வெள்ளி, 6 ஜூலை, 2012

ஃப்ரூட் சாலட் – 4 – தன்னம்பிக்கை மனிதர்


இந்த வார செய்தி: தன்னம்பிக்கை மனிதர்


உழைப்பாளிகள்.....

[பட உதவி: கூகிள்]

பழைய தில்லி பக்கம் வந்திருக்கும் நண்பர்கள் இங்கு ஓடும் ரிக்‌ஷாக்களைப் பார்த்திருக்கக் கூடும். பீஹார் மற்றும்  உத்திரபிரதேச மாநிலங்களிலிருந்து தலைநகருக்கு வேலை தேடி வரும் பெரும்பாலான மக்கள் செய்யும் வேலை ரிக்‌ஷா ஓட்டுவது தான். இருபது முதல் நாற்பது ரூபாய் வரை வாடகைக்குக் கிடைக்கும் ரிக்‌ஷாக்களை நாள் முழுதும் கஷ்டப்பட்டு ஓட்டினால் நாளொன்றுக்கு இருநூறு ரூபாய் வரை கிடைக்கும். சொந்தமாக ரிக்‌ஷா வாங்கி ஓட்டுவதென்பது நிச்சயம் சாத்தியமில்லை. இவர்களைப் பற்றி என்னுடைய முந்தைய பதிவான“தலைநகரிலிருந்து பகுதி-2”-லும் எழுதி இருக்கிறேன். 

இப்போது இவர்களைப் பற்றி மீண்டும் எழுதக் காரணம் இருக்கிறது. சில நாட்களுக்கு முன் பேட்டரிகளால் இயக்கப்படும் ரிக்‌ஷாக்களை கிழக்கு மற்றும் மத்திய தில்லி பகுதிகளில் அறிமுகம் செய்திருக்கிறார்கள். இவைகளின் மதிப்பு 80,000/- ரூபாய்.  நான்கு பாட்டரிகள் பொருத்தப்பட்ட இவைகள் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்தே நல்ல வரவேற்பு. மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இதன் பாட்டரிகளை இரவு முழுவதும் சார்ஜ் செய்ய வேண்டுமாம். இதை வாங்க வங்கியில் கடனுதவியும் தருகிறார்கள்.


தன்னம்பிக்கை மனிதர்.....


எனது வீட்டின் அருகில் இருக்கும் ஒரு ரிக்‌ஷாக்காரர் முன்பு சாதாரண ரிக்‌ஷா ஓட்டிக்கொண்டிருந்தவர் இப்போது, இந்த பாட்டரி ரிக்‌ஷா ஓட்டுகிறார். இவர் சாதாரண மனிதர் அல்ல – விபத்தில் தனது வலது கை முழுவதும் இழந்தவர். ஒரு கையுடனேயே  ஓட்டிக்கொண்டு இருந்தவர் இப்போது இந்த வண்டியை சற்று சுலபமாக ஓட்டுகிறார்.

ஒரு நாள் ராமகிருஷ்ண ஆஸ்ரமம் மெட்ரோ நிலையத்திலிருந்து வீட்டிற்கு வரும்போது அவரது இந்த ரிக்‌ஷாவில் தான் வந்தேன். தன்னுடைய இயலாமையிலும் உழைத்து வாழும் இந்த தன்னம்பிக்கை மனிதர் நிச்சயம் பாராட்டுக்குரியவர் தானே!

இந்த வார முகப்புத்தக இற்றை:

சிறுவன்: தாத்தா, உங்களுக்கு குடும்பக் கட்டுப்பாடுன்னா என்னன்னு தெரியுமா?

தாத்தா: என்ன வயசுல என்ன கேள்வி கேக்குற, எனக்குத் தெரியாது, ஓடு….

சிறுவன்: உங்களுக்குத் தெரியாதுன்னு எனக்குத் தெரியும். தெரிஞ்சிருந்தா உங்க சொத்த 28 பாகமா பிரிக்கத் தேவையிருந்திருக்காது.

இந்த வாரக் காணொளி:

இந்தக் காணொளி 1992-ஆம் வருடம் நடந்த United Nations Conference on Environment and Development-ல் எடுக்கப்பட்டது. ஐந்து நிமிடம் பேசினாலும், உலக நாடுகளிலிருந்து வந்த அனைத்து தலைவர்களையும் வாய்மூடிக் கேட்க வைத்தது இப்பெண்ணின் பேச்சு.  காணொளி 7 நிமிடங்கள் எனினும், நிச்சயம் பார்க்க வேண்டிய ஒன்று. 



இந்த வார குறுஞ்செய்தி: 



அன்பான உறவுகள்.....

அன்பான உறவுகள் உன்னைத் தேடி வரும்போது அதை உண்மையாக நேசி. இந்த உலகத்தில் உன்னை வெறுக்க யாருமே இருக்கமாட்டார்கள்.

படித்ததில் பிடித்தது:



உணவகத்தின் அறிவிப்புப் பலகை...

படம் எடுக்காததால் நானே தயாரித்தது.



ஸ்ரீரங்கத்தில் இருக்கும் ஒரு உணவகத்தின் வெளியே உள்ள கரும்பலகையில் அன்றைய மெனு எழுதி இருந்தது. மெனுவை விட மேலே இருந்த வாசகம் பிடித்தது – “பொறுமை உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி!”  சாப்பிட வந்த சிலர், இட்லி வேகறதுக்குள்ள ”சீக்கிரம் கொண்டுவாய்யா”ன்னு கத்தியிருப்பார்களோ!

மீண்டும் சந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


60 கருத்துகள்:

  1. முதல் பகுதி மிக ஈர்த்தது. மற்றவையும் சுவாரஸ்யமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்குமார்.

      நீக்கு
  2. கண்டிப்பா இவர் தன்னம்பிக்கை மனிதர்தான். அவர் பெயரைக் கேக்கலையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேரைக் கேட்க விட்டு விட்டேன். இன்னோர் முறை பார்க்கும்போது கேட்டு பகிர்கிறேன்....

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  3. சத்தான சுவையான சுவாரஸ்யமான
    புரூட் சாலட்
    சுவைத்து மகிழ்ந்தேன்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணிஜி!

      நீக்கு
  4. பதில்கள்
    1. தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணிஜி.

      நீக்கு
  5. புரூட் சாலட்

    டெல்லி ரிக்ஷா பற்றிய தகவல் புதுமை. அவர் தன்னம்பிக்கை பாராட்டுக்கு உரியது என்பதில் சந்தேகமே இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி சீனு.

      நீக்கு
  6. புரூட் சாலட்!அருமை மனிதனை மனிதன அமர வைத்து இழுத்துச் செல்லும் கொடுமை தடை செய்யப் பட வேண்டும்.

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அருமை மனிதனை மனிதன அமர வைத்து இழுத்துச் செல்லும் கொடுமை தடை செய்யப் பட வேண்டும்.//

      உண்மை தான் ஐயா. இங்கே இருப்பது கையால் இழுக்கும் வகையல்ல. சைக்கிள் போல மிதித்துச் செல்வது தான். ஆனால் அதுவும் கொடுமையான விஷயம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவரே.

      நீக்கு
  7. தில்லியில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப் பட்டதாகக் கேள்வி பட்டேன். இன்னமும் பார்க்கவில்லை. கை ரிக்ஷாக்களை விட சற்று பெரிதாக நல்ல moving space-உடன் இருக்கும் போலிருக்கிறதே. நல்ல design.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான்கு பேர் உட்கார்ந்து செல்லும் அளவிற்கு இருக்கிறது சீனு. கால் வைத்துக் கொள்வதற்கும் இடம் இருக்கிறது.

      நிறைய வந்தால் நல்லது. ஆனால் விலை அதிகம் மற்றும் சார்ஜ் செய்ய போதிய மின்சாரமும் வேண்டுமே?

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிடா சீனு [வெங்கட ஸ்ரீனிவாசன்]

      நீக்கு
  8. அந்த ரிக்‌ஷாவை பற்றிய தகவலை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. தன்னம்பிக்கை மனிதர் பாராட்டுக்குரியவர்.

    (//தெரிஞ்சிருந்தா உங்க சொத்த 28 பாகமா பிரிக்கத் தேவையிருந்திருக்காது//

    இந்தப் பக்கம் ஒரு பெரிய(??) மனிதருக்கு சொத்தை எத்தனை பாகமா பிரிக்கணும்னு தெரியலை. DNA ரிசல்ட் வந்து கோர்ட் சொன்னாத்தான் தெரியுமாம்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்தப் பக்கம் ஒரு பெரிய(??) மனிதருக்கு சொத்தை எத்தனை பாகமா பிரிக்கணும்னு தெரியலை. DNA ரிசல்ட் வந்து கோர்ட் சொன்னாத்தான் தெரியுமாம்)//

      அதற்கப்புறமும் மேல் முறையீடு செய்வார்... :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.

      நீக்கு
  9. தன்னம்பிக்கை மனிதரையும், குறுஞ்செய்தியையும் மிக ரசித்தேன். கடைசியில் தந்திருக்கும் உணவகக் குறிப்பும் அருமை. இற்றை...? 28ஆ? தாத்தா அந்தக் காலத்தில் வேலை வெட்டி எதற்கும் போகாமல் வீட்டிலேயே இருந்திருப்பாரோ...? ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கணேஷ்ஜி. ரசிப்பிற்கு நன்றி.

      நீக்கு
  10. அவரின் தன்னம்பிக்கை நமக்கு பாடமாக... சுவையான புரூட் சாலட் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அவரின் தன்னம்பிக்கை நமக்கு பாடமாக... //

      உண்மை தான் சசிகலா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. அடாடா :) ஒரு வார்த்தையில் பதில் சொல்வதில் நீங்கள் வல்லவர்!

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஆர்.ஆர்.ஆர்.

      [ரிஷபன் சார் வலைப்பூ படித்து அங்கே இட வேண்டிய கருத்துரை எனக்கும் வந்திருந்த்து!] கட்-காப்பி-பேஸ்ட் :)

      நீக்கு
  13. தன்னுடைய இயலாமையிலும் உழைத்து வாழும் இந்த தன்னம்பிக்கை மனிதர் நிச்சயம் பாராட்டுக்கு உரியது !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.

      நீக்கு
  14. தன்னம்பிக்கை மனிதரைப் பற்றி சிலாகித்து எழுதிய நீங்க ஒரு நன்னம்பிக்கை மனிதர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி கே.பி.ஜனா சார்.

      நீக்கு
  15. எல்லாமே சுவாரசியம். தன்னம்பிக்கை மனிதருக்கு ஒரு சல்யூட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  16. பதில்கள்
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

      நீக்கு
  17. தன்னம்பிக்கை மனிதர் நிச்சயம் பாராட்டுக்குரியவர். நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  18. அனைத்துமே அருமை, பாராட்டுக்கள், வெங்கட்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  19. ஃப்ரூட் சாலட் இனித்தது, இனிக்கிறது வருகிறவை இன்னும் இனிக்கட்டும். வாழ்த்துகள்.

    விஜய்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

      நீக்கு
  20. திடகாத்திரமாக இருப்பவர்கள் சாலைகளில் கையேந்தும் நம் நாட்டில் இவரை போன்ற உழைப்பாளிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //திடகாத்திரமாக இருப்பவர்கள் சாலைகளில் கையேந்தும் நம் நாட்டில் இவரை போன்ற உழைப்பாளிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.//

      உண்மை தான் குமரன்...

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குமரன்.

      நீக்கு
  21. தன்னம்பிக்கை மனிதர்//

    நம்பிக்கையின் பரிமாணம்...

    கரும்பலகை//

    V.V.Good...

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் உறவே
    உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
    http://www.valaiyakam.com/

    முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

    5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

    உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
    http://www.valaiyakam.com/page.php?page=votetools

    நன்றி

    வலையகம்
    http://www.valaiyakam.com/

    பதிலளிநீக்கு
  23. வாக்குப் பதிவாகியிருக்கு போட்ட மறுமொழி காணோமே!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாக்கு, மறுமொழி இரண்டுமே இருக்கிறதே ஐயா. உங்களுடைய கருத்திற்கு பதிலும் தந்திருக்கிறேன்.

      தங்களது இரண்டாம் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவரே.

      நீக்கு
  24. பதில்கள்
    1. தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      நீக்கு
  25. பிரமாதம்! வேறென்ன சொல்ல?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி பந்து....

      நீக்கு
  26. ப்ரூட் சாலட்டை சுவைத்து ரசித்தேன். தன்னம்பிக்கை மனிதரைப் பற்றி அறிந்து சிலிர்த்தேன். இனிவரும் ப்ரூட் சாலட்களையும் சுவைக்கக் காத்திருக்கிறேன் ஸார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஃப்ரூட் சாலட்டை ரசித்தமைக்கு நன்றி நிரஞ்சனா. தொடர்து சுவைக்கக் காத்திருப்பதில் மகிழ்ச்சி.

      நீக்கு
  27. தன்னம்பிக்கை மனிதர் பாராட்டுக்குரியவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை மாதேவி. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  28. பொறுமை உள்ளவர்களுக்கு மட்டும் நல்ல அறிவிப்பு..

    நானும் ஒருமுறை ஒரு கை இல்லாத ரிக்‌ஷாகாரர் ஓட்டியதைப்பார்த்தேன்..ஆனால் இறங்கும்போது பணம் கொடுக்கும் போது தான் கவனிச்சேன்..அந்தளவுக்கு இயல்பா நடந்தார்..ம்.பாராட்டப்படவேண்டியவங்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.

      நீக்கு
  29. தன்னம்பிக்கை மனிதருக்குப் பாராட்டுகள். ‘பொறுமை மெனு’ - அழகு.

    UN-ல் பேசிய பெண்ணின் தைரியம் பாராட்டத்தக்கது. முன்பே பிரபலமான அந்த வீடியோவில், “I could be a starving child in Somalia, or a victim of war in the Middle East, or a beggar in India" என்று கேட்கும்போது வருத்தமாக இருக்கிறது. இன்னும், இந்தியாவில் பிச்சைக்காரர்கள்தான் நிறைய இருக்கிறார்கள் என்றே இந்த நாடுகளில் உள்ளவர்கள் நினைக்கிறார்களே!! சரி... வருந்தி என்ன செய்ய? உண்மையும் அநேகமாக அப்படித்தானே... 1992- 2012 ஆகியும் பணக்காரர்கள் அதிகமானாலும், பிச்சைக்காரர்களுக்குக் குறைவில்லையே... :-(((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //“I could be a starving child in Somalia, or a victim of war in the Middle East, or a beggar in India" என்று கேட்கும்போது வருத்தமாக இருக்கிறது. //

      இந்தக் காணொளியைப் பார்க்கும்போது எனக்கும் அதே உணர்வு தான். இந்தியாவினைப் பற்றி பெரும்பாலான வெளிநாட்டவர்களின் மதிப்பீடு இவ்வளவு தான்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா.

      நீக்கு
  30. தன்னம்பிக்கை மனிதர் மனம் கவர்ந்தார். அவருக்கு வாழ்த்துக்கள்.

    கையில்லாமல் இருந்தும் உழைத்து உண்பது பாராட்டபட வேண்டியது.


    ஊனம் என்று பொய் சொல்லி பிச்சை வாங்குவதை என்ன சொல்வது.
    வெளி நாட்டவர் பார்க்கும் ரயில் நிலையங்கள், சிக்னலில் எல்லாம், மக்கள் பிச்சை எடுப்பதை பார்த்தால் அவர்கள் வேறு என்ன் சொல்வார்கள்!

    பொறுமை உள்ளவர்களுக்கு அறிவிப்பு நன்றாக இருக்கிறது.
    ஒட்டலில் உணவு உண்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது, பேர் கொடுத்து விட்டு காத்து இருக்க வேண்டி உள்ளது அது தான் இந்த விள்ம்பரம் போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஒட்டலில் உணவு உண்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது, பேர் கொடுத்து விட்டு காத்து இருக்க வேண்டி உள்ளது அது தான் இந்த விள்ம்பரம் போலும்.//

      கணவன் - மனைவி இரண்டு பேரும் வேலைக்குப் போகும் பல வீடுகளில் வெளியே வாங்குவது வழக்கமாகிவிட்டது தில்லி போன்ற பெருநகரங்களில்...

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....