புதன், 4 ஜூலை, 2012

பயந்து ஒளிந்து கொண்ட புலிகள்


[மீண்டும் அழைத்தது மத்தியப் பிரதேசம் – பகுதி 11]


சென்ற பகுதியில் ஹரி-ஹரனை தரிசித்ததைப் பற்றி சொல்லி முடித்திருந்தேன். என்னையா இது ”புலிவேட்டை, புலி பார்க்க வனத்திற்குச் சென்றோம்” என்றெல்லாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறாயே, புலியைப் பார்த்தது பற்றி இதுவரை ஒன்றுமே சொல்லவில்லையே என்ற கேள்வியை கேட்க உங்களுக்கு இப்போது தோன்றியிருக்கலாம்! ‘நான் என்ன வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றேன்!’.  முதல் நாள் மூன்று மணி நேரம் காட்டுக்குள் சுற்றியும் ஒரு புலியைக் கூட காண முடியவில்லை. 

இரண்டாம் நாள் காலையில் சென்றது நான்கு மணி நேர வனப்பயணம். இருந்தாலும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகச் சுற்றியும் எங்களுக்கு ஒரு புலிகூட கண்ணில் தென்படவில்லை. ஆங்காங்கே வாகனத்தினை நிறுத்தி புலியின் பாதச் சுவடுகளைக் காண்பித்து இப்போது தான் புலி இந்தப் பக்கமாக சென்றிருக்கிறது என்று சொல்லும்போது ”அட என்னடா இது, நாம் வரும்போது வராம, முன்னாடியே வந்து ’கண்ணாமூச்சி ரே ரே’ விளையாடுதே இந்தப் புலிகள்’” என்று எண்ணத் தோன்றியது.

[மான் கூட்டம்]

[லங்கூர்கள்]
இருந்தாலும் மனம் தளராது பயணம் தொடர்ந்தது. எத்தனை எத்தனை மான்கள் – கூட்டம் கூட்டமாக – மனிதர்களைப் பற்றிய கவலையே இல்லாது. ஆங்காங்கே லங்கூர் வகை குரங்குகளையும் பார்க்க முடிந்தது. ஒரு இடத்தில் வாகனம் வந்து கொண்டிருந்தபோது எதிர் பக்கத்தில் வந்த இன்னொரு வாகனத்தில் எங்கள் குழுவினர் சிலர் வந்தனர். அவர்களுக்காவது  புலிகளைப் பார்க்கும் அதிர்ஷ்டம் இருந்ததா என வினவினால் – ஒரே ஒரு குட்டிப் புலியைப் பார்த்ததாகச் சொன்னார்கள். எங்கள் குழுவில் மொத்தம் 35 பேர் என்பதால் மொத்தம் 7 வாகனங்களில் தனித்தனியே பயணம் செய்தனர். ஒரே ஒரு வாகனத்தில் இருந்தவர்கள் மட்டுமே புலியைப் பார்த்திருக்கிறார்கள்.

காட்டில் 60 புலிகளுக்கு மேல் இருந்தாலும் எங்களால் பார்க்கமுடியாததன் காரணம் என்னவாக இருக்கும்? இத்தனை பெரிய பரப்பளவுள்ள காட்டில் புலிகள் ஒளிந்துகொள்ள இடமா இல்லை. ஒன்று புரிந்தது – உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் ஒரே பயணத்தில் கூட நீங்கள் புலிகளைப் பார்த்து விடலாம் – இல்லையெனில் ஒரு வாரம் முழுவதும் இருந்து தினமும் இரண்டு வனப்பயணங்கள் செய்தாலும் பார்க்க முடியாது என்பதே அது.  

வெளியே வரும்போது ஒரு பெரிய தகவல் பலகையில் வைத்திருந்த வாசகம் மேலே சொன்ன வாசகத்தினை உண்மையாக்கிற்று. என்ன வாசகம் எனக் கேட்கிறீர்களா? கீழே படியுங்க.

[நான் உங்களைப் பார்த்தேனே….  ]

என்ன சரிதானே, ”நீங்கள் பார்க்காவிட்டால் என்ன, கவலைப் படாதீர்கள், நான் உங்களைப் பார்த்து விட்டேன்” என ஒரு புலி சொல்வது போல வைத்திருந்தார்கள். இருந்தாலும், என்ன காரணமாக இருக்கும் என யோசித்து இந்தக் காட்டின் வரலாற்றினைப் படித்தேன். காரணம் புரிந்தது!

ரேவா நாட்டினை மஹாராஜா ரகுராஜ் சிங் ஜி ஜு தியோ அவர்கள் ஆண்டு வந்தார். அவருக்குப் பிறகு அவரது மகன் ரேவா நகரத்தின் ஆட்சிப் பொறுப்பினை 1880 ஆம் ஆண்டு ஏற்றார். ஆட்சியைத் திறம்பட நடத்திய அவர், மிகச்சிறந்த கல்விமானும்  கூட. படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, நாட்டை மிகச் சிறப்பாய் ஆண்டு பலருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். தொடர்ந்து 38 வருடங்கள் ரேவா நகரத்தில் நல்லாட்சி புரிந்து விட்டு 1918 ஆம் ஆண்டு காலமானார். 

அவர் நல்லாட்சி புரிந்து எவ்வளவு பிரபலமானாரோ அது போலவே வேட்டையாடுவதிலும் வல்லவராக இருந்து பிரபலம் ஆனவராம். மொத்தம் 111 புலிகளை இந்த பாந்தவ்கர் காடுகளில் வேட்டையாடியிருக்கிறார். 109 என்பது பாரம்பரியமாக இவர்களுக்கு அதிர்ஷ்ட எண்ணாம். அதை விட இரண்டு அதிகமாகவே வேட்டையாடிக் கொன்றிருக்கிறார். 

அது சரி, ”அவர் இத்தனை புலிகளை வேட்டையாடியதற்கும், உங்கள் பயணத்தின் போது புலிகள் ஓடி ஒளிந்து கொண்டதற்கும் என்ன சம்பந்தம்?” என்று தானே கேட்கிறீர்கள்? இருக்கிறது நண்பர்களே இருக்கிறது. இத்தனை நேரம் மஹாராஜா ரகுராஜ் சிங் ஜி ஜு தியோ அவர்களின் மகன் என்றுதானே சொன்னேன், அவரின் பெயரைச் சொல்லவில்லையே! அவரது பெயரில் தான் இருக்கிறது காரணம். – அவரது பெயர் மஹாராஜா வெங்கட் ராமன் சிங் ஜி ஜு தியோ! என் பெயர் வெங்கட் ராமன். 

[மஹாராஜா வெங்கட் ராமன் சிங்]  
[பட உதவி: கூகிள்]

ஆஹா ’வந்துட்டாண்டா இன்னொரு வெங்கட் ராமன், வாங்க சீக்கிரம் ஒளிந்து கொள்ளலாம், இல்லைன்னா கொண்டே புடுவான்’ என்று ஒளிந்து கொண்டன போல அவ்வளவு புலிகளும்!

மீண்டும் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

டிஸ்கி: 29.06.2012 அன்று வல்லமையில் வெளிவந்தது.


62 கருத்துகள்:

  1. காட்டை நாங்களே சுற்றி வர்ற மாதிரி இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முரளீதரன்.

      நீக்கு
  2. அது சரி. இப்பலாம் புலிதான் மனுஷன கண்டு பயப்படனும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இப்பலாம் புலிதான் மனுஷன கண்டு பயப்படனும்//

      ஆமாம்... :(

      வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கார்த்திக்.

      நீக்கு
  3. பதிவுலகப் புலியைப்பார்த்து பயந்து ஒளிந்து கொண்ட புலிகள் !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவுலகப் புலி!...

      இது கொஞ்சம் ஓவர்... தினந்தினம் பதிவு போடும் நீங்கள் தான் பதிவுலகப் புலி....

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.

      நீக்கு
  4. ஆஹா..... புலிகள் சாமி மாதிரி. கோவிலுக்குள்ளே போயும் சாமியைப் பார்க்க முடியாமப் போச்சுன்னா.... நான் பார்க்கலை அவன் பார்த்திருப்பான்னு நினைக்கிறேனே அதைப்போலவே:-)))))

    ஆமாம்.... அவுங்க காட்டுன புலிக் கால் தடம் எல்லாம் பெர்மனண்டா அங்கேயே இருக்கு போல:-))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //புலிகள் சாமி மாதிரி.//

      அதானே....

      //அவுங்க காட்டுன புலிக் கால் தடம் எல்லாம் பெர்மனண்டா அங்கேயே இருக்கு போல:-))))//

      எங்கள் குழுவில் வந்த நண்பர்கள் பார்த்திருக்கிறார்கள் ஒரு புலிக்குட்டியை... அதனால் புலித்தடம் உண்மையாக இருக்கவேண்டும்... :))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  5. ஹா ஹா ஹா பயந்து ஒளிந்து கொண்ட புலிகள் தலைப்பே அருமை. இந்த வெங்கட்டைப் பார்த்து அந்த புலிகள் ஒளிந்து கொண்டாலும் இதைப் படிக்கும் சிங்கங்கள் என்றுமே ஒளிந்து கொள்ளப் போவது இல்லை.......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இதைப் படிக்கும் சிங்கங்கள் என்றுமே ஒளிந்து கொள்ளப் போவது இல்லை.......//

      அதான் தேவை...

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு.

      நீக்கு
  6. பதிவுலகப் புலிக்குப் பயந்து காட்டுப்புலிகள் ஒளிந்து கொண்டனவோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஜி!

      நீக்கு
  7. பலவிடயங்களை அறிந்துகொள்ள முடிந்தது
    நன்றி பாஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி K.s.s.Rajh....

      நீக்கு
  8. வணக்கம் உறவே
    உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
    http://www.valaiyakam.com/

    முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

    5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

    உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
    http://www.valaiyakam.com/page.php?page=votetools

    நன்றி

    வலையகம்
    http://www.valaiyakam.com/

    பதிலளிநீக்கு
  9. வெங்கட் என்றாலே புலிகளுக்கு பயமா? கோவையிலிருந்து டில்லி வந்த ஒரு பெண் புலிக்கு மட்டும் பயமில்லை என நினைக்கிறேன் :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கோவையிலிருந்து டில்லி வந்த ஒரு பெண் புலிக்கு மட்டும் பயமில்லை என நினைக்கிறேன் :-)//

      :)) ஏன் இப்படி... :)

      வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்.

      நீக்கு
  10. //வந்துட்டாண்டா இன்னொரு வெங்கட் ராமன், வாங்க சீக்கிரம் ஒளிந்து கொள்ளலாம், இல்லைன்னா கொண்டே புடுவான்//

    வெங்கட ராமன் புலிகளுக்கு(மட்டும்) சங்கட ராமனா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வெங்கட ராமன் புலிகளுக்கு(மட்டும்) சங்கட ராமனா!//

      நல்ல வேளை ”புலிகளுக்கு மட்டும்” சேர்த்தீங்க!

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்].

      நீக்கு
  11. //”நீங்கள் பார்க்காவிட்டால் என்ன, கவலைப் படாதீர்கள், நான்

    உங்களைப் பார்த்து விட்டேன்” என ஒரு புலி ...... பதிவுலகப்புலி

    வெங்கட்ராமன் ஜி அவர்களைப் பார்த்து ஒளிந்திருக்கும்//

    நல்ல சுவாரஸ்யம் தான் ;)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவுலகப் புலி.... அட என்ன வை.கோ. ஜி. நீங்களுமா... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. அடாடா... எல்லாருக்கும் ஒரே விஷயம்தான் மனதில் படிக்கையில் தோன்றியிருக்கிறது என்பதை கீழே கமெண்ட் பகுதிக்கு வந்ததும் புரிகிறது. படிக்கையில் நானும் பதிவுலகப் புலியைப் பார்த்து நிஜப்புலி பயந்திருக்கும் என்றுதான் எண்ணி வந்தேன். ஹா... ஹா... உங்கள பயண அனுபவத்திற்கு மற்றொரு பெயர் : சுவாரஸ்யம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஹா... ஹா... உங்கள பயண அனுபவத்திற்கு மற்றொரு பெயர் : சுவாரஸ்யம்!//

      பாராட்டுகளுக்கு நன்றி கணேஷ் ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மனமார்ந்த நன்றி.

      நீக்கு
  13. காட்டை உங்க கூட சுற்றிப்பார்த்தமாதிரியே இருந்துச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

      நீக்கு
  14. புலிகளுக்கு உங்களைப் பாக்கக் கொடுத்து வைக்கலை. சுவாரஸ்யமா போயிட்டிருக்கு. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //புலிகளுக்கு உங்களைப் பாக்கக் கொடுத்து வைக்கலை.//

      கரெக்ட் நிரஞ்சனா....

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. //111 புலிகளை இந்த பாந்தவ்கர் காடுகளில் வேட்டையாடியிருக்கிறார்.//
    வீட்டுல எண் திசையில் இருந்தும் வந்த பிடுங்கலிலிருந்து (ஆமாம் virtually எட்டு திசைதான் ஏனென்றால் எட்டு மனைவிகள்) காடே கதி என்று வேட்டையாடியிருப்பார் போலிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வீட்டுல எண் திசையில் இருந்தும் வந்த பிடுங்கலிலிருந்து (ஆமாம் virtually எட்டு திசைதான் ஏனென்றால் எட்டு மனைவிகள்) காடே கதி என்று வேட்டையாடியிருப்பார் போலிருக்கிறது.//

      இருக்கலாம் சீனு...

      வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றிடா சீனு [வெங்கட ஸ்ரீனிவாசன்].

      நீக்கு
  16. ஹா ஹா ஹா ஹா கடைசிவரைக்கும் புலி கிலி ஏத்தாம போயிருச்சே....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஹா ஹா ஹா ஹா கடைசிவரைக்கும் புலி கிலி ஏத்தாம போயிருச்சே....!//

      ஆமாம் மக்கா... புலிக்கு கிலி ஏறிடுச்சு...

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மனோ.

      நீக்கு
  17. பதில்கள்
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோவி. [உங்களது முதல் வருகையோ?].

      நீக்கு
  18. ஆஹா ’வந்துட்டாண்டா இன்னொரு வெங்கட் ராமன், வாங்க சீக்கிரம் ஒளிந்து கொள்ளலாம், இல்லைன்னா கொண்டே புடுவான்’ என்று ஒளிந்து கொண்டன போல அவ்வளவு புலிகளும்!

    இந்த பதிவை அந்தப் புலி படிக்கட்டும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்த பதிவை அந்தப் புலி படிக்கட்டும் :)//

      ஆஹா இது வேறயா? :))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  19. பதில்கள்
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.

      நீக்கு
  20. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      நீக்கு
  21. அடடா இன்னும் புலி பார்க்கவில்லையா! பார்ப்போம் எப்போது பார்க்கிறார்கள் என்று.. ரசனையாக உள்ளது.
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம்.

      நீக்கு
  22. பதில்கள்
    1. புலிக்குத்தான் கிலி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

      நீக்கு
  23. சுவாரஸ்யம் குறையாமல் போயிட்டிருக்கு...தொடருங்கள் வெங்கட்ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும், தொடர் ஆதரவிற்கும் மிக்க நன்றி ரெவெரி.

      நீக்கு
  24. ’கண்ணாமூச்சி ரே ரே’ விளையாடுதே இந்தப் புலிகள்’” என்று எண்ணத் தோன்றியது.
    புலியோட கண்ணாமூச்சியா சாி சாி நல்லா தான் இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  25. முன்னைய சுற்றுலா படிக்கும்போதே தெரிந்துவிட்டது கிலி வராதென்று:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  26. அந்தக் காலத்தில் இந்த மகாராஜாக்கள் வேட்டையாடுகிறேன் என்று செய்த கூத்துகள் பற்றி முகிலின் அகம் புறம் அந்தப்புரம் புத்தகத்தில் படித்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேட்டையாடுகிறேன் என்று செய்த கூத்துகள் - உண்மை தான். எத்தனை உயிரிழப்பு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  27. இன்றுதான் படித்தேன். புலி சஸ்பென்சை. ஹா ஹா ! நல்ல நகைச்சுவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா. இன்றைய பதிவின் சுட்டி வழி இங்கே வந்து படித்து ரசித்தமைக்கு நன்றி கௌதமன் ஜி.

      நீக்கு
  28. அங்கே படிச்சுட்டு இங்கேயும் வந்து பார்த்தேன் என்ன சஸ்பென்ஸ் என்று. இஃகி,இஃகி,இஃகி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சஸ்பென்ஸ் தெரிந்து கொள்ள இங்கே வந்து படித்தமைக்கு நன்றி கீதாம்மா....

      நீக்கு
  29. ஹா ஹா ஹா ஹா அதான் புலிகள் ஓடி ஒளிந்து கொண்டனவா!!!

    நல்லாருக்கு ஜி சொன்ன விதம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொன்ன விதம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      நீக்கு
  30. உங்களைப் பார்த்த பிறகுமா என்று சொல்லத் தோன்றியது.

    நல்லா எழுதியிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  31. அது சரி... புலி வேட்டையில் என்ன வீரம் இருக்கிறது? ஆயிரம் பேர் துணைவர சில புலிகளைக் கொல்வதைவிட, தனியாகச் சென்று கொல்ல முயன்றால் பாராட்டலாம். புலித்தோல் மாதிரி மனிதத் தோல் நாட்பட உழைக்கும்படி இருந்திருந்தால், ஒருவேளை புலிக்குகைகளில் மனிதத் தோல்களைத் தொங்கவிட்டிருக்குமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆயிரம் பேர் துணைவர புலிகளைக் கொல்வதில் வீரம் ஏது? உண்மை தான். ஆனாலும் அப்படிக் கொன்ற புலிகளின் எண்ணிக்கை எத்தனை எத்தனை?

      //மனிதத் தோல்களை தொங்கவிட்டிருக்குமோ?// ஹாஹா. இருக்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....