எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, July 23, 2012

சுஜாதா கண்ட அன்றைய டில்லி![பட உதவி: கூகிள்]

     ”பல தினங்களுக்குப் பின் மறுபடி டில்லிக்கு வருகிறேன். விமானத்தில் உச்சந்தலையில் சொட்டையுடன் நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கும் கனவான்கள் அவர்கள் மனைவி போல் இருக்கும் ஹோஸ்டஸைக் கண்டு ஏமாற்றி கை நிறைய பிஸ்கட் அள்ளிக் கொள்கிறார்கள், ‘லாக்-அவுட்’ காரணமாக விமானம் சமயத்தில் புறப்பட்டு சமயத்தில் சேர்கிறது. பாலம் விமான நிலையம் காலியாக இருக்கிறது.  நிலையத்தை விட்டு வெளியே வரும்போது டில்லி போலீஸ் என் பெயர் கேட்கிறது. டாக்சிக்காரன் ’ஜனாப் ஜனாப்’ என்று என்னை மரியாதை செய்கிறான் [பிற்பாடு இருபது ரூபாய் கேட்கப் போகிறான்.]
 
உட்லண்ட்ஸ் ஹோட்டலில் மாலி புல்லாங்குழல் ஊத இடியாப்பத்தை அரங்கேற்றி ரூ. 4-50 சார்ஜ் பண்ணுகிறார்கள். செய்தித்தாளில் ஐந்து லட்சம் கொள்ளையடித்த இளைஞர்களைக் கைது செய்த போலீஸ்காரர்கள் மாலை அணிந்து
 சிரிக்கிறார்கள். ஒரு மனைவியைப் பதினைந்து தடவை கொன்ற டாக்டர் ஜெயின் புன்முறுவல் செய்கிறான்.
 
குளிர்
 
ஜன்பத்
 
தங்கப் பல் வெள்ளைக்காரர்கள் அலங்கரிக்கப்பட்ட குப்பைகளை வாங்குகிறார்கள். ஹிப்பிகள் கணேஷ் பீடி குடித்துக் கொண்டு ஒரு கையில் சத்ய சாய்பாபாவின் வாழ்க்கை வரலாறு மறு கையில் கட்வாலிப் பாவாடை அணிந்த வெண் பெண்ணுடன் அலைகிறார்கள். ‘பாபி’ பார்த்துவிட்டதில் ஜென்ம சாபல்யம் அடைந்து விட்ட பஞ்சாபி இளைஞர்கள் வாயில் விரல்விட்டு சப்பிக்கொண்டே நடக்கிறார்கள். நகரெங்கும் சிவப்பு அம்பர் பச்சை ஜன்சங்கத்தின் நீரூற்றுகள் சுவரொட்டிகளில் சென்ற மாத ஹீரோ காம்ரேட் ப்ரெஷ்னெவ் புன்னகைக்க முற்படுகிறார்.
 
அரசாங்கக் கட்டிடங்களில் உட்காரும் நாற்காலிகள் கூட ‘ஆப் கி மர்ஜி ஹை ஸாப்’ என்று லஞ்சம் கேட்கிறது. பைல்களைப் பிரித்துப் பார்த்தால் இளைஞர்கள் ஹௌஸ் ரெண்ட் அலவன்ஸ் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். காண்டீனில் சிவசுப்பிரமண்யமும் கன்னாவும் மசால் தோசையின் மகத்துவம் பற்றி அளவளாவுகிறார்கள். சோப்ராக்களும் ஆபீஸ் நேரத்தில் டேபிள் டென்னிஸ் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். வெளியே கடலைக்கொட்டை உரித்துத் தின்று கொண்டிருக்கிறார்கள் அல்லது ”சாண்டே கா தேலின்” மகத்துவம் பற்றியோ கிருஷ்ண பகவானின் சீர்வரிசைகள் பற்றியோ வெளியே கூட்டங்களில் கேட்கிறார்கள்.
 
சிவப்பு விளக்குக்கு டாக்ஸி தயங்கி நின்றபோது விதவிதமான கார்களும் ஆட்டோக்களும் சூழ்ந்த அந்த வினோத வரிசையின் ஊடே பதறிப் பதறி ஒரு தமிழ்ப்பெண் வருகிறாள். ஒரு கையில் குழந்தை மற்றொரு கையில் “ஈவ்னிங் நியூஸ் வாங்குங்கள் வாங்குங்கள்…” என்று ஒவ்வொரு காராக நின்று கெஞ்சிக் கெஞ்சி….
 
தில்லி மாறவில்லை…..”
 
சுஜாதா - “கணையாழியின் கடைசிப் பக்கங்கள்” ஜூலை 1973.

இன்றைய தில்லி!


[பட உதவி: கூகிள்]

பாலம் விமான நிலையத்தில் இடம் போதாமல் இப்போது புதிதாக டெர்மினல்-3 வந்துவிட்டது.  நிறைய விமானங்களும், பயணிகளும் வந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள். வெளியே ப்ரீ-பெய்ட் டாக்சிகள் வந்துவிட்டன.  ”ஜனாப்..” என்ற மரியாதையெல்லாம் போய்விட்டது.  இருபது ரூபாய்க்கு பதில் நூறுகளில் கேட்கிறார்கள்!  போலீஸ்காரர்கள் யாரையும் எதுவும் கேட்பதில்லை :)

ரூ. 4.50 விற்ற இடியாப்பம் பத்து மடங்குக்கு மேலாகிவிட்டது.  ஃப்ளூட் எல்லாம் போய் “டண்டனக்கா, டணக்குனக்கா” வந்து விட்டது.  ட்ராயர்-தொப்பி போட்ட வெள்ளைக்காரர் ட்ராயர் போட்ட வெண் பெண்ணோடு அலங்கரிக்கப்பட்ட குப்பைகளை ஜன்பத்தில் இன்னமும் வாங்கிக் கொண்டிருக்கிறார்! தோலால் செய்யப்பட்ட பாம்பு பொம்மைகளையும், தில்லி பற்றிய படங்கள் அடங்கிய புத்தகங்களையும் விற்க நிறைய பேர் அவர்கள் பின்னால் தொடர்கிறார்கள்.


[பட உதவி: கூகிள்]

 அரசு அலுவகங்களில் லஞ்சம் சிறிய அளவில் இல்லை – பெரிய அளவில் (மந்திரிகளாய் இருக்கும் அரசியல்வாதிகளே வாங்கிவிடுவதால்!) குளிர் வந்துவிட்டால் பல பார்க்குகளில் ”ஸ்வீப்” என வழங்கப்படும் சீட்டாட்டம் மணிக்கணக்கில் ஆடப்படுகிறது – வேர்க்கடலை உரித்து சாப்பிட்டுவிட்டு அதன் ஓடுகளை ஆங்காங்கே போட்டபடியே!  ”சாண்டே கா தேல்” விற்கும் ஆட்களை இன்னமும் பார்க்கமுடிகிறது – அவர்களிடம் வாங்கும் ஆட்கள் இன்னமும் இருப்பதால்….


[பட உதவி: கூகிள்]

மாலை நேரங்களில் வந்து கொண்டிருந்த பேப்பர் நின்றுவிட்டதால், பேனாக்களையும், விற்காத பழைய ஆங்கில இதழ்களையும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள் – துண்டில் குழந்தையை உடலோடு கட்டியபடி இருக்கும் பெண்கள் – தமிழ்ப்பெண்கள் மட்டுமல்ல. 

     மெட்ரோ, இயற்கை வாயுவில் ஓடும் பேருந்துகள்/ஆட்டோக்கள் என பல விஷயங்கள் மாறி இருந்தாலும், இன்னமும் மாறாத விஷயங்கள் நிறையவே…

     இரண்டாயிரத்து பன்னிரண்டு – முப்பத்தி ஒன்பது வருடங்கள் ஆகிவிட்டாலும் தில்லி இன்னமும் மாறவேயில்லை!

மீண்டும் சந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


66 comments:

 1. மெட்ரோ, இயற்கை வாயுவில் ஓடும் பேருந்துகள்/ஆட்டோக்கள் என பல விஷயங்கள் மாறி இருந்தாலும், இன்னமும் மாறாத விஷயங்கள் நிறையவ..

  அன்றும் இன்றுமாய் தில்லியை படம் பிடித்துக்காட்டிய அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி.

   Delete
 2. சுஜாதாவின் 1973ன் உரைநடை ஒரு ரெவெல்யூஷன்.அப்படி எழுதிய தமிழை அது மாதிரியே எழுது எழுதுன்னு எழுதிக் காயடித்து விட்டார்கள்.

  அதை 2012டோடு ஒப்பிட்ட பார்வை ஸ்வாரஸ்யம்.ஒரு வித்யாசமான முயற்சி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுந்தர்ஜி.

   Delete
 3. ஹ்ம்ம் சில விஷயங்கள் மாறவே மாறாது

  ReplyDelete
  Replies
  1. //ஹ்ம்ம் சில விஷயங்கள் மாறவே மாறாது// உண்மை தான்...

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கார்த்திக்.

   Delete
 4. தலைவர் எழுத்தில் எது படிக்கவும் சுவையே

  ReplyDelete
  Replies
  1. //தலைவர் எழுத்தில் எது படிக்கவும் சுவையே// ஆமாம் மோகன்.

   வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்.

   Delete
 5. அன்றும் இன்றும் அருமை.
  அன்று சுஜாதா பார்வையில் டெல்லியும் அருமை.
  இன்று வெங்கட்டின் பார்வையில் டெல்லியும் அருமை.

  எங்களுக்கு 1973 லில் திருமணம். நானும் என் கணவரும் பார்த்த முதல் படம் ”பாபி” .

  ReplyDelete
  Replies
  1. //நானும் என் கணவரும் பார்த்த முதல் படம் ”பாபி” .//

   ஓ... இப்பகிர்வு உங்கள் பழைய நினைவுகளை மீட்டி விட்டது போல....

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
  2. என் பெற்றோரின் திருமண வருடமும் 1973 தான். பாபி படம் அவர்களுக்கு மாறாக முடியாதது,

   Delete
  3. தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீனிவாஸ் கோபாலன்.

   Delete
 6. டில்லி: அன்றும் (சுஜாதா பார்வையில்) இன்றும் (உங்கள் பார்வையில்)நல்ல ஒப்பீடு!
  // வேர்க்கடலை உரித்து
  சாப்பிட்டு விட்டு
  அதன் ஓடுகளை
  ஆங்காங்கே போட்டபடியே! //
  உங்களுக்குள் சுஜாதா சொல்லும் “ஹைக்கூ” ஜப்பானியக் கவிதை வடிவம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்ரி இளங்கோ ஜி!

   Delete
 7. அப்ப இருந்த மாதிரி இப்பவும்!!!

  ஆஹா ஆஹா...... அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது தொடர் வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 8. டில்லி மட்டுமா இன்னும் பல இடங்களும் அப்படியேதான் இருக்கு

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்மா.. நிறைய இடங்கள் மாறவே இல்லை!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

   Delete
 9. தில்லியை பற்றி அழகாக சொல்லி உள்ளார் வாத்தியார்... அதை நீங்களும் ரசிக்கும் அளவில் எழுதி உள்ளீர்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சங்கவி.

   Delete
 10. சுஜாத்தாவின் தில்லி பற்றிய விதம் அழகு என்றால், இன்றைய நிலையை விவரித்த விதம் அருமை

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 11. அன்றைய டில்லியும் இன்றைய டில்லியும் comparison நன்றாக ரசிக்க முடிந்தது. தங்களின் பணி / பாணி சிறக்க வாழ்த்துக்கள்.

  விஜய் / டெல்லி

  ReplyDelete
  Replies
  1. தங்களது தொடர் வருகைக்கும் உற்சாகம் தரும் கருத்துப் பகிர்வுகளுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 12. அன்றும் இன்றுமாய் தில்லியை படம் பிடித்துக்காட்டிய அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகையும் கருத்தும் உற்சாகமூட்டியது சமுத்ரா....

   Delete
 13. தில்லி பற்றிய பார்வைகள்- படிக்க மிகுந்த சுவாரஸ்யம்! படங்கள் தேர்வு மிக அருமை!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் ஜி!

   Delete
 14. Replies
  1. ரசிப்பிற்கு நன்றி வரலாற்று சுவடுகள்.

   Delete
 15. அன்றும் இன்றும் ஆனால் மெட்ரோ, இயற்கை வாயுவில் ஓடும் பேருந்துகள்/ஆட்டோக்கள் என பல விஷயங்கள் மாறி இருந்தாலும், இன்னமும் மாறாத விஷயங்கள் நிறையவே…உண்மை தாங்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 16. அன்றும் இன்றும் ஒப்பிட்ட பார்வை அருமை. இடியாப்பபம் 4.50 என்று நீங்கள் போட்டிருப்பதை சரியா பாக்காம 450ஆ என்று அலறிட்டேன் ஒரு நிமிஸம்... சுஜாதா எழுத்தை நாலு வரி படிச்சாலும் இப்பவும் பிரமிப்புதான்.

  ReplyDelete
  Replies
  1. //சுஜாதா எழுத்தை நாலு வரி படிச்சாலும் இப்பவும் பிரமிப்புதான்.//

   எப்பவும் தான்... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   Delete
 17. மாறியவைகளும் மாறாதவைகளும் படிக்கச்சுவையாகவே;)
  பாராட்டுக்கள் வெங்கட்ஜி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி.

   Delete
 18. அன்றைய இன்றைய பார்வைகள். நல்ல பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 19. உங்கள் பார்வையில் இன்றைய டெல்லியை அறிந்து கொண்டேன். நன்றி சார் ! (த.ம. 8)
  மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   உங்கள் பக்கமும் வந்து படித்து ரசித்தேன்....

   Delete
 20. தில்லி பழசானாலும் சுஜாதா நடை பழசாகவில்லை.

  ReplyDelete
  Replies
  1. //தில்லி பழசானாலும் சுஜாதா நடை பழசாகவில்லை.//

   உண்மை.. என்றுமே பழசாகாது....

   தங்களது வருகைக்கும் சுவையான கருத்திற்கும் மிக்க நன்றி கே.பி. ஜனா ஜி!

   Delete
 21. இதனைப் படிக்கும் போது தில்லியை மட்டுமல்ல, எல்லா ஊர்களையுமே அன்றும் இன்றும் என்று ஒப்பிடத் தோன்றுகிறது. (சில நூறு நல்ல ஜனங்களைக் கொண்ட எங்கள் ஊர் உட்பட. எவ்வளவு மாற்றங்கள்.)

  ReplyDelete
  Replies
  1. உங்கள் ஊர் சென்று ஓரிரு நாட்கள் இருக்க ஆசை பத்துஜி [ஈஸ்வரன்]... பார்க்கலாம் எப்போ முடியுமென...

   வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அண்ணாச்சி.

   Delete
 22. சுஜாதாவின் டில்லியும்,வெங்கட்டின் டில்லியும்!அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஜி!

   Delete
 23. ரசனையான பதிவு. அன்றைய தில்லியை நான் முதல் முதல் பார்த்தது 76-இல். அதன் பிறகு பலமுறை பார்த்தும் மனதில் என்னவோ ஒட்டவே இல்லை. :))))))

  ReplyDelete
  Replies
  1. // நான் முதல் முதல் பார்த்தது 76-இல். அதன் பிறகு பலமுறை பார்த்தும் மனதில் என்னவோ ஒட்டவே இல்லை. :))))))//

   நிறைய பேருக்கு ஒட்டுவதில்லை! :))

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete
 24. சுஜாதாவையும் படித்தாயிற்று. அன்றைய தில்லியோடு இன்றைய தில்லியை ஒப்பிட்டு வித்தியாசமான சிந்தனையோடு நீங்கள் எழுதியுள்ளதும் ரசனையாக இருக்கிறது. அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் பகிர்வினை ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 25. வாத்தியார் அன்று சொன்ன டில்லியின் விஷயங்கள் அத்தனையும் ஒவ்வொன்றாக எடுத்து அழகாக ஒப்பீடு செய்துள்ளீர்கள் வெங்கட்ஜி... வாத்தியார் இருந்திருந்தால் ’’கற்றதும் பெற்றதும்’’ல் உங்களை மெச்சியிருப்பார்

  ReplyDelete
  Replies
  1. வாத்தியார் பதிவு போட்டாதான் வரணும்னு வைச்சுருக்கீங்களா பத்துஜி... இனிமே அப்ப வாராவாரம் ஒரு வாத்தியார் பதிவு போடணும்போல! :))

   ரொம்ப பிசி என நினைக்கிறேன். முடியும் போது நம்ம பக்கமும் வாங்க!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்மநாபன் ஜி...

   Delete
 26. அன்று சுஜாதா அவர்கள் கண்ட டெல்லியையும்
  இன்றைய நிலையைல் டெல்லியின் நிலையை
  ஒப்பிட்டுச் சொன்ன விதம் மிக மிக அருமை
  படங்களுடன் விளக்கங்களும் மிக மிக அருமை
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் அசத்திட்டீங்க ரமணிஜி....

   தங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 27. Replies
  1. தமிழ்மணம் 14-ஆம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணிஜி!

   Delete
 28. ஒரு மாறுபட்ட பதிவு சுஜாதா சொல்லும் லேட்டரல் திங்கிங் பின்பற்றி இருக்கிறீர்கள் நன்று. (அலங்காரக் குப்பை: அடடா டிபிகல் சுஜாதா டச்)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி முரளீதரன்.

   Delete
 29. Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ புதுகைத் தென்றல்.

   Delete
 30. ரெண்டு காலகட்டத்துல இருந்த நகர சூழ் நிலையும் அழகா கண் முன்னாடி தெரியர்து! தொடர்ந்து எழுதுங்கோ டில்லி அண்ணா!

  ReplyDelete
  Replies
  1. எழுதிடுவோம் தக்குடு கண்ணா....

   வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தக்குடு! எங்க ஆளையே காணோம் - பதிவு எழுத விடாம வேலை நிறைய கொடுத்துட்டாங்களா வீட்டில்... :)

   Delete
 31. அருமையான பதிவு வெங்கட் பொருத்தமான படங்களுடன்...

  ReplyDelete
 32. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி பால் ஹனுமான்.

  ReplyDelete
 33. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நூருத்தீன்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....