வெள்ளி, 27 ஜூலை, 2012

ஃப்ரூட் சாலட் – 7 - நான் ஒரு ஏழை – அன்பு - பொக்கேஇந்த வார செய்தி:  வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் எண்ணற்ற மக்களுக்காக அரசாங்கத்தினால் தீட்டப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் சரியானவர்களைச் சென்றடைவதில்லையாம். காசு படைத்தவர்களும் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் மக்களுக்குக் கொடுக்கும் அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொண்டு நலத்திட்டங்களின் பலன்களை அடைந்து விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எப்போதுமுண்டு. இதை எப்படி தடுப்பது என்று யோசித்த மத்தியப் பிரதேசத்திலுள்ள “கண்ட்வா” மாவட்டத்தின் டாபியா கிராம நிர்வாகிகள் இதற்கு ஒரு கேவலமான தீர்வினைக் கண்டு பிடித்துள்ளார்கள்.

[பட உதவி: கூகிள்]


அது என்ன கேவலமான தீர்வு என்று கேட்பவர்கள் மேலுள்ள படத்தினைப் பாருங்கள். “நான் ஒரு ஏழை” (ஹிந்தி படிக்கத் தெரியாதவர்களுக்காக) என ஒவ்வொரு ‘வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் வீடுகளில் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அதுவும் அவர்கள் வேலைக்காக வெளியே சென்றிருக்கும் நேரத்தில் எழுதி வைத்துவிடுவார்களாம். இதனால் என்ன பலன் என்று கேட்டால், வறுமைக்கோட்டிற்கு மேலிருந்தாலும், அரசின் சலுகைகளுக்காக, தங்களை வறுமைக் கோட்டிற்குக் கீழே காட்டிக்கொள்ளும் நபர்கள் வெட்கப்பட்டு தனது அடையாள அட்டையை திருப்பிக் கொடுத்து விடுவார்களாம்! என்ன கொடுமை இது?

சிறு வயதில் பள்ளியில் படிக்கும்போது ஆர்வக் கோளாறினால் பக்கத்துப் பையன் பென்சிலை எடுத்தால், சில ஆசிரியர்கள் எடுத்த பையனது ஸ்லேட்டில் ”நான் திருடன்” என்று எழுதி பள்ளியைச் சுற்றிவரச் செய்வார்கள். எத்தனை அவமானமாக இருக்கும் அச்சிறுவனுக்கு… அதைப் போலவே தான் இதுவும். ஏழையாக பிறந்தது அவன் தவறா? செய்யும் வேலைக்குச் சரியான கூலி கிடைக்காதது அவன் பிழையா? 

டாபியா கிராமத்தில் மொத்தம் 600 வீடுகள் அதில் 237 வீட்டில் வாழ்பவர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்பவர்கள்.  அதாவது தோராயமாக ஒவ்வொரு இரண்டாவது வீட்டில் இருப்பவர் வீட்டிலும், “நான் ஒரு ஏழை” என்று எழுதப் பட்டிருக்கும்.  இது என்ன ஒரு சந்தோஷப்பட வேண்டிய அங்கீகாரமா?  ஃபோர்ப்ஸ் ஒவ்வொரு வருடமும் உலகின் பணக்காரர்கள் பட்டியல் போடும்.  அது போலவா இது?

மாவட்ட அதிகாரிகள் ‘நாங்கள் இதுபோன்ற எந்த அரசாணையும் பிறப்பிக்கவில்லை. பஞ்சாயத்து தலைவர்களே இது போன்ற ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்” எனச் சொல்கிறார்களாம்.

படித்தபோது மனதிற்கு வருத்தமாய் இருந்தது. கோடிக்கணக்கில் வெளிநாட்டில் பணம் சேர்த்து வைத்திருப்பவர்கள் இதற்கெல்லாம் என்ன செய்ய/சொல்லப் போகிறார்கள்.

இந்த வார முகப்புத்தக இற்றை:


[பட உதவி: கூகிள்]

உண்மையான அன்பிற்கு ஏமாற்ற தெரியாது… ஏமாற மட்டுமே தெரியும்.

இந்த வாரக் காணொளி:

பரீட்சையில் பிட் அடிக்க நினைப்பது தப்பு கண்ணா!இந்த வார குறுஞ்செய்தி: 

Problems are like trees.  Seen through a running train – As you approach them, they grow bigger.  Once you pass them, they grow smaller.  That is life!

படித்ததில் பிடித்தது:

”கீழ்வானம் சிவந்தது..
கூலி வேலை செய்யும்
என் தாயின் பாதங்கள்….”

[பட உதவி: கூகிள்]

”பூக்களுக்குச் சிறை…
தென்றலுக்கு தடை…
பொக்கே!”

அடுத்த ஃப்ரூட் சால்ட் - உடன் சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

60 கருத்துகள்:

 1. காணொளி.. ஆஹா.. குட்டிஸின் எக்ஸ்பிரஷன்.. சூப்பர்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   நீக்கு
 2. அருமையான காணொளி
  அன்புகொண்டவனுக்கு நிச்சயம்
  ஏமாற்றத் தெரியாதுதான்
  அருமையான சுவையான சால்ட்
  ரசித்துச் சுவைத்தோம்
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 3. பதில்கள்
  1. உண்மையான அன்பிற்கு ஏமாற்ற தெரியாது… ஏமாற மட்டுமே தெரியும்.

   அருமையான சுவையான ஃப்ரூட் சாலட் !!

   நீக்கு
  2. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி.

   நீக்கு
  3. தமிழ்மணம் இரண்டாம் வாக்கிற்கு நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 4. முதல்செய்தி படிக்க வருத்தமாக இருந்தது.

  இற்றை காணொளி குறுஞ்செய்தி படித்ததில் பிடித்தது எல்லாம் ஒன்றுகொன்று போட்டி போட்டுக் கொண்டு சூப்பர் :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொடர் வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 5. முதல் செய்தி வருத்தம் தரும் செய்தி. இந்தியா!
  குறுஞ்செய்தி, இற்றை அருமை.
  காணொளி - சிரிப்பு.
  படித்ததில் பிடித்தது எனக்கும் பிடித்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. இன்றைய ஃப்ரூட் ஸாலடில் முதல் பழம் இனிக்கலையே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பழம் கசப்பு... எப்படியெல்லாம் செய்கிறார்கள் என்பதைச் சொல்லவே பகிர்ந்தேன்.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 7. //உண்மையான அன்பிற்கு ஏமாற்ற தெரியாது…

  ஏமாற மட்டுமே தெரியும்.//

  அருமையான சுவையான ஃப்ரூட் சாலட் !! வெங்கட்ஜி. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி.

   நீக்கு
 8. பொக்கே கவிதை அழகு; வீட்டின் வெளியே போர்டு டூ மச்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டென் மச்... :(

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன்.

   நீக்கு
 9. சரியான ஆட்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு மட்டும் கொடுக்கத்தெரியல..இப்படியோசிக்கமட்டும் தான் மூளை வேலை செய்யுது.. ஆனா நம்ம ஊருகளில் ஓட்டுக்காக எல்லாரையுமே ஏழையா கணக்கிட்டு வச்சிக்குங்கன்னு வீடுக்கெ வந்துகொடுத்துடராங்க.. அவங்களுக்கு என்ன.. யாரு வீட்டு காசு..

  பதிலளிநீக்கு
 10. //சரியான ஆட்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு மட்டும் கொடுக்கத்தெரியல..இப்படியோசிக்கமட்டும் தான் மூளை வேலை செய்யுது.. //

  இதான் கொடுமையே...

  நம்ம ஊரு கதையே வேற.... காரில் வந்து இலவச டி.வி. வாங்கிக் கொண்டு சென்றவரை நான் பார்த்திருக்கிறேன்... :(

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.

  பதிலளிநீக்கு
 11. கண்ணொளி ரசித்தேன். கவிதை அருமை. நன்றி.. (த.ம. 7)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 12. இப்படியெல்லாம் எழுதி வைத்தால் பணம் குவித்து வைத்திருந்தும் ஏமாற்றுபவர்கள் திருந்துவார்கள் என நினைக்கும் இவர்களின் (மூட) நம்பிக்கையை என்னென்று சொல்வது..? இற்றையும். படித்ததில் பிடித்ததும் மனதைக் கொள்ளையிட்டது வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஏமாற்றுபவர்கள் திருந்துவார்கள் என நினைக்கும் இவர்களின் (மூட) நம்பிக்கையை என்னென்று சொல்வது..? //

   மூடநம்பிக்கை தான் இதுவும்... :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ் ஜி!

   நீக்கு
 13. படித்தபோது மனதிற்கு வருத்தமாய் இருந்தது. கோடிக்கணக்கில் வெளிநாட்டில் பணம் சேர்த்து வைத்திருப்பவர்கள் இதற்கெல்லாம் என்ன செய்ய/சொல்லப் போகிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

   நீக்கு
 14. அனைத்தும் அருமை தோழரே..நான் ஒரு ஏழை என்ற விசயத்தை கேள்விப்பட்டிருக்கிறேன்..அனைத்து அம்சங்களும் பிடித்தது..வாசித்தேன்.வாக்கிட்டேன்..நன்றி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி மதுமதி!.

   நீக்கு
 15. சுவையான ஃப்ரூட் சாலட்... சூப்பர்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பால்ஹனுமான் ஜி!

   நீக்கு
 16. //நம்ம ஊரு கதையே வேற.... காரில் வந்து இலவச டி.வி. வாங்கிக் கொண்டு சென்றவரை நான் பார்த்திருக்கிறேன்... :(//

  எங்க ஊருல இருவத்தஞ்சு பவுனு நகையைப் போட்டுக்கிட்டு இலவச டி.வி. வாங்கப் போன சிங்காரி, வீட்டுக்கு டிவியோட வந்தா. இருவத்தஞ்சு பவுனத்தான் இலவசமா வேற எவனோ அடிச்சுட்டுப் போய்ட்டான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இருவத்தஞ்சு பவுனத்தான் இலவசமா வேற எவனோ அடிச்சுட்டுப் போய்ட்டான்.//

   ஆஹா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி [ஈஸ்வரன்].

   நீக்கு
 17. sako!

  naan oru ezhai....

  mikka kevalamaana seyal!

  kavithai arumai!

  kaanoli inithaan paarkkanum!
  pakirvukku mikka nantri!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.

   நீக்கு
 18. தங்கலது பழக்கலவயை ருசித்தென் முதல் பழம் புலிப்பாய் இருந்தது இது எந்த நாட்டிலும் வருமைபட்டவன் ஒரே மாதிரியாய்தான் அவமனப்படுதப்படுஹிரான் என்பதை நினைவூட்டியது
  நன்ரி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பர் alkan!

   நீக்கு
 19. ப்ரூட் சாலட்டில் இந்தவார குறுஞ்செய்தி நல்ல சிந்தனை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   நீக்கு
 20. அருமையான காணொளி...அழகுக்கவிதை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ரெவெரி.

   நீக்கு
 21. கேவலமான சிந்தனை தன்னை தாழ்த்திக் கொள்ள எவனும் விரும்ப மாட்டான்... சாலட்டில் ஜென்னைக் காணோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை சீனு... இது கேவலமான சிந்தனை தான்...

   ஜென் [அ] கதை அடுத்த வாரத்தில்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   நீக்கு
 22. பதில்கள்
  1. வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி வரலாற்று சுவடுகள்.

   நீக்கு
 23. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கார்த்திக்.

   நீக்கு
 24. ஏழையெனும் விளம்பரம் கொடுமை. இது கூறப்பட்டது. கூறாத கொடுமைகள் உலகில் எவ்வளவு உள்ளது சகோதரா. அருள் நிறையும் பூமி வேண்டும்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //கூறாத கொடுமைகள் உலகில் எவ்வளவு உள்ளது சகோதரா... //

   உண்மை....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!

   நீக்கு
 25. அனைத்து செய்திக‌ளுமே அத‌ன‌த‌ன் சுவையோடு... முத‌ல் செய்தி... நேந்திர‌ம்ப‌ழ‌த்தில் மிள‌குத்தூள் உப்புத் தூள் சேர்த்து சாப்பிடுவ‌து போல‌... (கொய்யா கூட‌ அப்ப‌டிச் சாப்பிட‌லாம் ஆதி)

  பிற‌வெல்லாம் நேந்திர‌ம் பழ‌த்தை ஆவியில் வேக‌ வைத்து ந‌றுக்கி நெய்யில் பொறித்து ச‌ர்க்க‌ரை தூவிச் சாப்பிடுவ‌தைப் போல‌...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நிலாமகள். பதிவு எழுதியது நான்... குறிப்பு ஆதிக்கா? :)

   நீக்கு
 26. இது கூட பரவாயில்லை வெங்கட், கர்நாடகாவில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் (Right to Education) தனியார் பள்ளியில் இலவசக் கல்வி அளிக்கப்படும் குழந்தைகளின் தலைமுடி முன் பக்கம் (தனியாக அடையாளம் காட்டப்பட) சிரைக்கப்பட்டுள்ளது. இதுவரை அரசும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. பாவம் அரசு என்னதான் செய்யும், அங்கு மாதத்திற்கு ஒரு முதல்வரை மாற்ற வேண்டியிருக்கிறதே!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //தனியார் பள்ளியில் இலவசக் கல்வி அளிக்கப்படும் குழந்தைகளின் தலைமுடி முன் பக்கம் (தனியாக அடையாளம் காட்டப்பட) சிரைக்கப்பட்டுள்ளது. //

   என்ன கொடுமை இது....

   வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு [வெங்கட ஸ்ரீனிவாசன்]

   நீக்கு
 27. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ புதுகைத் தென்றல்.

   நீக்கு
 28. அன்பு நண்பரே

  ப்ரூட் சால்ட் எப்போதும் இனிக்காது என்பது புரிகிறது.
  இந்த வாரக் காணொளி, இந்த வார குறுஞ்செய்தி மற்றும்
  படித்ததில் பிடித்தது அருமை.தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்

  விஜய்

  விஜய்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது தொடர் வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   நீக்கு
 29. இந்த பதிவை-
  வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்!

  வருகை தாருங்கள்!
  தலைப்பு ; படித்தவர்கள்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வலைச்சரத்தில் என்னை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி சீனி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....