வெள்ளி, 20 ஜூலை, 2012

ஃப்ரூட் சாலட் – 6 – ”தில்லிகை” – சொர்க்கத்தின் கதவு





இந்த வார செய்தி: தில்லி பெண்கள் இரு சக்கர வாகனங்களை ஓட்டும்போதோ, பின்னால் அமர்ந்திருக்கும்போதோ தலைக்கவசம் அணியத் தேவையில்லை என்றொரு அரசாணை இருக்கிறது.  இப்படி ஒரு ஆணை பிறப்பிக்க காரணம்  சில சமயவாதிகள் தங்களது சமயத்தினைக் காரணம் காட்டியது தான்.  ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் உயிர் போனால் போனது தானே.  பெரும்பாலான பெண்களும் தலைக்கவசம் அணிந்து கொள்ள விரும்புவதேயில்லை – தலை முடி கொட்டிவிடும், கலைந்து விடும் என சில அல்பமான காரணங்களைச் சொல்கிறார்கள்.  தலைமுடியை விட உயிர் முக்கியமல்லவா!  சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்.



கடந்த வெள்ளியன்று தில்லி உயர் நீதிமன்றம், ஜூன் 25 க்குள் இருசக்கர வாகன ஓட்டிகள் – ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றிருக்கும்  அரசாணையை மாற்றி அமைக்கச் சொன்னதைச் செய்யாததால் நீதிமன்றத்தினை அவமதிப்பு செய்ததாக தில்லி அரசாங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.  இது நல்ல விஷயம்.  ஆணோ பெண்ணோ, இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது விபத்து நடந்தால் பேரிழப்பு ஏற்படாமலிருக்க தலைக்கவசம் அணிந்து கொள்வது மிக முக்கியம்.  எல்லோருக்கும் விநாயகப் பெருமான் மாதிரி இரண்டாவது தலையா கிடைக்கும்?

இது இப்படி இருக்க, எப்படியாவது கையூட்டு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஹரியானாவின் ஹிஸ்ஸாரில் ஒரு போக்குவரத்து போலீஸ்காரர், காரில் சென்ற ஒருவருக்கு தலைக்கவசம் அணியாத குற்றத்திற்காக, அபராதம் விதித்துள்ளார்!  இது ரொம்பவே ஓவரா தெரியல?

தில்லிகை: தில்லியில் உள்ள தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் சிலர் சேர்ந்து “தில்லிகை” எனும் தில்லி இலக்கிய வட்டம் ஒன்றினை ஆரம்பித்திருக்கிறார்கள். பிரதி மாதம் இரண்டாம் சனிக்கிழமைகளில் மதியம் 03.00 மணிக்கு ராமகிருஷ்ணபுரம் செக்டார் ஒன்றில் இருக்கும் தமிழ்ச்சங்க வளாகத்தில் தில்லிகை இலக்கிய கூட்டங்கள் நடைபெறுகின்றன.   சுவையான தலைப்புகளில் மூன்று நபர்களைப் பேச அழைத்து அவர்கள் பேசிய பிறகு கேள்வி-பதிலுக்கும் நேரம் தருகிறார்கள். 



முதல் கூட்டத்திற்கும் இந்த மாதம் நடந்த ஐந்தாம் கூட்டத்திற்கும் சென்று இலக்கிய ரசம் பருகி வந்தேன்.  இந்த மாதத்தின் தலைப்பு “தமிழும் பிற இந்திய மொழி இலக்கியங்களும்”.  தமிழ் – கொங்கணி இலக்கிய உறவு” என்ற தலைப்பில் திரு இரா. தமிழ்ச்செல்வன், முனைவர் பட்ட ஆய்வாளரும், ”தமிழ்-ஹிந்தி இலக்கிய உறவு” என்ற தலைப்பில் தில்லி நண்பர், எழுத்தாளர் திரு ஷாஜஹான் அவர்களும் சுவையாகப் பேசினார்கள். பல புதிய விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. திரு ஷாஜஹான் அவர்களுடைய உரை: பகுதி 1 பகுதி 2. இவ்விலக்கிய கூட்டம் பற்றி பேராசியர் எம்.ஏ. சுசீலா எழுதிய பகிர்வு இங்கே.

இந்த வார முகப்புத்தக இற்றை: 

கோபமாய் பேசினால் குணத்தை இழப்பாய்!
வேகமாய் பேசினால் அர்த்தத்தை இழப்பாய்!
வெட்டியாய் பேசினால் வேலையை இழப்பாய்!
அதிகமாய் பேசினால் அமைதியை இழப்பாய்!
ஆணவமாய் பேசினால் அன்பை இழப்பாய்!
சிந்தித்துப் பேசினால் சிறப்போடு வாழ்வாய்!

இந்த வார குறுஞ்செய்தி: 



Friendship is like the monument Tajmahal; everybody will wonder how beautiful it is; but nobody can understand how difficult it was to build.

இந்த வாரக் காணொளி:

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் – இவருக்கு டிக்டாக்-உம் இசைக்கருவி!



படித்ததில் பிடித்தது:

ஒரு ஜென் துறவியிடம் ஒருவன்  “துறவியே! உண்மையிலேயே சொர்க்கம்-நரகம் என்பதெல்லாம் இருக்கிறதா?” என்று கேட்டான்.  “நீ என்ன வேலை செய்கிறாய்?” என்று கேட்டார் துறவி.  “நான் ஒரு படைத்தலைவன்!” என்றான் அவன்.  அர்த்தபுஷ்டியாகச் சிரித்தார் துறவி.

“உன்னை எந்த மடையன் படைத்தலைவனாக வைத்திருக்கிறான்? உன்னைப் பார்த்தால் கசாப்புக் கடைக்காரன் மாதிரி இருக்கிறது…” என்று மேலும் கேலியாகச் சிரித்தார் துறவி.  

படைத்தலைவனுக்கோ  கடும் கோபம். சடாரென்று வாளை உருவி உயர்த்தியபடி, “உன்னைக் கண்டம் துண்டமாக வெட்டி விடுவேன்” என்று கண்கள் சிவக்கக் கத்தினான்.  உடனே, “இங்கு தான் நரகத்தின் கதவுகள் திறக்கின்றன…” என்று கூறிய துறவி கேலிச்  சிரிப்பைத் தொடர்ந்தார்.

தன்னை உணர்ந்தவனாக தலை கவிழ்ந்து, “என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு திடீரென கோபம் வந்து விட்டது” என்றான் படைத்தலைவன்.  “இப்போது சொர்க்கத்தின் கதவு திறக்கிறது” என்று புன்னகையுடன் கூறிய துறவி, “சொர்க்கமும் நரகமும் ஒருவன் இறந்த விநாடியில் தோன்றுபவை அல்ல, அவை இரண்டும் இங்கேயே, இப்போதே இருக்கின்றன. ஒரு நொடிப் பொழுதிலான நம் மன ஓட்டத்தில் நன்மையோ தீமையோ உண்டாகிறது” என்றார். 

சொர்கத்தின் கதவும் நரகத்தின் கதவும் எந்த நொடியிலும் திறக்கப்படலாம்.  ஆனால் திறக்கும் கதவு எது என்பது நம்மிடமே இருக்கிறது.

மீண்டும் சந்திப்போம்!

நட்புடன்



வெங்கட்
புது தில்லி.



58 கருத்துகள்:

  1. காரில் சென்றவருக்கு தலைக்கவசம் அணியாத குற்றத்திற்காக கையூட்டா...? ஹா..ஹா..
    முகப்புத்தக இற்றை & ஜென் கதை---அருமை...
    பகிர்வுக்கு நன்றி சார்...(த.ம. 1)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

      தமிழ்மணத்தில் பகிர்வினை இணைத்து வாக்களித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

      நீக்கு
  3. சிந்தித்துப் பேசினால் சிறப்போடு வாழ்வாய்!


    புரூட் சாலட்டில் தேர்ந்தெடுத்து சேர்க்கப்பட்ட கனி வர்க்கங்கள் அனைத்தும் சிறப்பானவை ..

    பாராட்டுக்கள் கைவண்ணத்திற்கு !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது தொடர் வருகைக்கும் சுவையான கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.

      நீக்கு
  4. நல்ல விசயங்கள்..
    நட்பைப்பற்றிய வாக்கியம் மிக அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கார்த்திக்.

      நீக்கு
  6. //காரில் சென்ற ஒருவருக்கு தலைக்கவசம் அணியாத குற்றத்திற்காக, அபராதம் விதித்துள்ளார்!//

    டென் மச்சா இல்லே இருக்குது :-)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டென் மச்சே தான்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சாரல்!

      நீக்கு
  7. Fruit Salad – நல்ல சுவை. கட்டாய ஹெல்மெட் சட்டத்தை வைத்துக் கொண்டு கையில் காசு பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கட்டாய ஹெல்மெட் சட்டத்தை வைத்துக் கொண்டு கையில் காசு பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.//

      :( கொடுமை தான்....

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

      நீக்கு
  8. All parts are interesting. Fruit salad is getting better and better

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன்.

      நீக்கு
  9. ’தில்லிகை’ கூட்டத்திற்கு வர நினைத்திருந்தேன் முடியவில்லை. பேரா.சுசீலா, திரு.ஷாஜஹான் ஆகியோரின் பதிவுகளைப் படித்தேன். [உன் படம் அதில் வந்துள்ளதை இங்கே குறிப்பிடவில்லையே?].

    தலைக்கவசத்திற்கு நீதிமன்ற அவமதிப்பு தண்டனை நியாயமானதே. அரசு (தில்லி) சீக்கியர்களின் ஓட்டு வங்கியைக் கருத்தில் கொண்டு வாளாவிருக்கிறது.


    மற்ற துணுக்குகளும் ரசிக்கும் படி இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லிகை இலக்கியக் கூட்டத்திற்கு வர முடியாததற்கான காரணத்தினை இன்று பேசும்போது தெரிந்து கொண்டேன்....

      தலைக்கவசம் - நல்லது நடந்தால் சரி.

      வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிடா சீனு [வெங்கட ஸ்ரீனிவாசன்].

      நீக்கு
  10. அன்பு நண்பரே

    தங்களின் ப்ரூட் சால்ட் இனிக்கிறது. மேலும் இனிக்க வாழ்த்துகள்.

    அன்புடன்

    விஜயராகவன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

      நீக்கு
  11. யப்பா... கார்ல போனவருக்கு ஹெல்மட் இல்லன்னு அபராதமா- விட்டா நடந்து போறவங்களைக் கூட கேப்பாங்க போலருக்கே... முடியலை! இற்றையின் வாசகங்கள் மிக அருமை. கடைசியில் உள்ள கதை தெரிந்ததென்றாலும் மிக ரசிக்க முடிந்தது. மொத்தத்தில் நல்ல சுவாரஸ்யம் குறையாத பகிர்வாக ப்ரூட் சாலட்டை சுவைக்க முடிந்தது வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // மொத்தத்தில் நல்ல சுவாரஸ்யம் குறையாத பகிர்வாக ப்ரூட் சாலட்டை சுவைக்க முடிந்தது வெங்கட்.//

      மிக்க மகிழ்ச்சி கணேஷ்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

      நீக்கு
  12. தலைக்கவசம் உயிர்க் கவசம்
    சிந்தித்து பேசினால் சிறப்புடன் இருப்பாய்.

    நல்ல கருத்துக்கள் அடங்கிய சாலட் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  13. அனைத்துமே அருமை சார் ... தில்லிகை தவறாது கலந்து கொள்ளுங்கள் பெயரே அருமை... சுவை கூடியுள்ளது ஜென் கதையால்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தில்லிகை தவறாது கலந்து கொள்ளுங்கள் பெயரே அருமை... //

      ஒவ்வொரு முறையும் கலந்து கொள்ள ஆவல் தான்.. பார்க்கலாம்...

      தங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

      நீக்கு
  14. //சொர்கத்தின் கதவும் நரகத்தின் கதவும் எந்த நொடியிலும் திறக்கப்படலாம். ஆனால் திறக்கும் கதவு எது என்பது நம்மிடமே இருக்கிறது.// ;)))))

    //சிந்தித்துப் பேசினால் சிறப்போடு வாழ்வாய்!//

    ஃப்ரூட் சாலட் – 6 – ”தில்லிகை” – சொர்க்கத்தின் கதவு
    எல்லாமே சூப்பர் ..... வெங்கட்ஜி.

    பகிர்வு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ஊக்கமூட்டும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  15. தலைக்கவசம் உயிர் கவசம்...

    நல்ல தகவல்கள் பல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி சங்கவி.

      நீக்கு
  16. அந்த தலைக்கவச ஆணை, ஆணை மட்டும் காப்பாற்ற போட்டது போலும்!!
    எம் ஏசுசீலாவின் மாணவிகளில் என் மனைவியும் ஒருவர்!
    இற்றை மற்றும் குறுஞ்செய்தி இரண்டுமே அருமை.
    காணொளி அப்புறம்தான் பார்க்கணும்!
    அருமையான இந்த ஜென் கதை படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எம் ஏசுசீலாவின் மாணவிகளில் என் மனைவியும் ஒருவர்!//

      தகவலறிந்து மிக்க மகிழ்ச்சி ஸ்ரீராம்....

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  17. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆர்.ஆர்.ஆர்.

      நீக்கு
  18. சிறு திருத்தம் - தில்லித் தமிழ்ச் சங்கம் இருப்பது செக்டர் 5இல்.
    தாஜ் மகால் கட்டுவதற்கு நான் எவ்வளவு சிரமப்பட்டிருப்பேன் என்று எழுதியதற்கு நன்றி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருத்தம் சொன்னமைக்கு நன்றி. செக்டர் - 1 பேருந்து நிலையத்திற்கு எதிரில் இருப்பதால் வந்த குழப்பம்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷாஜஹான் ஜி!

      நீக்கு
  19. அனைத்தும் அருமை வெங்கட் ஜீ (TM 9)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வரலாற்று சுவடுகள்.

      நீக்கு
  20. ப்ரூட் சாலட் களை கட்டிக் கொண்டிருக்கிறது சுவாரசியமான தகவல்களுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  21. புரூட் சாலட் பலசெய்திகளுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  22. நல்ல தொகுப்பு.ஜென் கதை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  23. nalla thakavalkal!

    kathai nalla eduthu kaattu!

    neethi mantra uththaravu varaverkka ontru!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி சீனி.

      நீக்கு
  24. சிறுகதையும் நட்பைப்பற்றிய வாசகமும் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் ஜி!

      நீக்கு
  25. எல்லோருக்கும் விநாயகப் பெருமான் மாதிரி இரண்டாவது தலையா கிடைக்கும்?//

    :)


    காரில் சென்ற ஒருவருக்கு தலைக்கவசம் அணியாத குற்றத்திற்காக//

    :O

    தில்லியில் உள்ள தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் சிலர் சேர்ந்து “தில்லிகை//

    ம‌கிழ்ச்சி!

    குறுஞ்செய்தியும் முக‌ப்புத்த‌க‌ இற்றையும் 'க‌னி'வான‌ க‌ருத்து! 'ப‌டித்த‌தில் பிடித்த‌து' எங்க‌ளுக்கும்...

    மொத்த‌த்தில் ப்ரூட் சால‌டில் சேர்க்கும் ப‌ல‌வ‌கைப் ப‌ழ‌த்துண்டுக‌ளும் ப‌ல‌ருசியுட‌ன்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

      நீக்கு
  26. பதில்கள்
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முரளீதரன்.

      நீக்கு
  27. சொர்கத்தின் கதவும் நரகத்தின் கதவும் எந்த நொடியிலும் திறக்கப்படலாம். ஆனால் திறக்கும் கதவு எது என்பது நம்மிடமே இருக்கிறது.//

    உண்மை. அதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
    பழச்சுவை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.//

      உணர்ந்தால் நன்றாகத்தான் இருக்கும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  28. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி சே. குமார்.

      நீக்கு
  29. அருமை! படித்தேன்! இரசித்தேன்!நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....