வெள்ளி, 22 ஜூன், 2012

ஃப்ரூட் சாலட் – இரண்டு.


[பட உதவி: கூகிள்]


இந்த வார செய்தி: மனிதர்களுக்கு பொறுமை என்பதே  இல்லாமல் போய்விட்டது. சாதாரண விஷயத்திற்கு கூட   கோபமும், ஆத்திரமும் வந்து என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் செயல்படுகிறார்கள். தில்லி சாலைகளில் ”ரோட் ரேஜ்” என்பது அதிகமாகிக் கொண்டே போகிறது. சாலையில் செல்லும் போது சக மனிதர் ஓட்டும் வாகனத்தினால் தனது வாகனத்தில் ஒரு சிறிய கீறல் ஏற்பட்டால் கூட துப்பாக்கி எடுத்து சுடுவதோ, கத்தியால் குத்தி காயப்படுத்துவதோ அதிகமாகி விட்டது. இந்த வெறியும், கோபமும் இப்போது வீடுகளிலும் பரவி வருவது நிச்சயம் கவலைக்குரியது. 

தில்லியை அடுத்த காஜியாபாத் பகுதியில் உள்ள ஒரு பெண் – ஒரு வயதுக் குழந்தைக்குத் தாய். மாமியாரிடம் ஏற்பட்ட வாய்த் தகறாரில் தனது ஆண் குழந்தையை இரண்டாவது மாடியில் இருந்து வீசியிருக்கிறார். குழந்தையை எடுத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினாலும் குழந்தை இறந்து விட்டது என்று தினசரியில் படித்த போது மனது பதறியது.  அந்தத் தாய்க்கு மனத்தளர்வு இருக்கிறது என்றும், இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார் என்றும் நாளிதழில் படித்தேன். 


 [பட உதவி: கூகிள்]

இது நடந்த இரண்டொரு நாட்களிலேயே, தொழிற்சாலையில் வேலை செய்யும் பதினைந்து வயது இளைஞன் பற்றிய செய்தி பதற்றத்தினை அதிகப் படுத்தியது. அவன் வேலை செய்யும் தொழிற்சாலையில் ஐம்பது ரூபாய் முன்பணம் வாங்கி செலவு செய்திருக்கிறான். தாய் அதனைக் கண்டிக்கவே, பக்கத்து வீட்டு பெண்மணியிடம் கடன் வாங்கி தாயிடம் கொடுத்திருக்கிறான். கடன் வாங்கிய விஷயத்தினை பக்கத்து வீட்டு பெண்மணி இளைஞனின் விதவைத் தாயிடம் சொல்ல, அவள் மகனை அடிக்க, வந்தது விபரீதம். 

கோபத்தில் அந்த இளைஞன் பக்கத்து வீட்டு பெண்மணியை கத்தியால் குத்த, அதைத் தடுக்க வந்த வேறு இரண்டு பெண்களையும் குத்தி மூவரும் இறந்து விட்டனர்.

கோபத்தில் என்ன செய்கிறோம் என்று புரியாமலேயே செய்யும் செயலால் எவ்வளவு உயிரிழப்பு, எத்தனை குடும்பங்கள் தவிக்கின்றன. எங்கே தான் போய்க்கொண்டிருக்கிறோம்? 

இந்த வார முகப்புத்தக இற்றை:

தமிழகத்தில் மின்சாரப் பற்றாக்குறையும், அதனால் ஏற்படும் பல மணி நேர மின்சார நிறுத்தமும், நிறைய பேரை நல்லாவே யோசிக்க வைக்கிறது போல! அப்படி ஒரு இற்றை:

விக்கிபீடியா: “எனக்கு எல்லாம் தெரியும்!”
முகப்புத்தகம்: “எனக்கு எல்லோரையும் தெரியும்!”
கூகிள்: “என்னிடம் எல்லாம் இருக்கிறது!”
இணையம்: “நான் இன்றி நீங்கள் மூவரும் இல்லை!”

மின்சாரம்: “என்ன அங்கே சத்தம்….  குரலை ரொம்ப உசத்தாதீங்க!”

இந்த வாரக் காணொளி:
இந்த வார குறுஞ்செய்தி: 

நீ மட்டும் நடந்து சென்றால் யாரும் உன்னை திரும்பிப் பார்க்க மாட்டார்கள். என்னையும் அழைத்துச் செல். இந்த உலகமே உன்னை உற்றுப் பார்க்கும் – தன்னம்பிக்கை.


மீண்டும் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

74 கருத்துகள்:

 1. பொறுமை இன்மையைக் கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எங்கு போய் முடியும் என்பதுதான் தெரியவில்லை. என்ன தீர்வு என்பதுவும் புரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கெங்கும் இதே நிலை. ”பொறுமையா, கிலோ என்ன விலை?” என சீக்கிரமே கேள்வி கேட்டாலும் கேட்கப் படலாம்....”

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   நீக்கு
 2. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கே.பி.ஜனா சார்.

   நீக்கு
 3. ஃப்ரூட் சாலட்-2 எல்லாமே சிந்திக்க வைக்கும் சிறந்த தகவல்கள்.
  பகிர்வுக்கு நன்றிகள், வெங்கட்ஜீ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது தொடர் வருகைக்கும் ஊக்குவிப்பிற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஆர்.ஆர்.ஆர்.

   நீக்கு
 5. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 6. நீ மட்டும் நடந்து சென்றால் யாரும் உன்னை திரும்பிப் பார்க்க மாட்டார்கள். என்னையும் அழைத்துச் செல். இந்த உலகமே உன்னை உற்றுப் பார்க்கும் – தன்னம்பிக்கை.

  மனம் கவர்ந்த தன்னம்பிக்கை செய்தி ! பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டாம் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 7. செய்திகள் அதிரவைக்கிறதேன்னு சாப்பிடுமுன் படிக்கறதே இல்ல.. சாயாங்காலமா சாவகாசமா படிச்சா உண்டு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //செய்திகள் அதிரவைக்கிறதேன்னு சாப்பிடுமுன் படிக்கறதே இல்ல.. சாயாங்காலமா சாவகாசமா படிச்சா உண்டு..//

   நல்ல பழக்கம்.... :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி. தில்லி எப்போது திரும்பறீங்க!

   நீக்கு
 8. சாலையில் மணிக்கணக்காகக் காத்திருக்கும் அளவுக்கு ஜெவி ட்ராஃபிக் ஜாம்.


  எங்கூரிலேயே இப்பெல்லாம் ரோட்ரேஜ் வர ஆரம்பிச்சுருக்குன்னா பாருங்க:(

  நம்ம ரஜ்ஜூ என்ற ராஜலக்ஷ்மி அழகா ட்ரைவிங் பண்ணுதே உங்க படத்தில்:-)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நம்ம ரஜ்ஜூ என்ற ராஜலக்ஷ்மி அழகா ட்ரைவிங் பண்ணுதே உங்க படத்தில்:-)))//

   ஆனா ஏனோ கோபமா இருக்கு.... :)))

   ரோட் ரேஜ் எல்லா இடத்திலும் பரவுவதை நினைத்தால் பதற்றம் தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்..

   நீக்கு
 9. தன்னம்பிக்கை செய்தி அருமை! பொறுமை இல்லாமற் போவதைக் கண்டு வேதனை அடைய வேண்டி உள்ளது! நல்ல பகிர்வு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பொறுமை இல்லாமற் போவதைக் கண்டு வேதனை அடைய வேண்டி உள்ளது! //

   வேதனை தான் நண்பரே....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.....

   நீக்கு
 10. டில்லியில் கார் ஓட்டிகளுக்கு வரும் கோபம் பற்றி கேள்விப்பட்டேன். நானும் இது பற்றி எழுதி வைத்துள்ளேன் பயண கட்டுரையுடன் சேர்த்து வெளியிட ....

  சென்னையில் நேற்று நாலு மாத குழந்தை நரபலி.. நாடு ஏன் இப்படி இருக்கு?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நானும் இது பற்றி எழுதி வைத்துள்ளேன் பயண கட்டுரையுடன் சேர்த்து வெளியிட ....//

   உங்கள் பாணியில் படிக்கக் காத்திருக்கிறேன்....

   //சென்னையில் நேற்று நாலு மாத குழந்தை நரபலி.. நாடு ஏன் இப்படி இருக்கு?//

   அதானே... என்ன கொடுமை....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்.

   நீக்கு
 11. பொதுவாக அனைவருக்குமே பொறுமை இருப்பதில்லை என்பது ரயில்/மெட்ரோ அல்லது வேறு பொருள் வாங்கும் இடங்களிலேயே, வரிசையில் நிற்காமல் முந்தும் பொழுது பார்க்கிறோம். அது சற்று அடுத்த நிலையை எட்டிக் கொண்டிருக்கிறதோ என்ற கவலையை பல நேரங்களில் வருவதற்கு மேற்கூறிய செய்திகள் போன்றவை அதிகமாக்குகின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பொதுவாக அனைவருக்குமே பொறுமை இருப்பதில்லை என்பது ரயில்/மெட்ரோ அல்லது வேறு பொருள் வாங்கும் இடங்களிலேயே, வரிசையில் நிற்காமல் முந்தும் பொழுது பார்க்கிறோம். //

   உண்மை தான்.... தட்டிக் கேட்பவர்களைத் தான் ஒரு மாதிரி பார்க்கிறார்கள்....

   உனது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிடா சீனு [வெங்கட ஸ்ரீனிவாசன்].

   நீக்கு
 12. கோபம் கொடுமையான மிருகம் தான் சார். கண்டிப்பாக அடக்கப் பழக வேண்டும் ....இல்லையேல் நம்மை அடக்கி விடும் .

  அந்த முகபுத்தக நகைசுவையும் குறுஞ்செய்தியும் அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //கோபம் கொடுமையான மிருகம் தான் சார். கண்டிப்பாக அடக்கப் பழக வேண்டும் ....இல்லையேல் நம்மை அடக்கி விடும் .//

   சரியாகச் சொன்னீங்க சீனு. அடக்க மட்டும் இல்லை, அடக்கமும் செய்துவிடும்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   நீக்கு
 13. பொறுமைன்னா என்னன்னு கேப்பாங்க போல இருக்கு. கத்தி கத்தி நமக்கும் பொறுமை இல்லாம செஞ்சிடுவாங்களோன்னு தோணுது. முகப்புத்தகம் இற்றை சூப்பர்.

  சாலட் ருசி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //கத்தி கத்தி நமக்கும் பொறுமை இல்லாம செஞ்சிடுவாங்களோன்னு தோணுது.//

   ஆமாமாம்... தினம் தினம் பயணித்து வீடு திரும்பும் வரை ஏதும் பிரச்சனை இல்லாது வரவேண்டுமே என நினைத்தே கிளம்ப வேண்டியிருக்கிறது....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புதுகைத் தென்றல்.

   நீக்கு
 14. அவசர உலகில் அவசரக் குற்றங்கள்..... படிக்கவே கஷ்டமாக இருக்கிறது.

  இற்றை (என்றால் என்ன?) ரசிக்க முடிந்தது.

  ஒரு அழகான பெண்ணுடன் நடந்து சென்றாலும் இந்த உலகம் நம்மைத் திரும்பித் திரும்பிப் பார்க்கிறது! :)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இற்றை (என்றால் என்ன?)//

   ஆங்கிலத்தில் UPDATE என்பதை தமிழில் இற்றை எனச் சொல்லணுமாம்.... :)

   //ஒரு அழகான பெண்ணுடன் நடந்து சென்றாலும் இந்த உலகம் நம்மைத் திரும்பித் திரும்பிப் பார்க்கிறது! :)))//

   அது சரி.... :)))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 15. பொருட்களைப் பயன் படுத்தி மனிதர்களை நேசிக்க வேண்டிய நாம், மனிதர்களைப் பயன் படுத்தி பொருட்களை நேசிக்க துவங்கியதால் வந்த வினை இது. அருமையான பகிர்வு அன்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பொருட்களைப் பயன் படுத்தி மனிதர்களை நேசிக்க வேண்டிய நாம், மனிதர்களைப் பயன் படுத்தி பொருட்களை நேசிக்க துவங்கியதால் வந்த வினை இது. //

   அற்புதமான வரிகள் ராஜகோபாலன்...

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜகோபாலன்.

   நீக்கு
 16. கோபத்தில் என்ன செய்கிறோம் என்று புரியாமலேயே செய்யும் செயலால் எவ்வளவு உயிரிழப்பு, எத்தனை குடும்பங்கள் தவிக்கின்றன. எங்கே தான் போய்க்கொண்டிருக்கிறோம்?


  Thought provoking.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன்ஜி!

   நீக்கு
 17. அன்பு நண்பருக்கு

  தங்களின் ப்ரூட் சால்ட் மிகவும் சிந்திக்க வைக்கிறது. எவ்வளவு ப்ரூட் சால்ட் சாப்பிட்டாலும் நமது மக்கள் திருந்து வார்களா? இது மிகப்பெரிய கேள்விக்குறி?

  அதற்க்காக ப்ரூட் சால்ட் தயாரிப்பது நிறுத்தப்பட கூடாது.

  விஜய்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //எவ்வளவு ப்ரூட் சாலட் சாப்பிட்டாலும் நமது மக்கள் திருந்து வார்களா?//

   கேள்விக்குறி தானே மிஞ்சுகிறது....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி விஜய்ஜி!

   நீக்கு
 18. செய்திகள் கவலை தருகின்றன.

  இற்றை அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி....

   நீக்கு
 19. செய்திகள் மனதை பதற வைக்கின்றன, நாம் எங்கேதான் போய்கொண்டிருக்கிறோம்...?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நாம் எங்கேதான் போய்கொண்டிருக்கிறோம்...?!//

   அதே கேள்வி தான் எனக்கும்....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மக்கா மனோ.....

   நீக்கு
 20. உலகம் எங்கோ போய்க்கொண்டு இருக்கிறது.
  குறுஞ்செய்தி அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.....

   நீக்கு
 21. ஹப்பா!இனிமையான,குளுமையான பழக் கலவை!அடிக்கடி பரிமாறுங்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அடிக்கடி பரிமாறுங்கள்!//

   வாரத்திற்கொன்று எழுதலாமென நினைத்திருக்கிறேன்...

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சென்னை பித்தன்ஜி!

   நீக்கு
 22. Short n sweet...அது உங்க படமா வெங்கட்...-:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அது உங்க படமா வெங்கட்...-:)//

   இல்லையே உங்க படம்னு தான் நான் போட்டேன்.... :)))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரெவெரி...

   நீக்கு
 23. நல்ல பதிவு.

  கோபம் பாபம் சண்டாளம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //கோபம் பாபம் சண்டாளம்.//

   சரியா நினைவு படுத்துனீங்க மைனர்.....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மைனர்.

   நீக்கு
 24. venkat,

  One more thing is honking, without reason, that too by yellow board vehicles. If you see green, honkkkkkkkkkkkkk....without understanding what is before other vehicle ...Patience na ... kilo enna villai?
  mmmm....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ராஜு, பொறுமைன்னா கிலோ என்ன விலை தான்....

   வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜு....

   நீக்கு
 25. நீ மட்டும் நடந்து சென்றால் யாரும் உன்னை திரும்பிப் பார்க்க மாட்டார்கள். என்னையும் அழைத்துச் செல். இந்த உலகமே உன்னை உற்றுப் பார்க்கும் – தன்னம்பிக்கை.

  அருமையான வரிகள். கோபம் விளைவிக்கும் செயல்கள் கொடுமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா....

   நீக்கு
 26. இது வெறும் பொறுமை சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமில்லை.நமது கலாச்சாரம் கற்றுத்தந்திருக்கிற மிகப்பெரிய விஷயங்களில் இடுவும் ஒன்றாய் இருக்கிறது.சமீப காலங்களில்தான் இது மாதிரியான நிகழ்வுகளை நிறைய பார்க்க முடிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி விமலன்.....

   நீக்கு
 27. ஃப்ரூட் சாலட் செய்தி தொகுப்பும் பகிர்வும் நச்சென்று இருக்கு.யோசிக்க வைத்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்ததற்கும் மிக்க நன்றி ஆசியா உமர்.

   நீக்கு
 28. அத்தனையும் அருமை. காணொளி கண்ணைத்திறந்தது.
  நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // காணொளி கண்ணைத்திறந்தது.//

   காணொளி பத்தி யாருமே ஒண்ணும் சொல்லலையேன்னு நினைச்சேன். நீங்க சொல்ல்ட்டீங்க!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 29. கோபத்தின் வெளிப்பாடும் இறுதியில் செய்தியும் அழகுற இருந்தது . கோபம் வரும் நேரத்தில் யார் சொன்னால் கேட்கிறார்கள் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //கோபம் வரும் நேரத்தில் யார் சொன்னால் கேட்கிறார்கள் .//

   கோபம் கேட்க விட்டாத்தானே! :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா...

   நீக்கு
 30. புரூட் சாலட்டில் பகிர்ந்துள்ள விஷயங்கள்
  அதிகம் சிந்திக்க வைக்கின்றன
  தொடர்ந்து தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 31. வர வர இப்படியான தகவல்களை வாசிக்கவே பிடிக்காமல் உள்ளது. காரணம் இவைகளைத் தவிர வேறு எதையுமே காணவில்லை ஊடகங்களில்.
  ஆதிகாலக் கடவுள் வணக்கம் (வீட்டில்) தேக அப்பியாசம், மறுபடி கோயிலுக்குப் போதல் எனும் வளர்ப்பு முறை தேவை என்பது என் அபிப்பிராயம்.
  நன்றி பழக் கலவைக்கு.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஆதிகாலக் கடவுள் வணக்கம் (வீட்டில்) தேக அப்பியாசம், மறுபடி கோயிலுக்குப் போதல் எனும் வளர்ப்பு முறை தேவை என்பது என் அபிப்பிராயம்.//

   நல்ல நோக்கு இது....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம்.....

   நீக்கு
 32. கோபத்தை வெளிப்படுத்தற பூனையோட படமே அருமை. கோபத்தின் விளைவால் ஏற்படும் கொடுமைகளை நினைத்தால் பரிதாபம் எழுகிறது, இற்றை சூப்பர். தொடரட்டும் ப்ரூட் சாலட் அணிவகுப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //கோபத்தை வெளிப்படுத்தற பூனையோட படமே அருமை.//

   பார்த்தவுடனே பதிவுக்கு ஏற்றதாய் தோன்றியது....

   தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   நீக்கு
 33. எதற்கும் கொலை என்ற நிலை வந்துவிட்டது:((

  "...இந்த உலகமே உன்னை உற்றுப் பார்க்கும் – தன்னம்பிக்கை." அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 34. வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா...

  பதிலளிநீக்கு
 35. தலைப்பிற்கேற்றாற் போல ஒவ்வொரு செய்தியும் ஒரு கருத்தை சொல்வது சிறப்பு. கோபத்தின் மூல காரணம் இயலாமை மற்றோருக்குத் தெரிந்ததின் காரணமாக ஏற்படும் ஒருவித மனச்சிதைவு நோயாகுமென எங்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவர் ஒருவர் கூறிய கருத்து .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அட்சயா.

   நீக்கு
 36. மனதை இறைவன் பால் திருப்பினால், மனஅழுத்தம் குறையும், தன்னம்பிக்கை வரும், பயம் போகும், குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது.

  தினம் வயிற்று பாட்டுக்கே கஷ்டம் என்பவர்களும், பணம் மட்டுமே வாழ்க்கை என்பவர்களும், வாழ்க்கையை புரிந்து கொள்ளாதவர்களும் நிறைந்து இருக்கும் உலகில் இந்த மாதிரி குற்றங்களை தவிர்க்க முடியாது.
  மக்கள் மனநிறைவுடன் மகிழ்ச்சியாக வாழ இறைவனை வேண்டுவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இறைவனை வேண்டுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்....

   தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....