திங்கள், 2 ஜூலை, 2012

திருச்சியில் பதிவர்கள் சந்திப்பு - மற்றும் சுஜாதா…



[பட உதவி: கூகிள்]

தமிழகத்தில் தில்லி பதிவர்கள்: ஏக், தோ, தீன்! பதிவில் திருச்சியில் பதிவர்கள் திருவாளர்கள் ரிஷபன்,  ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி, வை.கோபாலகிருஷ்ணன் மற்றும் திருமதி கீதா சாம்பசிவம் ஆகியோரை சந்தித்ததையும் அப்போது நான் சந்தித்த ஒரு முக்கியமான நபரைப் பற்றி பிறகு எழுதுகிறேனென்று பதிவின் முடிவில் சொல்லியிருந்தேன்

ரிஷபனின் வீட்டிற்கு சென்றிருந்த போது சிறிது நேரம் பதிவுலகம் பற்றியும் எழுத்து பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். ஸ்ரீரங்கத்துக்காரர்களின் மீது கொஞ்சம் பொறாமை தான் எனக்கு. என்னமாய் எழுதுகிறார்கள். ஸ்ரீரங்கத்துக்காரரான திரு ரிஷபனும் விதிவிலக்கல்ல. அவருக்கு வந்த முதல் வாசகர் கடிதம், அவர் எழுதி வெளி முதல் துணுக்கு, முதல் சிறுகதை, முதல் தொடர்கதை எல்லாமேகல்கிஇதழில் வெளிவந்தவை. அவரது எழுத்தில் மிளிர்ந்த சில வெளியீடுகளை அவரிடமே கேட்டுப் பெற்றேன். “நாளை வரும்”, ”பனி விலகிய நேரம்”, “நிலா வட்டம்மற்றும்சிந்தனைச் சிறகுகள்ஆகியவை அவை. தில்லி திரும்பிய சில நாட்களிலேயே அனைத்தையும் படித்து ரசித்தேன்.

அவருடன், நானும் எனது மனைவியும் திரு ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி இல்லத்திற்குச் சென்றோம். அங்கும் விருந்தோம்பல் முடித்து திரும்பி வரும் வழியில் வாத்தியார் சுஜாதா அவர்கள் சிறுவயதில் வாழ்ந்த அவரது பாட்டி வீடு மற்றும் பாடசாலைக்குக் கொடுத்த இன்னோர் வீடு என எல்லாவற்றையும் பார்த்து மகிழ்ந்தோம். நம்மில் பலர் ரசிக்கும் ஒரு மிகப்பெரிய எழுத்தாளர் இங்கே தான் வளர்ந்தார் என்ற நினைவோடு அங்கேயே சில நிமிடங்கள் நின்று பார்த்து வந்தோம்.

மற்றொரு நாள் திரு வை. கோபாலகிருஷ்ணன் அவர்களது வீட்டிற்குச் சென்றோம். முதல் நாள் தான் அவரது பேரனுக்கு முதலாம் ஆண்டு பிறந்த நாள் விழாவென்பதால், பிசியாக இருந்தார்விருந்தோம்பலிலும், அவர் காட்டிய அன்பிலும் எங்களை திக்குமுக்காடச் செய்தார். பதிவுலகம் நல்ல நண்பர்களையும், வழிகாட்டிகளையும் நமக்குக் காண்பித்திருக்கிறதே என்ற நினைவில் மகிழ்ந்தேன்.

திரு கீதா சாம்பசிவம் அவர்களை சந்திக்க நினைத்து நாங்கள் தொலைபேசியில் அழைக்க, அப்போது அவர் சற்றே உடல்நிலை சரியில்லாமலிருந்ததால் முடியவில்லை. பிறகு நாங்கள் தொடர் பயணத்தில் இருக்க, அவரே தம்பதி சமேதராய் எங்கள் வீட்டிற்கு வந்தார்கள். இன்னொரு நாள் நாங்கள் அவர் வீட்டிற்குச் செல்ல, உடனடியாக கேசரி, பஜ்ஜி என அளித்து அசத்தினார். நீண்ட நேரம் அவருடன் பேசிக்கொண்டிருந்து விட்டு திரும்பினோம்

இவர்கள் அனைவரையும் சந்தித்து வலையுலக அனுபவங்களையும் மற்ற பொது விஷயங்களையும் பகிர்ந்து கொண்டது இனிமையான அனுபவம். இந்த இனிமைக்கு இனிமை சேர்க்கும்படி ஒரு விஷயமும் நடந்தது

ஒரு நாள் திருச்சி மலைக்கோட்டை சென்று ஸ்ரீரங்கம் திரும்பும்போது பேருந்தில் திரு ரிஷபன் அவர்களும் இருந்தார். அவரது வீடும், எனது அப்பா வீடும் அருகருகே இருப்பதால், அவருடன் பேசியபடியே வீட்டிற்கு நடந்து கொண்டிருந்தோம். அப்போது ரிஷபன் சார் முன்னே போய்க் கொண்டிருந்த ஒருவரைப் பார்த்து, “அவர் யார் தெரியுமா?அவர் தான் சுஜாதா அவர்களின் சகோதரர், பேசலாமா?” என்று சொல்ல, எங்களை அறிமுகம் செய்து கொண்டு பேச ஆரம்பித்தோம்.


[பட உதவி: கூகிள்]


சுஜாதா அவர்களை நேரில் பார்த்து பேச ஆசையிருந்தும் அதற்க்கான வாய்ப்பு கிடைக்கவில்லைஅவரது சகோதரரிடம் பேச வாய்ப்புக் கிடைத்தவுடன் நாங்கள் பேசுவதை விட அவர் சுஜாதா பற்றிய நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்வதை கேட்பது நல்லது என அவர் சொல்வதை கேட்டுக் கொண்டே வந்தோம். மேற்கு சித்திரை வீதியின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை பேசிக்கொண்டே வந்தார்

சில கதைகளை அவருடன் சேர்ந்து தானும் எழுதியது, சிறுவயதில் தங்கியிருந்த பாட்டி வீட்டினை திரும்ப வாங்க யோசித்தது, சுஜாதா அவர்கள் மறைந்து நான்கு ஆண்டுகள் ஆனாலும், அவரது எழுத்துகளுக்கு இருக்கும் ஈர்ப்பு என்றும் மறையாது, புதிது புதிதாய் வாசகர்கள் படிப்பது, என பலப் பல விஷயங்களை அவர் எங்களுடன் பகிர்ந்து கொண்டார். அதில் நிறைய விஷயங்கள் எங்களுக்குப் புதியவை

நிறைவாக, “நீங்க எதாவது எழுதறீங்களா?”ன்னு கேட்க, ரிஷபன் சார், நான், ஆதி ஆகிய மூவருமே வலைப்பூவில் எழுதுவது பற்றி சொன்னதோடு, ரிஷபன் சார் சிறுகதைகள் நிறைய புத்தகங்களில் வெளிவந்து கொண்டிருப்பதைப் பற்றியும் தெரிவித்தோம். ”நிறைய படிங்க, படிக்கப் படிக்கத்தான் எழுத்து கைகூடும்என்று சொன்னதோடு, எங்களது வலைப்பூ முகவரிகளையும் கேட்டுக் கொண்டார்

அவருடன் பேசியது ஏனோ வாத்தியார் சுஜாதா அவர்களிடம் பேசியது போலவே இருந்தது எனக்குஅவரது நடைப்பயிற்சியை அவர் தொடர, இந்த இனிய நினைவுகளோடு அவரிடம் விடைபெற்று வீடு  திரும்பும்போது நான் திரும்பிப் பார்க்க, பொறுமையாக அவர் நடந்து போனது, சுஜாதா அவர்களே நடந்து போவது மாதிரி தோன்றியது எனக்கு.

சில நினைவுகளோடு மீண்டும் சந்திப்போம்

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


70 கருத்துகள்:

  1. திருச்சி பதிவர் நண்பர்கள் படம் போட்டிருக்கலாமே ?

    ரிஷபன் சார் மற்றும் ஆரண்யநிவாஸ் சார் இருவரிடமும் போனில் பேசியிருக்கேன். திருச்சி செல்லும் போது சந்திக்கணும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //திருச்சி பதிவர் நண்பர்கள் படம் போட்டிருக்கலாமே ? //

      வை.கோ.ஜி வீட்டில் மட்டும் புகைப்படம் எடுத்தோம். மற்ற இடங்களில் புகைப்படம் எடுக்கவில்லை மோகன்.

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன்.

      நீக்கு
  2. சந்திப்பின் முக்கிய தருணங்களை இந்தப் பதிவில்தான் சொல்லியிருக்கிறீர்கள். சுஜாதாவின் சகோதரர் (இளைய சகோதரரா?) பகிர்ந்தவற்றில் நிறைய விஷயங்கள் புதிதாக இருந்தன என்றும் சொல்லியிருக்கிறீர்கள். தெரிந்தவை, தெரியாதவை எல்லாவற்றையும் எங்களுடனும் பகிர்ந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். படங்கள் ஏதும் எடுக்கவில்லையா?

    இந்த வார கல்கியில் திரு ரிஷபன் அவர்களின் 'ஊர்மிளா' சிறுகதை வந்துள்ளது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      தெரிந்தவை தெரியாதவை... சந்தித்து ஒரு மாதம் ஆகிவிட்டது. நினைவில் கொண்டு வந்து பகிர முயற்சிக்கிறேன் ஸ்ரீராம்.

      நீக்கு
  3. இனிய நினைவுகள் என்றும் மனதைவிட்டு
    நீங்குவதில்லை.அதை பகிர்கையில் கிடைக்கும்
    கூடுதல் மகிழ்ச்சியும் அலாதியானது
    தங்கள் பதிவில் அது நிரம்பி வழிகிறது
    மனம் கவர்ந்த அருமையான பதிவு.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இனிய நினைவுகள் என்றும் மனதைவிட்டு
      நீங்குவதில்லை.அதை பகிர்கையில் கிடைக்கும்
      கூடுதல் மகிழ்ச்சியும் அலாதியானது//

      உண்மைதான் ரமணிஜி.

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமணிஜி.

      நீக்கு
  4. Trichyku Nanum vanthirunthen . geetha mamiyai mattum parka mudinthathu. ungaluku phone pannalam endru ninaithom. anal mathiyam moondru mani. athanl thontharavu seyyavendam endru vittuvittom

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் திருச்சி வந்த ஞாயிறன்று நான் சிவகங்கையிலிருந்தேன். இரண்டு நாட்கள் கழித்துதான் நீங்கள் வந்துபோன விவரம் தெரிந்து கொண்டேன் கார்த்திக்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கார்த்திக்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தமிழ்மணத்தில் நான்காம் வாக்களித்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி ரமணிஜி.

      நீக்கு
  6. சுஜாதாவின் சகோதரருடன் சந்திப்பு சுவாரசியம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கே.பி.ஜே. சார்.

      நீக்கு
  7. திருச்சி பயணத்தையும் சந்திப்புக்களையும் மிகவும் அழகாகக் கோர்வையாக எழுதியுள்ளீர்கள், வெங்கட்ஜி.

    சுஜாதா அவர்களின் சகோதரரை சந்தித்துப் பேசியதும் கேட்க மிகவும் சுவாரஸ்யமாகவே உள்ளது.

    இந்த வார 8.7.2012 தேதியிட்ட கல்கியில் கூட, என் எழுத்துலக மானஸீக குருநாதர் திரு ரிஷபன் ஸ்ரீநிவாஸன் அவர்களின் “ஊர்மிளா” என்ற கதை பக்கம் 34 முதல் 37 வரை வெளியாகியுள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இப்போது தான் படிக்கக் கையில் எடுத்துள்ளேன்.

    சந்தோஷமான பகிர்வுக்கு மிக்க நன்றிகள், வெங்கட்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களையெல்லாம் திருச்சியில் சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி வை.கோ. ஜி.

      கல்கி இங்கே கிடைப்பதில் சில பிரச்சனைகள்..... :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி.

      நீக்கு
  8. //நம்மில் பலர்ரசிக்கும் ஒரு மிகப்பெரிய எழுத்தாளர் இங்கே தான் வளர்ந்தார்என்ற நினைவோடு // ஆகா ஓகோ

    //விருந்தோம்பலிலும், அவர் காட்டிய அன்பிலும்எங்களை திக்குமுக்காடச் செய்தார்.// அவரின் அன்பை நானும் வியந்து வணங்குகிறேன்.

    சுஜாதா சகோதரரும் அவரைப் போலவே சிந்திப்பது அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி சீனு....

      நீக்கு
  9. திரு ரிஷபன் அவர்களின் எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும்! சுஜாதா பற்றி சொல்ல வேண்டியதே இல்லை! நன்றி!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவரே....

      நீக்கு
  10. பதிவர்கள் திரு.ரிஷபன், திரு. வை.கோபாலகிருஷ்ணன், திரு. ராமமூர்த்தி, திருமதி.கீதா சாம்பசிவம் ஆகியோரைச் சந்தித்தது பற்றிய பதிவு படிக்க மகிழ்வாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. திரு. வை.கோபாலகிருஷ்ணன், திரு. ராமமூர்த்தி இவர்களுடன் சகோதரர். திரு.எல்லென் அவர்களையும் திரு.வை.கோ அவர்களது இல்லத்து விசேடம் ஒன்றில் சந்தித்த அனுபவம் இன்னும் இனிமையாய் மனதில் நிற்கிறது. திரு. ரிஷபன் அவர்களை மட்டும் அப்போது சந்திக்க இயலவில்லை. தொலைபேசியில் மட்டும் தான் பேச முடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்திப்புகள் நிச்சயம் சுவாரஸ்யமானதுதான்....

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மனோ மேடம்.

      நீக்கு
  11. என்னமோ ஜென்மாந்திர பந்தமுன்னு சொல்வாங்களே அப்படி ஆகிப்போச்சு வலை உலகில் என் உணர்வுகள்.

    எனக்கும் ஒரு ஸ்ரீரங்கம் பயணம் ஒன்னு வாய்ச்சுருக்கு. அப்போ ஒரு பதிவர் சந்திப்பு நடத்திறவேண்டியதுதான்,

    அதிர்ஷ்டம் இருக்கான்னு தெரியலை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ உங்களையும் ஸ்ரீரங்கம் அழைத்துவிட்டானா ரங்கன்....

      பதிவர் சந்திப்பு நடத்தினால் முன்பே சொல்லுங்கள் - எங்கள் வீட்டு பதிவரும் வர வாய்ப்பிருக்கும்!....

      வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
    2. முன்பே தகவல் கிடைத்தால் ரிஷபன் சார் நிச்சயம் சந்திக்க ஏற்பாடுகள் செய்திடுவார் டீச்சர்.... சொந்த அனுபவத்தில் சொல்கிறேன்....

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்.

      நீக்கு
  12. திருச்சி வரும் சமயம் உங்களை கண்டிப்பாக சந்திக்கிறேன்.... எனக்கும் சுஜதா அவர்களின் எழத்தின் மேல் ஒரு அலாதியான பிரியம் உண்டு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களது முதல் வருகையோ சுரேஷ் சுப்ரமணியன்.... ?

      அடுத்த பயணத்தின் போது நிச்சயம் சொல்கிறேன்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  13. நீங்க ரொம்ப லக்கி எவ்வளவு பதிவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதை எங்களிடமும் சொல்லி பகிர்ந்தவிதம் சுவாரசியம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

      நீக்கு
  14. பதிவுலகம் நல்ல நண்பர்களையும், வழிகாட்டிகளையும் நமக்குக் காண்பித்திருக்கிறதே என்ற நினைவில் மகிழ்ந்தேன்.

    அருமையான சந்திப்புகளுக்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.

      நீக்கு
  15. //ஸ்ரீரங்கத்துக்காரர்களின் மீது கொஞ்சம் பொறாமை தான் எனக்கு.//

    எனக்கு இப்போது உங்கள் மீது பொறாமையாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடாடா பொறாமை எதற்கு அண்ணாச்சி... :)

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்].

      நீக்கு
  16. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      நீக்கு
  17. சுஜாதா அவர்களை இங்கே தமிழ்ச் சங்கத்தில் ஒரு கூட்டத்தில் பார்த்தது (90-களின் பிற்பகுதியில் என்ற் நினைக்கிறேன்). ஆனால், பேச முடியவில்லை. நீ இப்பொழுது அவரது சகோதரரைச் சந்திருப்பது குறித்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்ச்சங்கத்தில் பார்த்திருக்கிறாயா? நான் வந்தது 91-ல் தான்.... :(

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றிடா சீனு [வெங்கட ஸ்ரீனிவாசன்].

      நீக்கு
  18. சுஜாதா அவர்களின் சகோதரை தாங்கள் சந்தித்தது அருமை
    அருமையான பகிர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி K.s.s. Rajh.....

      நீக்கு
  19. //எனக்கும் ஒரு ஸ்ரீரங்கம் பயணம் ஒன்னு வாய்ச்சுருக்கு.// துளசி டீச்சர் நீங்களுமா?? தக்குடுவும் திருச்சி போகனும்னு நினைச்சுண்டு இருக்கு. ம்ம்ம்ம்! பார்ப்போம் 1 நாள்ல எங்க எல்லாம் போகபோறேனோ அந்த ரெங்கனாதனுக்கு தான் வெளிச்சம்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தக்குடுவும் திருச்சி போகனும்னு நினைச்சுண்டு இருக்கு. ம்ம்ம்ம்! பார்ப்போம் 1 நாள்ல எங்க எல்லாம் போகபோறேனோ அந்த ரெங்கனாதனுக்கு தான் வெளிச்சம்! :)//

      தக்குடுவும் திருச்சி போய் ரங்கனை சேவிச்சுண்டு அப்புறம் ஒரு மினி பதிவர் சந்திப்பும் வைச்சுண்டா போறது... :)

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தக்குடு.

      நீக்கு
  20. அன்புடையீர்,

    வணக்கம்.

    என்னுடைய கீழ்க்கண்ட பதிவுக்கு
    தயவுசெய்து வருகை தாருங்கள்.

    http://gopu1949.blogspot.in/2012/07/blog-post.html

    தங்களுக்கான விருது ஒன்று காத்துள்ள்து.

    அன்புடன்
    vgk

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வை.கோ. ஜி... தங்களது அன்பிற்கு மிக்க நன்றி.

      தங்களது பக்கத்திற்கும் வருகிறேன்.

      நீக்கு
  21. மனசை ஏங்க வைக்கிறது வெங்கட் சார்! நமக்கு இந்த வாய்ப்பு கிட்டவில்லை சார்! வை.கோ அய்யாவின் வலைப்பூவில் தங்களுக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளார்கள். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! அருமையானவர்களை தெரிவு செய்த வை.கோ அய்யாவிற்கும் பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அட்சயா....

      நீக்கு
  22. நானும் படத்தை பார்த்து இன்னைக்குன்னு நினைச்சேன் வெங்கட்ஜி...
    அருமையான சந்திப்புகளுக்கு வாழ்த்துகள் வெங்கட்ஜி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நானும் படத்தை பார்த்து இன்னைக்குன்னு நினைச்சேன் வெங்கட்ஜி...//

      :)))

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரெவெரி.

      நீக்கு
  23. திருச்சியில் நாம் ஏன் ஒரு பதிவுலக மாநாடு நடத்தக் கூடாது?

    அன்புடன்,

    ஆர்.ஆர்.ஆர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //திருச்சியில் நாம் ஏன் ஒரு பதிவுலக மாநாடு நடத்தக் கூடாது?
      //

      ஆஹா.... :))

      வரும் 19 ஆகஸ்ட் சென்னையில் நடக்கப் போகிறது பதிவர்கள் சந்திப்பு.... கருத்தரங்கம், கவியரங்கம் எனக் கலக்கப் போகிறார்கள்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆர்.ஆர்.ஆர்.

      நீக்கு
  24. நல்ல அனுபவம், ரொம்ப ரசிச்சு இருக்கிங்க போல!

    நான் மாணவப்பருவத்தில் பல முறை சுஜாதா அவர்களை நேராகப்பார்த்துள்ளேன் ஒரு முறையும் பேசியதில்லை, பெரிய எழுத்தாளர் பேசுவாரோ என்பது ஒன்று ,மேலும் அவரை தொந்தரவு செய்வது போல இருக்குமோ என்றெல்லாம் நினைத்து கடந்து விடுவேன்.இப்போது பேசி இருக்கலாமோ என தோன்றுகிறது.

    மெரினாவில் அப்போதெல்லாம் "டிஜிபி" அலுவலகம் எதிரில் , வாக்கிங் போவார், அவர் பின்னாலே சில முறை போய் இருக்கிறேன்,காக்காவிற்கு சோறு போடவே ஒருவர் வருவார்,அதனை வேடிக்கைப்பார்ப்பார், நான் இவரை வேடிக்கைப்பார்த்தேன். விகடனில் கூட அந்த காக்கா மேட்டர் எழுதி இருக்கார்.

    லகான் படம் சத்தியத்தில் பால்கனியில் பார்க்கும் போது எனக்கு பின்னால் வரிசையில் பாக்சில் சுஜாதா அவர்கள் அமர்ந்திருந்தார், இரண்டு மூன்று முறை திரும்பி திரும்பிபார்த்தேன், அவர் டிஸ்டர்ப் ஆனது போல தோன்றவே ,படத்தினைப்பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது முதல் வருகைக்கும் தங்களது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி வவ்வால்...

      நீக்கு
  25. இனிய சந்திப்புகள். பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  26. பதிவர் சந்திப்பு அருமை.

    நட்புகளின் சந்திப்பு நெஞ்சை விட்டு நீங்காத நினைவுகள் தான், காலம் எல்லாம் நினைக்கும் தோறும் மகிழ்ச்சி தரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நட்புகளின் சந்திப்பு நெஞ்சை விட்டு நீங்காத நினைவுகள் தான், காலம் எல்லாம் நினைக்கும் தோறும் மகிழ்ச்சி தரும்.//

      உண்மை தான் கோமதிம்மா....

      பேரன் பேத்தி எல்லாம் ஊருக்குக் கிளம்பியாச்சா?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  27. அன்பு நண்பரே

    தாங்களின் "மதுரா" பயணம் மதுரமாக இருந்திருக்குமென்று நம்புகிறேன்.

    தங்களின் சமிபத்திய படைப்பு "திருச்சியில் பதிவர்கள் சந்திப்பு - மற்றும் சுஜாதா… " எங்களைப் போன்ற சுஜாதா ரசிகர்களுக்கு மிகவும் நன்றாக இருந்தது. நன்றி. வளர்க உங்கள் பணி / பாணி.

    விஜய்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தாங்களின் "மதுரா" பயணம் மதுரமாக இருந்திருக்குமென்று நம்புகிறேன். //

      மதுரா வரை செல்லவில்லை. பிருந்தாவன் வரைக்கும் சென்று “டாகூர் பாங்கே பீகாரிஜி”யை திவ்யமாய் தரிசனம் செய்து வந்தோம்....

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

      நீக்கு
  28. சுஜாதாவின் சகோதரர் திரு.ராஜகோபாலன் அவர்களைச் சந்தித்த உங்களின் அனுபவம் படிக்க இனித்தது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்ஜி!

      நீக்கு
  29. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஷர்புதீன்.

      நீக்கு
  30. நல்ல பதிவர் சந்திப்புப் பகிர்வு.
    அருமையா சொல்லியிருக்கீங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

      நீக்கு
  31. சமீபத்துல சுஜாதாவோட எழுத்தைப் படிக்க ஆரம்பிச்சு அவர் கதைகள் மேல பைத்தியமாயிட்டேன். (அதுக்கு முன்னாடியே நீ அப்படித்தானேன்னு மாமா பின்னால நின்னு குரல் கொடுக்கறார், பாருங்க ஸார்...) அவரோட பிரதரை நீங்க சந்திச்ச அனுபவம் படிக்கறதுக்கு மகிழ்ச்சியா இருக்கு. பகிர்ந்ததுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நிரஞ்சனா.

      நீக்கு
  32. நான் ரொம்ப லேட்டா வந்திருக்கேன் போலிருக்கு. :))))) பரவாயில்லை,நிறையப் பேரைச் சந்திச்சிருக்கீங்க. நிறையப் பேர் ஶ்ரீரங்கம் வரத் துண்டு போட்டு இடம் பிடிச்சுட்டாங்க போல! வரட்டும்! ஒரு கை இல்லை, ரெண்டு கையாலேயும் பார்த்துடலாம்.:))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லேட்டா வந்தா என்ன... :) லேட்டஸ்டா வந்திட்டீங்க....

      நிறைய பேர் வரத்துண்டு போட்டு இருக்காங்க.... :) நான் கூட ஆகஸ்ட்-ல் வரலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  33. அன்புள்ள வெங்கட்,

    சுஜாதாவின் சகோதரர் திரு. ராஜகோபாலனை நீங்கள் சந்தித்தது மிக மகிழ்ச்சியான விஷயம். சுஜாதா தேசிகன் அவரைப் பற்றி அடிக்கடி குறிப்பிடுவார். அவர் சுஜாதாவுடன் இணைந்து 'பிரம்ம சூத்திரம் - ஓர் எளிய அறிமுகம்' என்ற நூலை எழுதியுள்ளார்.

    -Srinivasan (BalHanuman)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் பேசியதைக் கேட்டபடி நாங்கள் சென்றபோது “பிரம்ம சூத்திரம்” பற்றியும் குறிப்பிட்டார்....

      தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே! ஆகஸ்டில் சென்னை வருகிறீர்கள் என மோகன் பக்கத்தில் பார்த்தேன். நானும் இருபதாம் தேதி சென்னையில் இருப்பேன் என நினைக்கிறேன். முடிந்தால் சந்திக்கலாம்!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....