இந்த வார செய்தி:
தில்லியின்
ஜன்பத் சாலையில் சரவணபவன் ஹோட்டலின் ஒரு கிளை உண்டு. எப்போதும் அங்கே மக்கள்
கூட்டம் இருக்கும். அதுவும் மதிய உணவின் போதும், இரவு உணவின் போதும் உட்கார இடம்
இல்லாது வெளியே காத்திருப்பதைப் பார்க்க முடியும். சென்ற வாரம் இந்த உணவகத்தில்
இருப்பவர்களும், பணியாளர்களும் வித்தியாசமான ஒரு காட்சியைக்
கண்டிருக்கிறார்கள்.
ஒரு
மனிதர், உணவகத்தின் வெளியே கையேந்தும் சிறுமிகளோடு வந்திருந்து அவர்களுக்கு உணவு
வாங்கிக் கொடுத்திருக்கிறார். பொதுவாக இப்படி கையேந்தும் சிறுவர்களுக்கு ஒரு
ரூபாயோ இரண்டு ரூபாயோ கொடுத்து அங்கிருந்து நகர்வதைத் தான் பார்த்திருப்போம்.
அதற்கு பதில், அவர்களை உணவகத்திற்கு அழைத்து வந்து உணவு வாங்கிக்
கொடுத்திருக்கிறார். அந்த நபரின் பெயர் பி.சி. அலெக்சாண்டர். இவர் ஒரு குழந்தை நல மருத்துவர்.
இவர்
பற்றி முகபுத்தகத்திலும் இணையத்திலும் படித்த பலரும் பாராட்டி
இருக்கிறார்கள். உங்கள் சார்பிலும்
பாராட்டுகளும் பூங்கொத்தும்!
இந்த வார முகப்புத்தக இற்றை:
இந்த வார குறுஞ்செய்தி:
இந்த வார புகைப்படம்:
சென்ற ஞாயிறன்று எங்கள் பகுதியில் ஒரு பூஜை. அதன் ஒரு
பகுதியாக நாராயண சேவா – ஏழை எளிய மக்களுக்கு உணவளிப்பார்கள். பூரி சப்ஜி செய்து
அதை 50-100 பேருக்கு கொடுப்பார்கள். நானும் சென்றிருந்தேன் – பூஜை ஏற்பாடு
செய்திருந்த நண்பர்கள் நாராயண சேவையின் போது புகைப்படம் எடுத்துத் தரச் சொல்லி
இருந்தார்கள். அங்கே வந்திருந்த ஒரு
சிறுவன் கருப்புக் கண்ணாடி அணிந்து வர தனியாக புகைப்படம் எடுத்தேன்! அப்புகைப்படம்
இந்த வார புகைப்படமாக....
இந்த வார காணொளி:
நல்லதோர் காணொளி! நீங்கள் செய்யும் ஒரு நல்ல விஷயம்
மற்றவர்களையும் நல்லது செய்யத் தூண்டும்! பாருங்களேன்!
படித்ததில் பிடித்தது:
ஒரு புதுமணத் தம்பதி கோயிலுக்கு நடந்து சென்றனர். புதுப்பெண் கவனக் குறைவால்
பாதையில் இருந்த சிறுகல்லில் கால்விரல் மோதிக்கொள்ள.... வலியால் ‘ஆ’ என குரல் எழுப்பினாள். உடனே பதறிப்போன அவள் கணவன்
குனிந்து அந்தச் சிறுகல்லை கையில் எடுத்து ’சனியன் பிடிச்ச கல்’ என்று கோபமாகச் சொல்லி
கல்லைத் தூர எறிந்தான். அடுத்த ஆண்டும் அந்தத் தம்பதியர் கோயிலுக்கு நடந்து சென்ற
போது மீண்டும் அந்தப் பெண் கல்லில் காலை மோதி ‘ஆ’ என அலற.... உடனே அவள் கணவன், ‘சனியனே,
பார்த்து நடக்கக் கூடாதா?’ என்று கோபமாகக் கத்தினான்.
கடந்த ஆண்டு கல்லில் இருந்த சனி, மனைவியிடம் பெயர்ச்சி அடைந்து விட்டது. இது தான்
சனிப்பெயர்ச்சி!
மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..
உள்ளம் நிறைத்த பதிவு!
பதிலளிநீக்குஅத்தனையும் சுவாரஸ்யம்! காணொளி நல்ல பாடம்!
சனிமாற்றம் அருமை!
அனைத்தும் சிறப்பு!. வாழ்த்துக்கள் சகோதரரே!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.
நீக்குவணக்கம்
நீக்குஅற்புதமாக சொல்லியுள்ளீர்கள் குறுச் செய்தி நன்று... மற்றவைகளை படித்து மகிழ்ந்தேன் த.ம8
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.
நீக்குசனிப்பெயர்ச்சியை அறிந்தேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.
நீக்கு//கடந்த ஆண்டு கல்லில் இருந்த சனி, மனைவியிடம் பெயர்ச்சி அடைந்து விட்டது. இது தான் சனிப்பெயர்ச்சி!// ஹஹாஆஹ்ஹா!! சரியான காமெடி!! :)
பதிலளிநீக்குநல்ல பதிவு..ஸாலட்-ல் அனைத்து பழங்களும் நல்ல சுவை!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹி.
நீக்குஇந்த வார ‘ப்ரூட்சாலட்’ இல் எல்லாமே நல்ல சுவை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.
நீக்குஅனைத்தும் அருமை நண்பரே!
பதிலளிநீக்குத ம 3
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.
நீக்குசாலட் எப்போதும் போலவே சுவையாக இருந்தது. பதிவர் சந்திப்பில் இந்த முறையும் உங்கள் புகைப்படங்களைக் காண ஆவலாக இருக்கிறேன். வருவிங்க தானே?
பதிலளிநீக்குபதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியாத சூழல். வர இயலாது....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.....
பாராட்டுதலுக்கு உரிய மருத்துவரை வாழ்த்துவோம்...
பதிலளிநீக்குகண்ணாடிப் பையன் அருமை...
சனி பெயர்ச்சி இதுதானோ...
அனைத்தும் அருமை அண்ணா...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
நீக்குவணக்கம் சகோ,
பதிலளிநீக்குகடைசி படித்ததில் பிடித்தது,,,, அருமை,
வாழ்த்துக்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!
நீக்குஅருமை நண்பரே தகவல்கள் குறுட்செய்தி ஸூப்பர் காணொளி கண்டேன்
பதிலளிநீக்குவணக்கம் ஜி தாங்களும் இடம் பெற்ற பதிவு
புதுக்கோட்டை போறேங்க.... பார்க்க வில்லையே...
http://killergee.blogspot.ae/2015/10/blog-post_6.html
புதுக்கோட்டை போறேங்க...
உங்கள் பதிவினையும் படிக்கிறேன். பணிச்சுமை காரணமாக பல பதிவுகள் படிக்க விட்டுப் போகிறது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி....
பிறருக்கு உதவி செய்ததை வெளியே சொல்லக்கூடாது என்பார்கள்..
பதிலளிநீக்குஉலகில் எத்தனை எத்தனையோ நல்லவர்கள் இருக்கின்றார்கள்..
வாழ்க நலம்!..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.
நீக்குநல்லவர் ஒருவரை காட்டிய முகப்புத்தக இற்றை ஜோர். மற்ற பகுதிகளும் ஸ்வாரஸ்யமாக இருந்தது.
பதிலளிநீக்குசுதா த்வாரகநாதன், புது தில்லி
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா ஜி!
நீக்குசரவண பவன் செய்தி படிச்சது தான். மற்றவையும் அருமை! கடைசி சனிப்பெயர்ச்சியை அலுத்துப் போகும் வண்ணம் படிச்சாச்சு! ஹிஹிஹிஹி! இம்மாதிரியானவை உடனடியாக ஃபார்வர்ட் செய்யப்படுகின்றனவே! :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....
நீக்குஅப்பாடா, இந்தப் பதிவுக்கு உடனே வந்துட்டேன் போல! அதிசயம் தான்! :)
பதிலளிநீக்குசில சமயங்களில் அதே நாளில் படித்து விடும் அதிசயம்! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..
பி.சி அலேக்சாண்டருக்கு வாழ்த்துக்கள்! சனிப்பெயர்ச்சி படித்து ரசித்தேன்! சிறப்பான பகிர்வு! நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
நீக்குதொகுப்பு அருமை. குழந்தை நல மருத்துவர் பாராட்டுக்குரியவர் .
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குசுவை நன்று!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.
நீக்குநீங்கள் செய்யும் ஒரு நல்ல விஷயம் மற்றவர்களையும் நல்லது செய்யத் தூண்டும்! பாருங்களேன்!
பதிலளிநீக்குஉண்மை உண்மை.
அனைத்தும் அருமை சனிப்பெயர்ச்சி ஜோக் பட்டிமன்றங்களில் கேட்டதுதான் என்றாலும் சுவாரசியம்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.
நீக்குஆறு ஆண்டுகள் நிறைவு செய்து ஏழாம் ஆண்டில் அடிஎடுத்து வைத்துள்ளமைக்கு வாழ்த்துக்கள். மூன்று ஆண்டுகளுக்கு மேல் பலரும் தாக்குப் பிடிக்க முடியாமல் போகையில் . நிச்ச்யம் இது ஒரு சாதனையே! தொடரட்டும்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.
நீக்குதொடர்ந்து அனைவரும் தரும் ஆதரவும் ஒரு காரணம்......
அந்த அன்பு மனிதர் அலெக்ஸாண்டருக்கு வந்தனங்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.
நீக்குசனி ஒருவரை பிடித்துக்கொள்வது என்று நினைத்துவிட்டால்,
பதிலளிநீக்குகாலை அல்ல, நாவைத் தான் முதலில் பிடிக்குமாம்.
ராவணனுக்கு எப்படி சனி பிடித்தது என்று படித்து இருப்பீர்கள்.
அடுத்த வருடம் டெல்லியில் பதிவர் கூட்டம் ஏற்பாடு பண்ணுங்களேன்.
சுப்பு தாத்தா.
www.subbuthathacomments.blogspot.com
www.pureaanmeekam.blogspot.com
சனி நாவை தான் முதலில் பிடிக்கும்!... நிறைய பேர் பேசித் தானே மாட்டிக்கொள்கிறார்கள்!
நீக்குஅடுத்த வருடம் டெல்லியில் பதிவர் கூட்டம்..... நல்ல ஐடியா! எத்தனை பேர் தில்லி வரத் தயார்? :)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.
அனைத்தையும் ரசித்தேன். முதல் செய்தியை 'எங்கள்' பாசிட்டிவில் பகிர எடுத்துக் கொண்டேன். நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஅலெக்சாண்டருக்குப் பூங்கொத்துகள்!
பதிலளிநீக்குஇற்றை, குறுஞ்செய்தி வழக்கம் போல் அருமை...
அந்தச் சிறுவன் ரொம்ப அழகாக ஸ்டைலாக இருக்கின்றான்..புகைப்படம் அழகு..
காணொளி ரசித்தோம்...நல்ல செய்தி.
ஹ்ஹஹ் படித்ததில் பிடித்தது மிக மிக் ரசித்தோம்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்கு