வெள்ளி, 29 ஜூன், 2012

ஃப்ரூட் சாலட் – 3 -அரசியல் - குட்டிக்கதை

[பட உதவி: கூகிள்]


இந்த வார செய்தி: சில மாதங்களுக்கு முன்பு நடந்த தேர்தலுக்குப் பின் உத்திரப் பிரதேச மாநில ஆட்சி மாயாவதியிடமிருந்து சமாஜ் வாதி கட்சியைச் சேர்ந்த அகிலேஷ் யாதவ் வசம் வந்தது. முன்பு முலாயம் சிங் யாதவ் ஆட்சியிலேயே அவர் கட்சி உறுப்பினர்களின் அடாவடித் தனங்கள் மிக மிக அதிகம். தேர்தலில் அப்போது தோற்றதற்கு அது காரணமாக அமைந்தது. இப்போது இரண்டு தேர்தலுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தும் அப்படியே தான் இருக்கிறார்கள். 

பதிவியேற்ற பிறகு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் செய்த அடாவடிகள் தாங்கவில்லை. எல்லாவற்றிற்கும் ஒரு Height என்று உண்டல்லவா? லக்னோவிலிருந்து தியோரியாவிற்கு ட்ரயின் மூலம் வந்து சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரை வரவேற்க நானூறுக்கும் மேற்பட்ட அடிப்பொடிகள் வந்து காத்திருந்தனர். கூடவே ஒரு குதிரையும் நடைமேடையில் காத்திருந்தது.

சட்டமன்ற உறுப்பினர் வந்து சேர்ந்ததும், பேண்ட் வாத்தியங்கள் முழங்க, அவர் குதிரையில் அமர்ந்து, நடைமேடையிலேயே குதிரை சவாரி செய்திருக்கிறார். ஸ்டேஷனில் இருந்த பொதுமக்களுக்கு ஏற்பட்ட தொந்தரவுகளைப் பற்றி அவருக்கோ, அவரது அடிப்பொடிகளுக்கோ என்ன கவலை? தட்டிக்கேட்ட ஒரு இளைஞரை அவரது அடிப்பொடிகள் சேர்ந்து அடித்திருக்கிறார்கள். அடித்தது மட்டுமல்லாது அவருக்கு ’பிக்பாக்கெட்’ பட்டமும் கட்டி விட்டார்கள். 

இவர்களது தொல்லை தாங்கவில்லை! அரசியலில் இருப்பதால் என்ன செய்தாலும் தாங்கிக் கொள்ளவேண்டிய நிலையில் தான் இருக்கிறார் திருவாளர் பொதுஜனம்! சில நாட்களாகவே இதைப் பற்றி எழுத நினைத்தாலும், தள்ளிப் போட்டு வந்தேன். கொஞ்சமாக எழுத நினைத்ததால் இந்தப் பகுதியிலே எழுதினேன். எப்போதுதான் இவர்கள் மாறுவார்களோ! அவர்களுக்கும் ஆண்டவனுக்கும்தான் வெளிச்சம்!

இந்த வார முகப்புத்தக இற்றை:

முகப்புத்தகத்தில் ஒரு தோழி இருக்கிறார். தினம் ஒன்றிற்கு குறைந்தது ஏழெட்டு முறையாவது “Status Message” மாற்றிவிடுகிறார். சில நாட்களில் போடும் இற்றைகள் பற்றி நாம் சொன்னால் அடி விழும். அந்த தோழியின் ஒரு இற்றையினை இந்த பகிர்வில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். [பட உதவி: கூகிள்]

மருத்துவர்: உங்களுக்கு மூணு பல்லு எப்படி உடைஞ்சது?
கணவர்: என் மனைவி செய்த பர்ஃபி சாப்பிட்டதால்!
மருத்துவர்: பர்ஃபி வேண்டாமென மறுத்திருக்கலாமே?
கணவர்: மறுத்திருந்தால் முப்பத்திரெண்டு பல்லும் போயிருக்கும் :(
இந்த வாரக் காணொளி:

சில சமயங்களில் மருந்து மாத்திரைகள் அவசியமல்ல என்பதை அழுத்திச் சொல்லும் விளம்பரம்….
இந்த வார குறுஞ்செய்தி: 


[பட உதவி: கூகிள்]


மனைவி: என்னங்க சொர்க்கத்திலே கணவன்-மனைவி சேர்ந்து வாழ முடியாதாமே?

கணவன்: அதனால தான் அதை சொர்க்கம்-னு சொல்றாங்க!

மனைவி: ??????

இந்த வாரக் குட்டிக்கதை:

ஒரு முனிவர் தனது சிஷ்யனைப் பார்த்துக் கேட்டாராம் “கோபத்திலிருக்கும் இரு நபர்கள், தங்களுக்குள் மிக சத்தமாகக் கத்திப் பேசுவது ஏன்?” சில நிமிடங்கள் யோசித்தபிறகு அவருடைய ஒரு சிஷ்யர் சொன்னாராம், கோபத்தில் இருக்கும்போது நிதானத்தினை இழந்துவிடுகிறோம். அதனால் தான் இப்படி சத்தமாகப் பேசுகிறோம். அதற்கு முனிவர் ”சரிதான். ஆனால் அந்த நபர் பக்கத்திலேயே இருக்கும்போது இத்தனை சத்தமாக ஏன் பேசவேண்டும். மெதுவாகப் பேசினாலே அவருக்குக் கேட்குமே?” என்று கேட்டாராம். ஒவ்வொரு சிஷ்யரும் ஒரு பதில் சொல்ல, அதையெல்லாம் கேட்ட முனிவர் இதெல்லாம் இல்லை. இதைவிட ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது என்று சொன்னாராம். 

அந்த விஷயம் என்னவென்றால், ”அந்த இரு நபர்களும் கோபத்தில் இருக்கும் போது, அவர்களது இதயம் வெகுதொலைவிற்குச் சென்று விடுகிறது. அதனால் தான் அவர்கள் இத்தனைச் சத்தமாகப் பேசுகிறார்கள். எத்தனை கோபமாக இருக்கிறார்களோ அத்தனை தொலைவு அவர்களது இதயம் சென்றுவிட, இன்னும் அதிகமாகக் கத்துகிறார்கள். அதுவே இரண்டு நபர்கள் ஒருத்தரை ஒருவர் விரும்பினால் அவர்களது இதயங்களுக்கு இடையே இருக்கும் தூரம் குறைய கிசுகிசுவெனவே பேசுகிறார்கள். இன்னும் நெருக்கமானால், பேசக்கூட தேவையில்லை, பார்வையிலேயே பல விஷயங்களைப் பரிமாறிக்கொள்ள முடிகிறது.”

எவ்வளவு உண்மையான விஷயம்!

மீண்டும் சந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.60 கருத்துகள்:

 1. அரசியலில் எல்லோரும் ஒண்ணுதான். என்ன வடக்கில் இன்னும் கொஞ்சம் அடாவடி ஜாஸ்தி வெங்கட். முலாயம் / மாயா / ராகுல் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //என்ன வடக்கில் இன்னும் கொஞ்சம் அடாவடி ஜாஸ்தி வெங்கட்.//

   உண்மை தான் கார்த்திக். நிறையவே தொல்லைகள். சில விதத்தில் இங்கே நம் ஊரை விட மேல். பிரதமரோ/குடியரசுத் தலைவரோ சென்றால் கூட 10 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்தினை நிறுத்துவது இல்லை. நம்மூரில் அது இல்லை. பல மணி நேரம் முன்பே திருப்பி விட்டு விடுவார்களே.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கார்த்திக்.

   நீக்கு
 2. இதயங்களுக்கு இடையே இருக்கும் தூரம் குறைய கிசுகிசுவெனவே பேசுகிறார்கள். இன்னும் நெருக்கமானால், பேசக்கூட தேவையில்லை, பார்வையிலேயே பல விஷயங்களைப் பரிமாறிக்கொள்ள முடிகிறது.”

  சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.....

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் ரசித்துக் கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி கே.பி.ஜே. ஜி!

   நீக்கு
 4. உங்க தோழி எப்படி உண்மையை நல்லா ஒ த் துக்குறார் ? குட்டி கதை அருமை

  முதல் ஓட்டு கூட போடாம ஓடிட்டீங்க? இன்னிக்கு நான் தான் போணி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //முதல் ஓட்டு கூட போடாம ஓடிட்டீங்க? இன்னிக்கு நான் தான் போணி//

   உங்க ஓட்டு முதல் ஓட்டு... :)) பல சமயம் இணைப்பதோடு சரி. மீண்டும் ஒரு முறை Login, Password எல்லாம் கேட்டு படுத்துகிறது தமிழ்மணம். அதான் தொல்லை....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்.

   நீக்கு
 5. கோபத்துலே கத்திச்சண்டை கூட போடுறோமே!!!!

  அரசியல் வியாதிகளை ஒழிச்சுக்கட்டணும் முதலில்:(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அரசியல் வியாதிகளை ஒழிச்சுக்கட்டணும் முதலில்:(//

   சரியாச் சொன்னீங்க துளசி டீச்சர். வியாதிகளே தான் பலர்....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. பதில்கள்
  1. ம்ம்ம்ம்ம்..

   வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.....

   நீக்கு
 7. mr V N
  முதலில் அன்பு கலந்த வணக்கம்
  உங்களது பதிவுகளை பார்க்கும்போது எனக்கு ஒரு விடயம் புலப்படுகிறது யார் யாரோ வராந்திரி மாசிகை என சஞ்சிகைகளை வெளிக்கொனர்கிரார்கள் நாமும் செலவுசெய்து வாங்கி நிற்பந்தமாய் வாசிக்கின்றோம்
  அதில் சுவை எதிர்பார்க்கும் திருப்தி கிடைக்கிறதா என்றால்? ம்... ஹும்.....
  .... அதை பற்றி எழுதுபவர்களும் கணக்கில் கொள்வதில்லை
  ஆனால் நான் சொல்கிறேன் திரு வெங்கட் அவர்களிடம் அந்த திறமை உண்டு.
  தொகுத்து கொள்ளுங்கள்
  எதிர்காலத்தில் தமிழில் நல்லதொரு பல்சுவை வெளிஈட்டை உங்களால் கொண்டுவர முடியும்
  உங்கள் பழக்கலவை
  சுவையோ சுவை
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திரு Alkan அவர்களுக்கு, தங்களுடைய கனிவான வார்த்தைகளுக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. அருமை அருமை
  படித்து முடித்ததும் மனம் பூரித்துப் போனது
  திருஷ்டியாக அரசியல் விஷயம் மட்டும்
  நகைச்சுவை விருந்தும் அந்தக் காணொளியும் மிக மிக அருமை
  அந்த இதய விஷயம்மிகஅற்புதம்
  சில காதலர்கள் ஒட்டிக்கொண்டு பேசுவதவன் காரணம் கூட
  இப்போதுதான் புரிகிறது
  மனம் கவர்ந்த பதிவுகள்
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //திருஷ்டியாக அரசியல் விஷயம் மட்டும்//

   அரசியலே திருஷ்டிப் பொட்டு தான் நம் அழகிய இந்திய திருநாட்டிற்கு....

   தங்களது வருகைக்கும் ஊக்கமூட்டும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணிஜி.

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா...

   நீக்கு
 10. இற்றையும், குறுஞ்செய்தியும் அருமை. ரசித்துச் சிரித்தேன். குட்டிக் கதையோ மனதைத் தொட்டது. ஒவ்வொரு ப்ரூட் சாலடும் சுவை கூடிக் கொண்டே போகிறது வெங்கட். தொடரட்டும். என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது தொடர் வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்துரைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   நீக்கு
 11. // அதனால தான் அதை சொர்க்கம்-னு சொல்றாங்க! //

  நல்லா தர்றாங்கையா டீடெயிலு ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதானே....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதவன்.

   நீக்கு
 12. வெங்கட்ஜி, வணக்கம்.

  1) அரசிய்ல்வாதிகள் சிலரால் Mr. L.K. ஜி சொல்வதுபோல எல்லா இடங்களிலும் பொது மக்களுக்குத் தொல்லைதான்.

  2) முகப்புத்தகத் தோழியால் 29 இலாபம் [32 minus 3] தான். ;)

  3) காணொளிச் செய்தி அழகு

  4) குறுஞ்செய்தியில் நல்ல நகைச்சுவை; படித்ததும் நம்மை சொர்க்கத்திற்கே கொண்டு செல்கிறது போன்ற உணர்வு.

  5) குட்டிக்கதையில் அருமையானதொரு உண்மையைக் காணமுடிகிறது.

  //அதுவே இரண்டு நபர்கள் ஒருத்தரை ஒருவர் விரும்பினால் அவர்களது இதயங்களுக்கு இடையே இருக்கும் தூரம் குறைய கிசுகிசுவெனவே பேசுகிறார்கள்.

  இன்னும் நெருக்கமானால், பேசக்கூட தேவையில்லை,

  பார்வையிலேயே பல விஷயங்களைப் பரிமாறிக்கொள்ள முடிகிறது.”//

  சூப்பர், வெங்கட்ஜி. பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி.

   நீக்கு
 13. அரசியவாதிகள் இல்லை அரசியல் வியாதிகள்... அவர்களை நினைத்தாலே கடுப்பு தான் வருகிறது....

  //அதனால தான் அதை சொர்க்கம்-னு சொல்றாங்க!//

  ஃப்ரூட் சாலட் அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   நீக்கு
 14. "இதயங்கள் நெருக்கமானால் பேசக்கூட தேவையில்லை" முற்றிலும் உண்மை. அருமையான பகிர்வு. வாழ்த்துகள். வளர்க உங்கள் பணி.

  விஜய்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   நீக்கு
 15. அதுவே இரண்டு நபர்கள் ஒருத்தரை ஒருவர் விரும்பினால் அவர்களது இதயங்களுக்கு இடையே இருக்கும் தூரம் குறைய கிசுகிசுவெனவே பேசுகிறார்கள். இன்னும் நெருக்கமானால், பேசக்கூட தேவையில்லை,

  fact.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   நீக்கு
 16. அட போங்கண்ணா! “திஹார் வென்ற திலகமே“ - என்று சும்மா ஜாமினில் வந்ததற்கே அள(ல)ப்பறை விடும் நம்ம ஆட்கள் மட்டும் குறைந்தவர்களா, என்ன!

  அந்த வார குட்டிக்கதை ஜூப்பர். லோதி கார்டனில் ஏன் இப்படி நெருக்கமாக இருக்கிறார்கள் என்று இப்போது புரிந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அட போங்கண்ணா! “திஹார் வென்ற திலகமே“ - என்று சும்மா ஜாமினில் வந்ததற்கே அள(ல)ப்பறை விடும் நம்ம ஆட்கள் மட்டும் குறைந்தவர்களா, என்ன!//

   :)) நான் ஒண்ணும் சொல்றதுக்கில்ல அண்ணாச்சி....

   //லோதி கார்டனில்....// அடிக்கடி லோதி கார்டன் போறீங்கன்னு தெரியுது.....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்].

   நீக்கு
 17. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 18. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும், தமிழ் மண வாக்கிற்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்.

   நீக்கு
 19. அரசியலில் இருப்பதால் என்ன செய்தாலும் தாங்கிக் கொள்ளவேண்டிய நிலையில் தான் இருக்கிறார் திருவாளர் பொதுஜனம்!//

  :((

  ஜோக் இர‌ண்டும் சிரிப்பூட்டினாலும் எங்க‌ளின‌த்தை சிறுமைப் ப‌டுத்துவ‌தால் ....

  குட்டிக் க‌தைத் த‌த்துவ‌ம் அழ‌கு. லாஜிக் ரொம்ப‌ ந‌ல்லாயிருக்கு ச‌கோ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //குட்டிக் க‌தைத் த‌த்துவ‌ம் அழ‌கு. லாஜிக் ரொம்ப‌ ந‌ல்லாயிருக்கு ச‌கோ...//

   உண்மை சகோ.

   //ஜோக் இர‌ண்டும் சிரிப்பூட்டினாலும் எங்க‌ளின‌த்தை சிறுமைப் ப‌டுத்துவ‌தால் ....//

   தங்களை காயப்படுத்தியிருந்தால் “மன்னிக்க வேண்டுகிறேன்.....” வரும் பதிவுகளில் ஜாக்கிரதையாக இருக்கிறேன்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   நீக்கு
 20. பழக்கலவையில் குறுஞ்செய்தி மட்டும் புளிப்பு:)! மற்றபடி நல்ல தொகுப்பு.

  கதை அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பழக்கலவையில் குறுஞ்செய்தி மட்டும் புளிப்பு:)!//

   தங்களை காயப்படுத்தியிருந்தால் “மன்னிக்க வேண்டுகிறேன்.....” வரும் பதிவுகளில் ஜாக்கிரதையாக இருக்கிறேன்.....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 21. பல்சுவைத் தரும் பஞ்சாமிர்தம்!

  சுவை நன்று!

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 22. அரசியல்// எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்...
  குட்டிக்கதை// உண்மை...அருமை வெங்கட்ஜி...

  பதிலளிநீக்கு
 23. இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்புகிறோமே தவிர, இளைஞர்கள் எந்த விதமான புதிய சிந்தனைகளுடனும் அரசியலுக்கு வருவதில்லை என்பதையே இந்த மாதிரிச் சம்பவங்கள் காட்டுகின்றன. இந்த வகையில் இந்தியாவின் அரசியல் எதிர்காலம் இருட்டாகவே இருக்கிறது.

  இற்றை ரசிக்க முடிந்தது.

  கொபத்திளிருக்கும்போது தூரச் செல்லும் இதயம். அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இளைஞர்கள் எந்த விதமான புதிய சிந்தனைகளுடனும் அரசியலுக்கு வருவதில்லை என்பதையே இந்த மாதிரிச் சம்பவங்கள் காட்டுகின்றன. இந்த வகையில் இந்தியாவின் அரசியல் எதிர்காலம் இருட்டாகவே இருக்கிறது.//

   சரியான அலசல்.... மிகவும் இருண்ட எதிர்காலம் தான்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 24. குட்டிக்கதை Superb! I learned one more thing from you..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பந்து....

   நீக்கு
 25. ஃப்ரூட் சாலட் சூப்பர்! அன்புடன் இருப்பவர்கள் குறைவாகத் தான் பேசுவார்கள்..பாக்கியை அவர்கள் கண் பேசும்..அதுவும் ரொம்ப பேச ஆரம்பித்தால், பெண்ணின் அப்பா/அண்ணன் அவர்கள் கை பேசும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அதுவும் ரொம்ப பேச ஆரம்பித்தால், பெண்ணின் அப்பா/அண்ணன் அவர்கள் கை பேசும்!//

   :)))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆர்.ஆர்.ஆர்.

   நீக்கு
 26. நகைச்சுவையில் வீட்டுக்காரம்மாவை இழுத்திருக்கிறீர்களே... அண்ணி அருகில் இல்லையா?
  குட்டிக்கதை அருமை....
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.....

   நீக்கு
 27. அசத்தலான பஞ்சாமிர்த இடுகை...அதுவும் அந்த //இரண்டு நபர்கள் ஒருத்தரை ஒருவர் விரும்பினால் அவர்களது இதயங்களுக்கு இடையே இருக்கும் தூரம் குறைய கிசுகிசுவெனவே பேசுகிறார்கள்.

  இன்னும் நெருக்கமானால், பேசக்கூட தேவையில்லை,

  பார்வையிலேயே பல விஷயங்களைப் பரிமாறிக்கொள்ள முடிகிறது//
  அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி எல்லென்.

   நீக்கு
 28. இரண்டு நபர்கள் ஒருத்தரை ஒருவர் விரும்பினால் அவர்களது இதயங்களுக்கு இடையே இருக்கும் தூரம் குறைய கிசுகிசுவெனவே பேசுகிறார்கள். இன்னும் நெருக்கமானால், பேசக்கூட தேவையில்லை, பார்வையிலேயே பல விஷயங்களைப் பரிமாறிக்கொள்ள முடிகிறது.”//
  கண்கள் பேசும் போது வாய் சொற்களால் பயன் ஒன்றும் இல்லை.
  வார்த்தைகளால் பேசமுடியாத போது மெளனம் பேசுகிறதே.
  அற்புதம்.
  நல்ல பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 29. கடைசிக்கதை மனதை ஈர்த்தது. அதுவே யதார்த்தமும், உண்மையும் கூட.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....