புதன், 20 ஜூன், 2012

மகிழ்ச்சித் தீயும் சிரிப்பொலியும்[மீண்டும் அழைத்தது மத்தியப் பிரதேசம் – பகுதி 9]காட்டுக்குள்ளே நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்று போன பதிவில் சொன்னேன். இங்கே 2001 – ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அறுபதிற்கும் மேலான புலிகள் இருக்கின்றன என்ற தகவலையும் சொன்னார் வன இலாகா அதிகாரி.

முதல் நாளில் மூன்று மணி நேர வனப் பயணம் சென்று காணக் கிடைக்காத புலியை அடுத்த நாள் காலையில் நான்கு மணி நேரம் செல்லப்போகும் பயணத்திலாவது பார்த்துவிட மாட்டோமா என்ற எண்ணத்தோடு காட்டிலிருந்து வெளியே வரும்போதே இருட்டி விட்டது. குளிர் காலம் என்பதால் ஆதவன் சீக்கிரமே மறைந்து விடுகிறான். வேறு எந்த வேலையுமில்லை என வந்ததால் எங்களுக்காக ஒரு ஆவணப் படம் காண்பிக்க ஏற்பாடு செய்திருந்தார் விடுதி மேலாளர்.
[”இவ்வளவு கிட்டக்க எடுத்தீங்களா, தைரியம் தான்” என்று சொல்வோருக்கு, ஆவணப்படத்தில் வந்த புலியை எடுத்த புகைப்படம் இது என்று சொல்லி விடுவது நல்லது - இப்படிக்கு உண்மை விளம்பி!]


பாந்தவ்கர் காடுகளில் உள்ள விலங்குகள், அதிலும் குறிப்பாக, புலிகள் பற்றிய ஆவணப்படம் இது. ஒரு யானைப்பாகன் மற்றும் அவனது மகன் மூலம் கதை சொல்லிப் போகிறார்கள். ஒவ்வொரு புலியும் தனது அதிகாரப் பரப்பு என்று வைத்துக்கொள்ளுமாம்.  அதற்காக மரங்களில் தனது கூரிய நகம் கொண்டு அடையாளம் செய்து வைக்குமாம். அந்த அடையாளம் பார்த்து மற்ற புலிகள் பெரும்பாலும் வருவதில்லை. மீறி சில மூர்க்க புலிகள் வந்தாலும் அவற்றுக்குள் பயங்கர சண்டை வரும் என்றும் சொல்கிறார் யானைப் பாகன். [புலியைத் தேடும் பணியில் யானைப் பாகன்]


அவரது மகனையும் யானை மீது உட்கார வைத்து தனது தொழிலைப் பழக்குகிறார். யானையைக் குளிப்பாட்டுவது முதல் எல்லாவற்றிலும் மகன் கூடவே இருக்கிறார். புலிகளைப் பற்றி நிறைய விஷயங்கள் சொல்லிப்போனது ஆவணப் படம். படம் பார்த்த பிறகு, இரவு உணவு உண்டு அடுத்து என்ன என்று யோசனையுடன் அறைக்குச் செல்லும் போது பார்த்தால் விறகுகளை குமித்து வைத்து மகிழ்ச்சித் தீக்கான [அதாங்க! BONFIRE] ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தது.

அன்று லோடி [Lohri] எனும் பண்டிகை என்பதால் கூடுதல் சந்தோஷம். நமது ஊரில் போகி கொண்டாடுவது போலவே வட இந்தியாவில் லோடி கொண்டாடுவர். நிலவொளியில் இப்படி விறகுகளை குமித்து வைத்து, அதற்குத் தீமூட்டி, வேர்க்கடலை, ரேவ்டி [எள்ளும், வெல்லமும் கலந்த மிட்டாய்] போன்றவற்றை அக்னிதேவனுக்குப் படைத்து தீயைச் சுற்றி வலம் வந்து ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று களிப்படைவார்கள். அதனால், நிறைய ரேவ்டி, வேர்க்கடலை, எல்லாம் வாங்கி வைத்து தீ மூட்டி, தீயைச் சுற்றி வந்து ஆட்டமும் கொண்டாட்டமும் ஆரம்பித்தது.[கடும் குளிருக்கு இதமாய்....]

எல்லோரும் ஏதாவது ஒரு பாடல் பாடியோ, நகைச்சுவை சொல்லியோ, மிமிக்ரி செய்தோ அந்த மாலைப் பொழுதை இனிமையாக்க வேண்டுமென முடிவு செய்தோம். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விஷயத்தினைச் செய்தார்கள். பல பழைய ஹிந்திப் பாடல்கள், ஒரு மலையாளப் பாடல், பஞ்சாபி பாங்க்ரா நடனம், பல நகைச்சுவை துணுக்குகள் பரிமாற்றம் என நேரம் போவது தெரியாமல் மகிழ்ச்சி பரவிக் கொண்டிருந்தது. 

அந்தத் தீயும் குளிருக்கு இதமாக இருந்ததால் அறைக்குள் செல்ல எவருக்கும் மனமில்லை. ஒரு வழியாக இரவு பன்னிரெண்டு மணிக்கு அவரவர் அறைகளுக்குச் சென்றோம். காலை 06.00 மணிக்கே காட்டுக்குள் மீண்டும் செல்ல வேண்டும் என்பதால் நான் சென்று சற்று நேரமாவது உறங்குகிறேன். நீங்களும் வருவதென்றால், குளிருக்குத் தகுந்த உடையோடு காத்திருங்கள் – காட்டிலே குளிர் நடுக்கி எடுத்துவிடுமாம்! :)

மீண்டும் காலையில் புலிவேட்டையில் சந்திப்போம்.

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.பின் குறிப்பு: 15.06.2012 அன்று வல்லமையில் வெளிவந்தது.

46 கருத்துகள்:

 1. காட்டுக்குள்ளே திருவிழா...பாடல் நினைவுக்கு வருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி கே.பி.ஜனா சார்.

   நீக்கு
 2. //மீண்டும் காலையில் புலிவேட்டையில் சந்திப்போம்.//

  தங்களின் இந்தப்பயணக்கட்டுரை மிகவும் THRILLING ஆகவே உள்ளது.
  தொடருங்கள். பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை. கோ. சார்.

   நீக்கு
 3. மகிழ்ச்சித் தீயும் சிரிப்பொலியும் எங்களுடைய பழைய bachelor வாழ்கையின் ஒளியும் ஒளியுமாக பிரதிபலித்தது. மிக்க நன்றி
  அன்புடன்

  விஜய்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //மகிழ்ச்சித் தீயும் சிரிப்பொலியும் எங்களுடைய பழைய bachelor வாழ்கையின் ஒளியும் ஒளியுமாக பிரதிபலித்தது//

   அதுவும் தில்லியில் இருந்த அந்த இனிமையான bachelor நாட்கள் நிச்சயம் மகிழ்ச்சி தரக் கூடியதுதான்.... :)))

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி விஜயராகவன் சார்.

   நீக்கு
 4. பதில்கள்
  1. ஆஹா.... என்ன த்ரில் தெரியுமா? கேமரா லென்ஸ் வழியா புலி பாய்ந்து வந்த மாதிரி இருந்தது! :))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்....

   நீக்கு
 5. பதில்கள்
  1. தயாராயிட்டீங்களா.... சரி... அடுத்த பதிவில் செல்வோம்...

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 6. புலி தனது எல்லையை உணர்த்த சிறுநீர் கழித்து இது என் ஏரியா என்று உணர்த்தும் என்று படித்திருக்கிறேனா, டிஸ்கவரி சேனலில் பார்த்திருக்கிறேனா ஞாபகமில்லை! 'லோரி'யா 'லோடி'யா? லொறி என்றால் தாலாட்டு என்று நினைவு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த சிறுநீர் கழிக்கும் ஐடியாவும் உண்டு. நாள்பட இருக்கவேண்டும் என்பதால் மரத்தில் கீறி வைக்கும் ஐடியா போல!

   எழுதும்போது Lohri என்று எழுதினாலும் படிக்கும் போது லோடி என்று தான் படிப்பார்கள். தாலாட்டிற்கு லோரி தான்!

   தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  2. லோரி [lori-लोरि] என்றால் தாலாட்டு
   லோஹ்ரி [lohri - लोह्रि] (லோடி என்று பஞ்சாபியர் உச்சரிப்பர்; சண்டிகர் என்று எழுதியதை சண்டிகட் என்றும் குர்காவ்(ன்) என்பதை குட்காவ்(ன்) என்றும் உச்சரிப்பதைப் போல்) என்பது பஞ்சாபியரின் பண்டிகை. அது தில்+ரோர்ஹி (எள், வெல்லம்] என்ற இரண்டு வார்த்தைகள் இணைந்து உருவாகி மறுவியது என்றும் கூறுவர்.

   btw வெங்கட் ஆறு மாதம் முன்னாள் நடந்ததை இன்னும் நினைவில் வைத்து எழுதுகிறாயா (அல்லது) முன்னரே எழுதி இப்பொழுது வெளியிடுகிறாயா (அல்லது) குறிப்புகள் வைத்துக் கொண்டு எழுதுகிறாயா? (தொழில் ரகசியம்!!!)

   நீக்கு
  3. ஜனவரியில் சென்றது. மார்ச்-ல் எழுதி வைத்தேன். ஏப்ரலில் வெளியிடத் துவங்கினேன், வாரம் ஒரு பதிவென.... காரணம் உனக்குத் தெரிந்த என் சோம்பல் தான்! :)) தொழில் ரகசியம் எல்லாம் ஒன்றும் இல்லை... நினைவில் இருக்கும் எல்லாவற்றையும் கோர்த்து எழுதும்போது மற்றவையும் தானாக வந்து சேர்ந்துவிடும்...

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிடா சீனு [வெங்கட ஸ்ரீனிவாசன்]

   நீக்கு
 7. இன்னிக்கு முழுக்க ஆணி அதிகம் அதான் லேட்

  Bonfire-ல் நீங்க என்ன பண்ணீங்க. பாட்டு? டான்ஸ்?

  யானை பாகன் எப்படி புலியை பற்றி சொல்றார்? அதை தேடி போறார்?

  இந்த பதிவு சைஸ் சரியா இருந்தது. பொதுவா ரொம்ப சின்னதா பதிவு போட்டுடுவீங்க. இப்படியே மெயின்டைன் பண்ணுங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இந்த பதிவு சைஸ் சரியா இருந்தது. பொதுவா ரொம்ப சின்னதா பதிவு போட்டுடுவீங்க. இப்படியே மெயின்டைன் பண்ணுங்க//

   பெரிசாத்தான் எழுதணும்... நீங்க சொன்னதை மனசுல வைச்சுக்கிறேன் மோகன்....

   வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்.

   நீக்கு
 8. இந்த லோரி என்ற வார்த்தைக்கு நினைவு வந்த பாட்டைச் சொல்லணுமே.....! சஷி கபூர் நடித்த முக்தி திரைப்படத்தில் முகேஷ் பாடிய 'லல்லா லல்லா லோரி..' என்ற அருமை ஆர் டி பர்மனின் இசையமைப்பில் வந்த பாடல் நினைவுக்கு வந்தது. அருமையான பாடல்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக இனிமையான பாடல் அது.... மீண்டும் கேட்க வேண்டும்... யூ ட்யூபில் தேடுகிறேன்....

   தங்களது இரண்டாம் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 9. எங்களையும் உடன் அழைத்து சென்றது போன்ற எதார்த்தப் பகிர்வு..

  பதிலளிநீக்கு
 10. தங்கள் ஒவ்வொரு நகர்விலும் எங்களையும் கூடவே அழைத்துச் செல்வது அருமை. நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுவது என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். உங்கள் பயணத்தில் நானும் நிஜமாகவே இருப்பது போல் ஒரு உணர்வு. நாளை கலை புலி வேட்டைக்குத் தயாராகி விட்டேன், சீக்கிரம் தூங்கி எழுந்து வாருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //தங்கள் ஒவ்வொரு நகர்விலும் எங்களையும் கூடவே அழைத்துச் செல்வது அருமை.//

   கூடவே நீங்கள் எல்லோரும் வருவதில் எனக்கும் பெருமை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   நீக்கு
 11. மிக இயல்பாக வர்ணித்திருக்கிறீர்கள் புலிக்கான தேடல் பயணத்தை. தற்போது அழிந்துவரும் இனமாகவன்றோ உள்ளது புலிகள் இனம். அதனால் உங்களுட்ன் புலியின் தரிசனத்திற்கு வர நானும தயாராகி விட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இவ்வளவு கம்பீரமாக நடந்து வரும் புலிகள் இனம் அழிந்து வருகிறதே என்ற கவலை எனக்குமுண்டு கணேஷ்...

   தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. புலி வேட்டையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இத்தொடரின் அடுத்த பாகங்கள் ஒவ்வொரு புதன் கிழமையும் எனது பக்கத்தில் வெளிவரும் நண்பரே.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   நீக்கு
 13. வழக்கம் போல் இனிமை !

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி புலவரே....

   நீக்கு
 14. லோடி பண்டிகை பற்றிய தகவல் புதிது.

  படங்களும் பகிர்வும் நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 15. காட்டுக்குள்ளே எங்களையும் கூட்டிச் சென்று அழகாக காட்டுகிறீர்கள். காட்டு காட்டு என்று காட்டுவது என்பது இதுதானோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //காட்டு காட்டு என்று காட்டுவது என்பது இதுதானோ!//

   அண்ணாச்சி.... :)))

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்].

   நீக்கு
 16. 10 வருடம் வனக்காவலராய் இருக்கும் ஒருவர் இது வரை புலியை பார்த்தத்ல்லை என்று சொன்னார். லக் வேண்டும் போல்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //லக் வேண்டும் போல்..//

   உண்மை.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

   நீக்கு
 17. ஒவ்வொரு புலியும் தனது அதிகாரப் பரப்பு என்று வைத்துக்கொள்ளுமாம். அதற்காக மரங்களில் தனது கூரிய நகம் கொண்டு அடையாளம் செய்து வைக்குமாம். அந்த அடையாளம் பார்த்து மற்ற புலிகள் பெரும்பாலும் வருவதில்லை. மீறி சில மூர்க்க புலிகள் வந்தாலும் அவற்றுக்குள் பயங்கர சண்டை வரும் ஆர்வம் கூடிப்போனது . சொல்லிச் சென்ற விதம் அருமை .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா.....

   நீக்கு
 18. முதல் முறையாக தளத்திற்கு வந்து பதிவுகளை வாசித்தேன். அருமை!

  நன்றி!
  http://atchaya-krishnalaya.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள் அட்சயா...

   உங்களது பக்கத்திற்கு வருகிறேன்....

   நீக்கு
 19. காட்டருகில் லோஹ்ரி கொண்டாட்டமா?அந்தக் குளிரில்,தீயின் அருகில்,கடலை ,எள் மிட்டாய் சாப்பிட்டபடி !ஆகா!நல்ல அனுபவம்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்... மிக மிக இனிமையான அனுபவம் அது...

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   நீக்கு
 20. என்னங்க இது.. புலி வருது கதையா?
  'half the zoo visitors were outside the cage' என்று காரணமில்லாமல் நினைவுக்கு வருது :)

  பதிலளிநீக்கு
 21. புலி வேட்டை வாசிக்க ரெடி...மற்றவையும் வாசிப்பேன். மிக சுவையாக உள்ளது. நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது தொடர் வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி வேதா இலங்காதிலகம்....

   நீக்கு
 22. //'half the zoo visitors were outside the cage'//

  பாதி zoo-ல அப்படித்தான்... ‘குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்” என்பதை அவ்வப்போது நினைவுபடுத்துகிறார்கள்.... :)))

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை....

  பதிலளிநீக்கு
 23. போகி கொண்டாடுவது போலவே வட இந்தியாவில் லோடி கொண்டாடுவர். நிலவொளியில் இப்படி விறகுகளை குமித்து வைத்து, அதற்குத் தீமூட்டி, வேர்க்கடலை, ரேவ்டி [எள்ளும், வெல்லமும் கலந்த மிட்டாய்] போன்றவற்றை அக்னிதேவனுக்குப் படைத்து தீயைச் சுற்றி வலம் வந்து ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று களிப்படைவார்கள்.//

  அந்த அனுபவம் அருமையாக இருந்து இருக்கும் இல்லையா வெங்கட்!

  பாட்டு, நடனம் என்றால் உற்சாகம் தான். நீங்கள் என்ன பாட்டு பாடினீர்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் சில நகைச்சுவை துணுக்குகள் சொன்னேன். பாட்டுக்கும் நமக்கும் ரொம்ப தூரம்!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....