொளி மிகவும் பாதித்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. இரண்டும் அற்புதமான காணொளிகள்
  கண்டு இரசித்தோம்
  பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 3. முதல் காணொளி மனதை கணக்கச் செய்தது
  இரண்டாவது காணொளி மனதை நெகிழச் செய்தது
  நன்றி ஐயா
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 4. முதியோர் இல்ல காணொளி கலங்க வைத்து விட்டது. அடுத்த காணொளி நெகிழ வைத்தது. இரண்டுக்கும் ஒரு தொடர்பு உள்ளது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 5. இரண்டு காணொளிகளில் முதலில் உள்ளதை முன்பே பார்த்திருக்கிறேன். இரண்டுமே மனதை தொட்ட காணொளிகள். பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே.நடனசபாபதி ஐயா.

   Delete
 6. முதல் காணொளி என்னை மிகவும் பாதித்தது. கடைசியில் அந்த பாதர் சொல்வது நெஞ்சில் அறையும் உண்மை. பகிர்ந்தமைக்கு நன்றி!
  த ம 6

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.

   Delete
 7. முதலாவது காணொளியால் மனது இன்னும் மீளவில்லை!....:(

  இரண்டாவது.. மனிதநேயம்!
  போற்றப்படவேண்டியது உங்கள் மனது போல!...

  அருமையான காணொளிகள்!
  பகிர்வுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோ!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி ஜி!

   Delete
 8. புதிய பந்தங்கள்
  பழைய பந்தங்களை
  மறக்க உதவும்.
  மன்னிக்கவும் உதவும்.

  சுப்பு தாத்தா.
  www.subbuthathacomments.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.

   Delete
 9. முதல் காணொளியை முன்னரே பார்த்துவிட்டேன். நெகிழ்ச்சியைத் தந்தது. இதுதான் உலகம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 10. இன்று டிவி பட்டிமன்றத்தில் லியோனி அவர்களும் ,இதையே, குறும்படம் என்று சொல்லாமல் கதை விட்டார் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 11. முதல் காணொளி மனம் கனக்கச் செய்தால் இரண்டாவது நெகிழச்செய்தது பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 12. வணக்கம் ஜி முதல் காணொளியில் 30 வருடங்களுக்கு முன்பு ஒரு அனாதையை எடுத்துட்டுப்போனாரு என்ற வசனத்தை கேட்டதும் எனக்கு கண் கலங்கி விட்டது ஜி

  இவைகள் அரசே தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கு கடைசி காலத்தை நினைக்கும் பொழுது கலக்கமாகிறது மனசு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 13. முதல் காணொளி ஏற்கனவே பார்த்து விட்டேன்.இரண்டாவது இப்போதுதான் !
  அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 14. The present humanity ...l want yo salute myself. one should be selfish. Then only he can live. Sivand

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிம்மதியில்லாதவன்...

   Delete
 15. வணக்கம்
  ஐயா
  சொல்லிய கருத்தும் வீடியோஇரண்டும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா த.ம11
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 16. நல்ல கருத்துள்ள வீடியோக்கள். அருமை ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 17. முதல் காணொளி முகநூலில் பார்த்து அசந்து போனேன்! சிறப்பான காணொளிகள்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 18. முதல் காணொளி கண்களை கலங்கச் செய்துவிட்டது. மனம் என்னவோ செய்தது. அருமையான படம். இயக்கிவருக்கும் அந்தக் குழுவிற்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள் இப்படி ஒரு நல்ல படத்தைத் தந்ததற்கு.
  இரண்டாவது காணொளி நெகிழ்த்திவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....