ஞாயிறு, 23 ஜூன், 2019

தலைநகரிலிருந்து - இந்தியா கேட் – நிழற்பட உலா


அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.  இந்த நாள் இனிய நாளாக அமைந்து இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்த, கருத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இன்றைக்கு ஞாயிறு! தினம் தினம் காலை ஐந்தரை மணிக்கே இப்பக்கத்தில் பதிவுகள் வெளியிட்டுக் கொண்டிருந்தது இப்போது தடைபட்டிருக்கிறது! எழுத வேண்டும் என்று நினைத்தாலும் எழுத முடியாத சூழல்! இன்றைக்கு விடுமுறை என்பதால் அலுவலக ஆணிகள் இல்லை! இதோ ஒரு நிழற்பட உலாவுடன் உங்களைச் சந்திக்க வந்து விட்டேன். இந்த ஞாயிறில் தலைநகரின் மிகவும் பிரசித்தி பெற்ற பொழுதுபோக்கு ஸ்தலமாக இருக்கக் கூடிய இந்தியா கேட் பகுதியில் சில வாரங்கள் முன்னர் எடுத்த நிழற்படங்கள் இந்த ஞாயிறில் ஒரு நிழற்பட உலாவாக! வாருங்கள் பார்த்து ரசிக்கலாம்!இந்தியா கேட் பகுதியைச் சுற்றி வந்ததில் கொஞ்சம் களைத்திருப்பீர்களே! சட்பட்டா Bபேல் பூரி சாப்பிடுங்க! உங்களுக்காகவே Bபேல் பூரி படம் கடைசி படமாக!

என்ன நண்பர்களே, இந்த வாரத்தில் பகிர்ந்து கொண்ட நிழற்படங்களை ரசித்து இருப்பீர்கள் என நினைக்கிறேன். படங்கள் குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

விரைவில் வேறு ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


32 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. படங்கள் அனைத்தும் நீங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. பதில்கள்
  1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. புகைப்படங்கள் அனைத்தையும் ரசித்தேன். உங்களுக்கே தெரியும், செல்லத்தை கொஞ்சம் அதிகமாகவே ரசிப்பேன் என்று!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செல்லத்தை கொஞ்சம் அதிகமாகவே ரசித்திருப்பீர்கள் என எனக்கும் தோன்றியது ஸ்ரீராம். இன்னுமொரு ரசிகையான கீதாஜி இன்னும் காணோம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி!

   நீக்கு
 6. படங்கள் நன்று. இரவில் நீரூற்று, சொகுசாய் தூங்கும் நாய், சுவைக்கத் தூண்டும் Bபேல் குறிப்பாக அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 7. படங்கள் அனைத்தும் அருமை. மூன்று முறை டில்லிக்கு வந்திருந்தாலும் இந்தியா கேட் செல்லவில்லை. இன்னொரு முறை செல்ல முடிகிறதா பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த பயணத்தில் நிச்சயம் செல்லுங்கள் பானும்மா - குறிப்பாக மாலையும் இரவும் சந்திக்கும் வேளையில்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. வணக்கம் சகோதரரே

  படங்கள் அத்தனையும் அருமை. ரசித்தேன். நேரில் காணும் வாய்ப்பு எப்போது கிடைக்கிறதோ? தங்கள் படங்களின் மூலம் நேரில் கண்ட உணர்வை பெற்றேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கு தில்லி வரும் வாய்ப்பு விரைவில் கிடைக்கட்டும் கமலா ஹரிஹரன் ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. படங்கள் சிறப்பாக இருக்கின்றன. மூன்று முறை டில்லிக்கு விஜயம் செய்தும் இண்டியா கேட்டிற்கு செல்லவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டு முறை கருத்துரை - சில சமயங்களில் இப்படித்தான் ஆகிவிடுகிறது இல்லையா பானும்மா!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. மாலை மயங்கும் நேரத்தில் சென்றீர்கள் போல ஐந்து முதல் ஏழு மணிவரை இருக்கும் என்று நினைக்கிறன்...
  படங்கள் அற்புதம்
  வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாலை மயங்கும் நேரத்தில் - ஆமாம் மது. சரியான அவதானிப்பு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. படங்களில் மிகவும் பிடித்தது நீரூற்று தான். யமுனை நீர்
  சென்னைக்கும் வரக்கூடாதோ.
  அனைத்துப்படங்களும் மிக அருமை. எஸ்பெஷலிபேல் பூரி. கோல்கப்பாவும் போடக்கூடாதோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யமுனை நீர் சென்னைக்கும் வரக்கூடாதோ? நல்ல ஆசை. ஆண்டவன் நினைத்தால் முடியாததா வல்லிம்மா....

   கோல்கப்பா படம் - பிறிதொரு சமயம் பகிர்ந்து கொள்கிறேன் மா..

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு
 13. அழகான காட்சிகள் ..


  சூரிய ஒளியின் பின்னணியில் எடுக்கும் காட்சிகள் என்றும் எனக்கு மிக பிடித்தவை ..அதனால் முதல் படம் மிக கவர்ந்தது ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இயற்கை அன்னையின் எழிலுக்கு ஈடேது அனு ப்ரேம் ஜி! படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 14. படங்கள் எல்லாம் அழகு.
  புல்வெளியில் தூங்கும் செல்லம் அழகு.
  இரவு நேர விளக்கொளியில் இந்தியா கேட், பேல்பூரி எல்லாம் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புல்வெளியில் தூங்கும் செல்லம்! எனக்கும் பிடித்த படம் கோமதிம்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 15. வெங்கட்ஜி இனிய காலை வணக்கம்!!

  ஆஅமாம் காலையில் 5.30க்கு உங்கள் பதிவு வருவது எனக்கு மிக மிக சௌகரியம்....

  பரவாயில்லை ஜி உங்களுக்கும் வேலைப்பளு. எனக்குமே இப்போது பதிவுகள் எதுவும் போட இயலவில்லை. கூடியவிரைவில் நேர மேலாண்மை செய்து கொண்டு தொடங்க வேண்டும்...கொஞ்சம் ப்ளான் செய்து என்று பார்ப்போம்.

  முதலில் கண்ணில் பட்டது செல்லம்...மிக மிக ரசித்தேன்...

  சென்னைக்க்கு மைத்துனரின் பெண் கல்யாணத்திற்குச் சென்றதால்தான் கடந்த வாரம் பதிவுகள் எதுவுமே பார்க்க இயலவில்லை.

  படங்கள் அனைத்தும் அழகு ஜி . அந்த மரம் செம...நீரூற்றுகள் இந்தியாகேட்டின் வித்தியாசமான கோணங்கள் எல்லாமே அழகு.

  மிகவும் ரசித்தேன் ஜி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செல்லம் - பதிவுலக நண்பர்களில் பலருக்கும் பிடித்திருக்கும் என்று தெரியும் - கட்டாயமாக உங்களுக்கும் எனத் தெரியும் கீதாஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 16. படங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக இருக்கின்றன வெங்கட்ஜி.

  நானும் குடும்பத்தோடு தில்லி வந்தும் தங்களைச் சந்திக்க இயலாமல் போனது. மூன்று வருடங்கள் முன். அப்போது நாங்கள் தங்கியிருந்தது நொயிடாவில். குடும்பத்தினர் ஆக்ரா செல்ல வேண்டும் என்றதால் அங்கு சென்றோம் இருந்ததே 4 தினங்கள்தான். அப்போது இந்தியா கேட்டும் சென்றோம்.

  நேரில் பார்த்தது ஒரு அழகு என்றால் இங்கு உங்கள் புகைப்படங்கள் இன்னும் அழகாகக் காட்டுவது போல் இருக்கிறது.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் தில்லி வந்த சமயத்தில் உங்களைச் சந்திக்க இயலாமல் போனதில் எனக்கும் வருத்தம் உண்டு துளசிதரன் ஜி! விரைவில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் - உங்கள் ஊரில் அல்லது வேறு ஊரில்!- மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....