ஞாயிறு, 30 ஜூன், 2019

தலைநகரில் பிரஹ்மோத்ஸவம் – நிழற்பட உலாஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாள் இனிய நாளாக அமையட்டும். நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்த, கருத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இன்னும் படிக்காதவர்களும் படிக்கலாம்! 

திங்கள், 24 ஜூன், 2019

ஆதியின் அடுக்களையிலிருந்து…

சென்ற சில நாட்களில் நான் செய்த சில சமையல் முயற்சிகளின் தொகுப்பு இந்தத் திங்களில்! எங்கள் பிளாக் ”திங்க”க் கிழமைக்கு போட்டியாக வெளியிடப்பட்ட பதிவு அல்ல என்பதை நீங்கள் கேட்பதற்கு முன்னரே சொல்லி விடுகிறேன்!

ஞாயிறு, 23 ஜூன், 2019

தலைநகரிலிருந்து - இந்தியா கேட் – நிழற்பட உலா


அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.  இந்த நாள் இனிய நாளாக அமைந்து இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்த, கருத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  

சனி, 22 ஜூன், 2019

காஃபி வித் கிட்டு – மெஹந்தி – பேயுடன் நேர்காணல் – குருக்ஷேத்திரா - கோடைகாஃபி வித் கிட்டு – பகுதி – 35

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். சற்றே இடைவெளிக்குப் பிறகு சந்திக்கும் இந்த வேளையில் நல்லதொரு செய்தி சொல்லும் படத்துடன் இந்தப் பதிவினை ஆரம்பிக்கலாம்!

வெள்ளி, 14 ஜூன், 2019

இறைவனுக்கும் வாகனம் – செய்பவருடன் ஒரு அனுபவம்


அனைவருக்கும் இனிய காலை வணக்கம். அனைவருக்குமே வாகனத்தில் செல்வது பிடித்த விஷயம் தானே. அதுவும் தனக்கென்று ஒரு வாகனம் வைத்திருந்தால் மகிழ்ச்சி. வசதி படைத்த சிலர் தங்களுக்கென்றே நிறைய வாகனங்கள் வைத்திருப்பார்கள் – குஜராத் – அஹமதாபாத் நகரில் இருக்கும் ஒருவர் கிட்டத்தட்ட 250 கார்களை வைத்திருக்கிறார் – அனைத்தும் விண்டேஜ் கார்கள். அது பற்றி படிக்காதவர்கள் இங்கே படிக்கலாம்… மனிதர்களிடமே இத்தனை வாகனங்கள் என்றால் இறைவன் என்ன சும்மாவா? ஒவ்வொரு இறைவனுக்கும் விதம் விதமாக வாகனங்கள். புராணக் கதைகளில் படித்திருக்கிறோமே – புஷ்பக விமானத்தில் இறைவன் வந்து இறங்கினார் என!

வியாழன், 13 ஜூன், 2019

கதம்பம் – குப்பையும் காசுதான் - சத்து பராட்டா - ஸ்வீட் சட்னி - அப்பா - அப்பாவி ஜீவன்


ஆதியின் அடுக்களையிலிருந்து - 4 ஜூன் 2019


Sattu ke parathe!! (Bihar's special)

டெல்லியிலிருந்து Sattu என்ற கொண்டக்கடலை மாவை வாங்கி வந்தேன். உடலுக்கு நன்மை தரக்கூடிய Sattu-வில் லட்டு, பராட்டா, Health drink என்று நிறைய செய்யலாம் எனத் தெரிந்து கொண்டேன். இந்த மாவை வீட்டிலேயே செய்யலாம். அதற்கான தகவல்கள் YouTubeல் கிடைக்கிறது. இங்கேயும் செய்முறை கீழே தந்திருக்கிறேன்.

புதன், 12 ஜூன், 2019

க்ரேஸி மோகன் அவர்களுடன் ஒரு அனுபவம் – அடாது மழை பெய்தாலும்!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இருப்பதிலேயே மிகவும் சந்தோஷமான ஒரு விஷயம் எதுவென்றால், அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துவது தான். அப்படியான ஒரு விஷயத்தினை பல வருடங்களாகத் தொடர்ந்து செய்து வந்தவர் திரு க்ரேஸி மோகன் அவர்கள். க்ரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம், சாக்லேட் கிருஷ்ணா, ஒரு பேபியின் டைரிக் குறிப்பு, க்ரேஸி கிஷ்கிந்தா, ரிடர்ன் ஆஃப் க்ரேஸி தீவ்ஸ், மதில் மேல் மாது என அவரது நாடகங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். திரையிலும் பல படங்களில் வசனகர்த்தாவாக இருந்து நம்மையெல்லாம் மகிழ்வித்தவர்! அவரது வசனத்திற்காகவே நான் திரும்பத் திரும்ப பார்த்த கமல் படங்கள் பல உண்டு! கமலுக்காக அவரது படத்தினை ஒரு முறை பார்ப்பதே கடினம்! ஆனால் க்ரேஸி மோகன் வசனம் என்பதற்காகவே பல முறை பார்த்திருக்கிறேன் – மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், அபூர்வ சகோதரர்கள், வசூல்ராஜா எம்பிபிஎஸ் என பெரிய பட்டியலே உண்டு!

அவருடன் எனக்கான அனுபவம் பற்றி தான் இன்றைக்கு சொல்லப் போகிறேன் – நாடகங்கள் மீது அவர் வைத்திருந்த மரியாதை, எப்படியான நிலையிலும் நாடகங்களை தொடர்ந்து நடத்தி வந்தது அவர் மீது மிகுந்த மரியாதை கொள்ள வைத்தது.  1990-ஆம் ஆண்டு நெய்வேலி ஜவஹர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம். ஜூனியர் ஜேசீஸ் என்ற இளைஞர் பிரிவு ஜேசீஸ் கிளப்பில் நான் தலைவராக இருந்த போது [மொத்தமே பத்து பேர் தான் அந்த ஜூனியர் ஜேஸீஸ் குழுவில்!] நடந்த ஒரு நிகழ்வு. ஜேஸீஸ் கிளப்பிலிருந்து ஏதோ ஒரு Fund Raising நிகழ்வாக திரு கிரேஸி மோகன் அவர்களின் “ஒரு பேபியின் டைரிக்குறிப்பு” நாடகத்தினை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

டிக்கட் விற்பனை, தங்குமிட ஏற்பாடு, விருந்தினர் வரவேற்பு, கலைஞர்களுக்கான வசதிகள் செய்வது போன்றவற்றை ஜேசீஸ் குழுவினர் செய்ய, டிக்கெட் செக்கிங், கூட்டத்தினை கட்டுப்படுத்துவது போன்ற சில வேலைகளை எங்களுக்கு அளித்திருந்தார்கள். எங்களுக்கும் க்ரேஸி மோகன் குழுவினரின் “ஒரு பேபியின் டைரிக்குறிப்பு” நாடகத்தினை நேரில் பார்க்க ஒரு வாய்ப்பு – நான் நேரில் பார்த்த முதல் நாடகமே அது தான்! நெய்வேலி நகரின் 24-ஆம் வட்டத்தில் இருக்கும் திறந்தவெளி கலையரங்கத்தில் தான் நாடகம் ஏற்பாடு ஆகியிருந்தது. எல்லாம் சரியாக நடந்து கொண்டிருந்தது. நாடகக் குழுவினர் வந்தாயிற்று. பார்வையாளர்களின் நுழைவுச் சீட்டு சரிபார்த்து உட்கார வைத்தாயிற்று.

நாடகம் ஆரம்பித்தது. விறுவிறுப்பாகவும், கலகலப்பாகவும் நாடகம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென மழை! நெய்வெலியில் எப்போது மழை வரும் என்று சொல்ல முடியாது! திடீரென மழை வரும் – வந்தால் நின்று நிதானமாக அடித்துப் பெய்யும். திறந்த வெளி அரங்கம் என்பதால் பார்வையாளர்கள் எல்லோரும் ஓடி நாடக மேடைக்குள் பிரவேசிக்க, நாடகத்தினை நிறுத்த வேண்டியாதாயிற்று! எங்களுக்கெல்லாம் ஒரே பதட்டம். காசு கொடுத்து பார்க்க வந்தவர்கள் பாதி நாடகம் நடத்த முடியாவிட்டால் திரும்பக் கேட்பார்களோ, பிரச்சனை ஆகுமோ என்று குழம்பிக் கொண்டிருக்க, திரு கிரேஸி மோகன் அவர்கள் பதட்டமே இல்லாமல் எல்லோரையும் அவரது பேச்சினால் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். கவலையே படாதீங்க, மழை நின்ற பிறகு தொடர்ந்து நாடகம் நடத்தாமல் இந்த ஊரை விட்டுப் போகப் போவதில்லை என்று எங்களை ஆஸ்வாசப்படுத்தினார்.

சிறிது நேரம் அடித்துப் பெய்த மழை நிற்க, விட்ட இடத்திலிருந்து மீண்டும் சரியாகத் தொடங்கியது நாடகம்.  சில காட்சிகள் முடிந்திருக்கும், மீண்டும் மழை துவங்கியது! இப்படி மூன்று முறை நாடகம் – மழை என மாறி மாறி காட்சிகள்! ஒவ்வொரு முறையும் நிறுத்திய இடத்திலிருந்து சரியாகத் துவங்கியது நாடகம் – அவ்வளவு Perfection! ஒன்று, ஒன்றரை மணி நேரம் நடக்க வேண்டிய நாடகம், அன்றைக்கு முடிக்க மூன்றரை நான்கு மணி நேரம் ஆனது! இரவு நாடகம் முடிந்தபோது பத்தரை பதின்றொன்று மணி ஆகியிருக்கும். குழுவினருக்கு விடை கொடுத்து அனுப்பும் வரை நானும் அங்கேயே இருந்தேன். நான் இரவு வீடு திரும்பியபோது பன்னிரெண்டு மணிக்கு மேல்!

தன்னுடைய பணியில் அத்தனை Sincerity! நாடகம் ரசித்தது மட்டுமல்லாது அவரது இந்தப் பண்பும் என்னால் மறக்கவே முடியாது! மழை பெய்து கொண்டிருந்த சமயத்தில் நாங்களும் சில நிமிடங்கள் அவரிடம் பேசிக் கொண்டிருந்தோம் – பதட்டமாகிவிட்டது என்று சொன்னபோது, “அடடா எதுக்கு? நாடகம் நடத்தவேண்டிய நாங்களே பதட்டமாகலையே! எல்லாம் நல்லபடியாவே நடக்கும்!” என்று அவர் சொன்னது இன்றைக்கும் நினைவில்!  அலுவலகத்தில் இருக்கும்போது அவர் மறைவு பற்றித் தெரிந்தவுடன் இந்த நினைவுகள் எனக்குள்! அவரது மறைவு நாடக உலகிற்கு ஒரு பெரிய இழப்பு.  ”க்ரேசியைக் கேளுங்கள்” என்ற ஒரு நிகழ்ச்சியில் கேட்ட ஒரு கேள்வி-பதிலுடன் பதிவினை முடிக்கலாம்.

“எப்படி மரணம் நிகழ்ந்தால் அது நம்மை சோகத்தில் ஆழ்த்தாது?” என்ற ஒரு கேள்வி கேட்டு ஒரு க்ரேஸியான பதில் தரச் சொன்னதற்கு க்ரேஸி மோகன் சொன்ன பதில்!

”குளிக்கும்போது சோப்பு கரையற மாதிரி, அப்படியே கரைஞ்சு, சாக்கடைக்குள்ள போயிட்டோம்னா, மரண பயமே கிடையாது. மரண ஆச்சர்யம் தான்! என்ன நமக்குத் தெரிஞ்சவங்க, குளிக்கப் போனவன் திரும்பாம காணாம போயிட்டானேன்னு தேடிட்டு இருப்பாங்க…. சோகத்தை விட மர்மம் பெட்டர் இல்லையா?”

க்ரேஸி அவர்களின் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது என்பது நிஜம்! மேலுலகிலும் அவர் எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பார் என நம்புவோம்!
        
நண்பர்களே, இன்றைய பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

செவ்வாய், 11 ஜூன், 2019

தில்லியிலிருந்து திருவரங்கத்திற்கு!

ரயில் பயணங்களில் – 27 May 2019


தில்லியிலிருந்து எங்களுடன் பயணித்த இரு பக்கத்து இருக்கைக்காரர்கள் இன்று காலை மத்திய பிரதேசத்தின் போபாலில் இறங்கி விட்டனர். எங்கள் இருவருக்கும் மேல் பர்த் தான் கிடைத்தது. மாற்றிக்கலாம் என்று சொன்ன போது, இல்லை வேண்டாம் என்று சொல்லிவிட்டனர். சரி! பிரச்சனையொன்றும் இல்லை என்று சொல்லி விட்டு, மேலே ஏறி எங்கள் பர்த்தில் படுத்து விட்டோம். அவர்கள் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, அவர்கள் நண்பர் ஒருவரையும் அழைத்து வந்து, பிறகு அவரும் இவர்களோடு உறங்கிப் போனார்.

திங்கள், 10 ஜூன், 2019

தில்லி டைரி - ராஜ் கச்சோடி - சரக்கொன்றை - பிரம்மோற்சவம் - சந்திப்பு - பை பை தில்லிஅனைவருக்கும் இனிய காலை வணக்கம். தில்லியில் இருந்த நாட்களில் முகநூலில் எழுதிய சில விஷயங்களை தொகுத்து இங்கே வழங்கியதில் சற்றே இடைவெளி வந்து விட்டது! இரண்டு வாரங்களாக பதிவுகளே வெளிவரவில்லையே! திருவரங்கம் வந்து விட்டாலும் இந்த நாளில் சில தில்லி விஷயங்கள், தில்லி டைரி பதிவாக…

ஞாயிறு, 9 ஜூன், 2019

தேசிய போர் நினைவுச் சின்னம் – நிழற்பட உலா போர் நினைவுச் சின்னமும் இந்தியா கேட்டும்...

அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை போர் பற்றிய ஒரு ஆங்கில மேற்கோளுடன் ஆரம்பிக்கலாம் வாருங்கள்.

THE SOLDIER ABOVE ALL OTHERS PRAYS FOR PEACE, FOR IT IS THE SOLDIER WHO MUST SUFFER AND BEAR THE DEEPEST WOUNDS AND SCARS OF WAR – Douglas MacArthur.

சனி, 8 ஜூன், 2019

காஃபி வித் கிட்டு – விடைபெறுகிறேன்… - அழைப்பு – ஏன் இந்த பாகுபாடு – ஜில்ஜில் ரமாமணிகாஃபி வித் கிட்டு – பகுதி – 34

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். நலம் தானே! நான் நலம்!!