பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 9
போர்பந்தர்
நகரிலிருந்து துவாரகா செல்லும் வழியில் நாங்கள் பார்த்த காட்சி – எங்கே
பார்த்தாலும் காற்றாலைகள். தனது இராட்ச இறக்கைகளை விரித்து தொடர்ந்து இயங்கிக்
கொண்டிருக்கும் காற்றாலைகள். அதுவும் சாலையின் இரு மருங்கிலும் இயங்கிக்
கொண்டிருக்கும் காற்றாலைகளைப் பார்க்கும் போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.
சோம்நாத் நகரிலிருந்து துவாரகா வரை செல்லும் பாதை கடற்கரை பகுதி என்பதால் இங்கே
காற்றுக்குப் பஞ்சமில்லை. இங்கே
கிடைக்கும் காற்றின் மூலம் மின்சாரம் பெற இத்தனை காற்றாலைகள் இருக்கும் போது
இம்மாநிலத்தில் மின்சாரத் தட்டுப்பாடு இருப்பதற்கு வாய்ப்பில்லை.
தமிழகத்திலும்
கன்யாகுமரி, நாகர்கோவில் போன்ற இடங்களுக்குச் செல்லும் போது பல காற்றாலைகளை
பார்த்ததுண்டு. போதுமான அளவு பராமரிப்பு இல்லாமலும், போதிய அளவு காற்றில்லாமலும்
பல காற்றாலைகள் இயங்காது நின்று கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். குஜராத்தில்
நான் பார்த்தவரை அங்கே இருந்த காற்றாலைகள் அனைத்துமே இயங்கிக் கொண்டிருந்தன.
ஏதேனும் பழுது வந்தால் உடனடியாக அவை சரி பார்த்து விடுவார்கள் என அங்கே இருக்கும்
நண்பர் சொன்னது நினைவுக்கு வருகிறது.
போலவே
சில வீடுகளின் மாடியில் சின்னச் சின்னதாய் Solar Panel
அமைத்து மின்சாரம் பெறுவதையும் பார்க்க முடிந்தது. சில குடிசைகளில் கூட இப்படி
அமைத்து இருந்ததைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. குஜராத் மாநிலத்தில் மின்சார தேவையை விட
உற்பத்தி அதிகமாக இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வருவதைப் பார்க்கும் போது நமது
மாநிலத்தில் இருக்கும் மின்சாரப் பற்றாக்குறை நினைவில் வராமல் இருப்பதில்லை.
சாலை
விளக்குகள் கூட சூரிய ஒளியிலிருந்து பெறப்படும் மின்சாரம் மூலம்
இயங்குகின்றன. ஒவ்வொரு சாலைவிளக்கு
கம்பத்தின் மேலும் ஒரு சிறிய Solar Panel வைத்து அதனை
ஒரு Battery-உடன் இணைத்து மின்சாரம் சேமிக்கிறார்கள். தமிழகத்திலும்
இப்படி தொடர்ந்து இயங்கும் காற்றாலைகளும், சோலார் மின்சாரமும் கிடைத்தால் நன்றாக
இருக்கும். அனைத்திலும் அரசியலும், பணம் சம்பாதிப்பதும் பிரதானமாக இருக்க,
மக்களின் குறைகளை யாரும் கவனிப்பதில்லை என்பது தானே நிதர்சனம்.
இப்படி
இருக்கும் பல வசதிகளைப் பார்த்தவாறே பயணித்துக் கொண்டிருந்தோம். போர்[B]பந்தர்
நகரிலிருந்து துவாரகா கிட்டத்தட்ட 100 கிலோ மீட்டர். ஒன்றரை மணி நேரத்தில் இத் தொலைவினை கடந்து
துவாரகாவை நீங்கள் அடைய முடியும். இப்படி பயணிக்கும்போது கடற்கரை ஓரமாகவே செல்லும்
பாதையும், வேறு வழிகளும் உண்டு. நாங்கள்
பயணித்தது கடற்கரை வழியே அல்ல! ஓட்டுனர் வசந்த் [B]பாய் தனக்கென்று சில கொள்கைகளை வைத்துள்ளார் – எல்லா ஓட்டுனர்களைப்
போலவே! ரஜினிகாந்த் போல இவருக்கும் ஒரு கொள்கை! “என் வழி தனி வழி!”
வழியில்
அவருடன் பேச்சுக் கொடுத்தபடியே இருப்பது எனது வழக்கமாகி இருந்தது. எத்தனை தான்
ஓய்வெடுத்தாலும் அவருக்கு அவ்வப்போது தூக்கம் வந்து விடுகிறது எனத்
தோன்றியது. வண்டியின் டேஷ்போர்ட்
திறந்தால் ஒரு பெரிய பை நிறைய மாவா மசாலா புடியா வைத்திருக்கிறார். நடுநடுவே வண்டியை நிறுத்தி ”அர்தி சாய்” குடிக்கலாமா என்று கேட்கிறார். ”அர்தி சாய்” என்றால் என்ன
என்று கேட்பவர்களின் வசதிக்காக, முன்பே வலைச்சரத்தில் எழுதியதை மீண்டும் இங்கே
தந்திருக்கிறேன்!
Courtesy: www.trekearth.com
நமது ஊர் போல கண்ணாடி டம்ளரிலோ, அல்லது மண் குடுவைகளிலோ இவர்கள் தேநீரை தருவது இல்லை இந்த அர்[dh]தி [ch]சாய். இங்குள்ள பலரும் தேநீர் கடைக்குச் சென்றவுடன் தனக்கு ஒரு அர்[dh]தி [ch]சாய் என்று சொல்ல, அவர்கள் கையில் ஒரு சாசரை [Saucer] கொடுத்து விடுகிறார் கடைக்காரர். ஏற்கனவே தயாரித்து கெட்டிலில் வைத்திருக்கும் தேநீரை, சாசரில் முழுவதும் விடுகிறார். அவரும் அதைக் குடித்து முடிக்கிறார்! இது தான் அர்[dh]தி [ch]சாய். முதல் முறை தேநீர் என்று கேட்ட எனக்கு கையில் சாசரைத் தர நான் விழித்தேன்! அக்கம் பக்கத்தில் பார்த்த பிறகு எனக்கு கப்பில் அதுவும் முழு கப் வேண்டும் எனச் சொல்ல, என்னை மேலும் கீழும் பார்த்து ஒரு டம்ப்ளரில் விட்டுக் கொடுத்தார். அவரின் பார்வை, என்னைப் பார்த்து “தம்பி ஊருக்குப் புதுசோ!” என்று கேட்பது போல இருந்தது!
நாங்கள்
துவாரகா சென்ற நாள் அன்று ஈகைத் திருநாள் பண்டிகை வேறு. முதல் நாள் இரவு
சோம்நாத்திலிருந்து பயணிக்கும் போது வழியில் ஒரு கிராமத்துச் சந்தை பார்த்தோம்.
அளவுக்கதிகமான மக்கள் கூட்டம் அங்கே இருந்தது. சாதாரண சந்தை அல்ல – ஆட்டுச் சந்தை.
பல வியாபாரிகள் நூற்றுக்கணக்கில் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து
கொண்டிருந்தார்கள். ஆடுகளை வாங்கியதும்,
அவற்றை தத்தமது வீட்டிற்கு அழைத்துச் செல்ல பெரிதாய் கஷ்டப்பட வேண்டியதில்லை! நடத்தி அழைத்துக் கொண்டு போக வேண்டாம் –
இருக்கவே இருக்கிறது [ch]சகடா – ஆல் இன் ஆல் அழகு ராஜா!
மிதமான
வேகத்தில் பயணித்து துவாரகாவினை நெருங்கி விட்டோம். வழியெங்கும் த்வாரகாதீஷ் என அழைக்கபடும் கிருஷ்ணரின்
புகைப்படங்கள் உள்ள பல கடைகளையும் பதாகைகளையும் பார்க்க முடிந்தது. எங்கும்
கிருஷ்ணர் எதிலும் கிருஷ்ணர்! துவாரகா நகரின் மன்னர் அல்லவா? அதனால் அவர் எங்கும்
நீக்கமற நிறைந்திருப்பதில் வியப்பென்ன?
வாருங்கள் அடுத்த பகுதியில் த்வாரகாநாதனை தரிசிக்க அழைத்துச் செல்கிறேன்!
நட்புடன்
துவாரகாவிற்ககுள் நுழைய காத்திருக்கிறேன் ஐயா
பதிலளிநீக்குநன்றி
தம+1
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குகொடுத்து வைத்த குஜராத் வாசிகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குநேரில் செல்வது போன்ற உணர்வு அர்தி சாய் புதிய செய்தி...மேலும்படிக்கின்றேன் ...அனைத்தையும்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
நீக்குதொடர்கிறேன்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் பதிவுகளை தொடர்வதற்கும் மிக்க நன்றி GMB ஐயா.
நீக்கு
பதிலளிநீக்கு// நமது மாநிலத்தில் இருக்கும் மின்சாரப் பற்றாக்குறை நினைவில் வராமல் இருப்பதில்லை.//
நமது மாநிலத்தில் மின் பற்றாக்குறை இல்லையென்றல்லவா நமது மின் துறை அமைச்சர் சட்டசபையில் சொல்கிறார் !
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குமுறைசாரா எரிசக்தியின் அவசியத்தௌ உணர்ந்தவர்கள்!
பதிலளிநீக்குத்வாரகாநாதனைத் தரிசிக்கக் காத்திருக்கிறேன்
த ம +1
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.
நீக்குதங்களோடு நாங்களும் பயணிக்கிறோம்,
பதிலளிநீக்குவாழ்த்துக்கள், புகைப்படங்கள் அத்துனையும் அழகு. தொடருங்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!
நீக்குபுகைப்படங்கள் அருமை மீசைக்கார நண்பர் ஸூப்பர்...ஜி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குதுவாரகை அனுபவங்களை அறிய ஆவலுடன் தொடர்கிறேன்! காற்றாலை பராமரிப்பு வியக்க வைக்கிறது!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
நீக்குஆஹா... காற்றாலைகள், சோலார் விளக்குகள்... ரொம்பச் சந்தோஷமாக இருக்கிறார்கள்.
பதிலளிநீக்குஎங்கள் ஊருக்கு அருகே ஒரு தோட்டத்தில் காற்றாலை மின்சாரம் மூலமாக நீர் எடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்தினார்கள்.... இப்போது இல்லை....
தொடருங்கள் அண்ணா....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
நீக்குபடங்கள் அருமை !
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
நீக்குஎங்கும் கிருஷ்ணர் எதிலும் கிருஷ்ணர்! துவாரகா நகரின் மன்னர் அல்லவா? //
பதிலளிநீக்குஅருமை.
மன்னரின் வரவை எதிர்ப்பார்க்கிறோம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குநன்றாயிருக்கிறது..தொடர்கிறோம்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குஆமாம் ஜி குஜராத் நல்ல வளர்ச்சி அடைந்த மாநிலம் என்று தான் பி ஜே பி க்காரார்கள் தங்கள் தேர்தல் பேச்சுக்களில் சொல்லி அதை ப்போன்று தமிழ்நாட்டையும்???!!!! மாற்றுவோம் என்று சொல்லி வந்தனர்....ஹும் தமிழ்நாட்டை மின்சார தோஷம் விடாது போலிருக்கு..திருநெல்வேலி பகுதிகளிலும் குறிப்பாக திருநெல்வேலி டு நாகர்கோவில் செல்லும் வழியில் ஆரல்வாய்மொழி பகுதிகளில் நிறைய காற்றாலைகள் இருக்கின்றன. ஆனால் என்ன பல சுற்றாது...பராமரிப்பு இல்லை.
பதிலளிநீக்குபொள்ளாச்சி பகுதியிலோ இல்லை ஈரோடு பகுதியிலோ, நடிகர் சிவக்குமார் காற்றாலைகள் நிறுவுவதாக எங்கேயோ வாசித்த நினைவு...
தாமதம்...வருவதற்கு..வேலைப் பளு.
காத்திருக்கின்றோம் அடுத்த பகுதிக்கு...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்குநான் நினைக்கிறேன் அது half Chai யாக இருக்ககூடும்.
பதிலளிநீக்குபாதியே தான். அர்தி என்றால் அரை.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வடுவூர் குமார்.
ஹ்ம்ம் நல்ல வளர்ச்சிதான் குஜராத்தில்..நம்மூரிலும் இப்படி வந்தால் நல்லாயிருக்கும் ..
பதிலளிநீக்குஅர்தி சாய் ..நமக்கெல்லாம் பத்தாது :)
அர்தி சாய் - நமக்கெல்லாம் பத்தாது.... அதே அதே....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.
நம்ம ஊரிலே காற்றாலை மட்டுமா இருக்கு கரண்ட் கட்டும் இருக்கே :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!
நீக்கு