எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, October 11, 2015

Clicks & Colours – சில Concept புகைப்படங்கள்


முகப்புத்தகத்தில் நானும் இருப்பது பதிவுலக நண்பர்கள் சிலருக்குத் தெரியும். முகப்புத்தகத்தில் அவ்வளவாக எழுதுவதில்லை. அவ்வப்போது என்னுடைய பதிவுகளின் சுட்டியைக் கொடுப்பேன். மற்ற நண்பர்கள் பகிர்ந்து கொள்ளும் சில இற்றைகளை பகிர்ந்து கொள்வேன். அதைத் தவிர முகப்புத்தகத்திற்காகவே எதையும் பதிவது மிகக் குறைவு.  சில சமயங்களில் நான் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்து கொள்வேன்.

இப்படி இருக்கையில் உள்பெட்டியில் ஒரு நாள் ஆச்சி ஆச்சி [வலைப்பூவை மறந்த மற்றுமொரு வலைப்பதிவர்!] Clicks & Colours என ஒரு குழு முகப்புத்தகத்தில் இருப்பதைச் சொல்லி, என்னையும் அதில் சேர்ந்து கொள்ளச் சொன்னார். இந்த குழுமத்தில் ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு Concept சொல்லி அதற்கான புகைப்படங்கள் குழுமத்தினர் வெளியிடுவார்கள். இது வரை இப்படி 63 Concept சொல்லி இருந்தாலும் நான் படங்கள் வெளியிட்டது சென்ற வார Concept-ஆன மென்மை க்கு மட்டுமே!

இந்த வார Concept – காதல் கதை! இதற்கு பொருத்தமான படம் என்னிடம் இருக்கிறதா? தேடவேண்டும்.  அதற்கு முன்னர் இங்கே, இந்த ஞாயிறில் சென்ற வார Concept ஆன மென்மைக்காக அங்கே வெளியிட்ட இரண்டு படங்களும், வெளியிடாத சில படங்களும் இன்றைக்கு உங்கள் பார்வைக்காக!

இன்னுமொரு விஷயம் – இந்த குழுமத்தில் முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள் நம் பதிவுலகம் சேர்ந்தவர்கள் தான் – அகிலா புகழ், கீதா மதிவாணன் மற்றும் தலைநகர் ஷாஜஹான் அவர்கள்.  திறம்பட குழுவினை நிர்வகித்து வரும் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்!

சரி இன்றைய புகைப்படங்களைப் பார்க்கலாம்.....

மென்மை:


என்ன நண்பர்களே, இந்த ஞாயிறில் வெளியிட்ட புகைப்படங்களை ரசித்தீர்களா?  பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்....

நாளை வேறு பதிவில் சந்திப்போம்.....

நட்புடன்


டிஸ்கி: புதுக்கோட்டையில் இன்று வலைப்பதிவர் சந்திப்பு. அங்கே நண்பர்கள் அனைவரும் உற்சாகமாக இருக்க, நான் தலைநகர் தில்லியில் இருக்கிறேன். மனம் மட்டும் அங்கே..... விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள் – கொஞ்சம் பொறாமையோடு! 

24 comments:

 1. மென்மையின் நல்லுதாரணங்கள்... மலர்களைப் போல் வேறேதும் உண்டோ? அழகுவண்ணமும் அசத்தும் மணமும் கொண்ட மலர்களின் அணிவகுப்பு மனந்தொட்டது. clicks & colours - இன் நிர்வாகக்குழுவில் நீங்கள் குறிப்பிட்டுள்ள மூவர் தவிர வலையுலகம் சேர்ந்த இன்னொரு பதிவரான "நிகழ்காலம்" வலைப்பதிவர் தோழி எழில் அருளும் கூட எங்களுடன் இருக்கிறார். :))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 2. வண்ண வண்ணப் பூக்கள் அழகோ அழகு!

  எனக்கும் மனம் அங்கேதான் அண்ணா..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   Delete
 3. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 4. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி.....

   Delete
 5. வணக்கம் மென்மை ரொம்ப மேன்மையாகவே உள்ளது.தெளிவான புகைப்படங்கள்.வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தென்றல் சரவணன்.

   Delete
 6. அழகோவியமான புகைப்படங்கள் ரசித்தேன் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 7. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 8. படங்களைப் பார்த்தபோது கண்ணுக்கு குளிர்ச்சியும் மனதிற்கு மகிழ்ச்சியும் ஏற்பட்டது. பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 9. அதிலும் அந்த வயலெட் பூ ,பார்க்கும் போதே தொடு உணர்ச்சியை ஏற்படுத்துகிறது :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 10. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 11. அழகான படங்கள்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 12. படங்கள் அருமை!

  முன்பே நீங்கள், ஜோடி ஒன்று ஒரு ஜன்னலின் விளிம்பில் உட்கார்ந்திருப்பது போல் அதாவது அவர்கள் தோற்றம் வெறும் கருப்பாக நிழல் போல்....ஏதோ ஒரு கோட்டையிலோ உட்கார்ந்திருப்பது போல்..அது உங்கள் தளத்தில்தான் என்று நினைவு இல்லை வேறு தளத்திலா தெரியவில்லை..அது போன்று விலங்குகளை நீங்கள் எடுத்த புகைப்படத்தில் கூட இருந்ததாக நினைவு...காதல் தலைப்பிற்கு..அது உதவுமோ....

  ReplyDelete
  Replies
  1. சஃப்தர்ஜங்க் கல்லறையில் எடுத்த ஒரு படம் நீங்கள் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். Silhouette - எடுக்க முயற்சித்தது..... அது தவிர இன்னும் சில படங்கள் உண்டு. ஆனால் பகிர்ந்து கொள்ள வில்லை.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....