வெள்ளி, 2 அக்டோபர், 2015

ஃப்ரூட் சாலட் – 146 – உயிர் காத்த பகடி – பெண்கள் ஜாக்கிரதை - மின்சாரம் சேமிப்போம்


இந்த வார செய்தி:



சீக்கிய மதம் சார்ந்தவர்களுக்கு அவர்கள் தலையில் அணிந்து கொள்ளும் “பக்[G]என அழைக்கபடும் பகடி மிகவும் முக்கியமானது. அதை அணியாமல் வெளியே வரமாட்டார்கள். வீட்டிற்குள் சென்ற பிறகு, தான் அதை கழற்றி வைப்பார்கள் – அதற்கு தனி மரியாதை தருவார்கள்.  இப்படி இருக்கையில் சமீபத்தில் இரண்டு சீக்கிய இளைஞர்கள் பொது வெளியில் தங்களது பகடியை அகற்றினார்கள். தமது சீக்கிய மதக் கொள்கையையும் மீறி இப்படிச் செய்தது எதற்காக?

செப்டம்பர் 30: கணேஷ் மூர்த்தி கா விசர்ஜன் – அதாவது பிள்ளையார் சிலைகளை கரைப்பதற்காக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சங்க்ரூர் மாவட்டத்தில் சூலுர் கரத் எனும் கிராம மக்கள் அங்கிருக்கும் சிறிய அணைக்கட்டிற்குச் சென்றிருக்கிறார்கள். அணைக்கு வெகு அருகே சென்ற ஐந்து இளைஞர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லக்கூடிய அபாயம்.  தத்தளித்துக் கொண்டிருக்க, பக்கத்தில் இருந்த ஒரு கம்பி கொண்டு இருவரைத் தப்பிக்க வைத்திருக்கிறார்கள். கம்பி உடைந்து போக, தத்தளித்த மூன்று பேரை எப்படிக் காப்பாற்றுவது?      

இவர்களைக் காப்பாற்ற இன்னும் மூன்று பேர் வெள்ளத்தில் குதிக்க, அவர்களும் வெள்ளத்தில் சிக்கிவிட்டார்கள். இப்போது காப்பாற்ற வேண்டியவர்கள் மொத்தம் ஆறு பேர்.

அப்போது தான் அங்கே இருந்த இந்தர்பால் மற்றும் கமல்ப்ரீத் என்ற சீக்கிய இளைஞர்கள் தங்களது தலையில் இருந்த பகடியைக் கழற்றி அந்த ஆறு இளைஞர்களையும் காப்பாற்றி இருக்கிறார்கள்.  இந்த பகடி ஒவ்வொன்றும் ஒன்பது மீட்டர் நீளமுடையது.  சீக்கியர்களின் ஐந்து முக்கியமான மத அடையாளங்களில் ஒன்று.

தங்களது மதக்கொள்கைகளை புறக்கணித்து ஆறு உயிர்களைக் காப்பாற்றிய இந்தர்பால் மற்றும் கமல்ப்ரீத் ஆகிய இருவருக்கும் இந்த வாரத்தின் பூங்கொத்து!

இந்த வார முகப்புத்தக இற்றை:



இந்த வார குறுஞ்செய்தி:

நம்முடைய வலி பிறருக்கு சிரிப்பாக இருக்கலாம். ஆனால் நம்முடைய சிரிப்பு பிறருக்கு வலியாக இருக்கக் கூடாது!

இந்த வார விளம்பரம்/குறும்படம்:

மின்சாரம் இல்லை ரொம்ப கஷ்டமா இருக்கு என புலம்பாதவர்கள் நம்மில் யார்..... இருக்கும் போது, தேவையில்லை எனிலும் வீணாக்குபவர்கள் எத்தனை பேர்!  நம்மில் பலரும்....  இந்த காணொளியில் அதை எவ்வளவு அழகாய்ச் சொல்லி இருக்கிறார்கள்.  இதில் நடித்திருக்கும் சிறுவன் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறான்.  அச்சிறுவனுக்கு எனது பூங்கொத்து!




பெண்களே ஜாக்கிரதை!

சமீபத்தில் தில்லியில் ஒரு மெகா மாலில் சந்தேகத்திடமாய் ஒரு நபர், பெண்கள் நிற்கும் இடங்களாக பார்த்து அவரது இடது காலை நீட்டியபடியே நின்றிருக்கிறார். தொடர்ந்து இப்படி பல பெண்களின் அருகே காலை நீட்டியபடி நின்ற இவரைப் பார்த்து ஒரு கடைக்காரருக்கு சந்தேகம் வந்திருக்கிறது.  அதுவும் இவர் இப்படி நின்றதெல்லாம் குறிப்பாக குட்டைப்பாவாடை/ஸ்கர்ட் அணிந்த பெண்களின் அருகேதான்.  சந்தேகம் கொண்டவர் மெகா மால் பாதுகாவலர்களை அழைக்க, அந்த நபரை விசாரித்து இருக்கிறார்கள்.  ஏனய்யா இடது காலை நீட்டுகிறார் என்று சோதித்து பார்க்க, அவரது இடது கால் ஷூவில் சிறிய வீடியோ கேமரா பொருத்தி இருக்கிறார்! Perversion at its worst!

அந்த மனிதர் ஒரு வக்கீல்....  திருமணமாகி குழந்தைகளும் இருக்கிறார்கள் என்று தெரிகிறது!

இந்த வார காணொளி:

நமது ஊரில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் குறைவு. வெளி நாடுகளில் இவர்களுக்கென்றே நிறைய வசதிகள் செய்து தருகிறார்கள். அப்படி இருக்கும் வசதிகளை சாதாரணர்கள் யாரும் துர்ப்பிரயோகம் செய்தால் என்ன நடக்கும்?  பாருங்களேன்!




படித்ததில் பிடித்தது:

எமதர்மன் சித்திரகுப்தனிடம் இனிமேல் சாகிறவர்களின் நாக்கை மட்டும் தனியாக அறுத்துக் கொண்டு வந்து விடு’’ என்று சொன்னான்.

அது போல் சுமார் ஆயிரம் நாக்குகளை அவன் அறுத்துக் கொண்டு வந்தான்.

அறுத்த பின்னாலும் சில நாக்குகள் துடித்துக்கொண்டு கிடந்தன. சில நாக்குகள் மரத்துப் போய் இரு கூராகப் பிளந்து கிடந்தன.

மரத்துப் போய் இரட்டையாகக் கிடக்கும் நாக்குகளெல்லாம் யாருடயவை?’’ என்று கேட்டான் எமதர்மன்.

இரட்டையாகக் கிடக்கும் நாக்குகளெல்லாம் ஆளும் கடசிக்காரர்களுடைய நாக்குகள் பிரபு! துடித்துக்கொண்டிருக்கும் நாக்குகளெல்லாம் எதிர்க்கட்சிக்காரர்களுடைய நாக்குகள் பிரபு! என்றான் சித்திரகுப்தன்.

ஒரு உணர்ச்சியும் இல்லாத மற்ற நாக்குகள்?’’ என்று கேட்டான் எமன்.

அவர்களுக்கு ஓட்டுப் போட்டவர்களுடைய நாக்குகள் என்று அமைதியாகச் சொன்னான் சித்திரகுப்தன்.

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..


நட்புடன்

26 கருத்துகள்:

  1. தகவல்கள் நன்று ஜி காணொளிகள் இரண்டும் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழரசன் தமிழ்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  4. அனைத்தும் அருமை.. மின்சக்தி சேமிப்பில் சிறுவன் அழகோ அழகு!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  6. அனைத்தும் அருமை சகோ,
    என்ன ஜென்மங்கள்,,,,,,
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

      நீக்கு
  7. பெண்களுக்கான தகவல் அதிர்ச்சியாகவும் ஆத்திரப்படவும் வைத்தது. மற்றவைகளும் சிறப்புங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா....

      நீக்கு
  8. ஆமாங்க அது என்ன 146 ப்ரூட் சாலட் இத்தனை பகிர்வுகளை கடந்து வந்திருக்கிறதா? வாழ்த்துக்கள். ஆச்சரியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 146 - ஆமாங்க.... ஃப்ரூட் சாலட் எனும் தலைப்பில்/லேபிளில் இது 146-ஆம் பதிவு. வெள்ளிக் கிழமைகளில் இப்பதிவு எழுதுவது வழக்கம். 146 வாரங்கள் [சில வாரங்களில் வெளியிடவில்லை] எழுதி இருக்கிறேன்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  9. குட்டிக்கதை கண்ணதாசனுடையதுதானே! அந்த சீக்கிய இளைஞர்களுக்கு எனது பாராட்டுக்களும்! சுவையான சாலட்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குட்டிக்கதை..... நான் இணையத்தில் படித்தது......

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  10. அனைத்தையும் ரசித்தேன். வழக்கம்போல முதல் பாசிட்டிவிலும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாசிட்டிவ்.... - தொடர்ந்து வரட்டும்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  11. சிறந்த பகிர்வு ! வாழ்த்துக்கள் சகோ .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள் ஜி!

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  13. முதல் செய்தி மதம் உள்ளே னி இருக்கிறது அதனால் மனிதம் ஆனது...என்பது மிக மிக பாசிட்டிவான ஒரு விஷயம்....எங்களது பொக்கேயும்...

    இற்றை அருமையான ஒன்று...அழகியல் கலந்த ஒரு செய்தி...

    குறுஞ்செய்தியும்ம்....

    முதல் காணொளி அட போட வைத்தது....அந்தப் பையன் அருமை! முக்கியத் தேவை இப்போது

    இரண்டாவது காணொளியும் ..ரசித்தோம் இப்படிச் செய்பவர்களை எல்லாம் எப்படி அங்கு தண்டிக்கின்றார்கள்...

    பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் ..எப்படி எல்லாம் டெக்னாலஜி அதை இவர்கள் இப்படி பெர்வெர்டட் எண்ணங்களுடன் உபயோகப்படுத்துகின்றார்களே..

    நாக்கு கதை அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....