ஞாயிறு, 15 ஜூலை, 2012

தங்கமகள் - பொறாமை கூடாது!

தலைப்பிலேயே சொல்லிட்டேன்... கீழே இருக்கும் புகைப்படங்கள் பார்த்து பொறாமை படக்கூடாது!  ஏன்னா பொறாமை பட்டா உடம்புக்கு ஒத்துக்காது!




[அம்மணியோட எடையை விட போட்டிருக்கும் நகை எடை அதிகமா இருக்குமோ?]



[அம்மணி நகை இருக்கற எடைக்கு கீழே விழுந்துடும்னு பயந்து பிடிச்சுக்கிடுச்சோ!]


[அம்மணி, அண்ணாத்த பாவம், ஏதோ பார்த்து போட்டு கொடும்மா... ஒத்த செயினோட இருக்காரு!]


ஆரம்பத்திலேயே சொல்லிட்டேன்...  கேட்காம பொறாமை பட்டு பெருமூச்சு வாங்கிட்டிருந்தா கம்பெனி பொறுப்பு ஏத்துக்காது சொல்லிட்டேன்.  


அது சரி, இந்த அம்மணி யாரு, என்னன்னு கேட்கறீங்களா?  முத்தூட் ஃபினான்ஸ் கம்பெனிகாரங்க பொண்ணாம்.  அவங்க கல்யாண புகைப்படங்கள் மின்னஞ்சல்ல வந்தது.  சரி நாம் பெற்ற இன்பம் [காது வழியா புகை வருதேன்னு கேட்கறது யாரும்மா?...] பெறுக இவ்வையகம்னு பகிர்ந்துட்டேன்!


அடுத்த ஞாயிறு வேறு சில புகைப்படங்களோடு சந்திக்கிறேன்!  


மீண்டும் சந்திக்கும் வரை....  


நட்புடன்


வெங்கட்.
புது தில்லி.




52 கருத்துகள்:

  1. வீட்டில் பெண்களிடம் இந்தப் பதிவைக் காண்பித்தேன்
    வீடு முழுவதும் புகை மூட்டம்
    சுவாரஸ்யமான பதிவு
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வீடு முழுவதும் புகை மூட்டம்//

      அடாடா.... :(

      தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  2. பதில்கள்
    1. தமிழ்மணத்தில் இணைத்து வாக்களித்தமைக்கு மிக்க நன்றி ரமணிஜி.

      நீக்கு
  3. முத்தூட் ஃபினான்ஸ் கம்பெனிகாரங்க பொண்ணாம்.

    வாழ்க வளமுடன் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  4. ஓஹோ நகை கடை காரங்க வீட்டு பொண்ணா? ரைட்டு வார வாரம் படங்கள் போடும் ஐடியாவுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்...

      நீக்கு
  5. முத்தூட் ஃபினான்ஸ் கம்பெனிகாரங்க பொண்ணாம்.

    அப்புறம் என்ன வெங்கட், வைர மகளாயும் இருக்கலாம்.


    ”கூந்தல் உள்ள மகராசி அள்ளி முடிகிறாள்”

    இவ்வளவு கனத்தை இந்த கொடி இடை எப்படி தாங்குகிறது என்பது ஆச்சரியமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //”கூந்தல் உள்ள மகராசி அள்ளி முடிகிறாள்”//

      அதானே....

      //இவ்வளவு கனத்தை இந்த கொடி இடை எப்படி தாங்குகிறது என்பது ஆச்சரியமே!//

      இத்தனை நகை இருக்கும் மனோ தைரியத்தில் எடை தாங்குமாயிருக்கும்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  6. பதில்கள்
    1. ம்ம்....

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கார்த்திக்.

      நீக்கு
  7. உங்க தலைப்பின் பின் பாதி, இந்த விஷயத்தில் எனக்கு சரி வராது.ஏன்னா இத்தனை நகைகள் போட்டிருக்கறதை பாத்தா எனக்கு 'உவ்வே...' ஃபீல் தான் வரும். நகை பிடிக்காதுன்னு இல்ல.ஆனா அளவோட இருந்தாதான் பிடிக்கும்.மத்த படி அதன் வேலைப்பாடுகள் பிடிக்குமே தவிர அவ்வளவும் போட்டிருக்கறதை பாத்தா....

    மூணாவது ஃபோட்டோக்கு கீழே நீங்க போட்டிருக்கற வரிகளை ரசித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஏன்னா இத்தனை நகைகள் போட்டிருக்கறதை பாத்தா எனக்கு 'உவ்வே...' ஃபீல் தான் வரும்.//

      அதான்.. அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு - இங்கேயும் பொருந்துமில்லையா...

      வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  8. மாப்பிள்ளை : /// பொன் மகள் வந்தாள்.. பொருட் கோடி தந்தாள்///

    படமும் கருத்தும் சூப்பர். (த.ம. 4)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா என்ன பாடல் வரிகள்.....

      வருகைக்கும் கருத்திற்கும் தமிழ்மணம் நான்காம் வாக்கிற்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
    2. அழகான தங்கமான காட்சிப்பகிர்வுக்கு நன்றி, வெங்கட்ஜி.

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி!

      நீக்கு
  9. என் மகளிடம் காண்பித்தேன்.yuck என்று சொன்னாள்:(

    நிறைய நகை இருப்பது பிரச்சனை இல்லை. ஆனால் எல்லாத்தையும் ஒரே சமயத்தில் வாரிப்போட்டுக்கிட்டால்....... நல்லாவா இருக்கு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //என் மகளிடம் காண்பித்தேன்.yuck என்று சொன்னாள்:(//

      yuck... தான் பலருக்கு....

      //எல்லாத்தையும் ஒரே சமயத்தில் வாரிப்போட்டுக்கிட்டால்....... நல்லாவா இருக்கு?//

      :)))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  10. அந்தப் பொண்ணை நகைகளோட கடத்திடலாமான்னு எண்ணம்தான் பார்த்ததும் வந்தது. அட்ரஸ் தெரியுமா வெங்கட்...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடாடா இப்படி எல்லாம் யோசிக்கக்கூடாது... சொல்லிட்டேன். :)))

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கணேஷ்.

      நீக்கு
  11. அந்த மாப்பிள்ளைய பாத்தா தான் கொஞ்சம் பரிதாபமா இருக்கு சார் ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு.

      நீக்கு
  12. பொன் நகையை விட புன்னகையே 'மேல்' என்ற கட்சி நான்! துளசி மேடம் சொல்வது போல இவ்வளவு நகை அழகாகவா இருக்கிறது?! ஆனா பாருங்க 'Female' லோட இந்தப் பொன் நகை அந்த 'Male' லோட புன்னகையைக் கூட காணாம அடிச்சிருக்கு!!! சட்டையை இழுத்து விட்டுகிட்டு டென்ஷனா இருக்கார்!

    :)))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆனா பாருங்க 'Female' லோட இந்தப் பொன் நகை அந்த 'Male' லோட புன்னகையைக் கூட காணாம அடிச்சிருக்கு!!! சட்டையை இழுத்து விட்டுகிட்டு டென்ஷனா இருக்கார்!//

      :))

      தங்களது வருகைக்கும் சுவையான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  13. சங்ககாலத்தில் வணிகம் செய்யவந்த யவணர்கள் பெரிய மரக்கலங்களில் தங்கத்தைக் கொண்டு வந்து அதனை விலையாகத்தந்து மிளகை அள்ளிச்சென்றுள்ளனர்.அற்றைக் காலந்தொட்டே தமிழர்கள் தங்கத்துக்கு அடிமையாக இருந்திருக்கின்றனர். ஆனால் யவணர்கள் மிளகின் மருத்துவகுணம் அறிந்தே மிளகை அள்ளிச் சென்றுள்ளனர்...

    http://www.gunathamizh.com/2010/04/blog-post.html

    கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் எண்ணிப்பார்க்கவைத்தன படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அற்றைக் காலந்தொட்டே தமிழர்கள் தங்கத்துக்கு அடிமையாக இருந்திருக்கின்றனர்.... உண்மை தான் முனைவரே.

      தங்களது வருகைக்கும் நல்ல கருத்துரைக்கும் மிக்க நன்றி முனைவர் குணசீலன்.

      நீக்கு
  14. ஊஊஊஊ!!!.....இது அருவருப்பு! அளவோட தான் பிடிக்கும்....முகநூலில் இப்படி நிறைய வரும: மறுபக்கம் திருப்பி விடுவேன் பிடிக்காத சனால் போல...
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுடைய வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வேதா ஜி.

      நீக்கு
  15. ஊருசனம் நகை பூரா இங்கிட்டுதான் போயிருக்கா..
    எலேய் சின்ராசு.. எடுடா வண்டிய..
    நம்மூருலயும் ஒரு கம்பெனி ஆரம்பிக்கனு...
    பைனான்ஸ் கம்பெனி..
    கோல்ட் லோன் பைனான்ஸ் கம்பெனி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எலேய் சின்ராசு... எடுடா வண்டிய....//

      அட புதுசா கம்பெனி ஆரம்பிக்கப் போறீங்களா...

      வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதவன்.

      நீக்கு
  16. பதில்கள்
    1. ரசித்தேன் உங்கள் கருத்தினைப் பார்த்து....

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  17. ஃபினான்ஸ் கம்பெனிகாரங்க கடைகுகு வந்த நகைகளாய் இருக்குமோ?

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவரே.

      நீக்கு
  18. அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுங்றது.. இவங்களுக்கு எப்பத்தான் தெரிய போகுதோ... ரெண்டு மூணு நகையைமட்டும் போட்டிருந்தால் அந்த மணப்பெண் கொஞ்சமாவது (!) அழகாய் தெரிந்திருக்கலாம்... நீங்க என்ன நினைக்கிறீங்க வெங்கட் ஜீ (TM 10)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுங்றது.. //

      சரியா சொன்னீங்க!

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வரலாற்று சுவடுகள்....

      நீக்கு
  19. போருக்கு செல்பவர்கள் தங்கக் கவசம் அணிவது போல் உள்ளது.
    (சீ சீ! இந்தப் பழம் புளிக்கும் )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சீ சீ! இந்தப் பழம் புளிக்கும்//

      சரிதான்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளீதரன்.

      நீக்கு
  20. கேரளா நகைகள் எடை குறைவாக கையால் வளைத்தால் வளைந்து விடும்.ஆதலால் நோ பொறாமை!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட இது நல்லா இருக்கே...

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

      நீக்கு
  21. பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா...

      நீக்கு
  22. ஏன் தான் இப்படி அடுத்தவங்க வயித்தெரிச்சலை கொட்டிக்கிறாங்களோ தெரியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் [!] மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்].

      நீக்கு
  23. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.

      நீக்கு
  24. நடமாடும் நகைக்கடைபோல இருக்கின்றது. விளம்பரங்களில்தான் இப்படிஅணிவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // விளம்பரங்களில்தான் இப்படிஅணிவார்கள்.//

      உண்மை...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....