எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, July 11, 2012

பழங்குடியினரின் வீடுகள் – குருவாகி கிராமம்.


[மீண்டும் அழைத்தது மத்தியப் பிரதேசம் – பகுதி 12]வனப் பயணத்தில் புலிகளைப் பார்க்க முடியாததில் வருத்தம் உண்டென்றாலும், மற்ற விலங்குகளையும் பறவைகளையும் கண்ணாரக் காண முடிந்ததில் மகிழ்ச்சி தான். கானகத்திற்குள் பார்த்த இன்னொரு விஷயத்தினைச் சொல்ல மறந்து விட்டேன். அங்கே ஒரு சிறிய குளம் இருந்தது. அதன் பெயர் “லால் தலாப்”!  ஹிந்தியில் லால் என்றால் சிகப்பு, தலாப் என்றால் குளம். ஏன் அதற்கு அந்த பெயர்? அந்தக் குளத்தின் தண்ணீரே சிகப்பு தான்! புகைப்படத்தில் பாருங்களேன்.

லால் தலாப்

புலிகள் மனிதர்களுக்குச் சொன்ன செய்தியை பலகை மூலம் படித்து விட்டு தங்குமிடம் வந்தோம். முன்னொரு பகுதியில் சொன்னது போல நாங்கள் தங்கியிருந்தது மத்தியப் பிரதேசச் சுற்றுலாத் துறையின் ”White Tiger Forest Lodge” என்ற இடத்தில். அங்கே மதிய உணவு உண்டுவிட்டு அடுத்த இலக்கை நோக்கி பயணம் செய்ய வேண்டும். அதற்கு முன் தங்கும் விடுதியின் கட்டணங்கள் பற்றி சொல்லி விட்டால் அங்கு செல்லும் உங்களில் சிலருக்கு உதவும்.  

தங்கும் விடுதியின் வரவேற்பறை…

நான் தங்கிய அறை

இந்த தங்குமிடத்திற்கு இணையத்தின் மூலம் நீங்கள் முன்பதிவு செய்து கொள்ள முடியும். 26 AC அறைகளும், 12 ஏர் கூலர் பொருத்திய அறைகளும் ஆக மொத்தம் 38 அறைகள் இருக்கின்றன.  கட்டணங்கள் சற்றே அதிகம் எனத் தோன்றினாலும் இயற்கையான சூழலில் அமைதியாக இருப்பதால் பரவாயில்லை எனத் தோன்றுகிறது. விவரம் கீழே:-

Category
No. of Rooms
Tarrif [In Rs.]
Single
Double
Extra Bed
AC
26
4090
4690
1490
Air Cooled
12
3090
3690
1290


இந்த இடத்தினை தொடர்பு கொள்ள:Telfax : 07627-265366, 07627-265406 
E-mail : wtfl@mptourism.com.  சரி தகவல்கள் கொடுத்தாயிற்று.

[சாலை அமைக்கும் பணியில்]

அடுத்தது என்ன என்றால், பழங்குடி மக்கள் வாழும் ஒரு கிராமத்திற்கு உங்களை அழைத்துச் செல்லப் போகிறேன். அந்த கிராமத்தின் பெயர் “குருவாஹி”.  பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் அங்குள்ள மக்களைச் சந்தித்து அவர்களுடைய வாழ்க்கை முறை பற்றியும், தீர்க்க வேண்டிய குறைகள் உள்ளதா என்பதையும் கேட்டு அறிந்து கொண்டோம்.

நிறைய குழந்தைகள் வீடுகளின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை புகைப்படம் எடுத்தபோது எவ்வளவு மகிழ்ச்சி அவர்கள் முகத்தில்? மகிழ்ச்சி மட்டுமா – வெட்கமும் சேர்ந்து தானே இருந்தது! குழந்தைகள் அனைவருக்கும் எங்களிடம் இருந்த சில தின்பண்டங்களைக் கொடுத்து மேலும் மகிழ்வித்தோம்! சில புகைப்படங்கள் கீழே.

[பழங்குடியினர் வீடு….]

[வெக்கத்த பாரு!]

[நாங்களும் இந்நாட்டு மன்னர்கள்]
  
அவர்களுடைய வீடுகள் இருக்கும் பகுதியையும், பள்ளிக்கூடம், மருத்துவக் கூடம் முதலியவற்றையும் பார்த்து வந்தோம். அவர்களுக்கு எங்களால் முடிந்த சில உதவிகளை  செய்து விட்டு அங்கிருந்து கிளம்பினோம். 

மீண்டும் தங்குமிடம் வந்து தில்லி திரும்ப தயாரானோம். பாந்தவ்கர் பகுதியினை விட்டு விலக மனதில்லை. இருந்தாலும் கடமை அழைக்கிறதே. தில்லி சென்று தானே ஆகவேண்டும்.  மீண்டும் 80 கிலோமீட்டர் பேருந்து பயணம் “கட்னி” என்ற இடம் நோக்கி. கட்னி இரயில் நிலையத்திலிருந்து தில்லிக்கு ரயில் பிடிக்க வேண்டும். வரும் போது மஹாகௌஷல் திரும்பியது சம்பர்க் கிராந்தி! 

ஜபல்பூரில் இருந்து தில்லி வரை செல்லும் எம்.பி. சம்பர்க் கிராந்தி, கட்னி ரயில் நிலையத்திற்கு இரவு எட்டு மணி இருபது நிமிடத்திற்கு வந்தடைந்தது. அடுத்த நாள் காலை 09.00 மணிக்கு தில்லி வந்தடைந்தோம். வீட்டிற்கு வந்து குளித்து கிளம்பியாச்சு – ”ஏன் ஓய்வெல்லாம் எடுக்கவில்லையா?” என்றால் இல்லை – வகுப்புகள் மீண்டும் துவங்கிவிட்டன. 

மூன்று நாட்களில் நாங்கள் சென்ற இடங்களைப் பற்றிய குறிப்புகளையும் தகவல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். அனைவரும் படித்து மகிழ்ச்சி அடைந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

மீண்டும் பயணம் சென்று வந்த பின் வேறொரு பயணத் தொடருடன் உங்களையெல்லாம்  சந்திக்கிறேன். 

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

டிஸ்கி: 06.07.2012 அன்று வல்லமையில்வெளிவந்தது.


46 comments:

 1. நல்ல விவரங்கள் வெங்கட். பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கார்த்திக்.

   Delete
 2. மகிழ்ச்சியான பயண அனுபவங்கள் பகிர்வுக்குப் பாராட்டுக்கள் ...

  ReplyDelete
  Replies
  1. தங்களுடைய தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அவர்களே!

   Delete
 3. விடுதிக் கட்டணம் அப்படியொன்னும் அதிகமில்லைதான். ஏகாந்தத்துக்கு நியாயமான விலைதான்.

  ஆமாம் அறை வாசலில் புலிகள் யாரும் வரலையா?

  பயணப்பதிவு முழுசும் வாசித்தேன். அருமையாக எழுதி இருக்கீங்க.

  கௌரிகுண்ட் (கைலாஷ்) பச்சைத்தண்ணீர் என்றால் லால் தலாப் சிகப்பா!

  இயற்கையின் அதிசயங்கள்தான்!!!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்திற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர். பயணக்கட்டுரைகள் எழுதுவதில் வித்தகர் நீங்கள். உங்கள் பாராட்டுகள் கிடைக்கப்பெற்றதில் மகிழ்ச்சி....

   //இயற்கையின் அதிசயங்கள்தான்!!!!!//

   உண்மை. இயற்கைக்கு முன் செயற்கை எம்மாத்திரம்!

   Delete
 4. சொல்ல விட்டுப்போச்சே.......... பழங்குடிக் குழந்தைகள் இன்னும் ரொம்பவே எளிமை. டிவியால் கேட்டுப்போகாத இன்னொஸன்ஸ்!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். அவர்கள் முகத்தில்/மனதில் கள்ளம் கபடம் ஏதுமில்லை!

   இரண்டாம் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 5. சிறிய குளம் இருந்தது. அதன் பெயர் “லால் தலாப்”! ஹிந்தியில் லால் என்றால் சிகப்பு, தலாப் என்றால் குளம். ஏன் அதற்கு அந்த பெயர்? அந்தக் குளத்தின் தண்ணீரே சிகப்பு தான்! புகைப்படத்தில் பாருங்களேன்.//

  இயற்கையின் அற்புதங்கள்.
  ராட்ச்சஏரி சிவப்பாய் இருந்த்தது . கயிலையில் .

  நிறைய குழந்தைகள் வீடுகளின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை புகைப்படம் எடுத்தபோது எவ்வளவு மகிழ்ச்சி அவர்கள் முகத்தில்? மகிழ்ச்சி மட்டுமா – வெட்கமும் சேர்ந்து தானே இருந்தது!//
  பழங்குடி மக்கள் குழந்தைகளும் நாகரீக உடை அணிந்து மகிழ்ச்சியாக இருக்கிறார்களே! அதுவே பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. கைலாஷில் கௌரி குண்ட் - பச்சை நிறத்தில்...
   ராட்சச ஏரி - சிவப்பு நிறத்தில்...

   பாந்தவ்கர் -ல் லால் தலாப் - சிவப்பு நிறத்தில் - எத்தனை ஒரு அதிசயம் இயற்கை....

   மகிழ்ச்சியாகத் தான் இருந்தது அவர்களது கபடமில்லா புன்னகை கண்டு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 6. சுகமான பயணங்களை சுபமாக முடித்துக்கொண்டு ஊர் திரும்பி, அந்த அனுபவங்களைதை சுவையாக பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள், வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 7. தொடர் சிறப்பாக அமைந்தது வெங்கட்.
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றிடா சீனு [வெங்கட ஸ்ரீனிவாசன்]!

   Delete
 8. சிகப்பு தண்ணீர் ஆச்சரியம் !

  குழந்தைகள் உள்ள படங்கள் அழகு !

  ரூம் ரெண்ட் அதிகமாய் தான் தெரியுது

  பயண கட்டுரை முடிஞ்சுடுச்சா? ஒரு அத்தியாயம் முன்னே சொல்லி எங்களை தயார் பண்றதில்லையா?

  ReplyDelete
  Replies
  1. //பயண கட்டுரை முடிஞ்சுடுச்சா? ஒரு அத்தியாயம் முன்னே சொல்லி எங்களை தயார் பண்றதில்லையா?//

   :) அடுத்த பயணக் கட்டுரையில் செஞ்சுடுவோம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்.

   Delete
 9. // பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் அங்குள்ள மக்களைச் சந்தித்து அவர்களுடைய வாழ்க்கை முறை பற்றியும், தீர்க்க வேண்டிய குறைகள் உள்ளதா என்பதையும் கேட்டு அறிந்து கொண்டோம்.// மிக நல்ல பணி.

  உங்களுடன் நாங்களும் சேர்ந்து ஊர் சுற்றியது போல் இருந்தது. அதற்குள் முடிந்ததது போல் உள்ளது பார்த்தால் இது பன்னிரெண்டாவது பகுதி... நீங்கள் மீண்டும் ஊர் சுற்ற காத்திருக்கிறோம்

  ReplyDelete
  Replies
  1. பயணத்தில் தொடர்ந்து வந்த உங்களுக்கு எனது நன்றிகள் சீனு.

   வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி.

   Delete
 10. பயண அனுபவங்கள் சுவாரசியமாக இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. தொடர் வருகைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா....

   Delete
 11. Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்.

   Delete
 12. ம்ம்ம்... அழகாய் ஒரு சுற்றுப் பயணத்தை உங்களுடன் செலவில்லாமல் சென்று வந்து விட்டேன். தெளிவான புகைப்படங்களுடன் விரிவான விவரங்களுடன் மெலிதான நகைச்சுவை கலந்து நீங்கள் சொல்லிச் சென்ற... ஸாரி, எங்களை அழைத்துச் சென்ற விதம் அருமை. பிறிதொரு பயணக் கட்டுரைக்காய் என் காத்திருப்பு.

  ReplyDelete
  Replies
  1. //ம்ம்ம்... அழகாய் ஒரு சுற்றுப் பயணத்தை உங்களுடன் செலவில்லாமல் சென்று வந்து விட்டேன்.//

   உங்களையும் அழைத்துச் சென்றதில் எனக்கும் மகிழ்ச்சிதான் கணேஷ்.

   வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   Delete
 13. அற்புதமான பயணத் தொடர். ஆவலைத் தூண்டிய அனுபவ நடை. வாழ்க, வளர்க.

  (உங்கள் M.P. பயணக் கட்டுரையைப் படித்து விட்டு எல்லோர் வீட்டிலும் உடனே M.P.க்கு அழைத்துச் செல்லும்படி எம்பி எம்பி அடம் பிடிக்கப் போகிறார்கள்.)

  ReplyDelete
  Replies
  1. //உங்கள் M.P. பயணக் கட்டுரையைப் படித்து விட்டு எல்லோர் வீட்டிலும் உடனே M.P.க்கு அழைத்துச் செல்லும்படி எம்பி எம்பி அடம் பிடிக்கப் போகிறார்கள்.//

   முதல்ல அண்ணிக்கு ஃபோன் போட்டு உங்களை அழைத்துப் போகச் சொல்ல வைக்கிறேன்... :)

   தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்]

   Delete
 14. மழலைகளைக் கண்டு மனம் மகிழ்ந்தேன். நீங்கள் தங்கிய அறையைப் பார்த்ததும் அமைதியான சூழல் படிக்க எழுத நல்ல இடம் என்று தோன்றியது. பகிர்வே சுகமாக.

  ReplyDelete
  Replies
  1. //நீங்கள் தங்கிய அறையைப் பார்த்ததும் அமைதியான சூழல் படிக்க எழுத நல்ல இடம் என்று தோன்றியது. பகிர்வே சுகமாக.//

   ஆமாம். இரவில் அங்கு வெகு நேரம் அமர்ந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். நிச்சயம் அமைதியான சூழலில் உன்னிப்பாய் படித்திருக்க முடியும்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 15. அந்தக் குளத்தின் தண்ணீரே சிகப்பு தான்..

  ada.. aamaa.. its different..

  ReplyDelete
  Replies
  1. Yes Rishbanji... It's different :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   Delete
 16. அழகாய் எங்களையும் சுற்றுப் பயணத்தில் உடன் அழைத்துச் சென்றீர்கள். அந்தப் பழங்குடியினரின் முகஙகளில் தெரியும் அப்பாவித்தனம்... மிக மிக இயற்கை. அருமை.

  ReplyDelete
  Replies
  1. //அந்தப் பழங்குடியினரின் முகஙகளில் தெரியும் அப்பாவித்தனம்... மிக மிக இயற்கை. அருமை.//

   அதுவும் அச் சிறுபெண்ணின் முகத்தில் தெரியும் வெகுளித்தனமான சிரிப்பு... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், ரசனைக்கும் மிக்க நன்றி நிரஞ்சனா.

   Delete
 17. பழங்குடி மக்களோடு நேரம் செலவழித்ததை அறியும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

  சிறப்பான பயணத் தொடர். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 18. பழங்குடி மக்கள் நல்ல உடை போட்டிருக்காங்க...நம்ம ஊரு ஜனம் தான் முன்னாள் பழங்குடி மாதிரி ஆயிட்டாங்களோ...அவ்வ்வ்வ்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரெவெரி.

   Delete
 19. குறித்து வைத்துக் கொண்டேன் பல தகவல்களை
  உங்களுடன் பயணிப்பது அருமையான அனுபவம் நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் உங்களுக்குப் பயன்படுமென நினைக்கிறேன் நண்பரே.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

   Delete
 20. பயண விவரங்களை வெறுமனே சொல்லிச் செல்வதிலும் சுகம் படங்களோடு பதிவிடுவது. கூடவே அழைத்துச் செல்லும் எழுத்தும் படங்களும் அழகு. செந்நீர்க்குளம் உண்மையில் வியப்பாகத்தான் உள்ளது. பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. செந்நீர்க்குளம்! அழகாய் சொல்லிட்டீங்க சகோ.

   தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 21. பயணக் கட்டுரையில் முத்திரை பதிக்கும் தங்களின் பாணி அற்புதம்!
  நன்றீ!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 22. பழங்குடியினரின் வீடு கண்டுகொண்டோம்.

  கபடமில்லா குழந்தைகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 23. //அதன் பெயர் “லால் தலாப்”! ஹிந்தியில் லால் என்றால் சிகப்பு, தலாப் என்றால் குளம். ஏன் அதற்கு அந்த பெயர்? அந்தக் குளத்தின் தண்ணீரே சிகப்பு தான்! புகைப்படத்தில் பாருங்களேன். //


  அந்த குளத்து நீரை எதற்கு பயன்படுத்துகிறார்கள்? அதனால் ஏதேனும் நன்மை/தீமைகள்?

  ReplyDelete
 24. பொது மக்கள் அங்கே ஜீப்பில் சஃபாரி செல்வதோடு சரி. மக்களுக்கு எந்த விதத்திலும் பயனில்லை. விலங்குகள் சில சமயங்களில் இந்நீரை அருந்துமென சொன்னார் எங்களுடன் வந்த வனவிலங்கு அதிகாரி....

  வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சூரி [Sunnyside]

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....