புதன், 27 ஜூன், 2012

காட்டுக்குள் ஹரி-ஹரன்


[மீண்டும் அழைத்தது மத்தியப் பிரதேசம் – பகுதி 10]


இன்றாவது புலியைக் காண வேண்டும் என்ற ஆர்வத்தில் அதிகாலையிலேயே எழுந்து தயாராகி விட்டேன். காடுகள் நிறைந்த பகுதி என்பதால் குளிர் கடுமையாகத் தெரிந்தது. வெளியே வந்தால் பற்கள் கிடுகிடுவென அடித்துக் கொள்ளும் அளவுக்குக் குளிர். குளிரிலிருந்து காத்துக்கொள்ள தலையில் குல்லாய், காலுறை, ஸ்வெட்டர், லெதர் ஜாக்கெட் என்று போட்டுக்கொண்டு ஒவ்வொருவரும் ஐந்து கிலோ எடை கூடியிருந்தோம்!

அவரவர்களுக்கு நியமிக்கப்பட்ட வாகனங்களில் ஏறி அமர்ந்து சரியாக 5.45 மணிக்கெல்லாம் புறப்பட்டோம். ஜீப் மெதுவாகச் சென்றாலும், அடிக்கும் குளிர்க்காற்று அத்தனை உடைகளையும் தாண்டி நரம்புகளில் அதிர்ச்சியை உண்டாக்கிற்று.  நேற்று சென்றதை விடஇன்று சென்ற வனப்பகுதி இன்னும் அடர்த்தியானதும், மலைகள் அதிகம் கொண்டதுமாகும். 

[காட்டு வழி போற பொண்ணே கவலைப்படாதே….  :)]

வனத்தினை நான்கு பகுதிகளாகப் பிரித்திருப்பதாக முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். அந்த நான்கு பகுதிகள் கிதோலி, மகதி, பான்பத்தா மற்றும் தாலா எனப் பெயர் கொண்டவை. இந்த நான்கில் மிக முக்கியமானது தாலா எனப்படும் பகுதி தான்.  இங்கே தான் கோட்டையும் இருக்கிறது. 32 மலைகள் சூழ்ந்த காடுகளை இந்தப் பகுதியில் சென்றால் நன்கு ரசிக்கலாம். மேலும் இந்தப் பகுதியில் தான் புலிகள் உங்கள் கண்களுக்கு தட்டுப்பட வாய்ப்புகள் அதிகம். மேலே செல்லுமுன் சில உபயோகமான தகவல்களைப் பார்க்கலாம்.

நீங்கள் இந்த வனப்பயணம் செய்ய ஆசைப்பட்டால் முன்பதிவு செய்து வைத்துக்கொள்வது அவசியம். இணையத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ள மத்தியப் பிரதேச சுற்றுலாத் துறை இணையதளத்தின் மூலமோ அல்லது மற்ற தனியார் துறை தங்கும் விடுதிகள் மூலமோ நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஒரு குழுவிற்கு எட்டு பேர்கள் வரை ஜீப்பில் பயணிக்கலாம். யார் பெயரில் முன்பதிவு செய்கிறீர்களோ அவரது அடையாள அட்டை எடுத்துச் செல்வது மிக மிக அவசியம். முன்பதிவு செய்யும்போது கொடுத்த அடையாள அட்டை எண்ணை வனத்திற்குள் செல்லுமுன் சரி பார்ப்பார்கள். சரியாக இல்லையெனில், உள்ளே யாரையும் விடுவதில்லை.

தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற உடைகள் எடுத்துச்சென்றால் நல்லது. சூழலுக்குத் தகுந்த உடைகள் [சிவப்பு, ஆளை அடிக்கும் ராமராஜன் போட்டுக்கொ[ல்லும்]ள்ளும்] வண்ண உடைகளைத் தவிர்த்தல் நலம்!

பீடி, சிகரெட், பான், சாக்லேட் போன்ற எதுவுமே வனத்திற்குள் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை.

தகவல்கள் நீங்கள் செல்லும் நேரத்தில் நிச்சயம் பயன்படுமென நினைக்கிறேன். 

[படி குஃபா – உட்தோற்றம்]

[படி குஃபா…. வெளித் தோற்றம்]

சரி வனத்திற்குள் செல்லலாம் வாருங்கள். இரண்டாம் நாள் நாங்கள் சென்றது தாலா பகுதிக்கு. இங்கே கோட்டையும், 39 குகைகளும் இருக்கின்றன. இவைகள் ஒன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த குகைகள் எனச் சொல்கிறார்கள். குகைகளில் பிராம்மி எழுத்துகள், புலி, பன்றி, யானை, குதிரை மேல் மனிதன் என்று நிறைய வரையப்பட்டிருக்கிறது. ”[B]படி [G]குஃபா” என்று இருப்பதிலேயே பெரிய வாசல் இருக்கும் குகையை மட்டும் சுற்றுலாப் பயணிகள் பார்க்க அனுமதிக்கிறார்கள். இந்த குகைக்குள் 9 சிறிய அறைகள் இருக்கின்றன. குகையை பார்க்க மனிதர்களை அனுமதிப்பதால் விலங்குகளுக்கு அனுமதி இல்லை!  எப்போதும் ஒரு கதவு போட்டு மூடி வைத்திருக்கிறார்கள். மனிதர்கள் மட்டும் திறந்து உள்ளே செல்ல முடியும்!

[காட்டுப் பன்றி…. எத்தனை ஃபோட்டோ வேணும்னாலும் எடுத்துக்கோ!]

[ஃபோட்டோ எடுக்கறாங்க டோய்….  பறந்துடுவோம்….]

இந்த [B]படி குஃபாவை பார்த்து விட்டு வனத்திற்குள் எங்கள் புலிவேட்டைத் தொடர்ந்தது. வனத்திற்குள் இருக்கும் குறுகிய பாதைக்குள் எங்கள் ஜீப் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. நிறைய மான்கள், காட்டுப் பன்றி, சில பறவைகள் என கண்களுக்குத் தென்பட்டது. புலி மட்டும் கிடைக்கவில்லை. அதற்குள் நடுவே ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார் எங்களது வாகன ஓட்டுனரும், வன இலாகா ஊழியரும். அந்த இடம் சேஷ்நாக் மீது படுத்துக் கொண்டிருக்கும் சேஷையாவையும் சிவனையும் பார்க்கத்தான்.

[சேஷையா…..]

[ஷிவ்ஜி]

மலைகளுக்கு ஊடே சென்று ஒரு குறுகிய பாதையில் வண்டி நின்றது. சில படிகள் ஏறிச் சென்றால் ஒரு பெரிய ஐந்து தலை நாகத்தின் மீது சேஷையா எனும் விஷ்ணுபகவான் படுத்துக் கொண்டிருக்கிறார். பக்கத்திலேயே ஒரு பெரிய சிவலிங்கமும் இருக்கிறது. நமது கிராமங்களில் ஒன்று சொல்வார்கள் – “அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவன் வாயில மண்ணு!” என்று.  அதை நிரூபிக்கும் வண்ணம் இங்கே இருவரும் ஒரே இடத்தில் அருள் பாலிக்கிறார்கள். அங்கே இருவரின் தரிசனமும் கண்டபின் எங்கள் புலி வேட்டைத் தொடர்ந்தது. 

அது பற்றி அடுத்த பகுதியில்..

மீண்டும் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.பின் குறிப்பு: 22.06.2012 அன்று வல்லமையில் வெளிவந்தது.


56 கருத்துகள்:

 1. குகையை பார்க்க மனிதர்களை அனுமதிப்பதால் விலங்குகளுக்கு அனுமதி இல்லை!

  புலியை பார்த்தீங்களா இல்லியா..
  உங்கள் வர்ணனையில் டென்ஷன் அதிகமாகி நகம் கடிக்கிறேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //உங்கள் வர்ணனையில் டென்ஷன் அதிகமாகி நகம் கடிக்கிறேன்..//

   பார்த்து ரொம்ப கடிச்சிடாதீங்க ரிஷபன் ஜி.... :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. படங்களும் தகவல்களும் நன்று. புலியைக் காணக் காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 3. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கார்த்திக்.

   நீக்கு
  2. //ஒவ்வொருவரும் ஐந்து கிலோ எடை கூடியிருந்தோம்!///

   கஷ்டம் தான்.

   //குகையை பார்க்க மனிதர்களை அனுமதிப்பதால் விலங்குகளுக்கு அனுமதி இல்லை! //

   நல்ல நகைச்சுவை தான்.

   //எங்கள் புலி வேட்டைத் தொடர்ந்தது. //

   வயிற்றில் புளி கரைத்த்டது போல இருந்திருக்குமே, சந்திக்கும் வரையும் ..... சந்தித்த பிறகும்.

   தொடருங்கள்.

   நீக்கு
  3. //வயிற்றில் புளி கரைத்த்டது போல இருந்திருக்குமே, சந்திக்கும் வரையும் ..... சந்தித்த பிறகும். //

   ஆமாமாம்....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 4. அடுத்த பதிவில கண்டிப்பா புலி வரும்னு நினைக்கறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த பதிவு விரைவில்.... தெரிந்து விடும் :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை நேரம்.

   நீக்கு
 5. ராமராஜன் பாணி உடுப்புகளைப் பற்றிச் சொல்லிப் போனது
  அதிகமாகச் சிரிக்கச் செய்துவிட்டது
  ஹரி மற்றும் சிவன் படம் அருமை
  தொடர்ந்து வருகிறோம்
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி ரமணிஜி.....

   நீக்கு
 6. பதில்கள்
  1. தொடர்ந்து தமிழ்மணத்தினில் வாக்களித்தும், கருத்துரைத்தும் உற்சாகமூட்டும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ரமணிஜி.

   நீக்கு
 7. அருமையான அனுபவக் குறிப்புகளுடன் சுவையாகச் செல்கிறது உங்கள் புலி வேட்டை. இன்னும் புலியைத் தான் வேட்டையாடி முடிக்க வில்லை. சீக்ரம் அடுத்த பதிவிர்க்குச் செல்லுங்கள் ஆவலாய் உள்ளோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // சீக்ரம் அடுத்த பதிவிர்க்குச் செல்லுங்கள் ஆவலாய் உள்ளோம்//

   அடுத்த பகுதி விரைவில்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   நீக்கு
 8. படங்களும் பகிர்வும் நாங்களும் உங்க கூடவே பயணிப்பதுபோல இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கூடவே நீங்களும் பயணிப்பது மகிழ்ச்சியளிக்கிறது லக்ஷ்மிம்மா...

   தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. //தகவல்கள் நீங்கள் செல்லும் நேரத்தில் நிச்சயம் பயன்படுமென நினைக்கிறேன். //

  True.. Thanks for the info.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதவன்.

   நீக்கு
 10. அதானே!புலியை பார்த்தீங்களா இல்லியா..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அதானே, புலியை பார்த்தீங்களா இல்லியா...!”

   அடுத்த பகுதியில தெரிந்துவிடும் அண்ணாச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்].

   நீக்கு
 11. அறியும் சிவனும் ஒண்ணு ..அருமை.

  அவசியமான லின்குகளுடன் பகிர்ந்தது செல்ல நினைப்போருக்கு நிச்சயம் பயன்படும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்.

   சுட்டி கொடுத்தது மற்றவர்க்கு உதவுமே என்ற நோக்கத்திலே தான்...

   நீக்கு
 12. ओय थालैवा

  புலி வருது புலி வருதுன்னு பயம் காட்றியே புலி எங்கே?

  விஜய்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தலைவா.... அடுத்த பகுதியில் புலி வரும்! :))

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   நீக்கு
 13. சேஷய்யா தரிசனம் கிடைச்சது. கூடவே சிவனும்!!!!!

  அருமை!!!

  நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் தொடர் ஊக்குவிப்பிற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 14. சேஷய்யாவின் தரிசனமும். புகைப்படமும் அருமை. உங்களுடன் புலி தரிசனத்திற்குச் செல்வது இனிய அனுபவமாக உள்ளது. தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைகளுக்கும் மிக்க நன்றி கணேஷ்.....

   நீக்கு
 15. புலியின் வருகையை எதிர்நோக்கி இருக்கிறோம் நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

   நீக்கு
 16. அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவன் வாயில மண்ணு!”

  புலி வேட்டை அருமை !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்....

   நீக்கு
 17. ஹரி, ஹரன் சரி ஹரிஹர புத்ரனுடைய வாகனம் இன்னும் வரவில்லையே, அது எப்போ?
  மக்கள் ரொம்ப ஆர்வமா கேட்கிறோம்.
  கிடைச்ச காட்டுப்பன்றிக்காவது புலித்தோலைப் போட்டு ஒரு படம் போட்டுவிடக் கூடாதா?

  //பீடி, சிகரெட், பான், சாக்லேட் போன்ற எதுவுமே வனத்திற்குள் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை.//
  ஏன்... புலி அதைப் பிடிங்கிக்குமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ////பீடி, சிகரெட், பான், சாக்லேட் போன்ற எதுவுமே வனத்திற்குள் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை.//

   ஏன்... புலி அதைப் பிடிங்கிக்குமா?//

   :)) புலிகள் புகைபிடிக்கக் கூடாது என்பதை ஸ்ட்ரிக்டா ஃபாலோ பண்ண வைக்கத்தான்... :))

   போன பதிவிலேயே புலி படமே போட்டேனே சீனு....

   உனது வருகைக்கும் சுவையான கருத்துரைக்கும் மிக்க நன்றிடா சீனு [வெங்கட ஸ்ரீனிவாசன்[.

   நீக்கு
 18. அது சரி..புலி என்னாச்சு? வயற்றில புலி சாரி ...புளி கரைக்குது !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆர்.ஆர்.ஆர்.

   நீக்கு
 19. புகைப்பட Comments அருமை...நல்ல மூடில் இருந்திருப்பீங்க போல...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி ரெவெரி.

   நீக்கு
 20. த.ம.6
  ஹரி-ஹரன் பார்த்தீர்கள்.ஹரிஹரபுத்திரன் காட்டிலிருந்து ஏறி வந்த விலங்கைப் பார்த்தீர்களா இல்லையா?சுவாரஸ்யம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஜி!

   நீக்கு
 21. ஓ! ...இன்னும் புலி வரலையா? நாங்க கார்த்திகை மாதம் மலேசியா போனோம் மலாக்கா சென்றோம். இங்கு வனவிலங்கு உலகம் என்று பார்த்தோம் அங்கு புலி பார்த்தோம். ட்றக்கில் உள்ளே சென்றோம். தொடருவேன்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புலியை எங்க தில்லி வனவிலங்குகள் சரணாலயத்தில் பார்த்திருக்கிறோம். வேறு சில இடங்களிலும் பார்த்திருக்கிறேன்.

   அதன் வீட்டிலேயே [காட்டிலேயே] சுதந்திரமாய் திரிவதைப் பார்க்கத்தான் இங்கே சென்றோம்.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வேதா இலங்காதிலகம் ஜி!

   நீக்கு
 22. நல்ல அருமையான பயணக்கட்டுரை! படங்களும் அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது முதல் வருகைக்கும் பதிவினை ரசித்து, கருத்துப் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

   நீக்கு
 23. 'புலி வருது புலி வருது' என்று சொல்வார்களே... அது சரியாத்தான் இருக்கு!

  பன்னி கூட்டமாத்தான் வரும்னு தலைவர் சொன்னாரு..... இங்க தனியா இருக்கு! ஓ... காட்டுப் பன்றி தனியாத்தான் வருமோ....!

  பதிலளிநீக்கு
 24. //பன்னி கூட்டமாத்தான் வரும்னு தலைவர் சொன்னாரு..... இங்க தனியா இருக்கு! ஓ... காட்டுப் பன்றி தனியாத்தான் வருமோ....!//

  ஒரு வேளை இது பன்றித் தோல் போர்த்திய புலியோ! :)

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 25. ஒன்றாம் நூற்றாண்டு குகைகளா? அற்புதம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கே.பி.ஜனா ஜி!

   நீக்கு
 26. “அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவன் வாயில மண்ணு!” என்று. அதை நிரூபிக்கும் வண்ணம் இங்கே இருவரும் ஒரே இடத்தில் அருள் பாலிக்கிறார்கள்.,

  அதை நீங்கள் சொல்வது மிகவும் பொருத்தம். இருவரும் சேர்ந்து உங்கள் பெயரில் அருள் சேர்க்கிறார்கள்.

  அருமையான பயனக் கட்டுரை பார்க்க ஆவலாய் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....