படம்: இணையத்திலிருந்து....
எத்தனை
சம்பாதித்தாலும் சேமிக்கவே முடியவில்லை என்று உங்களுக்கு அவ்வப்போது தோன்றுகிறதா?
எப்பவுமே மாசக் கடைசில வரவுக்கும் செலவுக்கும் பெரிய இடைவெளி வந்து ஒரே இழுபறியா
இருக்கே என்னதான் பண்ணலாம்னு நீங்க யோசிப்பீங்களா? ஒவ்வொரு மாசமும் கடன் அட்டையை
தேச்சு சில செலவுகள் செய்தால், அடுத்த மாசம் அந்த கடனை தீர்க்க வேற அட்டையை
தேய்க்க வேண்டிய அவசியம் உண்டாகுது..... இப்படியெல்லாம் பிரச்சனைகள் இருந்தா அதை தீர்க்க ஒரு வழி இருக்கு! அது
என்ன?
கொஞ்சம்
சுலபமான வழி தான். இதைப் பின்பற்றினா நிச்சயம் நீங்க நிறைய செலவுகளை குறைச்சுக்க
முடியும். செலவுகள் குறைஞ்சு போறதால உங்களுடைய சேமிப்பு அதிகரிக்கும். உங்களைப்
பார்த்து மத்தவங்களும் இப்படி செய்ய ஆரம்பிச்சாலும் ஆரம்பிக்கலாம். இப்படி தான் தில்லில கூட ஒரு தடவை நடந்ததுன்னு
நான் சொன்னா உங்களுக்கு நம்பிக்கை வரணும்! அப்படி என்னதான் தில்லில நடந்ததுன்னு
நீங்க கேட்கணும்.... அதனால கேளுங்க!
இந்த
கட்டுரையில் நான் சொல்லப் போகிற கதை மாந்தர் இ.ஆ.ப [IAS] தேர்வுக்கு
தயார் செய்து அதில் வெற்றி பெற முடியாவிட்டாலும், எல்லா துறையிலும் பல விஷயங்களைத்
தெரிந்து கொண்டவர். எந்த விஷயம் பற்றி பேசினாலும் அதிலிருக்கும் பல நுணுக்கமான
விஷயங்களைப் பற்றி நிறைய பேசுவார். அவருக்குத் தெரியாத விஷயமே இல்லையோ என
கேட்பவர்களுக்குத் தோன்றும் அளவுக்கு இருக்கு அவரது பேச்சு. கவிதையா, வரலாறா, அரசியலா, இசையா, அறிவியலா, மொழியா,
திரைப்படங்களா நீங்கள் எதைப் பற்றி பேசினாலும் அதில் அவருக்கு தெரிந்த விஷயங்கள்
சொல்லும் அளவுக்கு திறமையானவர்.
படிப்பாளி. நிறைய படித்துக் கொண்டே இருப்பார் – அதுவும்
குறிப்பிட்ட சில விஷயங்களுக்கான புத்தகங்கள் மட்டுமல்ல, எல்லாவற்றையும் படிப்பார்.
அதிலிருக்கும் கருத்துகளை அவரது அளவு கடந்த திறமையால் நினைவிலும் வைத்துக்
கொள்வார். எந்த விஷயம் பற்றிய
கருத்துரையாடல் அவர் இருக்கும் இடத்தில் இருந்தாலும் தன்னுடைய கருத்தினை
ஆணித்தரமாகவும் அழுத்தமாகவும் சொல்லும் இவர், தன்னைப் பற்றி எப்போதுமே உயர்த்தியே
பேசுவார். அது மட்டுமல்லாது மற்றவர்களை “ஒரு பைசாவுக்கு உபயோகமில்லாதவர்” என்று சொல்லவும் செய்வார்.
”அது எல்லாம் சரி
தலைப்பில் சொல்ல வந்த விஷயத்தினை இது வரை சொல்லவே இல்லையே... கதை மாந்தரின் திறமை பற்றி மட்டுமே சொல்லிக்
கொண்டு போனால்.....” என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. அந்த விஷயத்திற்கு இதோ வருகிறேன்.
இத்தனை திறமைகள் இருந்தாலும், இவரிடம் ஒரு கெட்ட
பழக்கம் உண்டு. காட்டன், லினன், காதி என
பலவிதங்களில் உடை அணியும் இவர் தான் அணிந்து கொள்ளும் உடையை கடைசியாக எப்போது
மாற்றினோம், எப்போது துவைத்தோம் என்பதை மறந்து/இல்லை அதைப் பற்றிய கவலை இல்லாது
தொடர்ந்து ஒரு வாரத்திற்கு ஒரே மேல் சட்டையும், பேண்டும் அணிந்து கொண்டு வருவார்.
இந்தியாவின் பல பகுதிகளுக்கும் உரிய வியர்வை தில்லியிலும் அதிகம் என்பதை இங்கே
உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை.
இப்படி தொடர்ந்து ஒரே உடையை அணிந்து கொள்வதால்,
இவருக்கு துணிகளை துவைக்கும் செலவு குறைந்து சேமிப்பு அதிகரித்துக் கொண்டே
போனது. போலவே இவர் முகச் சவரமும் செய்து
கொள்வதில்லை. பல மாதங்களுக்கு தாடியுடன்
திரிவதால் அந்த செலவும் இல்லை. இப்படி இவர் இருப்பதால் சேமிப்பு உயர்ந்ததை அறிந்த
இவரது சில நண்பர்களும் அவர் குடியிருக்கும் இடத்தில் உள்ள சிலரும் இவரைப்
பின்பற்றி காசு சேமிக்கத் துவங்கி விட்டதாக செவி வழி செய்தி!
அவ்வப்போது அருகில் வந்து இவர் பேசத் துவங்கும் போது
மற்றவர்களுக்கு குமட்டிக் கொண்டு வருமே என நீங்கள் நினைத்தாலும், இவரைப் போலவே
மற்றவர்களும் மாறிவிட அந்த வாடை பழகி இருக்கும் போல! என்னைப் போன்ற சிலருக்கு அவர்
அருகே வரும்போதே கஷ்டமாக இருக்கும். அங்கிருந்து நகர்ந்து செல்ல முயற்சிப்பது
வழக்கம். அவரிடம் ஜாடை மாடையாக சொல்லிப்
பார்த்தோம் ஆனாலும் அவருக்கு புரியவில்லை போலும்! இல்லை இப்படி இருப்பதனால் சேமிப்பு
அதிகரிக்கிறதே மற்றவர்களைப் பற்றி என்ன கவலை என இருந்தாரோ என்பதும் தெரியாத
விஷயம்.
இவருடன் நெருங்கிப் பழகும், பேசும் ஒரு நண்பர் அவரிடம்
நேராகவே இந்த பழக்கத்தினை மாற்றிக் கொள்ள சொன்ன போது கதை மாந்தருக்கு பயங்கர
கோபம். உன் மூக்கில் தான் கோளாறு. ஒரு சிலருக்கு எல்லா வாசமும் கெட்டதாகவே தெரியும். அது தெரியாது, என்னிடம் இருந்து தான் வியர்வை
நாற்றம் வருகிறது என்று சொல்கிறாயே என சண்டைக்கு வந்து விட்டார். நீ முதல்ல ஒரு
நல்ல ENT மருத்துவரைப் பார்த்து உன் வியாதிக்கு வைத்தியம்
பார்த்துக் கொள் எனச் சொல்லி அங்கிருந்து நகர்ந்து விட்டார்.
தொடர்ந்து ஒரே உடையை அணியும் அவரது பழக்கமும், அதனால்
நாங்கள் படும் அவஸ்தைகளும் தொடர்ந்து கொண்டிருந்தன. “இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவே இல்லையா?” என நாங்கள் அனைவரும் நொந்து போயிருக்க, வந்தது விடிவுகாலம்! அவருக்கு பணி
உயர்வு கிடைத்து எங்கள் அலுவலகத்திலிருந்து வேறொரு அலுவலகத்திற்கு மாற்றலாக
நாங்கள் அனைவருமே நிம்மதியாக மூச்சு விட்டு நல்ல காற்றை உள்ளே இழுத்தோம். கூடவே மனதில் ஒரு எண்ணமும் தோன்றியது!
அவர் போகும் அலுவலகத்தில் இருக்கும் நபர்கள் என்ன பாடு
படப் போகிறார்களோ என்ற எண்ணம் தான் அது!
என்ன நண்பர்களே, இப்படி இருப்பதை விட தேவையற்ற ஆடம்பரச்
செலவுகளை குறைத்து, சேமிப்பது தான் சிறந்தது என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன!
என்றென்றும் அன்புடன்
இப்படியும் ஒரு மனிதரா
பதிலளிநீக்குவியப்பாக இருக்கிறது ஐயா
தம +1
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஆகா ... செம ராகிங்
பதிலளிநீக்குஎவ்வளவு பெயின் இருந்தால் இப்படி எழுதுவீங்க
தம +
ரொம்ப கஷ்டமப்பா!....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.
பதிவைப் படித்து முடிக்கும்போது எங்களும் நிம்மதியாக இருந்தது. அப்பப்பா ரொம்பவும் படுத்திவிட்டார்.
பதிலளிநீக்குரொம்பவே படுத்திவிட்டார்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.
பதிலளிநீக்குநீங்கள் குறிப்பிடும் நபர் சோம்பேறி என நினைக்கிறேன். இவர் அதிகம் படித்து என்ன பயன்? நல்ல வேளை அவர் இந்திய ஆட்சிப்பணிக்கு தேர்வாகவில்லை!
இ.அ.ப – இதை இ.ஆ.பெ (இந்திய ஆட்சிப் பணி) என மாற்றிவிடுங்கள்.
தவறினைச் சுட்டியமைக்கு நன்றி. மாற்றி விட்டேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
மனிதர்கள்!
பதிலளிநீக்குதனக்கான அடையாளமாக ஒரே மாதிரியான உடையை (ஆனால் சுத்தமாக) அணியும் பழக்கம் உடைய சிலரை என் சிறுவயதில் பார்த்திருக்கிறேன்.
நெய்வேலியில் இப்படி ஒருவரை நான் பார்த்திருக்கிறேன். கருப்பு பேண்ட், வெள்ளை சட்டை என எப்போதும் இருப்பார் - ஆனால் அதே Combination-ல் நிறைய இருந்ததால் எங்களுக்கு அவஸ்தை இருந்ததில்லை!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
அடப் பாவமே! ரொம்ப கஷ்டப் பட்டிருப்பீர்களே! உங்க அலுவலகத்தில் முகமூடி(மாஸ்க்) போட்டு வேறு இருக்க முடியாது.
பதிலளிநீக்குரொம்பவே கஷ்டம் தான்.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
இப்படியும் இருப்பாங்களா? என்றே நினைக்கத்தோன்றியது.
பதிலளிநீக்குஇருக்காரே....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.
ஹாஸ்யம் நிறைந்த பதிவு. ஆமாம் அவரை பேசாமல் தங்கள் நகரில் உள்ள ஆட்சி மன்றத்துக்கு அனுப்ப முயற்ச்சித்திருக்கலாமோ?.
பதிலளிநீக்குநாரோடு சேர்ந்த நாறும்.(மன்னிக்க)
பூவோடு சேர்ந்த பூவும். என்று ஒரு புதுமொழி உருவாகி இருக்குமே...!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அன்பே சிவம்.
நீக்குஇப்படியும் சில மனிதர்கள் - எல்லாருக்கும் இடைஞ்சல்களை உண்டாக்கிய வண்ணம்!..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.
நீக்குசுத்தமில்லாத பேர்வழியிடம் அறிவிருந்து என்ன பயன்?
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
நீக்குஅடேடே.. நானும் இது போல் ஒருவரைச் சந்தித்து இருக்கிறேன்.. மேலும் நம் தினசரி பயணங்களில் நிறைய பேர்கள் நம் கண்ணில், இல்லை இல்லை, மூக்கில் படுவார்கள்!
பதிலளிநீக்கு:)))
நீங்கள் சந்தித்தவரை பற்றியும் எழுதுங்களேன்!
நீக்குமூக்கில் படுவார்கள்! :)))
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
அனுபவம் பயங்கரம்.
பதிலளிநீக்குதப்பித்தமைக்கு மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்குநன்றி ஜி இன்றுமுதல் நானும் இதை கடைப்பிடிப்பேன் எனக்கும் 4 காசு சேர்க்க ஆசைதான்.
பதிலளிநீக்குஹா...ஹா... இது வேண்டாத வேலை கில்லர்ஜி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
எல்லோரும் இப்படியே ஆரம்பிச்சா என்ன ஆகும்?!
பதிலளிநீக்குதுணி சோப்பு தயாரிக்கும் கம்பெனிகள் மூட வேண்டி வரும். நாத்த மருந்து [scent] கம்பெனிகள் நிறைய திறக்க வேண்டி இருக்கலாம்! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.
இப்படியும் சேமிப்பவா்கள் இருக்கத்தான் செய்கிறாா்கள் நண்பரே. ஆனால் அவா்கள் செலவு செய்வது நல்ல நண்பா்களை என்பதை அவா்கள் அறியவில்லை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் இரா. குணசீலன்.
நீக்கு