எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, September 27, 2015

நாளைய பாரதம் – 7

நாளைய பாரதம் – முந்தைய பகுதிகள் – 1 2 3 4 5 6

பயணம் செல்லும் வேளைகளில் நான் சந்திக்கும் குழந்தைகளின் புகைப்படங்கள் எடுப்பது எனக்கு வழக்கம்.  அவ்வப்போது அப்புகைப்படங்களை எனது வலைப்பூவில் வெளியிட்டு வருவதும் உண்டு. இது வரை அப்படி 6 பதிவுகளை “நாளைய பாரதம்எனும் தலைப்பில் எனது வலைப்பூவில் வெளியிட்டு இருக்கிறேன். கடைசியாக அப்படி ஒரு பதிவு வெளியிட்டு ஒரு வருடத்திற்கும் மேலாகி விட்டது! படங்கள் எத்தனையோ இருந்தும் இது வரை வெளியிடவே இல்லை! இப்படி இடைவெளி வருவது தவறாயிற்றே!  இதோ இந்த ஞாயிறில் நான் எடுத்த படங்கள் உங்கள் பார்வைக்கு!

இப்படங்கள் அனைத்துமே என்னுடைய வட கிழக்கு மாநில சுற்றுப்பயணத்தின் போது எடுத்தவை.  குழந்தைகளுக்கு எந்த வித கவலையுமில்லை. குளிரோ, மழையோ, வெய்யிலோ அது பற்றிய கவலை அவர்களுக்கில்லை. அவர்கள் தான் உண்டு தன் விளையாட்டு உண்டு என சந்தோஷமாக இருக்கிறார்கள்! தொடர்ந்து சந்தோஷமாக இருக்கட்டும்!”கையில என்னமோ வைச்சு இருக்காரே அது என்ன?” என்று கேள்வியுடன் பார்க்கும் சிறுவன் - படம் எடுத்த இடம் அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா 


அண்ணனின் தோள்களில் இருப்பது சுகமாய் இருக்கிறதோ இவருக்கு! - படம் எடுத்த இடம் தேஸ்பூரிலிருந்து சிங்ஷூ எனும் இடத்திற்குச் செல்லும் வழியில் இருந்த ஒரு உணவகம்.


கள்ளமில்லாத சிரிப்பு - இப்படமும் சிங்ஷூ செல்லும் வழியில் எடுத்த படம் தான்!


இது மூவர் அணி....  உணவகத்தின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள்.....


செல்லும் வழியிலிருந்த சிறு கிராமம் ஒன்றில் - சாலையோர வீட்டில் வசிக்கும் சிறுமி - ஓட்டமும் நடையுமாக!


குளிருக்கான உடையில் ஒரு கிராமிய சிறுமி - இப்படமும் பயணித்தபடியே எடுத்த படம் தான்!அருணாச்சல் மாநிலத்தில் சிமிதாங்க் எனும் இடத்தில் அம்மாவின் தோளில் இருந்த குழந்தை.....


இவர் பெயர் இனிதன்.....  நம்ம ஊர்க்காரர் - இருப்பது அதே சிமிதாங்க்!


கடல்மட்டத்திலிருந்து 16000 அடியில் ஒரு புகைப்படம் - இது எடுத்தது சீன எல்லையில்...


ஃபோட்டோ புடிச்சா இப்படித்தான் ஸ்டைலா போஸ் குடுக்கணும்! எடுத்த இடம் ஒரு புத்தர் கோவில்!அருணாச்சலப் பிரதேசம் - தேஸ்பூர் திரும்பும்வழியில் ஒரு உணவகத்தின் முன் அண்ணாவும் தங்கையும்!


தங்கை இங்கே தனியாக!


பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் - மேகாலயா மாநில சாலையில்!


சுற்றுலா வந்தால் இப்படி சில டம்பப் பைகள் அவ்சியம் - மேகாலயா சிறுமி!


அம்மாவின் இடுப்பில் ஒய்யாரமாய் - திரிப்புரா மாநிலத்தின் அகர்தலா நகரம்.


கொல்கத்தா - காளி [G]காட் அருகே குங்குமம் விற்பவரின் மகள்!

புகைப்படங்களை நீங்களும் ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.  உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

நட்புடன்
34 comments:

 1. இனிய மலர்களைக்கண்டு என் மனம் மலர்ந்தது. அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. ஒவ்வொரு படமும் ஒரு கவிதை ஐயா
  நன்றி
  தம+1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 3. புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அருமை. குழதைகளின் களங்கமில்லா முகங்களை காணும்போது நமது கவலைகளும் மறக்கின்றன

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 4. எதிர்கால இந்தியா பிரகாசமாய் இருக்கிறது. படங்கள் அருமை. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 5. குழந்தைகள் ஒவ்வௌருவருமே ஒரு வித அழகு தான். முதல் பையன் கண்கள் பேசுவதை பாருங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆர்.வி. சரவணன்.

   Delete
 6. எந்த ஊரானால் என்ன என்ன மொழியானால் என்ன குழந்தைகள் மலர்ச்சியின் இருப்பிடம் பார்த்துக் கொண்டே இருக்கலாம்

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான்..... மொழியோ, ஊரோ பிரச்சனை இல்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 7. குழந்தைகளின் படங்களை கண்டு மனம் லேசானது! அழகான படங்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 8. இயற்கையாக எழிலாக இருக்கின்றன அனைத்துப் படங்களும்..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 9. ரசனையான போட்டோக்கள் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 10. என்ன மாயம் செய்வீர்கள் ,குழந்தைங்க எல்லாம் அழகாய் போஸ் கொடுத்திருக்கே :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 11. எந்தக் கோணத்தில் படமெடுத்தாலும் குழந்தைகள் அழகுதான். பாராட்டுகள் வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 12. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 13. படங்கள் அருமை அண்ணா...
  முந்தைய பதிவுகள் ஒவ்வொன்றாய் வாசிக்கிறேன் அண்ணா..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 14. படவழி பேசும் பளிங்கு முகங்கள்! அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 15. பிள்ளை செல்வங்கள் அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 16. "டம்பப் பை" - பழைய வார்த்தைப் பிரயோகம்போல் தெரிகிறது. இதன் உண்மையான அர்த்தம் என்ன? (வெறும் டம்பத்துக்கு வாங்கி வச்சுருக்கற பையா?)

  ReplyDelete
  Replies
  1. டம்பப் பை - சும்மா ஷோவுக்கு பை! இப்படியான பாதி பைகளில் குப்பை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 17. குழந்தைகள் பூக்கள் போன்ற மென்மையானவர்கள்! குழந்தைகளும் அழகு! படங்களும் அழகு...ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் ஒவ்வொரு விதமான உணர்வுகள் வெளிப்படுகின்றது..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....