திங்கள், 10 ஜூன், 2019

தில்லி டைரி - ராஜ் கச்சோடி - சரக்கொன்றை - பிரம்மோற்சவம் - சந்திப்பு - பை பை தில்லிஅனைவருக்கும் இனிய காலை வணக்கம். தில்லியில் இருந்த நாட்களில் முகநூலில் எழுதிய சில விஷயங்களை தொகுத்து இங்கே வழங்கியதில் சற்றே இடைவெளி வந்து விட்டது! இரண்டு வாரங்களாக பதிவுகளே வெளிவரவில்லையே! திருவரங்கம் வந்து விட்டாலும் இந்த நாளில் சில தில்லி விஷயங்கள், தில்லி டைரி பதிவாக…

கரோல்பாக் Haldirams-ல் - 15 மே 2019

ராஜ் கச்சோடி...

ராஜ் கச்சோரி! - பூரி போன்ற கச்சோரியின் உள்ளே உருளைக்கிழங்கு, மசாலாக்கள், மேலே பச்சை மற்றும் இனிப்பு சட்னிக்கள், தயிர் மற்றும் பூந்தி, ஓமப்பொடியுடன். வாவ்!!சோலே பட்டூரே! - சோலேவுக்கு மேலே பச்சை மிளகாய் ஊறுகாய்!ஷாஹி ட்ரைஃப்ரூட் லஸ்ஸி - ரோஸ் சிரப் சுவையுடன் பாதாம், பிஸ்தா வேறு கடிபட்டது.

சரக்கொன்றை மலர்களும் மழையும் - 15 மே 2019


காலை முதல் இடி, மின்னலுடன் சிறிது நேரம் மழைத்தூறல்!! வெட்கை தணிந்தால் சரி!!!

மஞ்சள் சரக்கொன்றை மலர்கள் எங்கும் பூத்து கொட்டிக் கொண்டிருக்கிறது.

திருமலா திருப்பதி தேவஸ்தானம் - தில்லி - பிரம்மோற்சவம் - 17 மே 2019


திருப்பதி தேவஸ்தானம் பாலாஜி மந்திரில் பிரம்மோற்சவம் துவங்கியுள்ளது. நேற்று முதல் கொடியேற்றப்பட்டு தினமும் புறப்பாடு ஏற்பாடு ஆகியுள்ளது. நேற்று பெரிய சேஷ வாகனத்தில் வெங்கடேஸ்வர ஸ்வாமி வீதிகளில் பவனி வந்தார்.

தினமும் ஏதாவது ஒரு கலை நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து புறப்பாடும் இருக்கும். நேற்று ஒரு நாட்டிய நிகழ்ச்சி இருந்தது. அந்தப் பெண் தாம்பாளத்தில் நின்றும் அழகாக நடனம் ஆடினார்.

கோவில் வளாகத்திலேயே பலவிதமான கடைகள் போடப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள், தஞ்சாவூர் ஓவியங்கள், துணிகள், மாம்பழக் கடை, தமிழ் செய்திதாள்கள், பத்திரிக்கைகள், திருப்பதி லட்டு பிரசாதக்கடை என இங்கு திருவிழா போல் களைக்கட்டுகின்றன.

நடனக் குழுவினரின் கோலாட்டத்துடன், இங்குள்ள பெண்மணிகளும் சிலர் கோலாட்டம் ஆடினர். பின்பு புறப்பாடு ஆகியது. தேரின் வடம் போல இங்கு வாகனத்துக்கும் வடம் இருந்தது. அதை இழுக்கவும் எனக்கு வாய்ப்பு கிட்டியது.

கோவிலிலிருந்து புறப்பட்டு சுற்றி நான்கு சாலைகளையும் ஒரு மணிநேரம் போல வலம் வந்து மீண்டும் கோவிலுக்கு திரும்பும் வரை வடம் இழுப்பவர்களோடு நானும் இழுத்தேன்.

எல்லோருக்கும் நீர்மோர் விநியோகிக்கப்பட்டது. பருகி விட்டு வீடு திரும்பினோம். எல்லோரையும் வெங்கடேஸ்வர ஸ்வாமி நல்லபடியாக வைத்திருக்கட்டும்.

Bread pakora! Dhokla! Udthi chidiyaa – 18 மே 2019
ப்ரெட் பக்கோடா! - ப்ரெட்டுக்கு நடுவில் உருளை மசாலாவும் பனீரும் ஸ்டஃப் செய்து தயார் பண்ணுவது.

டோக்ளா! - குஜராத் ஸ்பெஷல். எண்ணெய் இல்லாமல் ஆவியில் வைத்து செய்யப்படுவது. எனக்கு மிகவும் பிடித்தது.

Udthi chidiyaa! ( flying bird ) - ரசகுல்லாவின் மீது மலாய் வைத்து செய்யப்படும் இனிப்பு.

இவையெல்லாம் தில்லி நாட்களில் சுவைத்த சில உணவுப் பண்டங்கள்!

புறப்படும் முன்னர் - 20 மே 2019ஊருக்கு கிளம்ப வேண்டிய நாள் நெருங்கி விட்டது. வார இறுதியில் இங்கிருந்து கிளம்பியாகணும். ஒரு மாதம் கடந்ததே தெரியவில்ல. நாட்கள் வேகமாக நகர்கின்றன. கிளம்புவதற்குள் என்னவருக்கு சற்றே உதவியாக இருக்குமென இவற்றை தயாரித்து வைத்தேன் :)

இட்லி மிளகாய் பொடி! எலுமிச்சை ஊறுகாய்! - திருச்சியிலிருந்து உப்பில் ஊறிய எலுமிச்சைகளை எடுத்து வந்தேன். அதற்கு காரம் சேர்த்து வைத்துள்ளேன். புளிகாய்ச்சல்! - அலுவலகம் கிளம்பும் பரபரப்பில் சாதம் வைத்தால் போதும். உதவியாக இருக்குமே :) சாம்பார்பொடி! - ஊரிலிருந்தே அரைத்து எடுத்து வந்துவிட்டேன். கறிவேப்பிலை கிடைத்தால் கொண்டு வரச் சொல்லியிருக்கேன். கறிவேப்பிலை குழம்பு செய்து வைக்கலாமே. வெங்காயம் தக்காளியும் வதக்கி வைத்தால் தோசைக்கும் ஆச்சு, சாதத்திலும் கலந்துக்கலாம்.

தில்லியில் ஒரு சந்திப்பு - 25 மே 2019:கேதார்நாத் சென்று திரும்பியுள்ள Vidya Subramaniam மேடம் அவர்களை நேற்று டெல்லியில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. சிறந்த எழுத்தாளர், பல திறமைகள் படைத்தவர், என் உதாரணப் பெண்மணி என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

முதல்முறை திருச்சியில் Rishaban Srinivasan சாரால் இவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் எதுவும் பேசவே இல்லை. இரு எழுத்தாளர்களின் முகத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தேன் :)

நேற்று அப்படியல்ல :) சில மணிநேரங்கள் இவரின் பயண அனுபவங்கள், டெல்லி என்று பேச்சு சுவாரஸ்யம் நிறைந்ததாய் இருந்தது. அக்‌ஷர்தாம் பிரசாதமாக லட்டு எங்கள் திருமண நாளுக்கு கிடைத்தது. அப்படியே நடந்து சென்று எல்லோரும் கேஸர் லஸ்ஸி பருகித் திரும்பினோம். சந்திப்பு மிக இனிமையாக இருந்தது. நன்றி மேம்.

டெல்லிக்கு பை பை - 27 மே 2019:

முப்பத்து நான்கு நாட்கள் கடந்த மாயமென்ன!!!

விடைபெறும் தருணம்! அடுக்களையை ஒப்படைத்து, தோசை மாவு வெச்சிருக்கேன். இரண்டு, மூன்று நாளுக்கு வரும். தேங்காய் ஃப்ரீசர்ல இருக்கு. மறந்திடாம யூஸ் பண்ணிக்கோங்க. பால் காலை காப்பிக்கு மட்டும் தான் வரும். சாயந்திரம் ஆஃபீஸ்ல இருந்து வரும் போது வாங்கிக்கோங்க... கட்டளைகள் போட்டாச்சு :)

இதுவரை பார்க்காத இடங்களை பார்த்து, சுவைக்காத பலதும் சுவைத்து, சுவைத்ததை இங்கே பகிர்ந்து, எல்லோரையும் வெறுப்பேத்தியாச்சு :)

இனி செய்யப் போகிற வேலைகள் தான் கண்முன்னே! வைத்து விட்ட வந்த மாவடு என்ன ஆனதோ! எல்லாவற்றையும் சுத்தம் செய்யணுமே! என்று யோசனைகள் பலமாக.

மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

ஆதி வெங்கட்

26 கருத்துகள்:

 1. இனியகாலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி!

  முதல் படமே ஈர்க்கிறது. ராஜ்கச்சோடி பிடிக்கும்....டோக்ளா ப்ரெட் பக்கோடா ஆஹா

  சாப்பாட்டுப் படங்கள்.!!! நீர் சுரக்க வைக்குது காலைலியே

  வருகிறேன் மீண்டும்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் கீதாஜி!

   காலையிலேயே உணவுப் படங்கள் - ஹாஹா.... ராஜ் கச்சோடி எனக்கும் பிடிக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   நீக்கு
 2. படிச்சேன் முகநூலிலும், எல்லா உணவு வகைகளும் சிறப்பாக அமைந்துள்ளன. ஆதி தில்லிக்கு பை சொன்ன பதிவும் முகநூலில் பார்த்தேன். இப்போ உடல் நலம் பரவாயில்லையா ஆதி? உடம்பு சரியில்லை எனச் சொல்லி இருந்தார். ரோஷ்ணிக்குப் பள்ளி ஆரம்பித்து விட்டது. ஆகவே இப்போது வேலைகள் மும்முரமாக ஆரம்பித்திருக்கும். என்னால் போய்ப் பார்க்க முடியவில்லை. மாமா மட்டும் போய்விட்டு வந்தார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதாம்மா....

   //மாமா மட்டும் போய்விட்டு வந்தார்// - அவசர அவசரமாக! :) எதற்கு இத்தனை அவசரம் என்று உங்களிடம் கேட்க வேண்டும்!

   பள்ளி ஆரம்பித்து விட்டது. வேலைகளும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 3. அட! வித்யாசுப்ரமணியம் அவர்களுடன் சந்திப்பா!! வாவ்!!! மகிழ்வான விஷயம்.

  வெங்கட்ஜிக்குச் செய்து வைத்தவை எல்லாமே நல்லாருக்கு பார்க்கவே..

  டோக்ளா நன்றாக வந்திருக்கிறதே...கலக்கறீங்க ஆதி!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். கரோல் பாக் பகுதியில் அவர்கள் தங்கி இருந்த இடத்தில் சென்று பார்த்து வந்தோம்.

   டோக்ளா - படம் இணையத்திலிருந்து. இங்கே ஆதி செய்யவில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   நீக்கு
 4. இங்கும் அன்பால் நிறைந்த பதிவா! (எங்க்ள் ப்ளாக்கிலும்)
  ஆதி, ரோஷ்ணியின் ஆசைகள் உங்களுடன் சேர்ந்து இருப்பது அதற்கு குழந்தையின் விடுமுறையில் கிடைத்தது.
  ஒரு மாதம் வேக வேகமாய் போய் விட்டது. அவரின் குதுகலத்தை முகநூலில் படித்து மகிழ்ந்தேன். சில உணவுகளை உங்களுக்கு ஆதி தயார் செய்து வைத்து விட்டு வந்தது கொஞ்சம் ஆறுதல் அளிக்கும்.
  ஒன்றையும் வீணாக்காமல் சாப்பிட்டு காலி செய்யுங்கள்.

  ஆதி உடல்நலம்தானே!

  படங்கள், செய்திகள் எல்லாம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒன்றையும் வீணக்காமல் சாப்பிட்டு காலி செய்யுங்கள் - ஆஹா! :) பாசமான மிரட்டல்! நன்றிம்மா. பொதுவாகவே உணவுப் பண்டங்கள் எதையும் வீணாக்குவதில்லை!

   ஆதி நலமே!

   நாட்கள் வெகு வேகமாக ஓடுகின்றன. அதன் ஓட்டத்திற்கு கட்டுப்பாடு கிடையாதே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 5. அன்பு வெங்கட்,
  ஆதி எழுதியதை முகனூலிலும் படித்தேன்.
  அழகான 34 நாட்கள் பறந்தோடி இருக்கும். குழந்தை ரோஷ்ணிக்கு வருத்தமாக இருந்திருக்கும். சீக்கிரம் திருவரங்கம் வந்துவிட்டுச் செல்லவும்.

  அத்தனை உணவுகளையும் கண்களால் சுவைத்தேன்.
  மிக மிக நன்றி மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 6. கதம்பச் செய்திகள் அருமை. பிரம்மோத்சவம் புகைப்படங்கள் மனதில் நின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள் உங்களுக்குப் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 7. குட்மார்னிங்.

  இன்று சாப்பிடும் ஐட்டம் அதிகமாக இடம்பெற்றுள்ளது. இருங்கள்... உறவினர் கொடுத்த ஒரு லட்டுவை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு வருகிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. லட்டுவை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு வருகிறேன்! ஹாஹா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 8. சுவையைத் தூண்டும் படங்கள்தான்.

  இந்நேரம் டெல்லியை விட்டுப் பிரிந்த சோகம் சற்றே குறைந்திருக்கும். இதில்சிலவற்றை பேஸ்புக்கிலும் படித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 10. அருமை.... வகையான உணவுப் பொருள்களுடன் இனிமை....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 11. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 12. கதம்பம் நன்றாக இருந்தது. ராஜ்கசோரி படம் சாப்பிடவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தி இருக்கின்றது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தில்லியில் இருப்பதால் எப்போது நினைத்தாலும் ராஜ் கசோடி சாப்பிடலாம் நீங்கள்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

   நீக்கு
 13. ஐயோ..இன்னைக்கென்ன ஏகப்பட்ட ஐட்டங்கள்?

  ராஜ் கச்சோரி - எனக்கு எப்போதுமே பிடிக்காது. சோலே பட்டூரே - பட்டூரே அருமை...ஆனால் எனக்கு சென்னாதான் ரொம்பப் பிடிக்கும்.

  பிரம்மோத்ஸ்வத்தின்போது லட்டு கிடைக்கலையா? தி.நகரில் வாரம் ஒருமுறை லட்டு விநியோகம் (விலைக்குத்தான்) நடைபெறும்.

  டோக்ளாவும் உதி சிடியாவும் நீங்கள் பண்ணினதா? படம் அருமையா வந்திருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சன்னா பட்டூரா - எனக்கும் பிடிக்கும் நெல்லைத் தமிழன். டோக்ளா, உட்தி சிடியா என அனைத்தும் கடைகளிலிருந்து தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....