வெள்ளி, 16 அக்டோபர், 2015

ஃப்ரூட் சாலட் – 148 – ரயில் டிக்கெட் – தீக்குச்சி – சீதையோடு ஒரு செல்ஃபி



இந்த வார செய்தி:

டிக்கெட் முன்பதிவு - புதிய முறை:

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்போர் இனிக் கவலைப்பட வேண்டாம். இனி நம் வசதிக்கேற்ப வேறு ரயிலுக்கு மாற்றிக்கொள்ளலாம்.

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தும், காத்திருப்போர் பட்டியலில் இருந்தால் அந்த டிக்கெட்களை அப்படியே மற்ற ரயிலில் இருக்கும் சீட் அல்லது பெர்த் வசதிக்கேற்ப மாற்றி தர ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்காக 'அல்டர்நேடிவ் டிரைன்ஸ் அக்காமடேஷன் ஸ்கீம்' (Alternate Trains Accommodation Scheme) என்ற திட்டத்தை நவம்பர் 1-ம் தேதி ரயில்வே துவங்க உள்ளது. இந்த புதிய திட்டத்தின் கீழ், பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது மாற்று ரயில்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

சென்னை-மதுரை, தமிழகம்-தில்லி உள்ளிட்ட ரயில்களில் பண்டிகை காலத்தை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்டோர் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதால் இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நன்றி: தினமணி.  

இப்புதிய முறை வந்த பிறகு தான் இதன் உபயோகம் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியும். இருந்தாலும் புதியதாய் முயற்சி செய்யும் இரயில்வே துறையினருக்கு வாழ்த்துகள்.  

இந்த வார முகப்புத்தக இற்றை:


இந்த வார குறுஞ்செய்தி:


இந்த வார புகைப்படம்:




சின்னச் சின்ன கிளிகளை உருவாக்கி அதனை கயிற்றில் கட்டி விற்பனை செய்யும் உழைப்பாளி. சென்ற வாரத்தில், ஒரு நாள் தெருத்தெருவாகச் சுற்றி விற்பனை செய்து கொண்டிருந்தார். சும்மா இருக்காது, உழைக்கும் இவருக்கு ஒரு சல்யூட்!

இந்த வார காணொளி:

Lift அல்லது Escalator பயன்படுத்துவதை தவிர்த்து படிகளை பயன்படுத்துவது உடல் நலம் தரும்.  ஆனாலும் பலரும் படிகள் மூலம் மேல் தளங்களுக்குச் செல்வது மிகக் குறைவே.  படிகளை இப்படி அமைத்தால்!.....   கொஞ்சம் பழைய காணொளி என்றாலும் பார்க்காதவர்கள் பார்க்கலாமே!



படித்ததில் பிடித்தது:

சீதையோடு ஒரு செல்ஃபி

தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தாள் சீதை.
இரண்டாவது டிக் வராத வாட்ஸ்அப் செய்திகளால்
நிரம்பியிருந்தது ராமனின் தொடுதிரை.
பாதுகைகளை சுவரெங்கும் ஒட்டியிருந்தான் பரதன்.
வாலிக்கு இரங்கல் எழுதிக்கொண்டிருந்தான் சுக்ரீவன்.
ராவணன் பறித்துக்கொண்ட செல்பேசியில் இருந்தது
சீதைக்கு நினைவில் நில்லாத ராமனின் எண்.
விபீஷணன் தனிச்செய்தி அனுப்பியிருந்தான் ராமனுக்கு.
அறுந்த மூக்குடன் டேக் செய்திருந்தாள் சூர்ப்பணகை.
'ஆறு மாதங்களுக்கு டீஆக்டிவேட் என்றான் கும்பகர்ணன்.
ராமனைப்போல சுய படமிட்ட போலிக்கணக்கில்
சீதைக்கு நட்பு அழைப்பு அனுப்புகிறான் ராவணன்.
'எங்கே உருப்படப்போகிறது? என்று கடந்தாள் மண்டோதரி
அனுமனிடம் இருந்து ராமனுக்கு ஆதாரமாக வருகிறது
அசோகவனப் பின்னணியில் சீதையோடு செல்ஃபி ஒன்று!

நன்றி: ஷான் (விகடன் சொல்வனத்திலிருந்து)

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்


24 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  2. ரயில் பயணம் செய்வோருக்கு நல்ல செய்தி.

    இ, குசெ,புப எல்லாம் ரசித்தேன்.

    காணொளி பார்த்திருக்கிறேன்!

    பபி விகடனில் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. வணக்கம்
    ஐயா
    நல்ல தகவலை சொல்லியுள்ளீர்கள் குறுஞ்செய்தி மற்றும் வீடியோ அனைத்தும் சிறப்பு வாழ்த்துக்கள் த.ம 4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர் ஜி!

      நீக்கு

  5. இந்த வார பழக் கலவையில் தந்தவை அனைத்துமே அருமை. அதுவும் அந்த படிக்கட்டு காணொளியை பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  6. நல்ல தொகுப்பு. கவிதை விகடனில் வாசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  7. அருமையான தகவல்கள்! சிறப்பான சாலட்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  8. கலகலப்பான பதிவு.. புருட் சாலட் சுவை!..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

      நீக்கு
  10. சீதையோடு செல்பி... நானும் வாசித்தேன் அருமையான கவிதை...
    படிக்கட்டு, தீக்குச்சி என ப்ரூட் சாலட் கலக்கல் அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  11. வழக்கம்போல அருமையான பழக்கலவை. சீதையோடு ஒரு செல்பியை அதிகம் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  12. தலைக்கனம் இருந்தாலும், ஒளியும் கொடுக்கிறதே தீக்குச்சி என்று தோன்றியது.
    குறும்செய்தி பிரமாதம். அளவுக்கு மீறினால் எல்லாமே நஞ்சு தான். உழைக்கும் அந்த இளைஞருக்கு வாழ்த்துகள்.
    நான் எப்போதுமே படிக்கட்டு வழியாகத்தான் ஏறுவேன். இறங்குவேன். அப்படியொரு பயம் அந்த எஸ்கலேட்டர் பார்த்தால்.
    சீதையுடன் ஒரு செல்பி ரசிக்க வைத்தது. பழக்கலவை நல்ல ருசி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....