வியாழன், 13 ஜூன், 2019

கதம்பம் – குப்பையும் காசுதான் - சத்து பராட்டா - ஸ்வீட் சட்னி - அப்பா - அப்பாவி ஜீவன்


ஆதியின் அடுக்களையிலிருந்து - 4 ஜூன் 2019


Sattu ke parathe!! (Bihar's special)

டெல்லியிலிருந்து Sattu என்ற கொண்டக்கடலை மாவை வாங்கி வந்தேன். உடலுக்கு நன்மை தரக்கூடிய Sattu-வில் லட்டு, பராட்டா, Health drink என்று நிறைய செய்யலாம் எனத் தெரிந்து கொண்டேன். இந்த மாவை வீட்டிலேயே செய்யலாம். அதற்கான தகவல்கள் YouTubeல் கிடைக்கிறது. இங்கேயும் செய்முறை கீழே தந்திருக்கிறேன்.கறுப்பு கொண்டக்கடலையை 5 மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து பின்னர் நீரை வடித்து வெயிலில் உலர வைத்து எடுக்க வேண்டும். அதை ஒரு வாணலியில் போட்டு வறுக்க வேண்டும். ஆறியதும் மிக்சியில் பொடி செய்ய வேண்டியது தான். இது தான் Sattu வின் செய்முறை.

இன்று மகளின் லஞ்ச் பாக்ஸுக்கு Sattu ke parathaவும், North Indian sweet chutney-உம் [செய்முறை கீழே!] செய்து கொடுத்தேன்.

இதை எப்படி செய்வது என்று இணைப்பு இதோ. டெல்லியில் வசிக்கும் Nisha Madhulika-வுக்கு தீவிர விசிறி ஆகிவிட்டேன் :) ஆங்கில சப் டைட்டிலுடன் நீங்களும் இவரது சமையல் குறிப்புகளைப் பார்க்கலாம்.


North Indian Sweet Chutney – 4 ஜூன் 2019Chaat வகைகளுக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடும் இந்த சட்னி மீது டெல்லிக்கு போனதிலிருந்து எனக்கு மோகம் :) இனிப்பு சட்னி, புளி சட்னி என்றெல்லாம் சொன்னாலும் இதில் புளிப்பு, காரம், இனிப்பு என்று எல்லா சுவையுமே உள்ளது. செய்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் ஆறு மாதம் வரை கெடாமல் இருக்கும். சரி!! அதுவரை யார் வைத்திருப்பார்கள் இல்லையா :)

Instant Sweet chutney!!

தேவையானப் பொருட்கள்:

ஆம்ச்சூர் எனப்படும் உலர்ந்த மாங்காய்த்தூள் (அ) புளிக்கரைசல்

வெல்லம்

பேரிச்சை

கறுப்பு உப்பு

மிளகாய்த்தூள்

கரம் மசாலா

சுக்குப்பொடி

சிறிது தண்ணீரை அடுப்பில் வைத்து ஒவ்வொன்றாக சேர்த்து கொதித்து கெட்டியாக ஆனதும் இறக்கவும். நான் அளவுகள் ஏதும் இல்லாமல் குத்துமதிப்பாக போட்டு செய்துள்ளேன். வெல்லத்திற்கு பதில் நாட்டுச் சர்க்கரை. பேரிச்சைக்கு பதில் dates syrup சேர்த்துள்ளேன் :)

Chaat வகைகளுக்கு மட்டுமல்ல சப்பாத்தி, பராட்டா, ப்ரெட் என்று இவற்றுடனும் அருமையாக இருக்கிறது. நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்களேன்.


குப்பையும் காசு தான் – TRASH N CASH APP – 2 ஜூன் 2019இம்முறை ரோஷ்ணிக்கு பரீட்சை முடிந்ததும், வாட்ச்மேனிடம் சொல்லி வைத்திருந்தேன். பழைய பேப்பர் எடுப்பவர் யாராவது வந்தால் சொல்லும் படி. ஆனால் ஊருக்கு போகும் வரை யாரும் வரலை. டெல்லியில் இருக்கும் போது தோழி Rajeswari Periyaswamy மூலம் இந்த app பற்றி தெரிய வந்தது. சரி! ஊருக்கு போனதும் இவர்களிடம் கொடுத்து பார்க்கலாம் என்று முடிவெடுத்தேன். நேற்று App மூலம் pickup request அனுப்பினோம். எவ்வளவு எடை இருக்கும் என்று கேட்கிறார்கள். தோராயமாக சொன்னோம். கொடுத்திருந்த எண்ணில் தொடர்பு கொண்டு முகவரியை சொன்னேன். வரும் நேரம் appல் தெரிவிக்கப்படுகிறது.

மதியம் Trash N Cash டீ சர்ட் அணிந்த நான்கு இளைஞர்கள் எடை இயந்திரத்துடன் வந்தார்கள். நாம் கொடுக்கும் பொருட்களை தரம் பிரித்து எடை போட்டு குறித்துக் கொண்டு, அவர்களின் அலுவலகத்தில் சொன்னவுடன் appல் நம்முடைய பில் வந்துவிடுகிறது. அப்போதே பணமும் தந்துவிட்டார்கள். நல்ல விலைக்குத் தான் எடுத்துக் கொள்கிறார்கள்.

மறுசுழற்சி செய்யக்கூடிய அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொள்கிறார்கள். திருச்சி மாநகராட்சிக்கும் இவர்களுக்கும் இணைப்பு இருக்கிறதாம். சுற்றுச்சூழலை பாதுகாக்க, மறுசுழற்சி செய்ய நீங்களும் உதவலாம்.

மண்பாத்திர சேகரிப்பில் புதுவரவு – 5 ஜூன் 2019சென்னையில் தம்பி வீட்டுக்கு அருகில் மண்பாத்திரங்கள் வெகு அழகாக இருந்தது. போகும் போதும், வரும் போதும் பார்த்துக் கொண்டே வந்தேன். தண்ணீர் ஜக் வாங்க நினைத்திருந்தேன். அங்கேயிருந்து எடுத்து வரவும் யோசனை. பயணத்தில் உடைந்து விட்டால்?

தம்பி மனைவியும் "அக்கா! வாங்கி உங்க தம்பிட்ட கொடுத்து விடறேன்" என்று தான் சொன்னாள். "அங்கேயே பார்க்கிறேன்ப்பா. சரியா கிடைக்கலைன்னா சொல்றேன்" என்று சொல்லி வந்தேன்.

நேற்று கடைத்தெருவில் வழக்கமாக வாங்கும் கடையில் தண்ணீர் ஜக் இருந்தது. ஆனால் சரியாக இல்லை :) இது பாட்டில் போன்று உள்ளது. விலை 100, டம்ளர் ஒவ்வொன்றும் 40.

அப்பாவின் நினைவு – 5 ஜூன் 2019அப்பா எல்லாவற்றிலும் perfect. எனக்கும், தம்பிக்கும் நோட்டு புத்தகங்களுக்கு அட்டை போட்டு, மைதா பசையால் ஒட்டி, டிரங்க் பெட்டிக்கு அடியில் வைத்து தருவார். முந்தைய வருடத்து நோட்டுகளின் மீதியுள்ள பக்கங்களை எடுத்து, அதற்கும் ரேப்பர் ஷீட் வைத்து தைத்து தருவார். அது தான் எங்களின் Rough note :)

பள்ளியிறுதி வரை அப்பா போட்டுக் கொடுத்த அட்டைகள் தான். புத்தகங்களே கிழிந்தாலும் அட்டை வருடக்கடைசி வரை இருக்கும்.

இன்று மகளுக்கு அட்டை போடும் போது மனமெல்லாம் அப்பா நிறைந்திருக்கிறார். மகளுக்கு அப்பா எப்படி போடுவார். நாங்கள் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தது என்று எல்லாமே கதை போலே சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

"இருந்து என் குழந்தைக்கு அட்டை போட்டு குடுத்திருக்கலாம்ப்பா" - என்ன அவசரம் உனக்கு?

தற்சமயம் வாசிப்பில் – கர்ண பரம்பரை – 6 ஜூன் 2019பக்கத்துக்கு பக்கம் விறுவிறுப்பு. கண்பார்வையற்ற மூதாட்டி தான் இதில் டிடெக்டிவ். ஒருபுறம் சித்தர்களும், மூலிகை மருத்துவங்களும், ரகசியங்களும். மறுபுறம் நவீன காலத்து இளைஞர்கள்.

'காலச்சக்கரம்' நரசிம்மா அவர்கள் இதுவரை எழுதிய புத்தகங்களில் நான் வாசிக்கும் ஐந்தாவது புத்தகம் இது. அத்தனையும் முத்து.

திரிபுரசுந்தரி எனும் அப்பாவி ஜீவன் – 8 ஜூன் 2019அப்பாவி ஜீவன்!!
தைரியசாலி, உழைப்பாளி!
இவை சேர்ந்த கலவை தான்
என் அம்மா!!

வாழ்வில் கஷ்ட நஷ்டங்களை
தாண்டி வந்தவள்.
பள்ளிப்படிப்பு முடித்திராதவள்! வாய்க்கணக்கில் கில்லாடி!!

இவளிடம் எல்லாவற்றுக்கும்
நான் உதை வாங்கியதுண்டு!
தனியே எல்லா காரியங்களையும்
செய்யப் பழக்கியவள்!

எவ்வளவு கஷ்டத்திலும்
சேமிக்கத் தெரிந்தவள்!
தன் கைமணத்தால்
கட்டிப் போட்டவள்!!

அப்பளம், வடாம், ஊறுகாய்
பூக்கள் விற்று, என்று
தன்னை வருத்தி பணம் ஈட்டி
எங்களுக்கு சுகம் தந்தாள்!!

புற்றுநோயுடன் ஏழு வருடம் போராடினாள், ஆனால்
ஒருநாளும் மனம்
தளர்ந்ததில்லை!!

தான் மறைவதற்குள்
எனக்கு ஒரு வாழ்க்கை
ஏற்படுத்திட துடித்தாள்!!
நினைத்ததை சாதித்தாள்!!

அம்மா என்ற ஜீவன்
மண்ணோடு மறைந்து
பதினைந்து ஆண்டுகள்
கடந்து விட்டன!!

அம்மாவின் திதி இன்று! மகளாக என்னால் இயன்றது, அம்மாவை நினைத்து ஒரு சொம்பு நீரை தலையில் விட்டுக் கொண்டேன்!

என்ன நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்....

நட்புடன்

ஆதி வெங்கட்

20 கருத்துகள்:

 1. மிகவும் மனம் வருந்தினேன். எனக்கும் என் அப்பா ஞாபகம் காலையில் இருந்து. நம்மோடேயே எப்போதும் இருக்கிறார்கள் என்ற நினைப்பே ஆறுதல் தரும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நம்மோடேயே எப்போதும் இருக்கிறார்கள் என்ற நினைப்பே ஆறுதல் தரும்// உண்மையான வார்த்தைகள் Bandhu ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. குட்மார்னிங்.

  அம்மாவின் அப்பாவின் ஆசிகள் என்றும் நம்மோடு இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம். அம்மா/அப்பாவின் ஆசிகள் என்றும் நம்மோடு இருக்கும் என்பது உண்மையான வார்த்தைகள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. கொண்டைக்கடலை மாவு பராத்தா பார்க்கும்போது மென்மையாக இருக்கும் என்று தெரிகிறது. அனைத்தையும் ரசித்தேன். காணொளியும் கண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சத்து பராட்டா நன்றாகவே இருக்கும் ஸ்ரீராம். வாய்ப்பு கிடைத்தால் ருசித்துப் பாருங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. அம்மாவின் அப்பாவின் ஆசிகள் என்றும் நம்மோடு இருக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அம்மா/அப்பாவின் ஆசிகள் என்றும் நம்மோடு இருக்கட்டும் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 6. என் மகன்களின் நோட்டுகளுக்கு அட்டை போடும்போது என் அப்பாவின் நினைவு இயல்பாகவே வந்துவிடும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்பா/அம்மாவின் நினைவு - மறக்க முடியாத ஒன்று தானே முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. அப்பாவின் நினைவு, அம்மாவின் நினைவு எல்லாம் நெகிழ்வு அம்மா, அப்பா என்று உறுதுணையாக இருப்பார்கள். எல்லாம் முகநூலிலும், இங்கும் படித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முகநூலிலும் இங்கேயும் படித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. பல நினைவுகளின் பெட்டகம் இன்று ...

  சத்துப் பரோட்டா அட்டகாசம் ..

  இந்த சட்னி வகைகள் செய்ய வேண்டும் என்னும் ஆவலில் உள்ள போது உங்கள் குறிப்பு பயன் படுத்திக் கொள்கிறேன் ...

  ஒரு புதிய you tuber ...காண வேண்டும்

  TRASH N CASH APP ..great news for me ..விரைவில் இதையும் முயற்சிக்க வேண்டும் ...

  காலச்சக்கரம்' நரசிம்மா..இதுவும் புதியதே ...ஒரே பதிவில் எத்துனை புதியவைகள் எனக்கு ...மிகவும் நன்றி

  அப்பா அம்மாவின் நினைவுகள் எல்லாம் நெகிழ்வு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நினைவுகளின் பெட்டகம் - உண்மை தான். பல விஷயங்கள் உங்களுக்கு புதியவை என்று அறிந்து மகிழ்ச்சி அனு ப்ரேம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. எல்லாவற்றையும் முகநூலிலும் பார்த்தேன். ரசித்தேன். இங்கேயும் பார்த்தேன். அம்மா, அப்பா மேலே இருந்து பார்த்து ரசித்துக் கொண்டு ஆசிகளைக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர்களின் ஆசி என்றும் நிலைத்திருக்கட்டும் கீதாம்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. என் மகளின் சிறு வயதில் அவளின் நோட்டுப் புத்தகங்களுக்கு அட்டை போடும்போது அவள் என் முதுகில் அட்டை போல் ஒட்டிக் கொண்டிருப்பாள்.

  'Trash N Cash' நல்லா இருக்கே! எங்க ஊருல, 'கபாடிவாலேய்ய்ய்ய்'தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். நம் ஊரில் கபாடி வாலேய்ய்ய்ய்ய்ய் தான்! ஹாஹா...

   அட்டை போடும்போது அவள் என் முதுகில் அட்டை போல ஒட்டிக் கொண்டிருப்பாள்! ஹாஹா... நினைத்துப் பார்க்கவே சந்தோஷம் இல்லையா பத்மநாபன் அண்ணாச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....