எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, September 14, 2015

முக்தி துவாரகா


பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 6

முந்தைய பகுதிகள் – 1 2 3 4 5

சோம்நாத் கோவிலில் ஜ்யோதிர்லிங்கங்களில் முதலாவதைப் பார்த்து விட்டு எங்கள் ஓட்டுனர் வசந்த் பாய் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம். அதற்குள் அவர் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு சுறுசுறுப்பாக இருந்தார். எப்போதும் போல வாயில் மாவா மசாலா! உணவு உண்ணும் நேரம் தவிர மற்ற எல்லா நேரத்திலும் அவர் வாயில் மாவா மசாலா இருக்கிறது! தூங்கும் போதும் அதை உபயோகிப்பாரோ!


படம்: இணையத்திலிருந்து....

பஞ்ச் துவாரகா பயணத்தில் நாங்கள் முதன் முதலாக பார்த்தது சோம்நாத் கோவில் தான் என்றாலும் பஞ்ச் துவாரகா என அழைக்கப்படும் இடங்களில் முதலாவதாக பார்த்தது முக்தி துவாரகா என அழைக்கப்படும் இடம் தான். சோம்நாத் அருகிலேயே இருக்கிறது.  ”[B] பால் கா தீர்த் எனவும் அழைக்கப்படும் இவ்விடத்தில் தான் கிருஷ்ணாவதாரத்தின் முடிவும் நிகழ்ந்தது என்பதும் நம்பிக்கை.படம்: இணையத்திலிருந்து....

மஹாபாரத யுத்தத்தில் பாண்டவர்கள் வெற்றி பெற்றார்கள். கௌரவர்கள் தோல்வி அடைந்தார்கள்.  துரியோதனன் உள்ளிட்ட காந்தாரியின் 100 மகன்களும் உயிரிழந்தார்கள். தான் உயிருடன் இருக்கும்போதே தனது 100 மகன்களையும் இழந்துவிட்ட காந்தாரி கிருஷ்ணனுக்கு சாபம் கொடுத்தாளாம்....  சாபம் கொடுப்பது பலருக்கும் பிடித்த விஷயம் போல!


 படம்: இணையத்திலிருந்து....

கண்ணா எனது 100 மகன்களையும், நான் உயிருடன் இருக்கும்போதே கொன்றாய். புத்திரசோகத்தில் சொல்கிறேன்... எவ்விதம் எனக்கு புத்திரன் ஏதுமின்றி செய்தாயோ, அதுபோலவே உன் கண் முன்பாகவே உன் இனம் அழிந்துபட காண்பாய்


படம்: இணையத்திலிருந்து....

யுத்தம் முடிந்த பிறகு தனது இராஜ்ஜியத்திற்கு திரும்பினான் கண்ணன். கூடவே காந்தாரியின் சாபமும்! காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லையே. காலம் ஓடியது. கண்ணனும் மூப்படைந்தான். எதிரிகளே இல்லை என்ற நிலை வந்ததால் யாதவ குலம் மதுவில் மூழ்கியது.  மது என்னும் அரக்கனை வென்றவன் என்பதால் மதுசூதனன் என்ற பெயர் பெற்ற கண்ணனின் பிரஜைகள் மதுவில் மூழ்கினார்கள். அவர்களுக்காகவே பலத்த சண்டையும் உயிர்ச் சேதங்களும் உண்டாகின.


படம்: இணையத்திலிருந்து....

முதுமையில் தனிமை கொடுமை.  கிருஷ்ணனுக்கும் அந்த கொடுமை.  பிரபாஸ தீர்த்தம் என அழைக்கப்படும் இவ்விடத்தில் அரச மரத்தின் கீழே  ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது ஜரா எனும் வேடன் கிருஷ்ணரின் பாதங்களை மானின் பாதங்கள் [பறவையின் அலகு எனவும் சிலர் சொல்வதுண்டு] என நினைத்து அம்பு விட அது கிருஷ்ணரின் பாதங்களில் புகுந்தது. வேட்டையாடிய மானை எடுத்துக் கொள்ள வந்த வேடன் தான் அம்பு எய்தது கிருஷ்ணனின் பாதங்களில் எனத் தெரிந்ததும் சோகத்துடன் அவரது பாதங்களுக்கு அருகேயே மண்டியிட்டு தவறு செய்தமைக்கு மன்னிக்க வேண்ட “எது நடந்ததோ அது என்னுடைய விருப்பத்தின் பேரிலேயே நடந்ததுஎன்று ஜராவினை ஆஸ்வாஸப்படுத்தினாராம்.


படம்: இணையத்திலிருந்து....

பிரபாஸ தீர்த்தத்தின் அருகில் இருக்கும் மண்டபத்தில் கிருஷ்ணர் படுத்திருப்பது போலவும், அவரது பாதத்தில் அம்பு பட்டு ரத்தம் வருவது போலவும், காலடியில் வேடன் ஜரா இருப்பது போன்ற சிலை ஒன்று இப்போது இவ்விடத்தில் இருக்கிறது. மனிதப் பிறவி எடுத்த கிருஷ்ணாவதாரமும் முடிவுக்கு வந்தது! கிருஷ்ணர் தனது கடைசி காலங்களில் இவ்விடத்தில் இருந்ததால் இவ்விடத்திற்கு வருபவர்களுகும் முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதனால் தான் இவ்விடம் முக்தி த்வாரகா!


படம்: இணையத்திலிருந்து....

இந்த ஜரா யார்? அவருக்கும் ஒரு கதை உண்டு.  ராமாவதாரத்தில் ராவண வதம் செய்வதற்கு முன்னர் சுக்ரீவனுக்கு உதவி செய்வதற்காக அவரது மூத்த சகோதரன் வாலியை ராமன் மறைந்திருந்து அம்பு எய்து கொன்றதாக ஒரு கதை உண்டு.  அப்படி ராமர் மறைந்து நின்று கொல்லப்பட்ட வாலி தான் இப்பிறவியில் ஜரா! அப்போது ஏற்பட்ட தவறு இந்த அவதாரத்தில் சரி செய்யப்பட்டதாகவும் நம்பிக்கை. பிரபாஸ தீர்த்தம் என்ற பெயரில் இப்போதும் இங்கே ஒரு சிறிய குளம் உண்டு. அதில் நிறைய மீன்கள் நீந்திக்கொண்டிருக்கின்றன. யாரும் இங்கே குளிப்பதில்லை என்றாலும் தண்ணீரை எடுத்து தங்களது சிரசின் மேல் தெளித்துக்கொள்கிறார்கள்.  சற்றே இருட்டி விட்டதால் அங்கே இருக்கும் மீன்களை படம் பிடிக்க முடியவில்லை என்பதில் எனக்கு கொஞ்சம் வருத்தம்! பக்கத்திலேயெ ஒரு பெரிய மரம்.  அதில் இரவு நேரம் என்பதால் நிறைய நாரைகள் தஞ்சம் புகுந்திருந்தன.  அவர்களுக்குள் அன்றைய தினத்தின் அனுபவங்களை பலமாக பரிமாற்றம் செய்து கொண்டிருந்தன!  அவற்றின் மொழி தெரிந்திருந்தால் கொஞ்சம் வம்பு கேட்டிருக்கலாம்!அங்கிருந்து வெளியே வரும்போது பக்கத்திலேயே ஒரு பெரிய சிவலிங்கத்தினையும் பார்க்க முடிந்தது.  இவை எல்லாம் பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கோவில்கள் என்பதை பார்க்கும் போதே தெரிந்து கொள்ள முடியும். வெளியிலிருந்தே புகைப்படம் எடுத்த போது மழையும் ஆரம்பிக்க, விரைந்து வாகனத்தினுள் தஞ்சம் புகுந்தோம்.  அங்கிருந்து புறப்பட்டு இரவிலேயே துவாரகா சென்று விட வேண்டும் என்பது எங்கள் யோசனை.  ஆனால் சென்று சேர்ந்தோமா?

அடுத்த பகுதியில் சொல்லட்டா?நட்புடன்

36 comments:

 1. setting standards in travel literature ....
  superb boss
  thama +

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது....

   Delete
 2. சிலவற்றை இன்று தான் அறிந்தேன்... நன்றி...

  படங்கள் அனைத்தும் அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 3. குருஷேத்ராவில் சண்டை நடந்தது என்கிறார்கள் ,சாபம் இட்ட இடம் இங்கேயா :)

  ReplyDelete
  Replies
  1. சண்டை நடந்ததும் சாபம் கொடுத்ததும் குருக்ஷேத்திரத்தில் தான். பலித்தது இங்கே! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 4. அருமை. இங்கேயும் இரண்டு, மூன்று முறை சென்றிருக்கிறோம். ஆனால் எழுத்தாளி ஆனதும் போனது ஒரு முறை தான்! :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 5. http://aanmiga-payanam.blogspot.in/2009/04/1_09.html//

  சோம்நாத் குறித்த பயணக்கட்டுரைத் தொடர். இதில் திரு கே.எம்.முன்ஷி அவர்கள் சோம்நாத் குறித்துச் செய்த ஆய்வுகளையும் சேர்த்திருக்கிறேன். ஆறு பகுதிகளாக எழுதி இருந்தேன். :)

  ReplyDelete
  Replies
  1. இணைப்பு தந்தமைக்கு நன்றி. மாலையில் படிக்கிறேன்......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 6. ஸ்ரீ கிருஷ்ணனின் வரலாற்றுடன் முக்தி துவாரகா தலத்தின் அறிமுகம் அருமை..

  படங்களும் அழகு!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 7. வணக்கம்,
  அருமையான பயணம், கடவுளுக்கும் சாபம்,,,,,,,,
  தொடருங்கள் தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி.

   Delete
 8. மீண்டும் மனப்பயணம் செய்தேன்.

  நம்ம பதிவில்.... கண்ணன்....

  http://thulasidhalam.blogspot.com/2010/02/21.html

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பதிவுகளையும் படிக்க வேண்டும்..... விரைவில் படிக்கிறேன்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 9. ம்ம் நம் புராணங்களில் சபதமும், சாபமும் நிறைய! ஒரு வேளை அதனால்தான் கதைகள் தொடர்கின்றனவோ! கேட்ட கதைதான் என்றாலும் உங்கள் நடையில் சுவாரஸ்யம்....சுற்றுலா பயணக் கட்டுரைகளில் நீங்கள் அசத்துகின்றீர்கள்...தொடர்கின்றோம்..
  ஆமாம் ல பறவைகள் பேசியது என்னவா இருக்கும்...புகைப்படங்கள் அழகு..
  படனள் அழகு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 10. துரியோதன்னின் 100 மகன்கள் என தவறாக உள்ளது. திருதராஷ்டிரனின் 100மகன்கள் என்றிருக்க வேண்டும். மற்றபடி அனைத்து இடங்களையும் நேரில் கண்டது போல் உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. எனது தவறினைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

   தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீவித்யா மோகன் ஜி!

   Delete
 11. சுவாரஸ்ய விவரங்கள். ஜரா முன்கதை முதன்முறை அறிகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 12. கதை, கதைக்குள் கதை. அழகான புகைப்படங்கள். நிகழ்விடத்திற்குக் கொண்டு செல்லும் உங்களின் எழுத்து. அனைத்திற்கும் பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 13. நான் சென்றதில்லை.இன்று சென்ரு வந்தேன்,தங்கள் தயவால்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 14. நிறைய விடயங்கள் தெரிந்து கொண்டேன் நண்பரே தொடர்கிறேன்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 15. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 16. அஹா இந்த சிவலிங்கத்தை என் ப்லாகில் போஸ்ட் செய்திருக்கேன் வெங்கட் சகோ.

  இவ்ளோ தூரம் வந்திட்டு இதுக்கு பக்கத்துல போகாம வந்திட்டமே. முக்தி கிடைக்குமா. :)

  ReplyDelete
  Replies
  1. இரண்டுமே அடுத்தடுத்த கோவில்கள் தான்.... அனைவருக்கும் முக்தி!

   உங்கள் ப்ளாகில் வெளியிட்ட போதே நான் எடுத்த படம் பற்றியும் சொல்லி இருக்கேன்னு நினைவு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.

   Delete
 17. சுவாரஸியமாக இருக்கிறது தொடர்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 18. இது வரை வந்துட்டேன் ..காந்தாரியின் சாபம் கேள்விப்பட்டதில்லை , இப்பொழுதுதான் அறிந்தேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....