புதன், 25 ஜூலை, 2012

[B]பான்கே [B]பீஹாரிஜி!
ஒரு ஞாயிறன்று தில்லியின் இர்வின் சாலை பிள்ளையார் கோவிலில் ஒரு நிகழ்ச்சியில் இனிய பாடல்களைக் கேட்டு, மதிய உணவை  உட்கொண்டிருந்தபோது அலைபேசியில் ஒரு அழைப்பு - அலுவலக நண்பரிடமிருந்து – “பீஹாரிஜி தர்ஷன் கே லியே சலேன்?” என்று.   பிருந்தாவன பீஹாரியே அழைத்தது போல் தோன்றவே உடனே சரியெனச் சொல்லி, வீட்டிற்கு வந்து தயாராகி தில்லி மெட்ரோவில் மால்வியா நகர் சென்று நண்பரின் வீட்டை அடைந்தேன். 

மாலை மூன்றரை மணிக்கு நண்பரின் டாடா இண்டிகா மான்சா வாகனத்தில் ஐந்து பேராகக் கிளம்பினோம்.  வழியில் தேவைக்கென தண்ணீர், குளிர்பானங்கள், தின்பண்டங்கள் வாங்கிக் கொண்டு பயணம் இனிதே துவங்கியது.  தில்லியிலிருந்து மதுரா – ஆக்ரா செல்லும் வழியில் 130 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இடம் விருந்தாவன்.  மிதமான வேகத்தில் சென்றால் இரண்டு-இரண்டரை மணி நேரத்தில் சென்றுவிடலாம். 

விருந்தாவன் கோவிலிலுள்ள பாங்கே பீஹாரியின் அழகிய கருப்பு வண்ணச் சிலை, க்ருஷ்ணர் – ராதாவாலேயே ஸ்வாமி குருதாஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.  ஸ்வாமி ஹரிதாஸ் [அக்பரின் நவரத்தினங்களில் ஒருவரான தான்சேன்-இன் குரு] உத்திர பிரதேசத்தின் அலிகார் நகரின் அருகிலுள்ள ஹரிதாஸ்பூர் கிராமத்தில் பிறந்தவர். 

இவரை  லலிதா சக்தியின் அவதாரம் எனவும் சொல்கின்றனர்.  பிறந்ததிலிருந்தே பகவானின் புகழ் பாடும் பாடல்களிலும் தியானத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.  தகுந்த வயதில் ஹரிமாதி என்ற யுவதியுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது.  ஆனாலும் ஹரிதாஸ் உலக நியதிகளில் ஈடுபாடில்லாமல், தியானத்திலும், ராதா-கிருஷ்ணனின் பக்தியிலும் திளைத்திருந்தார்.  கணவரின் உள்ளத்தினை புரிந்து கொண்ட ஹரிமாதியும் பக்தியுடன் பிரார்த்த்னை செய்து ஒரு சிறிய விளக்கில் உட்புகுந்து ஆன்மா – உடல் இரண்டோடு கண்ணன் திருவடி அடைந்தாள்.  இந்த நிகழ்விற்குப் பிறகு ஹரிதாஸ்-உம் விருந்தாவன் வந்து சேர்ந்தார்.

அடர்ந்த காடாயிருந்த விருந்தாவனத்தின் ஒரு பகுதியான நிதிவனத்தினுள் இருக்கும் ஒரு சோலையில் தங்கி இசைப் பயிற்சி செய்து கண்ணனின் புகழ் பாடும் பல பாடல்களை இயற்றிப் பாடியும், தியானம் செய்தும் கண்ணனின் நாமத்தினைச் சொல்வதிலேயே காலம் போக்கினார்.  நிதிவனத்தின் சோலையில் தங்கியிருந்தாலும் ராதா-கிருஷ்ணரின் அருகாமையிலே இருப்பதாகத் தான் உணர்ந்தார்.

விருந்தாவனத்தில் இருந்த அவரது சில சிஷ்யர்கள், இந்தச் சோலையில் அப்படி என்னதான் குருவிற்குத் தெரிகிறது என சோலைக்குள் வந்து பார்த்தபோது, கண்ணைப் பறிக்கும் பிரகாசமான ஒளி சோலையெங்கும் பரவியிருப்பதைக் கண்டனர்.  அவர்களது நிலையறிந்த ஹரிதாஸ்-உம் இறைவனை வேண்ட, கண்ணனும் ராதாவும் அனைவருக்கும் அழகிய தோற்றத்தோடு காட்சி அளித்தனர்.  அனைவரும் கண் சிமிட்ட மறந்து பார்த்துக் கொண்டிருந்தனராம். 

அத்தகைய அழகான ராதா-கிருஷ்ணரை இழக்க விரும்பாத சிஷ்யர்கள், ஹரிதாஸை வேண்ட ஹரிதாஸும் ராதா-கிருஷ்ணரை ஒரே உருவமாகக் காண்பிக்க வேண்டவே, இருண்ட மேகமும், கண்ணைப் பறிக்கும் மின்னலும் சேர்ந்தாற்போல ஒரு அழகிய சிலையாக வடிவம் கொண்டனர் ராதையும் கிருஷ்ணரும்.  அந்த சிலைதான் இன்றளவும் விருந்தாவனத்தில் உள்ள பாங்கே பீஹாரிஜி!

பாங்கே என்றால் ”மூன்று இடங்களில் வளைந்த” என்றும், “பீஹாரி” என்றால் ’”மிக உயர்ந்த களிகாரன்” என்றும் பொருள்.  இந்த பாங்கே பீஹாரியின் அழகினைக் காண கண்கோடி வேண்டும்.  அவரின் அழகை, நமது கண்களால் தொடர்ந்து பருகினால் நிச்சயம் தன்னிலை இழந்து விடுவோமென சில நிமிடங்களுக்கொருமுறை திரையிட்டு மறைத்து மீண்டும் திறப்பார்கள். நாங்கள் சென்ற அன்று பக்தர்களின் கூட்டம் அளவுக்கதிகமாக இருந்தது.  அடிக்கும் வெய்யிலுக்கு இதமாய் பூக்கள் – இலைகள் கொண்டு அலங்கரித்த மாலைகளுக்கு இடையேயிருந்து தண்ணீரை தூவாலைகளாக தெளித்துக் கொண்டிருந்தது ஒரு சிறிய குழாய்.  10 நிமிடத்திற்கு மேல் நிம்மதியாக தரிசனம் செய்து வெளியே வந்தோம்.  கோஸ்வாமி என்றழைக்கப்படும் பூஜாரியிடம் பேச்சுக் கொடுத்த போது பீஹாரிஜியின் புகழ் பாடினார்.  தினமும் காலையில் பீஹாரிஜியைக் கையில் எடுத்து அவரை நீராட்டும்போது எடுப்பவர் சிறுவராய் இருந்தால் குறைவான எடையுடனும், பெரியவராய் இருந்தால் சாதாரண எடையுடனும் தன்னை மாற்றிக் கொள்வார் பீஹாரிஜி என்றும் சொன்னபோது மனதில் மகிழ்ச்சி.

இங்கே இன்னுமோர் விசேஷம். கோவிலில் ஆரத்தி இருந்தாலும் மணி அடிப்பதே கிடையாது.  இறைவனை அதிர்ச்சியூட்ட விரும்பாத ஹரிதாஸ் அவர்களின் ஏற்பாடு இது.  இன்றும் தொடர்கிறது.  இங்கே நடக்கும் ”சப்பன் போக்” வழிபாடு மிகவும் பிரபலம்.  பாங்கே பீஹாரிஜிக்கு 56 வகையான உணவு வகைகளைப் படைக்கும் பழக்கமிது.  பக்தர்களின் கூட்டத்தில் கூட்டமாக நானும் நண்பர்களும் பாங்கே பீஹாரிஜியை தரிசித்து மனதில் சொல்லொணா அமைதியுடன் வெளிவந்தோம். 

ஒரேயொரு குறை என்னவென்றால், உத்திரப் பிரதேசத்தின் எல்லா இடங்களைப் போலவே இந்த ஊரையும் அழுக்காகவே வைத்திருக்கிறார்கள். அழகிய சுத்தமான சாலைகள், தண்ணீர் வசதி, வரும் பக்தர்களுக்கான கழிவறை வசதி என எந்த முன்னேற்றமும் இல்லை. ஆங்காங்கே இருக்கும் தனியார் வாகன நிறுத்தங்களைத் தாண்டும்போது அப்படி ஒரு நாற்றம்!  அவற்றை எல்லாம் மாற்றத்தானோ என்னமோ தெரியவில்லை, ஊரில் நிறைய வாசனை திரவியங்கள் விற்கும் கடைகள்! மூத்திர நாற்றமும் அத்தரின் வாசனையும் ஒரு சேர கமழ்கிறது!

பாங்கே பீஹாரியின் திவ்யமான தரிசனம் கண்டு, விருந்தாவனத்தின் புகழ்பெற்ற ”பேடா” [PEDA] எனும் பாலில் செய்யப்படும் ஒரு இனிப்பினை “ப்ரிஜ்வாசி” எனும் பிரபல உணவகத்தில் வாங்கிக் கொண்டு ஒன்பது மணிக்கு விருந்தாவனத்திலிருந்து, பாங்கே பீஹாரிஜியின் இனிய நினைவுகளோடு கிளம்பினோம்.  வரும் வழியில் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு நண்பர் என்னை வீட்டின் அருகே விட்டபோது மணி 12.30.  இனிய நினைவுகளோடு கூட்டையடைந்து, அடுத்த நாள் காலை பறவைகளின் ஒலிகேட்டு எழத் தயாராக உறங்கிப்போனது இந்தக் கூண்டுப் பறவையும்!

”பாங்கே பீஹாரி லால் கி ஜெய்!”

மீண்டும் சந்திப்போம்.

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

58 கருத்துகள்:

 1. தினமும் காலையில் பீஹாரிஜியைக் கையில் எடுத்து அவரை நீராட்டும்போது எடுப்பவர் சிறுவராய் இருந்தால் குறைவான எடையுடனும், பெரியவராய் இருந்தால் சாதாரண எடையுடனும் தன்னை மாற்றிக் கொள்வார் பீஹாரிஜி என்றும் சொன்னபோது மனதில் மகிழ்ச்சி.

  மகிழ்ச்சிப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி.

   நீக்கு
 2. விரிவான அனுபவ பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்.

   நீக்கு
 3. அருமை! மதுவனத்தின் உள்ளே இருந்தவரைத்தான் வேற இடத்தில் கொண்டு வந்து வச்சாங்கன்னு சொல்றாங்க இல்லை?

  நாங்க போனபோது கோவில் மூடி இருந்துச்சு. சந்நிதிக்கதவைப் பார்த்துக் கும்பிட்டுட்டு வந்தோம்.

  உங்க பதிவின் வழியா இப்போ தரிசனம் கிடைச்சது.

  கோவில் அலங்காரம் ப்ரமாதம். இன்னும் மனசில் நிக்குது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோவில் திறந்திருந்தாலும் ஐந்து நிமிடங்களுக்கொரு முறை திரையை இழுத்து மூடுவார்கள். சில விநாடிகளுக்குப் பிறகு திறப்பார்கள்....

   நல்ல கோவில். கொஞ்சம் முன்னேற்றங்கள் செய்தால் நன்றாக இருக்கும்....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 4. உங்கள் பயணக்குறிப்புகளை அப்படியே நகலெடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்..வாசிப்பவரையும் அழைத்து தரிசிக்க வைத்து விடுகிறிர்கள்..அயராமல் பயணக் கதை எழுதும் உங்களுக்கு வாழ்த்துகளும் ..நன்றிகளும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் ஜி!

   //அயராமல் பயணக் கதை எழுதும் உங்களுக்கு// துளசி டீச்சர் தான் இதில் முன்னோடி!

   நீக்கு
 5. தங்களின் பயண அனுபவத்தையும், சுற்றுப்புற தகவலையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்... (த.ம. 3)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் தமிழ் மணத்தில் மூன்றாம் வாக்கிற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 6. தங்கள் தயவால் நாங்களும் தரிசித்தோம்
  படங்களுடன் பதிவு மிக மிக அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 7. அனுபவ பகிர்வு.. எங்களுக்கும் அனுபவத்தை கொடுத்துள்ளது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சங்கவி.

   நீக்கு
 8. தரிசித்த விருந்தவனையும் இறைவனையும் சிலாகித்து எழுதியுலீர்கள்... இந்தியாவில் எங்கு காணினும் குப்பை தான் போல...
  TM5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி சீனு.

   நீக்கு
 9. பாங்கே பீஹாரி லால் கி ஜெய்!”
  இப்படித்தான் சொல்ல தோன்றுகிரது பதிவு படித்ததும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

   நீக்கு
 10. விரிவான உங்களின் அனுபவங்களைப் பார்த்ததும் நானும் உஙகளுடன் கலந்து கொண்டு தரிசித்த நிறைவு கிடைத்தது. அருமை வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னுடனே கூட வந்து தரிசித்த உங்களுக்கு எனது நன்றிகள் கணேஷ்ஜி.

   நீக்கு
 11. அருமையான பதிவு, வெங்கட். எனக்கும் உங்களுடன் பீஹாரிஜியைத் தரிசனம் செய்த மாதிரி ஒரு உணர்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பால்ஹனுமான்.

   நீக்கு
 12. அடுத்த முறை டில்லி வரும் போது போகணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ நிச்சயம் சென்று வாருங்கள்.....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

   நீக்கு
 13. தகவல்களும் பகிர்வும் அருமை. நன்றி. பக்தருக்கான வசதி பல இடங்களில் சரிவரக் கவனிக்கப்படுவதே இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பக்தருக்கான வசதி பல இடங்களில் சரிவரக் கவனிக்கப்படுவதே இல்லை.//

   உண்மை....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 14. தினமும் காலையில் பீஹாரிஜியைக் கையில் எடுத்து அவரை நீராட்டும்போது எடுப்பவர் சிறுவராய் இருந்தால் குறைவான எடையுடனும், பெரியவராய் இருந்தால் சாதாரண எடையுடனும் தன்னை மாற்றிக் கொள்வார் .

  ஆச்சரியமாக இருந்தது சிறப்பான அனுபவங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையில் மிக நல்ல அனுபவங்கள் தான்....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா.

   நீக்கு
 15. கட்டுரை முழுக்க பரிச்சயமற்ற புது சொற்கள். பிருந்தாவன் தான் கேள்விப் பட்டதுண்டு விருந்தாவன். மிக்க நன்றி சகோதரா அத்தனை விவரத்திற்கும். நேரில் சென்றது போல ஒரு உணர்வு.
  நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம்.

   நீக்கு
 16. நல்லதொரு பயணப் பகிர்வு எங்களால் பார்க்க முடியாத ஏக்கத்தை உங்கள் பயண அனுபவங்கள் தீர்க்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 17. பாங்கே பீஹாரியின் அழகினைக் காண கண்கோடி வேண்டும். அவரின் அழகை, நமது கண்களால் தொடர்ந்து பருகினால் நிச்சயம் தன்னிலை இழந்து விடுவோமென சில நிமிடங்களுக்கொருமுறை திரையிட்டு மறைத்து மீண்டும் திறப்பார்கள்.

  முன்பு தரிசித்ததை நினைவுபடுத்திக் கொண்டேன் !!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!.

   நீக்கு
 18. விருந்தாவன் ராதாகிருஷ்ணர் கோவிலுக்கு இன்டிகா கார்ல கூட்டிண்டு போயிட்டு வந்ததுக்கு ரொம்ப நன்றி! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி தக்குடு.

   நீக்கு
 19. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வரலாற்று சுவடுகள்.

   நீக்கு
 20. அருமையான பகிர்வு. மகிழ்ச்சி, வெங்கட்ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 21. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஜி!

   நீக்கு
 22. ஒரு சிறு பயணம். ஒரு சிறிய பதிவு. அருமை.

  பதிலளிநீக்கு
 23. உங்கள் புண்ணியத்தில் நானே நேரில் பார்த்தது போல் பரவசம் அடைகிறேன். அந்த பிஹாரி என்னை அழைக்கும் நாளை எதிர்நோக்கி இருக்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயம் சென்று வாருங்கள்....


   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பந்து ஜி!

   நீக்கு
 24. தினமும் காலையில் பீஹாரிஜியைக் கையில் எடுத்து அவரை நீராட்டும்போது எடுப்பவர் சிறுவராய் இருந்தால் குறைவான எடையுடனும், பெரியவராய் இருந்தால் சாதாரண எடையுடனும் தன்னை
  மாற்றிக் கொள்வார் பீஹாரிஜி என்றும் சொன்னபோது மனதில் மகிழ்ச்சி//

  அட‌!

  பதிலளிநீக்கு
 25. பீஹாரியின் அழகினைக் காண கண்கோடி வேண்டும். அவரின் அழகை, நமது கண்களால் தொடர்ந்து பருகினால் நிச்சயம் தன்னிலை இழந்து விடுவோமென சில நிமிடங்களுக்கொருமுறை திரையிட்டு மறைத்து மீண்டும் திறப்பார்கள். //

  எல்லோரும் தன்னிலை இழந்து ஹரிதாஸ் சாமி மாதிரி ஆகி விட்டால் என்ன செய்வது.

  தினமும் காலையில் பீஹாரிஜியைக் கையில் எடுத்து அவரை நீராட்டும்போது எடுப்பவர் சிறுவராய் இருந்தால் குறைவான எடையுடனும், பெரியவராய் இருந்தால் சாதாரண எடையுடனும் தன்னை மாற்றிக் கொள்வார் பீஹாரிஜி என்றும் சொன்னபோது மனதில் மகிழ்ச்சி.//

  பக்தனுக்கு ஏற்ற மாதிரி கண்ணன் தன்னை மாற்றிக் கொள்வது ஆச்சிரியம்!

  இனிய நினைவுகளோடு கூட்டையடைந்து, அடுத்த நாள் காலை பறவைகளின் ஒலிகேட்டு எழத் தயாராக உறங்கிப்போனது இந்தக் கூண்டுப் பறவையும்!//

  ஆஹா! அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   மோடம் சரியாகிவிட்டது போல... :) சில சமயங்களில் இப்படித்தான் படுத்துகிறார்கள்....

   நீக்கு
 26. //பாங்கே என்றால் ”மூன்று இடங்களில் வளைந்த” என்றும், “பீஹாரி” என்றால் ’”மிக உயர்ந்த களிகாரன்” என்றும் பொருள்.//

  நல்லவேளை சொன்னீர்கள். இல்லையென்றால் பீஹாரில் இருந்து வந்த சாமின்னு நினைச்சிருப்பேன். நல்ல பக்திப் பதிவு. வாழ்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பீஹாரில் இருந்து வந்த சாமி! நல்லா கேட்டீங்க போங்க!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி! [ஈஸ்வரன்]

   நீக்கு
 27. [B]பான்கே [B]பீஹாரிஜி! ..

  தலைப்பில் இப்படி [B]..உலக ப்ளாக் வரலாற்றில் முதல் முறையாக...வெங்கட்ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // இப்படி [B]..உலக ப்ளாக் வரலாற்றில் முதல் முறையாக...வெங்கட்ஜி...//

   இல்லை நண்பரே... இதற்கு காபி ரைட் நம்ம துளசி டீச்சர்!. நான் முதலில் கூட சில பதிவுகளில் இம்முறையை பயன்படுத்தியிருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரெவெரி.

   நீக்கு
 28. தங்களின் பக்திப் பதிவினைப் படித்ததும் நிதிவனத்துள் மீண்டும் நுழைந்த பழைய அனுபவம் கிடைத்தது.அருமையான பதிவுக்கு அன்பு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ருக்மணிம்மா..

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....