எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, October 14, 2015

சிரிக்கலாம் வாங்க!நண்பர் ஒருவர் இரண்டு மூன்று நாட்களாகவே அவருடைய முகப்புத்தகத்தில் சில காணொளிகளை பகிர்ந்த வண்ணம் இருக்கிறார். அத்தனையும் பார்க்கும்போது அப்படி ஒரு மகிழ்ச்சி. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத விஷயம் இந்த காணொளிகள். வயது வித்தியாசம் இல்லாது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை Tom and Jerry பார்த்து ரசிக்க முடிகிறதே! அதே போலத் தான் இன்று நாம் பார்க்கப் போகும் காணொளிகளும்!

என்ன காணொளி என்று கேட்பதற்கு முன்னரே சொல்லி விடுகிறேன். Charlie Chaplin நடித்த சில படங்களின் காட்சிகள் தான். நான் கடந்த இரண்டு நாட்களில் பார்த்து ரசித்த சில காணொளிகள் இன்றைய பதிவில்!

The Great Dictator – Charlie Chaplin the Barber

ஆஹா, அவர் ஒவ்வொரு முறை கத்தியை உபயோகிக்கும்போதும் ஒரு பரபரப்பு நம் கழுத்தில் கத்தி இருப்பது போல!
The Lion’s Cage

தைரியமாக இருப்பதாக காதலியிடம் காண்பிக்கும் போது அப்படி ஒரு சிரிப்பு!
Eating Machine

இப்படியெல்லாம் அக்காலத்திலேயே யோசித்திருப்பதைப் பாருங்கள்!
The Adventurer – Opening Chase

என்னவொரு Chase!
என்ன நண்பர்களே, காணொளிகளை கண்டு சிரித்தீர்களா? இன்றைய நாள் இனிதாய் அமைந்திடட்டும்!

நாளை மீண்டும் சந்திப்போம்.....

நட்புடன்
20 comments:

 1. ஹஹஹஹ்ஹ ஏற்கனவே பார்த்தது என்றாலும் மீண்டும் பார்த்து ..ரசித்தேன்..எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காதவை..சார்லி யின் காணொளிகள்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பர்ர்க்க முடிகிறதே - அது தான் சிறப்பு....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 2. முதல் காணொளி இப்போதுதான் பார்க்கிறேன். மற்றவை பார்த்து ரசித்திருக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. ஒரு காணொளியை புதியதாய் பார்க்க கொடுத்ததில் மகிழ்ச்சி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. இந்த கால நகைச்சுவைகள் அடுத்தவர்களை கேலி செய்து சிரிக்க வைக்கும் நிலையில் ஒரு வார்த்தைகள் கூட பேசாமல் நம்மை சிரிக்க வைக்கும் இவரின் படத்தை வரின் நடிப்பை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லைதான்

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான். வார்த்தைகளே இல்லாது நம்மை சிரிக்க வைக்கும் இவரது படங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 4. ரசித்தேன். சார்லி சாப்ளின் நகைச்சுவை காலத்தால் அழியாதது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 5. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

   Delete
 6. வணக்கம்
  ஐயா

  நல்ல கருத்தை சொல்லி இரசிக்கும் படியதன காணொளியை பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் த.ம 5
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 7. மௌனப் பட காலத்திலேயே சிரிப்பு புரட்சி செய்தவறாச்சே சாப்ளின் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 8. அனைத்தும் ரசித்தேன் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 9. சிரிக்க வைத்த காணொளிகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 10. சார்லி சாப்ளினின் நகைச்சுவைக்கு ஈடு இணை அன்றும் இல்லை இன்றும் இல்லை. காணொளிகளை பார்த்தேன் இரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....