எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, October 4, 2015

பூக்கள் அலங்காரம் – சில சாலைக்காட்சிகள்.....


வியாழன் அன்று இரவு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் வேளையில் புது தில்லி நகரின் சில இடங்களில் பூக்களால் அலங்காரம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தேன்.  பொதுவாகவே ஆங்கிலப் புத்தாண்டு நாளில் புது தில்லி நகராட்சி பகுதிகளில் நகராட்சி சார்பாக பல இடங்களில் பூக்களாலேயே புத்தாண்டு வாழ்த்துகளை எழுதி வைத்திருப்பார்கள்.  இப்போது எதற்காக அலங்காரம் என்று யோசித்தபோது அடடா அடுத்த நாள் காந்தி ஜெயந்தி என்று நினைவுக்கு வந்தது.

காந்தி ஜெயந்தி அன்று விடுமுறை தானே, முடிந்தால் சில இடங்களுக்குச் சென்று புகைப்படங்கள் எடுத்து வர வேண்டும் என நினைத்திருந்தேன்.  காலையில் எழுந்திருக்கும்போதே மணி 09.30 மணியாகி விட்டது! அலுவலகம் இருக்கும் நாட்களில் 05.30 மணிக்கே எழுந்திருக்க வேண்டியிருக்கிறதே! விடுமுறை நாளில் இப்படி பொறுமையாக எழுந்திருப்பதிலும் ஒரு சுகம் இருக்கத்தானே செய்கிறது!

மதிய உணவு நண்பர் வீட்டில் அழைத்திருந்ததால் காலை உணவை Simple-ஆக முடித்துக் கொண்டு நகர்வலம் புறப்பட்டேன். அப்படிச் சென்றபோது எடுத்த சில படங்களும், மாலை நேரத்தில் மீண்டும் நகர்வலம் சென்ற போது எடுத்த புகைப்படங்களும் இந்த ஞாயிறில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.  புகைப்படங்கள் உங்களுக்கும் பிடிக்குமென நினைக்கிறேன். பிடித்ததா என்று பின்னூட்டட்த்தில் சொல்லுங்களேன்!


காந்தி ஜெயந்தி அன்று வைத்திருந்த மலர் அலங்காரங்கள்......


பட்டொளி வீசிப் பறக்கும் இந்திய தேசியக் கொடி....  கன்னாட் ப்ளேஸ் - சென்ட்ரல் பூங்கா. படம் எடுக்கப்பட்டது பாராளுமன்ற சாலையிலிருந்து....

பாராளுமன்றம் அருகிலிருக்கும் நீரூற்று!

அழகாய் இல்லை எனிலும் பறவைகளுக்கு நீர் தரவாவது பயன்படுகிறதே! 


அதே நீரூற்று...  இன்னும் கொஞ்சம் பெரியதாய்!


தனக்கான உணவை எப்படியும் கண்டுபிடிக்கும் முடிவுடன் ஒரு நாரை....


இதுவும் நாரை வகையைச் சார்ந்ததோ?


புத்தம் புதிய வாகனத்துடன் ஒரு ஃபோட்டோ செஷன்!


தில்லி அப்பளம் - விற்பனைக்கு!மாலை நேரத்து சூரியன்.... மறையும் தருவாயில் - குடியரசுத் தலைவர் மாளிகைக்கு முன்புறம்!


கிழக்கு இந்திய கப்பல் கம்பெனி நம்மை விட்டு அகன்றாலும் இன்னமும் அதை நம் அலுவலகத்திற்கு முன் விட்டு வைத்திருக்கிறார்களே!


நடந்து கொஞ்சம் அலுப்பாக இருந்தால் பானி பூரி சாப்பிடலாமே!


விஜய் சௌக் பகுதியிலிருந்து இந்தியா கேட்....


பங்க்ளா சாஹேப் குருத்வாரா....

நாளை வேறு பதிவுடன் சந்திக்கும் வரை......

நட்புடன்


22 comments:

 1. தலைநகர் டில்லியிருந்து சிறப்பான படங்கள். அந்த கழுகு … நல்ல ஒப்பனை. மலர்கள் வாடி கருத்த பின்பு அந்த கழுகு எப்படி இருந்தது என்பதையும் படம் எடுத்து. தனியே ‘அன்றும் இன்றும்’ என்று வெளியிட்டு இருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   “அன்றும் என்றும்” - நல்ல யோசனை. முடிந்தால் படம் எடுத்து பகிர்ந்து கொள்கிறேன்.

   Delete
 2. அனைத்துப் படங்களையும் ரசித்தேன். குறிப்பாக வியாபாரிகளை!

  ReplyDelete
  Replies
  1. இந்தியா கேட் பகுதியில் இப்படி நிறைய வியாபாரிகள் உண்டு. அவர்களை மட்டுமே படம் எடுத்து ஒரு தொகுப்பாக வெளியிடும் எண்ணம் வந்திருக்கிறது! :) அடுத்த முறை செல்லும் போது எடுத்து விடுகிறேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. வணக்கம் சகோதரரே

  அனைத்துப் படங்களும் மிகஅருமையாக உள்ளது.மிகுந்த ஈடுபாடுடன் ரசித்தேன்.அதிலும்அந்தப்பறவையை அமைத்த விதம் மிக அழகு. மாலைச் சூரியன், நாரைபடங்கள். நீர் அருந்தும் பறவைகள் எனஅனைத்தும் கண்கொள்ளாகாட்சிகளாய் இருந்தன.பகிர்வுக்கு நன்றி.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 4. பூக்கள் அலங்காரம் இன்னும் இரு தினங்களுக்குப் பின் எப்படி இருக்கும் என்று நினைக்க வைத்தது. டெல்லியில் இதே இடங்களைப் பார்த்திருந்தாலும் உங்கள் பதிவு வழியே காணும்போது இன்னும் அழகாய்த் தெரிகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 5. படங்கள் அருமை. பாராட்டுக்கள்! பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 6. படங்கள் அருமை சகோ,
  வாழ்த்துக்கள்,,,,

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   Delete
 7. அருமையான புகைப்படங்கள்! ரசித்தேன்! உங்கள் முகப்பு படம் இரு குன்றுகளுக்கு இடையே செல்லும் சாலை எங்கள் பகுதியில் இருக்கும் மஞ்சங்கரணை கிராமத்தையும் அங்கு நான் பூஜை செய்த சொர்ணபுரிஸ்வரர் கோயிலையையும் நினைவூட்டியது! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. முகப்பில் இருக்கும் படம் குஜராத் சாலை ஒன்றில் பயணிக்கும் போது எடுத்த படம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 8. அனைத்தும் அழகான படங்கள். ரசித்தோம்.. வெங்கட் ஜி!

  கீதா: அந்தக் கொடியைப் பார்த்ததும் நாம் அன்று அந்தக் கொடியை எடுக்க நீங்கள் உதவியது , சந்திப்பு எல்லாம் நினைவில் வந்தது ஜி.

  பானி பூரி..ஸ்ஸ்ஸ்ஸ் ப்பா...அந்த கழுகு ஏற்கனவே அங்குள்ள சிலையா இல்லை மலரால் செய்யப்பட்டதா? கழுகு அழகு!!!!

  ReplyDelete
  Replies
  1. சந்திப்பு... இப்படத்தினை எடுக்கும்போது சந்திப்பின் நிமிடங்கள் மனதிலே மீண்டும் வந்தது......

   கழுகு சிலை அல்ல. மலர்களால் செய்யப்பட்டது. பானி பூரி - உங்களுக்குப் பிடிக்குமா?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 9. புகைப்படங்கள் அனைத்தும் அழகு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 10. படங்களின் மூலம் டெல்லியை செலவில்லாமல் காண்பித்தற்கு நன்றி. அதில் என்னை சிந்திக்க தூண்டியது இரண்டு படங்கள் அப்பளம் விற்பவரும் பானி பூரி விற்பவரும்தான் இவர்களால் இதை விற்று தினசரி வாழ்க்கையை நடத்த முடிகிறேதே அப்படி இருக்ககையில் அவர்களை விட அதிகம் சம்பாதிக்கும் நாம் இன்னும் வாழ்க்கை நடத்துவது கடினமாக இருக்கிறதே என்று குறை கூறுகிறோமே என்றுதான் நினைக்க தோன்றுகிறது அதுமட்டுமல்லாமல் தலைவர்கள் தங்கள் வாரிசுகள் உழைக்காமல் பணம் சம்பாதிக்காமல் பல நூறு ஆண்டுகள் வாழ சம்பாதித்து வைத்துவிட்டும் இன்னும் அதிகம் சம்பாதிக்க வேண்டும் ஆனால் மக்களுக்கு ஏதும் நல்லதை சிறிது கூட செய்ய மனமில்லாமல் இருப்பதை நினைக்கும் போது மனம் கனக்கதான் செய்கிறது

  ReplyDelete
  Replies
  1. ஆசை யாரை விட்டது. எத்தனை இருந்தாலும், இன்னும் வேண்டும் வேண்டும் என்று அலைய வைப்பது இந்தப் பணமும் புகழும் தானே..... பணம் சம்பாதிப்பது ஒன்று மட்டுமே குறிக்கோளாக வைத்திருக்கும் பலரை இங்கே பார்க்க முடிகிறது. இவர்கள் இப்படி இருக்க, இதே தில்லியில் இப்படி அப்பளம் விற்பவர்களையும், பானி பூரி விற்பவர்களையும், பஞ்சு மிட்டாய் விற்பவரையும், பலூன் விற்பவரையும் நூற்றுக் கணக்கில் பார்க்க முடியும். அவர்களும் தங்களது வாழ்க்கையை நடத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். நாமும். அவர்கள் குறை கூறுகிறார்களோ இல்லையோ நாம் குறை கூறி புலம்பிக் கொண்டு இருக்கிறோம். அவ்வப்போது அவர்களுக்காகவும் சிந்தித்து சில நொடிகள் மனம் கனக்க இருக்கிறோம்.... பணமும் இருப்பவர்களிடமே சேர்ந்து கொண்டிருக்கிறது. இல்லாதவர்களை முகம் கொண்டு பார்ப்பதில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 11. படங்கள் அனைத்தும் அருமை !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....