ஞாயிறு, 29 ஜூலை, 2012

வெயிலுக்கு இதமாய்....

2010 -ஆம் ஆண்டு வெளியான தனது "The Sunset Club" என்ற புத்தகத்தில் ”நரகம் எப்படி இருக்குமெனத் தெரிந்து கொள்ள வேண்டுமா?  ஜூன் மாதத்தில் தில்லிக்கு வாருங்கள் - நரகத்தினை நேரில் காண முடியும்” என திரு குஷ்வந்த் சிங் எழுதியிருப்பார்.  அவர் வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை.  அப்படி ஒரு வெயில் தில்லியில்.  ஜூன் மாதம் மட்டுமல்ல ஜூலை - ஆகஸ்ட் - செப்டம்பர் வரை தில்லியும் நரகமும் ஒன்று தான்.  

சரி புகைப்படங்கள் என்று சொல்லி விட்டு படம் போடாததால் “படப் பொட்டி வந்துடுச்சா?ன்னு யாரும் கேட்டுடப் போறாங்க! 

அப்புத்தகம் வெளியான அதே 2010 - ல் அண்டார்டிகாவில் எடுக்கப்பட்ட சில படங்கள் மின்னஞ்சலில் வந்தன.  அவற்றை வெயிலுக்கு இதமாய் இங்கே பகிர்ந்திருக்கிறேன்.  

உறைந்து போன பனி எப்படியெல்லாம் வித்தை காட்டுகிறது.... நீலச் சேலை கட்டிக்கொண்ட சமுத்திரப் பெண் இங்கே உறைந்து கிடக்கிறாள் - என்ன கவலையோ! 







அடுத்த ஞாயிறன்று வேறு சில புகைப்படங்களோடு சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

ஒரு விண்ணப்பம்:  அடுத்த பயணம் சென்றிருப்பதால், நண்பர்கள் இப்பகிர்வினை தமிழ்மணம், மற்ற திரட்டிகளில் இணைத்து விடுங்களேன், ப்ளீஸ்...  :)  பயணம் எங்கே எனக் கேட்போருக்கு, நிச்சயம் பதிவுகள் உண்டு... அதுவரை சஸ்பென்ஸ்...  :))



52 கருத்துகள்:

  1. இங்கேயும் இப்படித்தான். வெயில் கொளுத்துகிறது...
    இந்தப் படங்களைப் பார்த்து திருப்தி கொள்ள வேண்டியது தான்.
    தமிழ் மணத்தில் இணைத்து விட்டேன்.
    பகிர்வுக்கு நன்றி.
    (த.ம. 1)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

      தமிழ்மணத்தில் இணைத்ததற்கு மனமார்ந்த நன்றி.

      நீக்கு
  2. இப்ப டில்லியில் வெய்யிலா? மும்பையில் நல்ல மழைகாலம் இன்னும் 3 மாசத்துக்கு. படங்கள் பார்த்தாலே குளிரடிக்குது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு மழை. இங்கே இப்போது தான் மழை பெய்யலாமா என யோசிக்கிறது போல்!

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

      நீக்கு
  3. அடுத்த பயணத்திற்கு நாங்களும் ஆயத்தமாகிறோம் சீக்கிரம் வாருங்கள்

    உங்கள் விரயுப்பதை எதிர்பார்த்து ஒரு பதிவு ... படித்து உங்கள் உங்கள் விருப்பம் கூறுங்கள்
    http://seenuguru.blogspot.in/2012/07/blog-post_27.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி சீனு.

      உங்கள் பக்கமும் வருகிறேன்...

      நீக்கு
  4. இய‌ற்கை தேர்ந்த‌ ஓவிய‌க்கார‌னாகியிருக்கிற‌து இத்த‌ருண‌ங்க‌ளில்... விய‌ப்பின் எல்லையில் விழிக‌ள் விரிகின்ற‌ன‌ ச‌கோ... ந‌ன்றி! பார்க்க‌த் த‌ந்த‌மைக்கு!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இய‌ற்கை தேர்ந்த‌ ஓவிய‌க்கார‌னாகியிருக்கிற‌து//

      இயற்கையை விஞ்சிய ஓவியர் யார்?

      தங்களது வருகைக்கும் சுவையான கருத்துரைக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

      நீக்கு
  5. இயற்கையின் அற்புதங்கள் வியக்க வைக்குது..

    அடுத்த பயணமா!!.. சுவாரஸ்யமான இடுகைகளுக்காக வெயிட்டிங் :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த பயணம் இனிதே முடிந்தது... சில நாட்களில் வெளியிடுகிறேன்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

      நீக்கு
  6. ஜூலை - ஆகஸ்ட் - செப்டம்பர் வரை தில்லியும் நரகமும் ஒன்று தான். //

    :((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பதிவில் தங்களது இரண்டாம் வருகைக்கு நன்றி நிலாமகள்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கவி அழகன்.

      நீக்கு
  8. படங்கள் எல்லாம் அழகு.
    பகிர்வுக்கு நன்றி.
    பயணமா! அதுதான் என் போன பதிவில் உங்களை காணவில்லை.
    அருமையான பயணக் கட்டுரை கிடைக்க போகிறது.
    காத்து இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பயணமா! அதுதான் என் போன பதிவில் உங்களை காணவில்லை.//

      ஆமாம்மா. இரண்டு நாட்கள் வலையுலகம் பக்கமே வரவில்லை. இரண்டொரு நாட்களில் விடுபட்ட எல்லாவற்றையும் படித்து விடுகிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  9. வெயிலுக்கு இதமாய்
    சில்லென்று ஒரு பதிவு..
    நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

      நீக்கு
  10. அருமையான பகிர்வு நாள்ல நேரத்தில் பகிர்ந்துள்ளீகள்.
    இதைப் பார்த்தவுடன் குளிர்ச்சியாய் இரண்டு வரியிலேனும் எதோ பாடச் சொல்கிறது கொளுத்தும் வெய்யிலில் ஓர் குளிர் மலை அருமை!......தொடர வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

      நீக்கு
  11. டெல்லியில் அம்பூட்டு வெய்யிலா?! தற்சமயம் தமிழகத்தில் மதுரையில் மட்டுமே நூறைத் தாண்டி கொளுத்துகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இம்புட்டு அம்புட்டு இல்லீங்கோ.. புழுங்கித்தள்ற கொளுத்தற வெய்யில்...

      தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  12. சக்கஸ் இன்டலியில் இணைத்துவிட்டாயிற்று!

    பதிலளிநீக்கு
  13. தமிழ் மனத்தில் முன்பே நண்பர்கள் இணைத்து ஓட்டும் அளித்திருக்கிறார்கள்! என் பங்கிற்கு என்ன செய்யவேண்டுமோ அதை செய்தாயிற்று! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி வரலாற்று சுவடுகள்.

      நீக்கு
  14. தமிழ்10 இன்று எனக்கு திறக்கவில்லை :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லை நண்பரே..

      தங்களது முயற்சிக்கு மிக்க நன்றி வரலாற்று சுவடுகள்.

      நீக்கு
  15. பனி மலைகள் குளிரவைக்கின்றன.

    பயணம் படிக்க .......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  16. அடிக்கும் வெயிலுக்கு பனிக்கட்டி படங்கள் இதமாக இருக்கிறது...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ.

      நீக்கு
  17. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி.

      நீக்கு
  18. ஐயோ.......... நாங்கள் இங்கே அண்டார்டிக் பக்கம் இருப்பதால் குளிரில் நடுங்கிக்கொண்டு இருக்கோம். பல்லைக் கடிக்கணும். இன்னும் ஒரு மாசம் குளிர்காலம் பாக்கி இருக்கு:(

    குஷ்வந்த சிங் சொன்னது லட்சம் சதம் உண்மை.

    ஒரு ஜூன் மாதம் வெட்டிங் அனிவர்ஸரி கொண்டாட டெல்லி வந்துட்டுப் பட்டது மனதில் பசுமை!

    பயணம் சிறக்க வாழ்த்து(க்)கள். பதிவுலக நண்பர்களைச் சந்தித்தால் எங்கள் அன்பைச் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குஷ்வந்த சிங் சொன்னது லட்சம் சதம் உண்மை.

      ஒரு ஜூன் மாதம் வெட்டிங் அனிவர்ஸரி கொண்டாட டெல்லி வந்துட்டுப் பட்டது மனதில் பசுமை!//

      அடடா நீங்களும் அனுபவித்து இருக்கீங்க தில்லியை...

      //பயணம் சிறக்க வாழ்த்து(க்)கள். பதிவுலக நண்பர்களைச் சந்தித்தால் எங்கள் அன்பைச் சொல்லுங்கள்.//

      சிறப்பாகவே இருந்தது பயணம். நான் சென்ற இடத்தில் தமிழ்ப் பதிவர்கள் இருப்பதாய் தெரியவில்லை...:)

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  19. ஜூன் மாதம் மட்டுமல்ல ஜூலை - ஆகஸ்ட் - செப்டம்பர் வரை தில்லியும் நரகமும் ஒன்று தான்.

    உண்மைதான் ..

    படங்கள் ரசிக்கவைத்தன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி.

      நீக்கு
  20. நீங்கள் படம் போட்ட முஹூர்த்தம், தில்லி குளு குளுன்னு ஆயிடுச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட ஆமா அண்ணாச்சி.. நம்ம காட்டுல மழை தான் போங்க!

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்].

      நீக்கு
  21. இயற்கை தந்த ஐஸ்கிரீம் பார்க்கப் பார்க்க திகட்டவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இயற்கை தந்த ஐஸ்கிரீம்//

      நல்ல கற்பனை....

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  22. அன்பு நண்பரே

    படங்கள் அருமை. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி

    விஜய்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் உற்சாகம் தரும் கருத்துரைக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

      நீக்கு
  23. மே, ஜூன், ஆகஸ்ட், செப்டெம்பர், அக்டோபர்னு பல மாதங்களின் பருவ நிலைகளையும் டெல்லியில் பார்த்திருக்கேன். அங்கே எனக்குப் பிடித்தது என்றால் பழைய மரங்களை வெட்டாமல் சுற்றியும் திண்ணை போல் கட்டி உட்கார வசதியாகத் தெரு ஓரங்களில் காணப்படும். இப்போல்லாம் மரங்கள் இருக்கானு தெரியலை. பார்த்து ஐந்தாறு வருஷங்கள் ஆச்சு.

    அன்டார்டிகா படங்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல மரங்களை வெட்டி வீழ்த்தி விட்டார்கள். புது தில்லி ஏரியாவில் மட்டும் இன்னும் பல மரங்கள் இருக்கின்றன. சில சாலைகளில் உட்கார வசதியாக சிமெண்டிலேயே இருக்கைகள் இருக்கின்றன.

      நீங்கள் பார்த்து ஐந்தாறு வருஷங்கள் ஆகிவிட்டனவே. நிறைய மாற்றங்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  24. அது என்னமோ கமென்ட் உடனே போகாமல் எரர்னு சொல்லுது போயிருக்கா, இல்லையானு தெரியலை. :((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா.... சில சமயங்களில் இந்த பிளாக்கர் என்னமோ பிரச்சனை பண்ணுது. கமெண்ட் மாடரேஷன் வைத்திருப்பதால் நம்ம போட்ட கமெண்ட் சேர்ந்துச்சா இல்லையான்னு தெரிவதில்லை... :(

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....