[மீண்டும் அழைத்தது மத்தியப் பிரதேசம் – பகுதி 8]
என்ன
நண்பர்களே பாந்தவ்கர் விலங்குகள் பூங்கா செல்ல தயாராயிட்டீங்களா? நாங்களும் காலையிலே
எழுந்து குளித்து, காலை உணவு உண்டு எங்களுக்கான பேருந்தில் அமர்ந்து விட்டோம்.
ஜபல்பூரிலிருந்து பாந்தவ்கர் செல்லும் தூரம் சற்றே அதிகம் தான். அதாவது 190 கிலோ
மீட்டர். தில்லியிலிருந்து நேராக இங்கே செல்வதென்றால் ”கட்னி” என்ற ரயில்
நிலையத்தில் இறங்கினால், அங்கிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவு தான்.
வழி நெடுக
ஊர்களே இல்லாத வெறும் பொட்டல் காடுகள். மொத்தப் பயணத்தில் வந்த கிராமங்களை விரல்
விட்டு எண்ணி விடலாம். பேருந்தில் ஜன்னலோரத்தில் அமர்ந்து விதவிதமான மனிதர்களைப்
பார்த்து வரலாம் என்ற எண்ணம் இருந்தால் அது நிறைவேறாது. பாதையும் அவ்வளவு நன்றாக
இல்லை. காரணம், பல இடங்களில் பாதை வனங்களுக்கு நடுவே செல்வதால் அவைகளை நல்ல
பாதையாக மாற்ற வன இலாகா அனுமதி தருவதில்லை.
வெளியே
பார்க்க ஒன்றும் இல்லாத காரணத்தினால், பேருந்து உள்ளேயே ஒலிவாங்கி மூலம் நகைச்சுவை
துணுக்குகள் சொல்லியும், பாடல்களை பாடியும் பொழுது போக்கிவிட்டு சுமார் ஐந்து மணி
நேரம் பயணம் செய்து மதியம் ஒரு மணிக்கு பாந்தவ்கர்
சென்றடைந்தோம். நேராக நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ”White Tiger
Forest Lodge” சென்று அறைகளில் பொருட்களை வைத்து விட்டு மதிய உணவு உண்டோம்.
பாந்தவ்கர்
விலங்குகள் பூங்கா 450 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. நான்கு
பகுதிகளாகப் பிரித்து திறந்த ஜீப்பில் சுற்றுலாப் பயணிகளை அங்கு அழைத்துச்செல்கிறார்கள். நாளொன்றுக்கு இரண்டு முறை பயணம் – காலை 06.30 – லிருந்து
10.30 வரை ஒரு முறையும், மதியம் 02.15 லிருந்து மாலை 05.15 வரை ஒரு முறையும்
காட்டுக்குள் செல்ல அனுமதி தருகிறார்கள்.
நாங்கள் சென்ற
அன்று, முதலில் மதிய நேர வனப் பயணம் சென்றோம். ஒரு வாகனத்திற்கு ஆறு சுற்றுலா
பயணிகள், கூடவே ஒரு வன இலாகா அதிகாரி மற்றும் ஓட்டுனர் நம்முடன் வருகிறார்கள்.
நாங்கள் நிறைய பேர் இருந்ததால் ஆறு வாகனங்களில் பயணம் செய்தோம். மொத்தம் மூன்று
மணி நேரம் வனப் பயணத்தில் சர்வ சாதாரணமாக பாதை ஓரத்தில் அமர்ந்திருந்த எண்ணிலடங்கா மான்களை கண்டு ரசிக்க முடிந்தது. நிறைய பறவைகளையும்
அவைகள் எழுப்பிய ஓசைகளை கண்டும் கேட்டும் காடு முழுக்க நிரம்பியிருக்கும் பல வித
மரங்களையும் ரசித்தபடியும் பயணித்தோம்.
வன அதிகாரி
பயணிகள் அனைவரும் பேசாமல் இருந்தால் தான் விலங்குகளைப் பார்க்க முடியும் என்று அடிக்கடி பேசினார். ஆங்காங்கே நிறுத்தி மான் கூட்டங்களைக் காண்பித்தும் அவற்றின் பழக்க
வழக்கங்களைப் பற்றியும் சொல்லிக் கொண்டே வந்தார். மான்களின் உயிர் நண்பன் யார்
தெரியுமா? குரங்குகளாம்! மான்களின் எதிரிகளான புலிகள் வரும்போது உயரமான மரத்தில்
அமர்ந்திருக்கும் குரங்குகள் எழுப்பும் சத்தத்தில் மான்கள் தங்களுக்கு ஆபத்து
நெருங்குவதைத் தெரிந்து கொண்டு ஓட ஆரம்பிக்கும் எனவும், காட்டிக்கொடுத்து
விடுவதால் புலிகளுக்கு குரங்குகள் தான் எதிரி என்றார்.
பாதையை
மிகவும் கவனமாகப் பார்த்தபடியே வந்து கொண்டிருந்தவர் ஒரிடத்தில் திடீரென வண்டியை
நிறுத்தச் சொன்னார். மண் பாதை ஓரத்தில் நிறைய காலடித்
தடங்கள்… யாருடைய தடங்கள் என கூர்ந்து கவனித்து, பிறகு சொன்னார், “இவை புலிகளுடைய
காலடித் தடங்கள். இப்போதுதான் புலிகள் இவ்வழியாகச் சென்றிருக்க வேண்டும்”! அடடா... புலிகளுக்கு எங்களைப் பார்க்கக் கொடுத்து
வைக்கவில்லையே!
இந்த
பாந்தவ்கர் காடுகள் உள்ளே ஒரு பெரிய கோட்டையும் இருக்கிறது. ரேவா நகரத்தின்
மன்னர்கள் ஆண்ட கோட்டை இது. வ்யாக்ரா தேவ் என்ற வகேலா [குஜராத்] அரசனின் புதல்வன்
ராஜா கரன் தேவ் அவர்களுக்கு கல்யாண சீதனமாக வந்த கோட்டை இது. ரத்தன்பூர் ராஜாவின்
மகளைத் திருமணம் செய்து கொண்டபோது ராஜா கரன் தேவ் அவர்களுக்கு இந்தக் கோட்டையை
சீதனமாகக் கொடுத்தார்களாம். பிறகு கோட்டை முகலாயர்கள் வசம் வந்தது.
காட்டுக்குள்ளே
இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஒரே பதிவில் அவைகளை சொல்ல நினைத்தால் நன்றாக
இருக்காது. அதனால் சில பகுதிகளாக பிரித்து படிக்கலாமே!
மீண்டும்
சந்திப்போம்….
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.
பின் குறிப்பு: 08.06.2012 அன்று வல்லமையில் வெளிவந்தது.
ரசித்தேன்.
பதிலளிநீக்குவருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஐயா.
நீக்கு//வன அதிகாரி, பயணிகள் அனைவரும் பேசாமல் இருந்தால் தான் விலங்குகளைப் பார்க்க முடியும் என்று அ டி க் க டி ப் பே சி னா ர்.//
பதிலளிநீக்கு//அடடா... புலிகளுக்கு எங்களைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே!//
;) நல்ல நகைசுவையான பயணக்கட்டுரை. பாராட்டுக்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. சார்.
நீக்குசுவை மிகு பயணம்! அருமை!
பதிலளிநீக்குத ம ஓ 2
சா இராமாநுசம்
வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி புலவரே....
நீக்குகாட்டுக்குள்ளே திருவிழா!!!!!!
பதிலளிநீக்குஅபாயம் வருதுன்னு எச்சரிக்கைகளைப் பறவைகளும் செய்யும்.
காடும் விலங்குகளும் பார்க்க அலுப்பதே இல்லை. அது ஒரு தனி உலகம்!
புலிப்பாதம் படம் துல்லியம்! ரசித்தேன்.
//காடும் விலங்குகளும் பார்க்க அலுப்பதே இல்லை. அது ஒரு தனி உலகம்!//
நீக்குஉண்மைதான். இன்னும் சில மணி நேரம் அங்கேயே இருக்கமாட்டோமா என்று தோன்றியது. ஆனால் இருக்க முடியாது....
வருகைக்கும் பதிவினையும், படங்களையும் ரசித்து கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி துளசி டீச்சர்.
அடடா... புலிகளுக்கு எங்களைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே!
பதிலளிநீக்குபாவம் புலிகள் !
பாவம் தான்.... :)))
நீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.
என்னது ராஜாவோட பேர் வயாகரா தேவா? அந்தக் காலத்துலயேவா..? இயற்கையான வனச் சூழல்ல விலங்குகளை ரசிச்சபடி சுற்றுலா போறது அருமையான விஷயம். உங்களின் ரசனையான எழுத்தில் படிக்க சுவை. தொடர்கிறேன்.
பதிலளிநீக்கு//என்னது ராஜாவோட பேர் வயாகரா தேவா? அந்தக் காலத்துலயேவா..? // :)))
நீக்கு//இயற்கையான வனச் சூழல்ல விலங்குகளை ரசிச்சபடி சுற்றுலா போறது அருமையான விஷயம்.//
அங்கேயே இருந்துடலாமான்னு கூட தோன்றியது... இரண்டு கால் விலங்குகளை அங்கே இருக்க விடறதில்லையாம்... :)))
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.
மேலே உள்ள பதில் para-wise reply-ஆ?
நீக்குஅப்படித்தான் வச்சிக்கோயேன் சீனு... :)
நீக்கு// வழி நெடுக ஊர்களே இல்லாத வெறும் பொட்டல் காடுகள். //
பதிலளிநீக்குஎனக்கு இது போன்ற இடங்களில் பகல் நேர பயணம் செய்ய மிகவும் பிடிக்கும். ஏதோ வேற்றுக் கிரகத்தில் பயணிப்பது போல் இருக்கும்
// என்று அடிக்கடி பேசினார்.//
ஹா ஹா ஹா
காட்டுக்குள் பயணிக்க தயாராய் இருக்கிறேன்
//எனக்கு இது போன்ற இடங்களில் பகல் நேர பயணம் செய்ய மிகவும் பிடிக்கும். ஏதோ வேற்றுக் கிரகத்தில் பயணிப்பது போல் இருக்கும் //
நீக்குஆமாம் அது ஒரு வித்தியாசமான அனுபவம் தான்....
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு.
arumai!
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.
நீக்கு//வன அதிகாரி பயணிகள் அனைவரும் பேசாமல் இருந்தால் தான் விலங்குகளைப் பார்க்க முடியும் என்று அடிக்கடி பேசினார். //
பதிலளிநீக்கு:))
பெங்களூரில் இத்தகைய பார்க் சென்றுள்ளோம். செம அனுபவம் !
//பெங்களூரில் இத்தகைய பார்க் சென்றுள்ளோம். செம அனுபவம் !//
நீக்குசிறு வயதில் பெங்களூர் வனவிலங்கு சரணாலயம் சென்றிருக்கிறேன். ஆனால் விலங்குகள் கூட்டுக்குள்தான் இருக்கும். இப்போது எப்படியோ?
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன்.
ஓ! புலிகளைப் பார்க்க முடியவில்லையா?
பதிலளிநீக்குரேவா காடுகளின் வெள்ளைப் புளிகளின் வழித் தோன்றல்கள் தான் இன்று உலகில் உள்ள அத்தனை வெள்ளைப் புலிகளுக்கும் மூதாதையர். ‘மோஹன்’ என்ற இந்த ரேவா வெள்ளைப்புலியின் மூலம் தான் உலகில் மற்ற் இடங்களிலும் வெள்ளைப் புலிகளின் வம்சம் விருத்தி செய்யப்பட்டது. வெள்ளைப் புலிகளின் தந்தை என்றே இந்த ‘மோஹன்’-னுக்குப் பெயர்.
மூன்று நான்கு மாதங்களுக்கு முன் இது பற்றி ஹிந்து-வின் ’யங் வேர்ல்ட்’-ல் ஒரு கட்டுரை வந்தது.
வெள்ளைப் புலிகள் இங்கேயிருந்து தான் தோன்றின என்றாலும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன என்பது தான் சோகம் சீனு....
நீக்குஇன்னும் ஹிந்து தான் வாங்கறியா? [க்ராஸ் வர்ட் போடறது இன்னும் விடலையா? :))]
வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.
//இன்னும் ஹிந்து தான் வாங்கறியா? [க்ராஸ் வர்ட் போடறது இன்னும் விடலையா? :))]//
நீக்குஆமாம், இன்னும் ஹிந்து தான். மேலிடத்திலிருந்து ’எப்போ பார்த்தாலும் paper-ஐ வைச்சுண்டிருப்பீர்களா’ என்று words cross ஆகும் வரை போடுவது உண்டு.
//மேலிடத்திலிருந்து ’எப்போ பார்த்தாலும் paper-ஐ வைச்சுண்டிருப்பீர்களா’ என்று words cross ஆகும் வரை போடுவது உண்டு.//
நீக்குமேலிடத்து உத்தரவினை நிச்சயம் தட்டக்கூடாது... தட்டினால் அவ்வளவு தான் - அடுத்த வேளை சாப்பாட்டிற்குத் திண்டாட்டம் தான். :)))
புலிகளின் காலடித் தடயம் ரசிக்க வாய்ப்பு கிடைத்ததே ... பெரிய விஷயம் . பகிர்வுக்கு நன்றி .
பதிலளிநீக்குபாலோயர் வச்சிட்டேன்க நண்பர் உதவியுடன் .
தென்றலுக்கு வருக
http://veesuthendral.blogspot.com/2012/06/blog-post_13.html
//பாலோயர் வச்சிட்டேன்க நண்பர் உதவியுடன் .
நீக்குதென்றலுக்கு வருக //
அட சேர்த்தாச்சா? நல்லது! இதோ ஃபாலோ பண்ணிடறேன்..
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா....
Tha.ma.5
பதிலளிநீக்குதமிழ்மண வாக்கிற்கு மிக்க நன்றி சசிகலா.
நீக்குபாதையை மிகவும் கவனமாகப் பார்த்தபடியே வந்து கொண்டிருந்தவர் ஒரிடத்தில் திடீரென வண்டியை நிறுத்தச் சொன்னார். மண் பாதை ஓரத்தில் நிறைய காலடித் தடங்கள்… யாருடைய தடங்கள் என கூர்ந்து கவனித்து, பிறகு சொன்னார், “இவை புலிகளுடைய காலடித் தடங்கள். இப்போதுதான் புலிகள் இவ்வழியாகச் சென்றிருக்க வேண்டும்”! அடடா... புலிகளுக்கு எங்களைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே!
பதிலளிநீக்குபுலியைப் பார்த்தால அது தன் பதிவைப் போட்டிருக்கும்
//புலியைப் பார்த்தால அது தன் பதிவைப் போட்டிருக்கும்//
நீக்குபதிவெழுதற புலியா இருந்த வந்திருக்கும்... இது பதிவெழுதாத புலி போல :))
வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்.
//புலியைப் பார்த்தால அது தன் பதிவைப் போட்டிருக்கும்//
நீக்குபதிவு போடுதோ இல்லையோ, பிடரியில் போடும்.
//பதிவு போடுதோ இல்லையோ, பிடரியில் போடும்.//
நீக்குஅதானே... :)))
கட்னியை என் கண்கள் சட்னியாகப் படித்தன!
பதிலளிநீக்குமான்-குரங்கு நட்பை டிஸ்கவரி சேனலில் பார்த்திருக்கிறேன்!
அடடா.... தங்கள் படத்தை நாங்கள் பார்க்கும் பாக்கியத்தை அந்தப் புலிகள் பெறவில்லையே!
//கட்னியை என் கண்கள் சட்னியாகப் படித்தன!//
நீக்கு:))
//மான்-குரங்கு நட்பை டிஸ்கவரி சேனலில் பார்த்திருக்கிறேன்!//
இந்த சேனலில் வரும் காணொளிகளை எடுத்தவர்களுக்குத்தான் எத்தனை பொறுமை. சில காணொளிகள் எடுக்க, பல நாட்கள் ஆகுமாம்.....
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
புலிகளின் கால்தடம் பூ மாதிரி என்னவொரு அழகு!
பதிலளிநீக்குதடம் பதித்துப் போனபின் அழகுதான். பாயும்போது :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.
உங்களுடன் சேர்ந்து நானும் பயணித்தேன்.அருமை.த.ம.7
பதிலளிநீக்குஎனது கூடவே பயணம் செய்யும் உங்களுக்கு எனது நன்றிகள் சென்னை பித்தன் ஐயா.
நீக்குதொடர் வருகைக்கும், பின்னூட்டங்களுக்கும் தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி.
நாங்களே நேரில் பார்ப்பது போல் இருக்கிறது. முன் பதிவுகளை இனிமேல்தான் படிக்கப் போகிறேன்.
பதிலளிநீக்குதங்களது ஊக்கத்திற்கு மிக்க நன்றி முரளீதரன்.
நீக்குமுன்பதிவுகளையும் படித்து பின்னூட்டமிடுங்களேன்...
வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
புலியின் கால்தடங்கள்
பதிலளிநீக்குவீட்டில் பாதுகாப்பாக அமர்ந்து பார்ப்பதற்கு
பூ போல அழகாகத்தான் இருக்கிறது
படங்களும் பதிவும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குTha.ma 8
பதிலளிநீக்குதமிழ்மணத்தில் எட்டாம் வாக்களித்த உங்களுக்கு நன்றி.
நீக்குபயணக் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பாராட்டுக்கள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி ருக்மணிம்மா....
நீக்குபயணக் குறிப்பு பண்டிதரே! சுவையான பதிவு.. தொடருங்கள்..
பதிலளிநீக்கு//பயணக் குறிப்பு பண்டிதரே! //...
நீக்குஅண்ணா இது கொஞ்சம் அதிகமாத் தோணுது எனக்கு... :))
தங்களது வருகைக்கும் சுவையான கருத்திற்கும் மிக்க நன்றி மோகன்ஜி அண்ணா!
//வெள்ளைப் புலிகளின் வம்சம் விருத்தி செய்யப்பட்டது. வெள்ளைப் புலிகளின் தந்தை என்றே இந்த ‘மோஹன்’-னுக்குப் பெயர்.//
பதிலளிநீக்குஇந்த ஹிண்டு கட்டுரை எனக்குப் புதுச்செய்தி.
அதானா..... ஒரு பனிரெண்டு வருசங்களுக்கு முன்பு போன குவீன்ஸ்லேண்ட் பயணத்தில் Dreamworld போனோம். அங்கே வெள்ளைப்புலிகள் குடும்பம் ரொம்பவே பெருசு. பெயர்களைச்சொல்லி அறிமுகம் செஞ்சப்ப ஒருத்தரை மோஹான் மோஹான்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. நம்ம மோஹனைத்தான் புலிக்கான வெள்ளைக்காரக் காப்பாளர் இப்படிச் சொல்றாரேன்னு சிரிச்சோம்.
சீடா(சீதா) சல்ட்டான் (சுல்தான்) தாஜ் என்று மேலும் மூவர் மோஹானுடன் சேர்ந்து நம்ம கண்களுக்கு அருமையான விருந்து படைச்சாங்க:-))))
அப்போ எனக்குப் பதிவுலகம் தெரியலை என்பது உங்க அதிர்ஷ்டம்:-))))
//சீடா(சீதா) சல்ட்டான் (சுல்தான்) தாஜ் என்று மேலும் மூவர் மோஹானுடன் சேர்ந்து நம்ம கண்களுக்கு அருமையான விருந்து படைச்சாங்க:-))))//
நீக்குஅடாடா என்னவொரு சுவையா இருந்திருக்கும் அந்த அறிமுகம்....
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
http://youtu.be/7FrjH-tFwTo
பதிலளிநீக்குகாணொளி பார்த்து ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி டீச்சர்.
நீக்குThrilling experience to be shared with!
பதிலளிநீக்குஆமாம் சுவையான அனுபவம் தான் இது.
நீக்குவருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆர்.ஆர்.ஆர்.
சுவாரஸ்யமான பகிர்வு. புலிகள் கண்ணுக்குக் கிடைக்காவிட்டாலும் காலடித் தடங்களைக் கேமராவில் பதிந்திருப்பது அழகு.
பதிலளிநீக்குதடத்தினையாவது படம் எடுக்கலாமே என அந்த வாகனத்தினை நிறுத்தி படம் எடுத்தேன்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
அடுத்த பதிவில் புலி வருமா? ஆவலுடன் காத்திருக்கிறோம்.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமரன்.
நீக்குbucket listல் சேர்த்திருக்கிறேன். தகவல்களுக்கு தேங்க்ஸ்.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அப்பாதுரைஜி.....
நீக்குகொஞ்சம் நேரம் மறைஞ்சிருந்தீங்கன்னா புலிக்கால் செருப்போட காட்டிலாகா ஊழியர் நாலு பேர் மணல்ல நடந்து போறதையும் பிடிச்சிருக்கலாம் :)
பதிலளிநீக்கு//கொஞ்சம் நேரம் மறைஞ்சிருந்தீங்கன்னா புலிக்கால் செருப்போட காட்டிலாகா ஊழியர் நாலு பேர் மணல்ல நடந்து போறதையும் பிடிச்சிருக்கலாம் :)//
நீக்குதங்களது சுவையான கருத்துரையை ரசித்தேன்.... :)
இரண்டாம் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரைஜி!
கண்டு மகிழ்ந்தோம்.
பதிலளிநீக்குகாட்டுக்குள்ளே போகும்போது இருக்கும் சந்தோசம் பயணமுடிவில் இன்னும் சுற்றலாமே என்ற எண்ணத்தைத்தான் தரும்.
//காட்டுக்குள்ளே போகும்போது இருக்கும் சந்தோசம் பயணமுடிவில் இன்னும் சுற்றலாமே என்ற எண்ணத்தைத்தான் தரும்.//
நீக்குஅட ஆமாங்க.....
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.
Interesting accounts of the forest
பதிலளிநீக்குவருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி lightgreen....
நீக்கு“இவை புலிகளுடைய காலடித் தடங்கள். இப்போதுதான் புலிகள் இவ்வழியாகச் சென்றிருக்க வேண்டும்”! அடடா... புலிகளுக்கு எங்களைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே!//
பதிலளிநீக்குகொடுத்து வைக்க வில்லையே! ரசித்தேன்.
காட்டுக்குள் அற்புத உலகம் இருக்கிறது. மானுக்கு உதவி செய்யும் குரங்கு!
கடவுளின் படைப்பில் எத்த்னை எத்தனை விநோதங்கள்!
பயணம் அருமை.
காட்டுக்குள் அற்புத உலகம் இருக்கிறது.... உண்மை தாம்மா. அதை மனிதன் அழிக்காதவரை நல்லது தான்.
நீக்குதங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.