எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, October 22, 2015

ராஜ் பரோட்டா

பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 15

முந்தைய பகுதிகள் – 1 2 3 4 5 6 7 8 9 10 11  12 13 14


படம்: இணையத்திலிருந்து....

[b]பேட்[t] த்வாரகா செல்ல படகு வசதிகள், சிறிது நேரத்திற்காக நிறுத்தப்பட்டிருக்க, மதிய உணவினை முடித்துக் கொள்வோம் என்ற எண்ணத்தோடு, படகுத் துறையில் உள்ளவர்களிடம் நல்ல உணவகம் எங்கே இருக்கிறது என கேட்க, அவர்கள் எங்களை மேலும் கீழும் பார்த்தார்கள்.  இப்பகுதியில் அத்தனை நல்ல உணவகங்கள் இல்லை என்றும் த்வாரகாவிலேயே உணவை நீங்கள் சாப்பிட்டிருக்கலாமே என்றும் சொல்ல, இங்கே உணவகமே இல்லையா என மறு கேள்வி எழுப்பினோம்.

இங்கே இருப்பதில் கொஞ்சம் சுமாரான உணவகம் என்று பார்த்தால் ஓக்கா [OKHA] ரயில் நிலையத்தின் எதிரே இருக்கும் ராஜ் பராட்டா ஹவுஸ் மட்டும் தான்.  படகுத்துறையிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது என்பதையும் வண்டியில் சென்று சாப்பிட்டு வாருங்கள் என்றும் சொல்லி வழி அனுப்பினார்கள். சரி முதலில் கொஞ்சம் சாப்பிட்டு வருவோம் என நாங்களும் புறப்பட்டோம்.

ஐந்து நிமிடங்களில் ராஜ் பராட்டா ஹவுஸ் எங்களை வரவேற்றது.  குறுகிய சாலை, ஆனால் அதிக வாகன நடமாட்டம் இருக்கும் சாலையில் இருக்கும் அந்த உணவகத்தின் அருகே வாகனத்தினை நிறுத்த சரியான இடம் தேடினார் வசந்த் [b]பாய்.  எங்களை இறக்கிவிட்டு அவர் செல்ல, நாங்கள் ராஜ் பரோட்டா முன்னர் வந்தோம்.  மிகச் சிறிய உணவகம்.  ஒரு பக்கம் தந்தூரி ரொட்டி, ஃபுல்கா ரொட்டி என தயாராகிக் கொண்டிருக்க, மறு பக்கத்தில் இருக்கைகள். ஒரு சமயத்தில் பத்து பதினைந்து பேருக்கு மேல் உள்ளே அமர முடியாது!

நாங்கள் சென்றபோது உள்ளே இடமில்லை. நீங்கள் எத்தனை பேர்? எனக் கேட்டு, வாசலில் இருந்த சில ஸ்டூல்களில் எங்களை அமரச் சொன்னார். நெகிழி ஸ்டூல்களில் நாங்கள் அமர அதன் கால்கள் ஆட்டம் கண்டன! எப்போது உடைந்துவிடுமோ என்ற பயத்துடன் தான் அமர்ந்தேன். ஏற்கனவே இரண்டு மூன்று இடங்களில் இப்படி நெகிழி இருக்கைகளில் அமர்ந்து அதன் கால்களில் ஒன்று உடைந்து போக, பப்பரக்காஎன விழுந்த அனுபவம் இருப்பதால் கொஞ்சம் தயக்கம். சில நிமிடங்கள் அதில் உட்கார்வது, அதுவும் உடைந்து விடுமோ என்ற உணர்வுடனேயே உட்காருவது சங்கடமான விஷயம்.  சில நிமிடங்களுக்கு மேல் அதில் உட்கார முடியவில்லை.

எழுந்து நின்று கொண்டு, அவ்வழியே செல்லும் வாகனங்களையும் மனிதர்களையும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். உணவகத்தின் வாயிலிலும் கேடியா உடை அணிந்த மனிதர்கள் அமர்ந்திருந்தார்கள்.  நமக்கு எப்படி அவர்கள் வித்தியாசமாக தெரிகிறார்களோ அதே போல நாமும் அவர்களுக்கு வித்தியாசமாக இருக்கிறோமே... அதனால் அவர்களும் எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்! இப்படி சில நிமிடங்கள் கடக்க, கடையின் சிப்பந்தி ஒருவர் எங்களை அழைத்தார்.

படம்: இணையத்திலிருந்து....

உள்ளே நுழைந்து எங்களுக்கு காட்டிய இருக்கைகளில் அமர்ந்தோம். மூன்று பேர் என்பதால் மூன்று சப்ஜிகளும், தயிரும் சொல்லி, ஃபுல்கா ரொட்டியும் சொன்னோம். அவை வருவதற்கு முன்னர் கொஞ்சம் வெங்காயமும், முள்ளங்கியும் வந்து சேர்ந்தது.  பெரும்பாலான வட இந்திய உணவகங்களில், இப்படி சப்பாத்தியுடன் சலாட் இலவசமாகவே கொடுப்பார்கள். அவற்றின் மேலாக சிறிது உப்பு தூவி கொஞ்சம் எலுமிச்சை பிழிந்து கலந்து பச்சையாகவே சாப்பிடலாம். ஒரு சில வெங்காயத் துண்டுகளை சாப்பிட்டபடியே, சாப்பிட்டுக் கொண்டிருக்கும் மற்றவர்களை பார்த்துக் கொண்டிருந்தோம்.

படம்: இணையத்திலிருந்து....

சாதாரணமாக பசி தாங்கினாலும், நாம் உணவுக்கு காத்திருக்கும்போது மற்றவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தால், அகோரப் பசியாக தெரியும். அதே தான் அன்றும் நடந்தது.  மற்றவர்களுக்கு ரொட்டிகளை சுடச்சுட கொண்டு வந்து கொடுத்தபடியே இருக்க, நமக்கு சப்ஜி மட்டும் ஒவ்வொன்றாக வந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு தான் எங்களுக்கும் ரொட்டிகள் வந்தது. இரண்டு விள்ளல்கள் ரொட்டியும் சப்ஜியும் உள்ளே செல்ல, என்ன ஒரு நிம்மதி. சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களை பார்த்துக் கொண்டிருப்பது மட்டும் கொடுமையான விஷயம்!

சிறிய உணவகமாக இருந்தாலும் கொடுத்த உணவு சுவையாக இருந்தது. பொதுவாகவே வடக்கில் சமையலுக்கு கடுகு எண்ணை தான் பயன்படுத்துவார்கள். நம்மவர்கள் பலருக்கும் அதன் வாசமே பிடிப்பதில்லை.  இருந்தாலும் கடந்த பல வருடங்களாக வடக்கில் இருப்பதால் எனக்கு அந்த பிரச்சனையில்லை. இது போல பயணங்களில் எனக்கு பிடித்த எண்ணையில் சமைத்தால் தான் சாப்பிடுவேன் என்று சொல்ல முடியாது. சொன்னால் பட்டினி இருக்க வேண்டியது தான்!

படம்: இணையத்திலிருந்து....

நான்கு ஐந்து ஃபுல்கா ரொட்டிகள், [dh]தால், மிக்ஸ் வெஜிடபிள், மட்டர் பனீர் மற்றும் தயிர் என சப்ஜிகளுடன் சாப்பிட்டு முடித்தோம். மூன்று பேருக்கு அதிக செலவும் ஆகவில்லை. மொத்தமாக 300-350 ரூபாய்க்குள் தான் செலவானது. ஓட்டுனர் வசந்த் [b]பாய் எங்களுடன் சாப்பிடவில்லை. அவருக்கு சாப்பாட்டை விட தூக்கம் முக்கியம் என தூங்கப் போய் விட்டார். சரி எங்களை படகுத் துறையில் விட்டு பிறகு சாப்பிடுங்கள் எனச் சொல்லி அவரிடம் கொஞ்சம் பணம் கொடுத்தோம்.

பெரிய பெரிய உணவகங்களை விட, இப்படி இருக்கும் சின்ன உணவகங்களில் கூட சுவை நன்றாகத் தான் இருக்கிறது. கடையின் அமைப்பினை மட்டும் பார்த்து விட்டு நன்றாக இருக்காது என்று நினைத்து விடக்கூடாது. அதுவும் நிறைய மக்கள் வருவதால், அன்றைக்கு செய்த உணவு வகைகள் அன்றே தீர்ந்து விடும் – Deep Freezer-ல் வைக்கப்பட்டு இரண்டு மூன்று நாட்களுக்கு பயன்படுத்தும் அபாயம் இல்லை! எங்களிடம் பணம் வாங்கிக் கொண்ட கடை உரிமையாளர் உணவு எங்களுக்குப் பிடித்ததா என்பதையும் கேட்டுக் கொண்டார்.

இப்படியாக மதிய உணவினை முடித்துக் கொண்டு படகுத் துறையை நோக்கி நாங்கள் பயணித்தோம். அது பற்றிய விவரங்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன்....

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

38 comments:

 1. ராஜ் பரோட்டா.. அருமை!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 2. சுவைத்துப் படித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. பரோட்டா என்று சொல்லிவிட்டு
  பூரி அல்லது சப்பாத்தி ஆக இருக்குமோ ?
  படம் போட்டு இருக்கிறீர்களே !!  சுப்பு தாத்தா

  ReplyDelete
  Replies
  1. கடையின்பெயர் ராஜ் பரோட்டா ஹவுஸ்! நாங்கள் சாப்பிட்டது ஃபுல்கா ரொட்டி! [சப்பாத்தி]. அது தான் படம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.

   Delete
 4. ருசித்து படித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 5. உண்மைதான். அயோத்யா போனபோது, சின்ன உணவகத்தில் உணவும் உபசரிப்பும் ரொம்ப நல்லா இருந்தது.

  கண்ணனைக்காணக் காத்துக்கிட்டு இருக்கேன். சீக்கிரம் படகில் ஏறுங்க....

  ReplyDelete
  Replies
  1. அடுத்து படகேற்றம் தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.


   Delete
 6. தொடரைப் படிக்கவில்லை இன்னும்!

  வந்து இதனை மட்டும் படித்திடாமல் முந்திய பதிவுகளையும்
  படித்துக் கருத்து இடுகிறேன்!

  விஜயதசமி நன்நாள் வாழ்த்துக்கள் சகோதரரே!

  ReplyDelete
  Replies
  1. முடிந்த போது எல்லா பதிவுகளையும் படித்து விடுங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி ஜி!

   Delete
 7. ராஜ் புரோட்டா ராஜா வீட்டு புரோட்டா மா3 இருக்கு ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர் ஜி!

   Delete
  2. ஃபுல்கா ரொட்டி! புகழ்
   இங்கும் பேசப் படுகிறது
   தங்களது பயன் தரும் பயணக் கட்டுரையின் வாயிலாக நன்றி!
   த ம +
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுவை வேலு.

   Delete
 8. சாப்பிட்டுக்கொண்டு இருப்பவர்களைப் பார்த்துக்கொண்டு இருப்பது கொடுமையான விசயம் தான்.
  பதிவு.... ம்.... நன்றாக இருந்தது நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம் ஜி!

   Delete
 9. பயணத்தில் பசி நேரத்தில் நல்ல உணவு கிடைத்தால்,கேட்க வேண்டுமா?ஒரு கட்டுதான்.
  புல்கா சப்ஜி சாப்பிட்டது போல் ஒரு ஃபுல்னெஸ்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 10. பசி நேரத்தில் கிடைக்கும் உணவு எப்படி இருந்தாலும் அமிர்தம்தான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 11. டால் மக்கனி இந்த சப்பாத்தியின் ஜோடியாச்சே :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 12. ஃபுல்காவுடன் கொடுக்கப்பட்ட சைட் டிஷ் படிக்கும் போதே நல்லாயிருக்கும் எண்ணும் உணர்வு வருகிறது..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete


 13. தோற்றத்தை வைத்து எடை போடக்கூடாது என்பது தான் உண்மை. மூர்த்தி சிறினாலும் கீர்த்தி பெரியது அல்லவா? நீங்கள் ராஜ் பரோட்டா உணவகத்தில் சாப்பிட்டதை படிக்கும்போது நானும் கூட இருந்து சாப்பிட்டதைப் போல உணர்ந்தேன், அருமையாய் விவரிக்கிறீர்கள். பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. பல சமயங்களில் தோற்றம் பார்த்து தான் ஏமாந்து போகிறோம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 14. ஜெய்ப்பூரில் நாங்கள் தங்கி இருந்த இடத்தில் சாய் வேண்டுமென்றால் நம் கண்முன்னாலேயே பால் கவர் திறந்து சாய் தயாரிக்கப் படுவதைப் பார்த்திருக்கிறேன் சிறிய உணவகங்கள் பற்றிய அனுபவம் நிறையவே உண்டு.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 15. ராஜ் பரோட்டா நா ஊற வைத்துவிட்டது! படங்களை பார்க்கையிலேயே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 16. நாவில் நீர் சுரக்கவைக்கும் உணவு போல தெரிகின்றது...தொடர்கின்றோம் உங்கள் படகுப் பயணத்தை அறிய...

  கீதா: ஆம் ஜி நிறைய பேருக்கு, கடுகு எண்ணையில் செய்யும் வட இந்திய உணவு பிடிப்பதில்லை. உணவுக்கு நாக்கை வளர்த்துக் கொண்டால் வட இந்தியப்பயணம் இனிக்காது.மட்டுமல்ல எந்தப் பயணமுமே சுவைக்காது.
  தொடர்கின்றோம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 17. கடையின் அமைப்பினை மட்டும் பார்த்து விட்டு நன்றாக இருக்காது என்று நினைத்து விடக்கூடாது. //

  உண்மை. பயணத்தொடரை பயணத்திலேயே இருப்பதால் விட்டு விட்டு படிக்கிறேன். தொடர்ந்து முழுவதும் ஒருநாள் படித்து விடுவேன். அருமையாக போகிறது பயணம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 18. ப்ரேக் போட்டு போட்டு இங்க வந்துருக்கேன்... :)
  நாற்பதடி சிவலிங்கம், 56 வகை பிரசாதம் (படிச்சதுக்கே தூக்கம் வந்துச்சு :) ), கேடியா உடை எல்லாம் அறியத் தந்ததற்கு நன்றி.. ஆமாம், ரோட்டரத்தில் சிறு உணவகங்களில் நன்றாக இருக்கும். பழையது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை..அமைதியாகவும் இருக்கும். எனக்காகப் படகை நிறுத்தி வச்சுருக்கீங்கல்ல? ரொம்ப தாமதமா வரேனே..மன்னிக்கவும் அண்ணா
  பயணக் கட்டுரை அருமை..ஒன்றையும் விட்டு வர மனசில்லை

  ReplyDelete
 19. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

  பயணத் தொடரின் விடுபட்ட பகுதிகளை ஒவ்வொன்றாய் படித்து கருத்துரைத்தமைக்கு நன்றி.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....