சனி, 29 ஜூன், 2019

காஃபி வித் கிட்டு – திறமை – பைக்காரா – மழைநீர் சேகரிப்பு – குழந்தையும் தெய்வமும்




காஃபி வித் கிட்டு – பகுதி – 36


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். குழந்தையும் தெய்வமும் ஒன்று எனச் சொல்வதுண்டு. இங்கே இருவரும் ஒன்றாக! தில்லியில் எங்கள் பகுதியில் அமைந்திருக்கும் திருப்பதி பாலாஜி கோவில் வளாகத்தில், எனது அலைபேசியில் எடுத்த படம் ஒன்றுடன் இந்த பதிவினை ஆரம்பிக்கலாம்!

திறமை எங்கேயும் உண்டு:



முன்பு ஒரு பதிவில் எங்கள் பகுதியில் இருக்கும் ஒரு இளைஞன் – காலை வேளையில் பேப்பர் போடுவது, பலரது இல்லங்களில் தோட்ட வேலைகள் செய்வது, பகல் நேரத்தில் ஒரு வேலை என நாள் முழுவதும் உழைக்கும் ஒரு இளைஞன் – பற்றியும் அவன் வரைந்த ஓவியங்கள் பற்றியும் ஒரு பதிவு எழுதி இருந்தேன். அந்தப் பதிவு – ஓவியம் - கண் பார்ப்பதை கை வரையும் – படிக்காத/பார்க்காதவர்கள் பார்க்கலாமே! சமீபத்தில் ஒரு கோவிலுக்குத் தேவை என்று சொல்ல அந்த இளைஞன் அமித் வரைந்த ஒரு ஓவியம் மேலே!

படித்ததில் பிடித்தது – பைக்காரா:  

நகைச்சுவை கட்டுரை எழுதுவது கொஞ்சம் கடினமான வேலை. வலையுலகிலும் சேட்டைக்காரன், பாலகணேஷ், அனன்யா மஹாதேவன் போன்ற சிலர் இப்படி நகைச்சுவை கட்டுரைகள்/பதிவுகள் எழுதிக் கொண்டிருந்தனர்.  இப்போது இவர்களில் யாருமே பதிவுலகம் பக்கம் வருவதில்லை. முகநூலில் மூழ்கிவிட்டார்கள்.  இப்படி ஆனதில் எனக்கு பெரிய வருத்தம் உண்டு. சமீபத்தில் ”பைக்காரா” என்ற ஒரு கட்டுரை படித்தேன்.  பை தூக்கும் கணவர்கள் பற்றி திரு அப்துல் கையூம் திண்ணையில் எழுதிய ஒரு நகைச்சுவை கட்டுரை. அதிலிருந்து சில வரிகள் இங்கே. முழுக்கட்டுரையும் இங்கே படிக்கலாம்!  

பெரியவர் ஒருவர் கருமியிடம் சென்று காசு கேட்டிருக்கிறார். அவர் காசு கொடுப்பதற்கு மனமில்லாமல் “காசா லேசா?” என்று பதில் கூறியிருக்கிறார். அதாவது “காசு என்றால் உனக்கு லேசா? அவ்வளவு எளிதில் உனக்கு தூக்கி கொடுத்துவிடுவேனா?” என்ற அர்த்தத்தில். அதற்கு அந்த பெரியவர் கருமியின் வாயிலிருந்து வந்த அதே வார்த்தைகளை வைத்தே “காசாலே சா” என்று சாபம் விட்டு விட்டார். அதாவது காசாலே(யே) சா – நீ சொத்து ஒழி; என்ற அர்த்தத்தில்.

இந்த வெள்ளைக்காரன் செய்து விட்டுப் போன குசும்பு அதை விட மோசம். பணத்திற்கு ரூபாய் என்று பெயர் வைத்துவிட்டு சில்லறைக் காசுக்கு ‘பைசா’ என்று பெயர் வைத்துவிட்டுப் போய் விட்டான். பை தூக்கியே சா(வு) என்று சாபம் விட்டுப் போய்விட்டானோ என்னவோ தெரியாது.

அந்தக் காலத்தில் ஒரு பெரிய கோபுரத்தை சாய்வாக கட்டி விட்டு அதற்கு “பைசா” கோபுரம் என்று பெயரையும் வைத்து விட்டுப் போனவர்களின் செயலை ஊமைக்குசும்பு என்று
ஏன் சொல்லக் கூடாது.

சிட்டிசன் படத்தில் வசுந்தராதாஸ் மழலைத் தமிழில் “பூக்காரா..! பூக்காரா.. !” என்று பாடும் பாட்டை வானொலி பண்பலையில் கேட்கும் போதெல்லாம் “பைக்காரா..! பைக்காரா..!” என்று அந்த அம்மா நம்மை கேலி செய்கிறதோ என்று சந்தேகப்படுவேன்.

ரசித்த காணொளி: மழை நீர் சேகரிப்பு

நாட்டின் பல பகுதிகளிலும் நீர் இன்றி மக்கள் திண்டாடுகிறார்கள். மழை நீர் சேகரிப்பு பற்றிய சரியான உணர்வு பலருக்கும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். மழை நீர் சேகரிப்பு பற்றிய இந்தக் காணொளி மிகவும் பழைய ஒன்று தான். உங்களில் சிலர் முன்னரே பார்த்திருக்கவும் கூடும். ஆனாலும் மனதைத் தொட்ட விளம்பரம் என்பதால் மீண்டும் பார்த்தாலும் தவறில்லை. பாருங்களேன்.




குருக்ஷேத்திரா பயணம்:

சென்ற காஃபி வித் கிட்டு பதிவில் குருக்ஷேத்திரா சென்று வந்தது பற்றி எழுதி இருந்தேன். இந்தப் பயணத்தில் ஒரு செய்தி உண்டு – எங்கள் பகுதி நண்பர்கள் சிலர் வந்திருந்தார்கள். கூடவே உங்களுக்கும் தெரிந்த பத்மநாபன் அண்ணாச்சியும் இப்பயணத்தில் வந்திருந்தார். பயணம் முழுவதும் பல விஷயங்களை பேசிக் கொண்டு வந்தோம். நானும் அவரும் சேர்ந்து செல்லும் முதல் பயணம் இது! தில்லி நகருக்குள் பல இடங்களில் சேர்ந்து சுற்றி இருந்தாலும், வெளியூர் பயணம் செல்வது முதல் முறை! அவரது டைமிங் ஜோக்குகளால் பயணம் முழுவதும் கலகலக்க வைத்தார் பத்மநாபன் அண்ணாச்சி! இது போன்ற பயணங்கள் தொடர வேண்டும் என்பது எனது அவா! பார்க்கலாம்!

பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க:


இப்போது காஃபி வித் கிட்டு எழுதுவது போல, ஆரம்ப நாட்களில் ஃப்ரூட் சாலட் பதிவு எழுதிக் கொண்டிருந்தேன். அப்படி இதே ஜூன் 29-ஆம் தேதி 2012-ஆம் வருடம் எழுதிய ஃப்ரூட் சாலட் பதிவு ஒன்று – ஃப்ரூட் சாலட் – 3 – அரசியல் – குட்டிக் கதை.  இந்தப் பதிவினை படிக்காதவர்கள் படிக்க வசதியாக! அப்பதிவில் வெளியிட்டிருந்த ஒரு ஹாஸ்யம் இங்கேயும்!



மருத்துவர்: உங்களுக்கு மூணு பல்லு எப்படி உடைஞ்சது?
கணவர்: என் மனைவி செய்த பர்ஃபி சாப்பிட்டதால்!
மருத்துவர்: பர்ஃபி வேண்டாமென மறுத்திருக்கலாமே?
கணவர்: மறுத்திருந்தால் முப்பத்திரெண்டு பல்லும் போயிருக்கும் :(

இந்த வாரத்தின் புகைப்படம்:



குருக்ஷேத்திராவில் எடுத்த படம் ஒன்று – அலங்கார விளக்குகள் நிறைய இருந்தன – அவற்றில் ஒன்று இங்கே படமாக!

என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

36 கருத்துகள்:

  1. பைசா கதை ரசிக்க வைத்தது.
    மருத்துவர் பல் கதையும் ஸூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பைசா கதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. மழை நீர் சேகரிப்பு காணொளி சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில வருடங்கள் முன்னரே வந்த காணொளி என்றாலும் உங்களுக்கும் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  4. புதுடில்லி : சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தொடர்பான கூட்டங்களில் இனி பிஸ்கெட், குக்கீஸ் உள்ளிட்ட நொறுக்கு தீனிகள் வழங்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    காபி வித் கிட்டு இனி காபி மட்டும் தான்?
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மருத்துவர் என்பதால் இப்படி ஒரு உத்தரவு - ஏற்கனவே சில மாதங்கள் அவர் அமைச்சராக இருந்தபோதும் இந்த உத்தரவு இருந்தது ஜெயக்குமார் ஐயா.

      காஃபி வித் கிட்டுவில் காஃபி மட்டும்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. மதிய வணக்கத்துடன் வந்தாச்சு வெங்கட்ஜி. மதியம் காஃபியுடன்!! மதியமும் குடிப்போம்ல ஹா ஹா ஹா

    குழந்தையும் தெய்வமும் க்யூட்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதியமும் காஃபி குடிப்போம்ல! அதானே கீதாஜி! எப்போது வேண்டுமானாலும் காஃபி குடிக்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. அமித் பற்றி முன்பு நீங்கள் குறிப்பிட்ட நினைவு இருக்கு ஜி. இப்படமும் மிக அழகாகச் செய்திருக்கிறார். அமித்திற்கு வாழ்த்துகள். பாராட்டுகள்.

    பைக்காரா சூப்பர்!! ஆமாம் ஜி நகைச்சுவை எழுதுவது என்பது மிக மிகக் கடினமான ஒன்று. நீங்கள் குறிப்பிட்டிருப்பவர்கள் மூவருமே அருமையாக எழுதுவார்கள். இப்போது எழுதுவதில்லை என்பது வருத்தமே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு வருடங்களுக்கு முன் நீங்கள் உங்கள் தளத்தில் எழுதி வெளியிட்ட வைராக்கியம் சிறுகதை இந்த மாத தேன்சிட்டில் பிரசுரம் செய்து உள்ளேன். அனுமதியின்றி வெளியிட்டதற்கு மன்னிக்கவும். நன்றி! இதழ் தயாரானதும் அனுப்பி வைக்கிறேன்!

      நீக்கு
    2. அமித் பற்றிய உங்கள் கருத்துகள் படித்து மகிழ்ச்சி கீதாஜி!

      நகைச்சுவையாக எழுதுவது ஒரு வரம். அவர்கள் இனிமேலாவது வலைப்பூவில் எழுதினால் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. வைராக்கியம் சிறுகதை தேன்சிட்டில்! வாழ்த்துகள் கீதாஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  7. மழை நீர் சேகரிப்பு கணொளி அருமை ஜி. இப்போதுதான் நான் பார்க்கிறேன். செம காணொளி. மிகவும் ரசித்தேன்.

    நான் அன்று வாசித்த போதே நினைத்தேன் பப்பனாபன் அண்ணாச்சி வந்திருக்கார்னா பயணம் செம கலகலனு இருந்திருக்குமேன்னு. இப்படியான பயணங்கள் தொடரட்டும் ஜி. சிரிக்க வைப்பது என்பது பெரிய கலை! நகைச்சுவை ரொம்பப் பிடித்த விஷயம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மழை நீர் காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி!

      பத்மநாபன் அண்ணாச்சி இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பு....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. சுவையான தகவல்கள் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  9. ஜோக் ஹா ஹா ஹா

    அலங்கார விளக்கு ரொம்ப அழகாக இருக்கிறதுஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நகைச்சுவை, அலங்கார விளக்கு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. கதம்பம் அருமை.
    மழை நீர் சேகரிப்பு காணொளி மிக அருமை.
    இப்போது மழைத் துளி உயிர்துளி தான்.
    இன்று ஒரு தெரு குழாயில் தண்ணீர் சிந்தி கொண்டு இருந்தது , அடைக்க பார்த்தேன் முடியவில்லை. கயிறு வைத்து கட்டி இருந்தார்கள், அப்படியும் தண்ணீர் வீணாகி கொண்டு இருந்தது.

    தூக்காணாங் குருவி கூடு போல அலங்கார விளக்கு அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தூக்கணாங்குருவி கூடு போன்ற அலங்கார விளக்கு - மகிழ்ச்சி கோமதிம்மா... மழைத்துளி உயிர்த்துளி! விரைவில் மக்கள் அதை உணர்ந்து கொண்டால் நலம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. குழந்தையும் தெய்வமும் ஒன்று எனச் சொல்வதுண்டு.//

    அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தையும் தெய்வமும் படம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. குழந்தையும், தெய்வமும் படம் அருமை! மழை நீர் சேகரிப்பு பற்றிய டாகுமெண்டரி சிறப்பு. அலங்கார விளக்கு அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவில் உங்களுக்கு பிடித்த விஷயங்களை குறிப்பிட்டதில் மகிழ்ச்சி பானும்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    இன்றைய காஃபி வித் கிட்டு நன்றாக உள்ளது. முதல் படம் மிக அருமையாக இருக்கிறது. ஓவியம் மிக அழகு. நீங்கள் குறிப்பிட்ட பதிவிலும் சென்று அமித் வரைந்துள்ள ஓவியங்களை ரசித்தேன்.

    படித்ததில் பிடித்தது "பைக்காரா" நானும் சென்று படித்து வந்தேன். மிகவும் நகைச்சுவையோடு எழுதி உள்ளார்.

    மழை நீர் சேகரிப்பு விளம்பர காணொளி அருமையாக இருந்தது.

    குருஷேத்திர பயண விபரம், அங்கு எடுத்த அலங்கார விளக்கு புகைப்படம் அனைத்தும் நன்றாக இருக்கிறது. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமித் வரைந்த முந்தைய ஓவியங்களையும் பார்த்து ரசித்ததில் மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  15. மிகவும் அருமையான பதிவு.மழை நீர் சேகரிப்பு
    காணொளி சென்னை மக்கள் நிச்சயமாக பார்க்கவேண்டும்.பல் ஜோக் ரசிக்கும்படி இருந்த்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  16. பைசாவும் பல்லும் செம..
    பதிவு ரசனையாய்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  17. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....