[மீண்டும் அழைத்தது மத்தியப் பிரதேசம் – பகுதி 7]
இயற்கை அன்னை தந்த நர்மதா நதியின் நீர்வீழ்ச்சி கோலத்தினைப் பார்த்துவிட்டோம். இயற்கை என்றிருந்தால் அதில் மனிதன் தனது கைவண்ணத்தினைக் காட்டாது இருப்பானா? மத்தியப் பிரதேசத்தின் முக்கிய நதியான நர்மதை, அரபிக்கடலில் கலக்கும் முன் தனது மொத்த ஓட்டத்தில் ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் மத்தியபிரதேசத்திலே தான் ஓடுகிறது. அதன் குறுக்கே இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட அணைகள் கட்டப்பட்டிருக்கின்றன. நதியின் குறுக்கே ஆரம்ப காலத்தில் கட்டப்பட்ட அணைகளில் ஒன்று தான் பர்கி [Bargi] அணை.
1974-ம் ஆண்டு
கட்ட ஆரம்பித்து 1990-ம் ஆண்டில் முடிக்கப்பட்ட இந்த அணையின் மூலம் 4000 சதுர
கிலோமீட்டர் பரப்பளவு விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன. தற்போது 90 மெகா வாட்
மின்சாரமும் உற்பத்தியாகிறது. மாலை ஐந்து மணிக்குள் அங்கு சென்றால் தான் படகோட்டம்
செய்ய முடியும் என்பதால் நாங்கள் வேகமாக சென்றோம்.
”வேகம்
விவேகம் அல்ல” என்பது சரிதான் போல.
ஓட்டுனர் விரைவாகச் சென்று செல்ல வேண்டிய வழியை சரியாக தவறவிட்டார். ஐந்து
கிலோமீட்டர் தாண்டிய பின்னரே அவருக்கும் தவறு புரிந்து, வண்டியைத் திருப்ப
யத்தனித்தார். குறுகலான பாதையில்
வண்டியைத் திருப்ப பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது. ஒரு வழியாகத்
திரும்பி, சரியான பாதையில் சென்று மத்தியப் பிரதேச சுற்றுலாத் துறையின் “மைகல்”
உணவகத்திற்குச் சென்று சேர்ந்த போது மாலை மணி 05.15.
ஆதவன் தனது
பணியைச் செவ்வனே முடித்துவிட்டு, வேறு கண்டம் செல்லத் தயாராக இருந்தான். எங்களைச்
சுமந்து நர்மதையில் பயணம் செய்ய “நர்மதா ராணி” என்று அழைக்கப்படும் படகும் தயாராக
இருந்தாள். இருட்டி விட்டால் பயணத்தினையும், நர்மதையின் அழகினையும் சுவைக்க
முடியாது என்பதால் எல்லோரும் விரைவாக படகில் ஏறி உல்லாசப் பயணத்தினைத்
தொடங்கினோம்.
[பட உதவி: கூகிள்]
உள்ளே சென்று ஃப்ரூட்டி அருந்தியபடி நாங்கள் இருக்க படகு நதியில் அமைதியாகச் சென்று கொண்டிருந்தது. அந்தி மாலை வேளையில் சுகமான தென்றல் காற்று தவழ்ந்து வந்து எங்களை முத்தமிட்டது. கூடவே படகில் இருந்த பெரிய ஒலிபெருக்கிகளில் இருந்து பல ஹிந்திப் பாடல்கள் [டப்பாங்குத்துதேன்!] அலறத் தொடங்கியது. "நிலா அது வானத்து மேல" போடுப்பான்னு யாரோ கும்பலில் கோவிந்தா போட்டார்கள்.
வட
இந்தியர்களுக்கு ஒரு பழக்கம் – கல்யாணமா, பிறந்த நாளா, அது எந்த விழாவாக
இருந்தாலும் சரி – உடனே கையை மேலே தூக்கி ஒரு விரல் கிருஷ்ணாராவ் மாதிரி இரு
கைகளிலும் ஒரு விரல் காட்டி ஆட ஆரம்பித்து விடுவார்கள். படகிலும் அவர்கள்
விடவில்லை. எல்லோரும் ஆட ஆரம்பித்து எங்களையும் ஆட்டுவித்தனர். அட ஆமாங்கறேன்… என்னையும் ஆடச் சொல்லி வற்புறுத்த கையை காலை உதறி
விட்டு வந்தேன்! [யாருப்பா அது? அந்த வீடியோவைப் போடச்
சொல்லி கேட்கிறது?]
ஒரு மணி
நேரத்திற்கு படகில் ஆனந்தமான ஒரு உல்லாசமான பயணம் செய்தோம். மாலை மயங்கும்
நேரத்தில் இந்த பயணம் நிச்சயம் ஒரு சுகமான நினைவுதான். அனைத்து நண்பர்களுக்கும் படகில் தொடர்ந்து பயணம் செய்ய ஆசை இருந்தாலும் மாலை
ஆறு மணிக்கு மேல் படகுப் பயணத்திற்கு அனுமதி இல்லாததால் திரும்ப வேண்டியதாயிற்று. மைகல் உணவகத்திற்கு திரும்ப வந்து சிற்றுண்டி சாப்பிட்டு
நாங்கள் தங்கியிருந்த “கல்சூரி ரெசிடென்சி” நோக்கி பயணித்தோம்.
அலைந்த
அலைச்சலுக்கு, இன்றிரவு நல்ல உறக்கம் வரும் என உடல் சொன்னாலும், மனது தனது
ஓட்டத்தினை நிறுத்த மறுக்கிறது. காலையில் சீக்கிரமே எழுந்து தயாராக வேண்டும் நீண்ட
பேருந்துப் பயணத்திற்கு. ஆம் பயணம் எங்கள் அடுத்த இலக்கான “பாந்தவ்கர்” நோக்கி
அல்லவா!
நாளை
பேருந்தில் முதல் இருக்கையைப் பிடிக்க தயாராக இருங்கள். நான் தூங்கி எழுந்து வந்து
விடுகிறேன்.
மீண்டும்
சந்திப்போம்!
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
பின் குறிப்பு: 01.06.2012 அன்று வல்லமையில் வெளிவந்த பயணக் கட்டுரை.
மாலை மயங்கும் நேரத்தில் இந்த பயணம் நிச்சயம் ஒரு சுகமான நினைவுதான்
பதிலளிநீக்குஇனிமையான பயணப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள் !
வல்லமையில் வெளிவந்த பயணக் கட்டுரைக்கு வாழ்த்துகள் !!!
தங்களது உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.
நீக்குதங்களின் விரல் பிடித்து
பதிலளிநீக்குபயணிப்பது சுகமாக இருக்கிறது நண்பரே...
நீங்களும் கூடவே பயணிப்பது எனக்கும் இதமாய் இருக்கிறது நண்பரே....
நீக்குதங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி மகேந்திரன்.
ஜோர் வெங்கட்.
பதிலளிநீக்குகூடவே நர்மதா ஸரோவர் பத்தியும் மத்ய ப்ரதேஷ்ல இதை எப்படிப் பாக்கறாங்கன்னும் அங்க உள்ளவங்களோட மனநிலை பத்தியும் எழுவீங்கன்னு நெனைச்சேன்.
நர்மதா அருகே செல்லப் போகிறோம் எனத் தெரிந்ததிலிருந்தே சரோவர் பற்றி அங்குள்ள மனிதர்களிடம் பேச நினைத்தேன். ஆனால் பயணத்தின் போது அதற்கான வாய்ப்பே கிடைக்கவில்லை.... ஓட்டமும் நடையுமாகவே முடிந்து விட்டது பயணம்..... தனியாக சென்றால் தான் தன்னிச்சையாக நாம் நினைத்ததை செய்ய முடியும்போல.... :(
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுந்தர்ஜி.
படகுப் பயணம் சுகமாக இருந்தது. ஓட்டுனர் விரைவாகச் சென்று சரியாக வழியைத் தவறவிட்டார் என்ற வார்த்தைப் பிரயோகத்தை மிக ரசித்தேன். (யாருப்பா அது அந்த வீடியோவைப் போடுங்கன்னு கேக்கறது?) நான் தானுங்கோ...
பதிலளிநீக்கு//(யாருப்பா அது அந்த வீடியோவைப் போடுங்கன்னு கேக்கறது?) நான் தானுங்கோ...//
நீக்குஅட நிறைய பேரு கிளம்பிட்டாங்களே டான்ஸ் பாக்க.... ஆனா அந்த டான்ஸ் பகிர எனக்கு அனுமதி இல்லை :))))
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கணேஷ்.
நர்மதையின் குறுக்கில் முப்பதுக்கும் மேற்பட்ட அணைகளா? வியப்பு தரும் செய்தி. படகுப்பயணத்தில் அமைதியாய் அமர்ந்து அழகை ரசித்து உள்வாங்குவதுதான் எனக்குப் பிடிக்கும். டப்பாங்குத்துதான் எப்போதும் தரையில் போடுகிறோமே... பின் படகிலும் எதற்கு? நீங்கள் சொல்வது போல் வட இந்தியர்களுக்கு குஷி வந்துவிட்டால் கட்டுப்படுத்த முடியாது போலும். அடுத்தநாள் பயணத்தின் விவரங்களையும் அறிய ஆவல்.
பதிலளிநீக்கு//வட இந்தியர்களுக்கு குஷி வந்துவிட்டால் கட்டுப்படுத்த முடியாது போலும். // ஆமாமாம்... ஆனா, ஒரெ மெட்டு, ஒரே டான்ஸ்... அதுதான் தாங்க முடியாது.... :(
நீக்குதங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.
Narmadha river photo is excellent. We want to see your dance.
பதிலளிநீக்குபுகைப்படத்தினை ரசித்தமைக்கு நன்றி மோகன். அடடா உங்களுக்கும் என் டான்ஸ் பார்க்க ஆசை.... பார்த்தால் ஏற்படும் விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல என்ற முன்னெச்சரிக்கையோடு போட வேண்டிய காணொளி. ஆதலால் இங்கே பகிரவில்லை.... :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன்.
DEAR VENKAT
பதிலளிநீக்குTHANK YOU FOR SHARING YOUR VISIT TO MADHYA PRADESH. NICE. aLL THE BEST FOR YOUR FUTURE BLOGS. HOPE TO MEET YOU ON SUNDAY.
VIJAY
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி. சனிக்கிழமை அன்று சந்திப்போம்.....
நீக்குசரி தான்.
பதிலளிநீக்குப்ரூட்டிகே ஆட்டமா?
ஆமாம்... உனக்குதான் என்னைப் பத்தி தெரியுமே.... :)))
நீக்குவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு.
நாளை பேருந்தில் முதல் இருக்கையைப் பிடிக்க தயாராக இருங்கள். நான் தூங்கி எழுந்து வந்து விடுகிறேன்.//
பதிலளிநீக்குநாங்களும் உடன் பயணிக்க தயாராகிவிட்டோம்
பயணம் தொடர வாழ்த்துக்கள்
பயணத்தில் நீங்களும் கூடவே வருவது எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது ரமணி சார்.
நீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிகமிக நன்றி.
Tha.ma 5
பதிலளிநீக்குதமிழ்மண வாக்கிற்கு நன்றி ரமணி சார்.
நீக்கு[யாருப்பா அது? அந்த வீடியோவைப் போடச் சொல்லி கேட்கிறது?]
பதிலளிநீக்குநானும் தான்..
ஆஹா நீங்களுமா..... சரி சரி....
நீக்குவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்.
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி... நல்ல பயணம்!
பதிலளிநீக்குநல்ல பாடல் வரிகளை நினைவுபடுத்திவிட்டது போலும் இந்தப் பகிர்வு....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கே.பி.ஜனா சார்.
நல்ல பகிர்வு. நர்மதை நதியையும் அணையையும் அழகாகக் காட்சிப் படுத்தியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குபதிவினையும் புகைப்படத்தினையும் ரசித்து கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குபயணம் உங்களை களைப்பாக்குமா? புதுப்பிக்குமா வெங்கட்ஜி...
பதிலளிநீக்குபயணங்கள் தொடரட்டும்...
பயணங்கள் என்றுமே எனக்குச் சுகமானவைதான். களைப்பூட்டுவதில்லை.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரெவெரி.
பயணப் பதிவு அருமை!
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பர் சேஷாத்ரி.
நீக்குஉல்லாச(மான) பயணம்தான்!ரசிக்கும்படியாக இருந்தது
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.
நீக்குசார் சுகமான பயணம் அழகான வார்த்தைக் கோர்வைகள். உங்கள் ஆட்டத்தை நீங்களே கேலி செய்தது குறும்பு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.
நீக்குவிளக்கமானப் படகுச் சவாரி நானும் உடன் வந்தது போன்ற உணரவு!
பதிலளிநீக்குசா இராமாநுசம்
தங்களது தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி புலவரே...
நீக்குபடகில் டான்ஸ். வட இந்திய டான்ஸ் பற்றி நீங்கள் வர்ணித்திருந்தது தத்ரூபம்!
பதிலளிநீக்குஇனிமையான பாடல்கள் போட மாட்டார்களோ... ஹிந்தியிலும் குத்துப் பாட்டுத்தானா...!
//வட இந்திய டான்ஸ் பற்றி நீங்கள் வர்ணித்திருந்தது தத்ரூபம்!// அட ஆமாங்க, இவங்க டான்ஸ் பார்த்துப் பார்த்து வெறுத்துப் போச்சு..
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நர்மதை நதியில் நாங்களும் உல்லாசமாக பயணம் செய்தோம்.
பதிலளிநீக்குவருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குஎழுத்தினை வாசிக்கையிலே, தங்களுடனே உடனிருந்து அனுபவித்த ஒரு உணர்வு ஏற்படுகிறது. சூப்பர் சகோ!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி அட்சயா.
நீக்குமாலை மயங்கும் நேரத்தில் இந்த பயணம் நிச்சயம் ஒரு சுகமான நினைவுதான்.//
பதிலளிநீக்குஉல்லாசபயணம் அருமை.
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்கு