எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, October 1, 2015

ஓஹோ ஹோ கிக்கு ஏறுதே!இரண்டு மூன்று நாட்களாகவே எனக்கு ஒரு ராசி! ஒரே போதை விஷயமாகவே பார்க்கவும், படிக்கவும் கிடைக்கிறது!  அட எனக்கு தான் போதை தலைக்கு ஏறிடுச்சோன்னு நினைச்சுடாதீங்க! போதைக்கும் எனக்கும் ரொம்ப தூரம்!  பாருங்களேன் இந்த ரெண்டு மூணு நாளா தினமும் ஒன்றிரண்டு போதை ஏறிய மனிதர்களை பார்ப்பதும், அவர்கள் செய்யும் விஷயங்களாகவே காணக் கிடைத்தது! அப்படி ரெண்டு மூணு விஷயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு! பாம்பை கடித்து உண்ண வைத்த போதை!

ஆக்ராவின் ஃபதேஹாபாத் பகுதி.  எப்போதும் சாராய போதையிலேயே இருக்கும் 25 வயது இளைஞர். காலையிலேயே குடிபோதையில் தனது வீட்டு வாசலிலேயே அமர்ந்திருக்க, அவரது கைகளில் பாம்பு தீண்டியிருக்கிறது.  என்னையா கடிக்கற என்று கோபத்துடன், அந்த பாம்பினை உயிருடன் பிடித்து தலைப்பகுதியை கடித்துத் தின்று விட்டார்.  பிறகு வால் பகுதியையும் கடித்து தின்று விட்டாராம்.  பார்த்துக் கொண்டிருந்த அப்பகுதி மக்கள், வீட்டு வேலை செய்யப் போயிருந்த அந்த இளைஞரின் தாயாருக்கு தகவல் அனுப்பியது மட்டுமல்லாது மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்! – பாம்பை அல்ல என்பதை இங்கே சொல்ல வேண்டியதில்லை!

சிகிச்சைக்காக மருத்துவமனையினர் அனுமதிக்க, மாலை மருத்துவர் வந்து பார்க்கும் போது அவர் அங்கே இல்லை!  அவரைத் தேடிக்கொண்டு சிலர் வெளியே வர, அவரை கண்டுபிடித்த இடம் – வேறேங்கே சாராயக் கடை தான்! – அடுத்த ரவுண்டுக்கு அங்கே போயிருக்கிறார்!

நீராட்டு விழா!இரண்டு நாட்கள் முன்பு அலுவலகத்திலிருந்து மாலை 07.00 மணிக்கு புறப்பட்டு வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். இரண்டு இந்திய குடிமகன்கள் நாட்டின் அனைத்து அரசியல்வாதிகளையும், மக்களையும் அவருக்குத் தெரிந்த அத்தனை வசை மொழிகளையும் கொண்டு திட்டிக் கொண்டு வந்தார்கள்.  அதில் ஒருவருக்கு போதை ரொம்பவே தலைக்கேறி ஒரு மரத்தின் அருகே கீழே விழுந்து விட்டார்.  அவர் விழுந்தது பாராளுமன்ற கட்டிடத்தின் மிக அருகே.  “நண்பேன்டா!என அவருடன் வந்தவர் விழுந்தவரை சமாளித்து மரத்தின் மேல் சாய்த்து உட்கார வைத்தார்.  கன்னத்தில் ரெண்டு தட்டு தட்டி, வாடா போலாம்.....என்று அழைக்க அவரிடமிருந்து பதிலே இல்லை!

அருகே நின்ற PCR [Police Control Room] வாகனத்தில் இருந்த ஒரு மூத்த காவல் அதிகாரி போதையில் இருந்தவரை கொஞ்சம் அதட்டிப் பார்த்தார். போதை தலைக்கேறியதால் அவருக்கு எதுவும் புரியவில்லை.....  இதுக்கு ஒரே வழி தான் இருக்கு! என பக்கத்தில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து குடிமகனின் தலையில் கொட்ட, நண்பர் தலையைத் தேய்த்து விட்டார்.  காவலதிகாரி தலையில் தண்ணீர் கொட்டக்கொட்ட, நண்பர் தலையைத் தேய்த்து விட்டார்.  சின்னக் குழந்தைகளை குளிப்பாட்டும் போது தட்டிக் குளிப்பாட்டுவது போல நண்பர் தட்டிக் கொடுத்து குளிப்பாட்டிக் கொண்டிருக்க, நடுத்தெருவில் நீராட்டு விழா!

நான் கொஞ்சம் தாச்சிக்கறேன்!கீரை போண்டா – அட எப்பவும் சாப்பாட்டு நினைவு! ஹீரோ ஹோண்டா வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு குடிமகன்....  ரொம்பவும் போதை ஏற வண்டியை ஒரு ஓரமாக தட்டுத் தடுமாறி நிறுத்தினார்.  ஸ்டேண்ட் போட்ட சில நொடிகளில் இடுப்புக்கு மேலே நடைபாதையிலும், கீழே சாலையிலும் இருக்கும்படி விழுந்தார்....  கால்கள் முழுவதும் சாலையில்.....  சாலை – Mother Teresa Crescent.  மாலை வேளைகளில் அவ்வளவாக வெளிச்சம் இருக்காது. வண்டிகள் அதிவேகத்தில் பயணிக்கும் சாலை அது. பெரிய வாகனங்கள் ஏதும் ஓரமாக வந்தால் நிச்சயம் கால்களில் ஏறும் அபாயம் இருந்தது!

சில வாகன ஓட்டிகள் பார்த்துக் கொண்டே போக, சிலர் நிற்க, கால்களைப் பிடித்து நடைபாதையில் சேர்க்க நினைத்தவர்கள் அனைவரையும் குடிமகன் மானாவாரியாக திட்டினார்.  வடிவேலு ஒரு படத்தில் சொல்வது போல Total family damage! அதைக் கேட்ட பின் யாரும் உதவி செய்வார்களா என்ன! குடிகாரன் கிடக்கான்என அனைவரும் நகர்ந்தார்கள்......  அனைவரில் நானும்!

சாலை அணிந்திருந்த மூக்குக் கண்ணாடி!

அதே செவ்வாய் இரவு! இரவு உணவு சாப்பிட்ட பிறகு கொஞ்சம் நடக்கலாம் என வீட்டை விட்டு இறங்கினேன்.  வீட்டின் அருகே இருக்கும் சாலையில் நடந்து கொண்டிருக்க, சாலை ஓரத்தில் ஒரு மனிதர் விழுந்து கிடந்தார்.  பக்கத்திலேயே ஒரு நடைபாதை டீக்கடை. அங்கே சிலர் இருந்தாலும், விழுந்தவரை யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. அவரை நானும் கடந்தேன்.....  தன் சுய நினைவில்லாது விழுந்து கிடக்கிறார். மூக்குக் கண்ணாடி மூக்கை விட்டு விலகி சாலையில் இருந்தது! அவரைப் பார்த்து நிற்க, பக்கத்திலிருந்த ஒரு ஆட்டோ ஓட்டுனர் – “ஆளு செம தண்ணில இருக்கான்.... நீங்க போங்க!என்று சொல்லி என்னை அனுப்பினார்.

நடை முடிந்து திரும்பி வரும் போது மூக்குக் கண்ணாடி சாலையில் இல்லை!

வேறு சில சாலைக்காட்சிகளோடு பிறிதொரு சமயத்தில் சந்திக்கிறேன்.....

நட்புடன்
38 comments:

 1. காலையில் நல்ல கிக் உங்க பதிவு பார்த்து.. இனிய வணக்கம்

  ReplyDelete
  Replies
  1. அப்ப சுறுசுறுப்பா ஆஃபீஸ் போவீங்கன்னு சொல்லுங்க! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 2. பாம்பைத் தின்று விட்டாரா? உவ்வே...

  குடியில் டெல்லியும் சென்னை போலத்தானா? தடை ஒன்றும் இல்லையா? டாஸ்மாக்குக்கு அங்கு பெயர்?!!

  ReplyDelete
  Replies
  1. நம் ஊர் போலவே இங்கே Delhi Excise Department கடைகள் தான். தனியாக TASMAC போன்று பெயர் இல்லை - Wine Shop, Beer and Wine Shop, Liquor Shop என்று பல பெயர்களில் இயங்குகின்றன. எல்லா பகுதிகளிலும் கடைகள் உண்டு! விற்பனை அதிகமாயிற்றே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. Replies
  1. தலைநகரிலும்.... இங்கே எல்லா தரப்பினரும் குடிப்பழக்கம் கொண்டிருக்கிறார்கள்.... Dry Day என சில நாட்கள் இக்கடைகளை மூடுவார்கள். அதற்கு முதல் நாள் இங்கே இருக்கும் கூட்டம் ஏதோ இலவசமாக வழங்குமிடத்தில் இருக்கும் கூட்டத்தை விட அதிகமாக இருக்கும்! :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்....

   Delete
 4. போதை செய்திகளைப் படிக்கப் படிக்க தலை சுற்றுகிறது ஐயா
  நன்றி
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 5. எங்களுக்கும் அந்த உணர்வை ஊட்டிவிட்டீர்களே. தெளிந்தபின் இந்த மறுமொழி. ஒரு பக்கம் வேதனையாகவும் மறுபுறம் வெட்கமாகவும் உள்ளது. இந்த அளவு நாம் தரம் தாழ்ந்து போய்க்கொண்டிருக்கிறோம். கிக்கைக் குறைக்க எனது முதல் தளத்தில் பௌத்த நல்லிணக்க சிந்தனைகளைக் காண அழைக்கிறேன்.
  http://www.ponnibuddha.blogspot.com/2015/10/blog-post.html

  ReplyDelete
  Replies
  1. சாலைகளில் இப்படி நிறைய பேரை பார்க்கும் போது மனதில் வேதனை தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   தங்களது பதிவினையும் படிக்கிறேன்.

   Delete
 6. குடிப்பதில் நன்மை கிடைக்கிறதோ இல்லையோ ஆனால் குடிகாரர்களால் உங்களுக்கு ஒரு பதிவு தேற்ற விஷயம் கிடைத்துவிட்டது... மைலேஜ் தகவல் அருமை

  ReplyDelete
  Replies
  1. குடிகாரர்களால் ஒரு பதிவு! :) மைலேஜ் தகவல் எனக்கும் ரொம்பவே பிடித்தது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 7. இப்படியுமா இருக்காங்க? என்றே நினைக்கத்தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. இப்படியும் இருக்காங்க!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 8. தலைவலிக்கிறது சகோ,

  ReplyDelete
  Replies
  1. அடடா.... பதிவு தலைவலி தந்து விட்டதே! :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   Delete
 9. படிச்சு முடிச்சதுமே தள்ளாடுதே!:))

  ReplyDelete
  Replies
  1. எனக்கு எழுதும்போதே தள்ளாடிச்சு! :)))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 10. வேதனைப்படவேண்டிய விஷயம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 11. மதுவை ஒழிப்பது மக்கள் நினைத்தால் மட்டுமே முடியும் அரசை குறை சொல்லி என்ன பயன்
  ஜி பதிவுகள் மூன்று கடந்து விட்டது தேவகோட்டை பக்கமும் வாங்க....

  ReplyDelete
  Replies
  1. பதிவுகள் படிப்பதில் சற்றே இடைவெளி. நிச்சயம் உங்கள் பக்கத்திற்கும் விரைவில் வருகிறேன்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.....

   Delete
 12. முதலில் வாசகம் ரொம்ப ரசிக்க வைத்தது அதுவும் ஒரு லிட்டர் பெட்ரோல் மைலேஜ்....ஹஹஹஹ்

  அட! அந்தப் பாம்பு "நல்ல" பாம்பு போல அந்த இளைஞர் பிழைத்துவிட்டாரே! அந்தப் பாம்பின் தலையை முழுங்கியும்!! பாம்புக்கு ஏன் இந்த வம்பு வினை ஹஹஹ்..ப்ச்

  இந்த மாதிரி மனிதர்களைப் பார்க்கும் போது இரக்கம், மன வேதனை வந்தாலும், பல சமயங்களில் கோபம் தான் வரும்...இப்படிச் சீரழிகின்றார்களே என்று...

  கீதா: கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயம், கட்டுரைப் போட்டி, ஃபேன்சி ட்ரெஸ் கம் மோனோ ஆக்டிங்க் போட்டிகளுக்கு எனக்குத் தலைப்பு கொடுத்து உதவியர் ஒரு ப்ளாட்ஃபார்ம் குடிகாரர்தான்.. ..

  ReplyDelete
  Replies
  1. ”நல்ல” பாம்பு! :)))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 13. எனது அனுபவத்தையும் பதிவிட உங்களது இந்தப் பதிவு உதவுயதற்கு மிக்க நன்றி வெங்கட்ஜி!
  ஏற்கனவே ஒரு பதிவில் ஒரு சில வரிகள் நான் இதைக் குறித்து எழுதியிருந்தாலும், தனிப் பதிவாக எழுதவில்லை. எனவே தனிப் பதிவாக எழுதலாம் என்று தோன்றியது...நன்றி ஜி

  கீதா

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அனுபவத்தினையும் எழுதுங்கள். இப்பதிவு உங்களுக்கும் ஒரு பதிவு எழுத விஷயம் கொடுத்திருப்பதை நினைத்து மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 14. ’கிக்’கான பதிவு!
  வாழ்த்துக்கள் சகோ!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 15. போதைதானே பாதை மாத்துது...
  காலையிலேயே வாசித்தேன்... கருத்து இட முடியாது அலுவலகத்தில்...
  கமெண்ட் பாக்ஸ் எல்லாம் செக்யூரிட்டி கேட்கும்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 16. அட … தலைநகர் … டெல்லியிலுமா?

  ReplyDelete
  Replies
  1. எங்கும் இதே தான்... தலைநகரும் விதிவிலக்கல்ல....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 17. ஒவ்வொரு பதிவிற்கும் நீங்கள் எடுத்துக் கொள்ளும் மெனக்கடல் அருமை..
  தம +
  பாம்பைக் கடித்தவர் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தார்.

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் அவரைப் பற்றி படித்தபோது சிரிப்பு தான் வந்தது. போதை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 18. Replies
  1. தங்களது வருகைக்கும் தமிழ் மண வாக்கிற்கும் மிக்க நன்றி மது.

   Delete
 19. வாழ்க குடி அரசு! இதுதான் எதிர்கால இந்தியா!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....