வியாழன், 15 அக்டோபர், 2015

[DH]தாருகா மற்றும் [DH]தாருகி - நாகேஷ்வர்


பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 13

முந்தைய பகுதிகள் – 1 2 3 4 5 6 7 8 9 10 11  12

ஹிந்தி மொழியில் [dh]தாரு என்றால் மது! அட நம்ம புதுகைப் பதிவர் மது அல்ல.....  இது சோமபானம்.  அட மயக்கம் தரும் மதுவைப் பற்றி இப்பதிவில் சொல்லப் போகிறார் என ஆசையோடு வந்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.  இது அந்த [dh]தாரு அல்ல. 

[dh]தாருகாவனம் – தேவதாரு மரங்கள் நிறைந்த அடர்ந்த வனமாக இருந்த இடத்தின் பெயர் தான் பிற்காலத்தில் த்வாரகா என ஆகி இருக்கலாம் எனத் தோன்றுகிறது.  இந்த வனத்தில் தான் நாம் இன்று பார்க்கப் போகும் நாகேஷ்வர் இருக்கிறது. சென்ற பதிவில் சொன்னது போல மதிய நேர உச்சிகால பூஜையை பார்க்கும் முன்னர், இக்கோவில் பற்றிய சில வரலாறுகளைப் பார்க்கலாம்.


படம்: இணையத்திலிருந்து....

[dh]தாருகாவனத்தில் [dh]தாருகா எனும் அரக்கன் தனது மனைவி [dh]தாருகியுடன் வாழ்ந்து வந்தான்.  பார்வதி தேவியிடம் சாகா வரம் பெற்ற [dh]தாருகா அந்த வழியாக வரும் அனைவருக்கும் தொல்லைகள் கொடுத்து வந்தான். அப்படி இருக்கையில் ஒரு நாள் சிவபெருமானுடைய பக்தர்களில் ஒருவரான சுப்ரியா என்பவர் அவ்வழியே வரும் போது, அவரையும் அவருடன் வந்தவர்களையும் சிறை பிடித்தனர். சிறை பிடிக்கப்பட்ட அனைவரும் துன்புறுத்தப்பட, சுப்ரியா அவர்கள் அனைவரையும் சிவபெருமானை “ஓம் நமச்சிவாயஎன்று துதிக்கச் சொல்ல, இதை அறிந்த [dh]தாருகா சுப்ரியாவினை அழிக்க வந்தான்.

[dh]தாருகாவிடம் இருந்து தனது பக்தரை காப்பாற்ற சிவபெருமான் ஜ்யோதிர் லிங்க வடிவில் அங்கே தோன்றி [dh]தாருகாவினை பாசுபத அஸ்த்ரம் கொண்டு அழித்தாராம். [பார்வதியின் வரம் பெற்றதால் அவனை அழிக்காது பக்தர்களை காப்பாற்றினார் என்றும் சொல்வதுண்டு!] அது மட்டுமல்லாது தொடர்ந்து அங்கேயே ஜ்யோதிர்லிங்க ஸ்வரூபமாக இருந்து பக்தர்கள் அனைவரையும் காப்பாற்றுவதாகவும் நம்பிக்கை.

என்ன நண்பர்களே, ஒரு கதை கேட்டாயிற்றா? இன்னும் இரண்டு கதைகளும் உண்டு. இங்கே இருக்கும் சிவலிங்கம் தெற்கு நோக்கியும் [GH]கோமுகம் கிழக்கு நோக்கியும் இருக்கிறது. இதற்கும் ஒரு கதை உண்டு. அந்த கதை என்ன? பார்க்கலாம் வாங்க....

பெரும்பாலான கோவில்களில் சில பக்தர்கள் இறைவனுடைய திருவுருவத்திற்கு நேரே நின்று கொண்டு அவருக்குப் பின்னால் இருப்பவர்களுக்கு இறைவனின் திருவுருவம் தெரியாமல் செய்து விடுவதுண்டு. அப்படித் தான் இங்கேயும் நடந்திருக்கிறது. நாமதேவர் அப்படி ஒரு நாள் இறைவனின் திருவுருவத்திற்கு எதிரே நின்று கொண்டு பஜனைப்பாடல்களை பாடிக்கொண்டிருந்தாராம்.  அவருக்குப் பின்னால் நின்ற மற்ற பக்தர்கள், அவரை தள்ளி நிற்கும் படிச்சொல்ல, அவரோ, “எத்திசையில் கடவுள் இல்லையோ, அத்திசையைச் சொல்லுங்கள் நான் அங்கே நின்று கொள்கிறேன்என்று சொல்லிவிட்டார்.

சினம் கொண்ட பக்தர்கள் அவரை தூக்கிக் கொண்டு போய் தெற்கு திசையில் விட்டு விட்டு உள்ளே வர, சிவபெருமானின் ஜ்யோதிர்லிங்க ஸ்வரூபம் தெற்கு திசை நோக்கி திரும்பி, நாமதேவருக்கு தரிசனம் தந்து கொண்டிருந்தாராம்!

இப்படி எத்தனை எத்தனை கதைகள்...  புராதனக் கோவில்கள் ஒவ்வொன்று பற்றியும் நமது புராணங்களிலும், செவி வழிச் செய்திகளாகவும் நிறைய கதைகள். இக்கோவிலுக்கும் பஞ்ச பாண்டவர்களுக்கும் கூட சம்பந்தம் இருப்பதாகச் சொல்லும் ஒரு கதையும் உண்டு. அதையும் பார்த்துவிடலாம்!

பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தில் இருக்க வேண்டிய காலகட்டத்தில் இந்த வனத்திற்கு வந்து இங்கே ஒரு குடில் அமைத்துக் கொண்டு இருந்தார்கள். அவர்களுடைய பசுக்கள் நீராடுவதற்காக ஆற்றிற்கு வருவதுண்டு. அங்கே ஆற்றில் நீர் அருந்தியபிறகு தானாகவே பால் சுரந்து ஆற்றிலே விட்டுவிடுமாம். ஆற்றுக்குப் பூஜை! இப்படி நடந்ததை ஒரு நாள் பீமன் பார்த்துவிட, அதை தர்மரிடம் சொன்னாராம். தருமனும் நிச்சயம் இங்கே கடவுள் குடிகொண்டிருக்க வேண்டும் என்று சொல்ல, பாண்டவர்கள் அனைவருமாகச் சேர்ந்து ஆற்றின் நீரை அப்புறப்படுத்த முயன்றார்கள்.

ஆற்றின் நடுவிலே இருந்த தண்ணீர் மிகவும் சூடாகவும் கொதித்துக் கொண்டும் இருந்ததாம்.  தண்ணீரை அப்புறப்படுத்த முடியாத காரணத்தால் தன்னுடைய [g]கதையைப் பயன்படுத்தி மூன்று முறை ஆற்று நீரில் அடிக்க, ஆற்று நீரும் வழிவிட்டு அகன்றது. நடுவிலே சிவபெருமானின் ஜ்யோதிர்லிங்க ஸ்வரூபத்தினைக் கண்டு அவரை பாண்டவர்கள் வழிபட்டனர்.

இப்படி கதைகளும் கிளைக்கதைகளும் கொண்ட இவ்விடம் 12 பன்னிரெண்டு ஜ்யோதிர்லிங்க ஸ்தலங்களுக்குள் ஒன்று.  த்வாரகா நகரிலிருந்து [B]பேட்[t] த்வாரகா செல்லும் வழியில் இருக்கிறது.  ருத்ர சம்ஹிதையில் இத்தலத்தினை [DH]தாருகாவனே நாகேஷம்என்று குறிப்பிடப் பட்டிருக்கிறதாம். பகவான் ஸ்ரீக்ருஷ்ணர் இத்தலத்தில் வழிபட்டதாகவும் ருத்ராபிஷேகம் செய்ததாகவும் செவி வழி செய்திகள் உண்டு.

இப்படிப்பட்ட சிறப்பான கோவிலில் நாங்கள் நின்று அங்கே நடந்து கொண்டிருந்த உச்சிகால பூஜையில் பங்கு கொண்டோம். விதம் விதமான வாத்தியங்கள் முழங்க, மந்திர உச்சாடனங்களுடன் சிவபெருமானுக்கு பூஜை நடந்து கொண்டிருந்தது. கருவறை சற்றே தாழ்வான பகுதியில் இருக்க, பக்தர்கள் மேலே நின்று பூஜைகளை நன்றாக பார்க்க முடிகிறது. தொடர்ந்து பூஜைகள் நடந்து கொண்டிருந்தது. பூஜைகள் முடிந்து பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளியே வந்தோம்.  

புகைப்படங்கள் எடுக்க அனுமதி இல்லை என்பதால் புகைப்படங்கள் எடுக்க வில்லை.  எனினும், நீங்களும் அங்கே நடக்கும் பூஜைகளைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியதால், அங்கே நடக்கும் ஆரத்தி ஒன்றினை இணையத்திலிருந்து கீழே இணைத்திருக்கிறேன்.  சுமார் எட்டு நிமிடங்கள் தான். முடிந்தால் பாருங்களேன்....

நாகேஷ்வர் ஆர்த்தி:




பூஜைகளைப் பார்த்து மனதில் ஒரு வித அமைதியோடு வெளியே வந்தோம். வெளியே இருந்த சிவபெருமானின் சிலையை ஓம் நமச்சிவாய என்று சொல்லி ஒரு சுற்றுவந்து புறாக்களுக்கு தானியங்களை உணவாக அளித்து அங்கிருந்து புறப்பட்டோம்.  அடுத்ததாய் நாங்கள் சென்ற இடம் என்ன, அங்கே கண்டது என்ன என்பது பற்றிய விவரங்களை அடுத்த பகுதியில் பார்க்கலாம்!


நட்புடன்


26 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா
    தகவலை சிறப்பாக தொகுத்து வழங்கியமைக்கு நன்றிகள். பல த.ம 2
    தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டி கலந்து கொள்ளுங்கள்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மா பெர...:  

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  2. காலையில் தாருகா வன நாகேஸ்வரர் தரிசனம்.. அருமை!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

      நீக்கு
  3. பயணக்கட்டுரைகளில் உங்கள் தனி முத்திரை பதிக்கிறீர்கள் வெங்கட். நானும் ஊரெல்லாம் செற்றிவந்து விட்டு உங்களைப் போல எழுத யோசிச்சிகிட்டிருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பாணியில் உங்கள் பயண அனுபவங்களைப் படிக்க நானும் ஆவலாய் காத்திருக்கிறேன்..... நிச்சயம் நீங்கள் சிறப்பாக சொல்வீர்கள்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்ஜி!

      நீக்கு
  4. அருமை ஜி நிறைய புராணக் கதைகள் அறிந்தேன் நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. அழகான விவரணம் வெங்கட் ஜி! தொடர்கின்றோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  7. நாகேஸ்வர் தரிசனம் சிறப்பு! தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  8. தொடர்கிறேன் தாங்கள் பார்த்த அடுத்த இடம் பற்றி அறிய

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  9. உங்கள் புண்ணியத்தில் இங்கெல்லாம் சென்று பார்க்கும் வாய்ப்பு!
    நன்றி வெங்கட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

      நீக்கு
  10. போனோமா, பார்த்தோமா, வந்து மறந்தோமா என்றுதான் இருப்பேன். இவ்வளவையும் நினைவிருத்தி எழுதுவது மிகப்பெரிய சவால்தான்.

    தொடர்கிறேன் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி.....

      நீக்கு
  11. அருமை!

    வெளியே ஒரு பிரமாண்டமான சிவன் இருக்காரே! படம் எடுக்கலையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பகுதிக்கு முன் பகுதி நீங்க படிக்கலன்னு தெரிஞ்சுடுச்சு! :)

      சென்ற பகுதியில் சிவன் படம் இருக்கு...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
    2. அட.... ஆமால்லே..... எப்படித் தவறவிட்டேன் :-( இப்பப்போய் பார்த்தாச்.

      நீக்கு
    3. ஹாஹா... இப்ப தான் நிம்மதி! :)

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  12. நம் ஊரில் கோவில்கள் என்றால் கதைகளும் கற்பனைக்கேற்றபடி இருக்கும் எனக்குக் கதைகள் பிடிக்கும் ஊர் ஊராய்ச் சென்று தரிசனம் செய்கிறீர்கள் எல்லாக் கதைகளும் நினைவில் இருக்குமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலும் நினைவில் இருக்கும். பயணத்தில் இருக்கும் ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் சில குறிப்புகள் எழுதி வைத்துக் கொள்வது வழக்கம். குறிப்புகளிலிருந்து விரிவாக எழுதுவது சுலபம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....