எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, September 9, 2012

நாளைய பாரதம்....

நாளைய பாரதம் இன்றைய சிறுவர்கள் கையில்… 

அவ்வப்போது நான் வெளியூருக்குச் செல்லும்போதோ, வெளியே செல்லும்போதோ சிறுவர்களை படமெடுப்பது வழக்கம். அப்படி எடுத்த சில படங்களை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தேன். இதோ சில படங்கள்! உங்களுக்காக!


[ஆக்ரா கோட்டையில்….]


[அலஹாபாத் கங்கைக் கரையில்…]


[திருப்பராய்துரையில்….]


[பெட்டவாய்த்தலையில்…]


[பெட்டவாய்த்தலையில்…]

[திருச்சியில்….]


[திருச்சி பேருந்து ஒன்றில்….]


[அகரம் கிராமத்தில்….]

என்ன நண்பர்களே…. நாளைய பாரதம் கண்டீர்களா?

மீண்டும் அடுத்த ஞாயிறன்று வேறு சில படங்களோடு உங்களைச் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

68 comments:

 1. நாளைய பாரதம் நம்பிக்கையான பாரதம்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கார்த்திக்.

   Delete
 2. கண்டோம்... அறிந்தோம்... நன்றி சார்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி தனபாலன் ஜி!

   Delete
 3. கண்டேன்...

  குழந்தைகளை படம் பிடிக்கும் ஆர்வம்.. நல்லது...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவிதை வீதி சௌந்தர்.

   Delete
 4. நல்ல எதிர்காலம் அமையட்டும் குழந்தைகளுக்கு. அருமை.

  ReplyDelete
  Replies
  1. //நல்ல எதிர்காலம் அமையட்டும் குழந்தைகளுக்கு.//

   அதே... அதே...

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி ஜி!

   Delete
 5. அகரம் எங்கே இருக்கிறது?
  படங்கள் பிரமாதம். மேலிருந்து இரண்டும் ஆறும் பொக்கிஷம்.

  ReplyDelete
  Replies
  1. அகரம் - இக்கிராமத்தின் முழுப் பெயர் அய்யூர் அகரம். விழுப்புரத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.

   இரண்டும் ஆறும் - எனக்கும் பிடித்த படங்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை ஜி!

   Delete
 6. அடடா.. அழகான குழந்தைகள்.. எழிலான பாரதத்தின் சாட்சியாய்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 7. புகைப்படத்தில முகம் காண்பிக்கும்போது என்ன சந்தோஷம் அவங்களுக்கு! அருமை சார்.
  த.ம. 5

  ReplyDelete
  Replies
  1. //புகைப்படத்தில முகம் காண்பிக்கும்போது என்ன சந்தோஷம் அவங்களுக்கு!//

   ஆமாம் முரளி... அவர்களாகக் கேட்கும்போது தான் படம் எடுத்தது.. :) படம் எடுத்து காண்பிக்கும்போது அவர்கள் முகத்தில் இன்னும் அதிக சந்தோஷம்.

   Delete
 8. எழில் மிகுந்த பாரதத்தின், வருங்கால மன்னர்களைக் கண்டு களித்தேன்.
  பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி!

   Delete
 9. குழந்தைகள் படங்கள் எல்லாமே அருமை தான் என்றாலும் அலகாபாத் சிறுவனின் முகம் ஏனோ மனதைப் பிசைந்தது.

  கடந்த 4 பதிவுகளை என்னால் ஓப்பன் செய்யவே முடியவேயில்லை. இந்தப்பதிவு தான் ஓப்பன் செய்ததும் உடனேயே பார்க்க முடிந்தது. எங்கே தவறு என்று புரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. //புகைப்படத்தில முகம் காண்பிக்கும்போது என்ன சந்தோஷம் அவங்களுக்கு!//

   ஆமாம். இச்சிறுவன் பற்றிய விவரங்கள் காசி - அலஹாபாத் பயணத் தொடரில் வரும்....

   //கடந்த 4 பதிவுகளை என்னால் ஓப்பன் செய்யவே முடியவேயில்லை.//

   ஓ.... என்ன விஷயம் புரிவதில்லை...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் ஜி!

   Delete
 10. இளைய தலைமுறையின் இனிய படங்கள்! ஆனால் பாம்பைக் கையில் பிடித்திருக்கும் சிறுவன் படம்- பகீர்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் ஜி!

   பகீர் படத்தின் விவரம் பயணக் கட்டுரையில் வரும்...

   Delete
 11. அதி அற்புதமான சில கவிதைகளாய் உணர்கிறேன், இதை!

  ReplyDelete
  Replies
  1. குழந்தைகள் கவிதைகள் தானே...

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆர்.ஆர்.ஆர்.

   Delete
 12. நம்பிக்கைப் பிறக்கிறது வெங்கட் நாளைய பாரதம் எண்ணி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்ஜி!

   Delete


 13. வருங்கால மன்னர்கள்! இல்லை! மந்திரிகள் ! வாழ்க!

  ReplyDelete
  Replies
  1. வருங்கால மந்திரிகள் .... சரியாகச் சொன்னீர்கள் புலவர் ஐயா.

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 14. பொருத்தமான தலைப்பு.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா.

   Delete
 15. Replies
  1. exactly...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வரலாற்று சுவடுகள்.

   Delete
 16. இளைய‌ பார‌த‌த்தினாய் வா வா வா... எதிரிலா வ‌ள‌த்தினாய் வா வா வா(வ்)!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 17. கள்ளங் கபடமற்ற அந்த குழந்தைகளின் முகத்தில்தான் எத்தனை எதிர்பார்ப்புகள்! உங்களுக்குள் இருக்கும் அந்த குழந்தை மனம் வாழ்க!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 18. குழந்தைகளின் படங்களைப் பார்த்தாலே சந்தோஷம்தான்...
  அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 19. நாளைய பாரதம் நம்பிக்கையுடன் காத்து இருக்கிறது ஊழலற்ற தேசத்தை காண.... புகைப்படங்கள் நன்றாக உள்ளது...

  என் வலைபதிவில் "ஒரு தாயின் பிராத்தனை".....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆயிஷா ஃபரூக். ஊழலற்ற தேசத்தை காண்போம் என்ற நம்பிக்கையுடன்...

   Delete
 20. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் குணசீலன்.

   Delete
 21. உங்களின் ” மகத் எக்ஸ்ப்ரஸில் ஒரு பயணம் “ என்ற பதிவைப் படிக்க எனது முகப்பு பலகையில் (Dash Board) கிளிக் செய்தால் வருவதில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. சில சமயங்களில் பிளாக்கர் பிசாசு தானாகவே வெளியிடுவது வாடிக்கையாகிவிட்டது. இப்பதிவு இரண்டு வாரங்களுக்கு முன்பே எழுதியது.... இன்று மீண்டும் டேஷ்போர்டில் வந்திருக்கிறது!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 22. Hello sir this my village pettavaithalai.before i was study(old 15 years) back from thirupparithirai . thanks.

  ReplyDelete
  Replies
  1. ஓ உங்களுக்கு பெட்டவாய்த்தலைதான் ஊரா? நான் அடிக்கடி திருப்பராய்த்துறை செல்வதுண்டு - உங்கள் ஊர் வரை செல்லும் பஸ்ஸிலேறி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணபதி.வி.வி.

   Delete
 23. நாளைய பாரதம் நன்றாக இருந்தது. ரசித்தோம். மகிழ்ந்தோம். தொடரட்டும் உங்கள் பணி. ஆனால் பாரதியின் பாட்டு எப்போது உண்மையாகும்????????


  விஜய்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   //ஆனால் பாரதியின் பாட்டு எப்போது உண்மையாகும்????????//

   இதுதான் மிகப்பெரிய கேள்விக்குறி!

   Delete
 24. ஒரு மூஞ்சியிலேயும் செயற்கைத்தனமே இல்லை. அதனால் இயற்கையாக இருக்கிறது.

  (பெட்டவாய்த்தலை - பெயர்க்காரணம் நோண்டுனா நல்ல கதை கிடைக்குமோ?)

  ReplyDelete
  Replies
  1. //ஒரு மூஞ்சியிலேயும் செயற்கைத்தனமே இல்லை. அதனால் இயற்கையாக இருக்கிறது.//

   அதான் அண்ணாச்சி....

   அதுவும் புகைப்படம் எடுப்பதை குனிந்து பார்க்கும் பெண்ணின் படம்... :)

   பெயர்க்காரணம் நோண்டுனா... இந்த வாட்டி ஊருக்குப் போகும்போது கேட்டுடுவோம்!

   வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்]

   Delete
 25. எல்லாப்படங்களும் அழகுன்னாலும் மூவர்ணப்பொட்டு வெச்ச சிறுவன் அசத்தல்..

  ReplyDelete
  Replies
  1. படம் எடுத்த அன்று சுதந்திர தினம். அதுதான் மூவர்ணப் பொட்டு...

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 26. எதிர்காலம் இனிதாக அமைய வாழ்த்துவோம்.

  அலஹாபாத் சிறுவன் படம் கவலையைத் தந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 27. பல வண்ண மலர்களைப் பார்த்த பூரிப்பு
  அருமையான புகைப்படங்கள்
  இவர்கள்தானே நாளைய பாரதம்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் சுவையான கருத்திற்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 28. Replies
  1. தமிழ்மணம் பன்னிரெண்டாம் வாக்கிற்க்கு நன்றி ரமணி ஜி!

   Delete
 29. அகரத்திலே
  எடுத்த படமா அது !!
  என்னை
  அசத்தி விட்டது !!


  பிஞ்சுப் பசங்கன்னு நினைக்காதீக..
  பத்தே வருசத்திலே
  பின்னி எடுத்துடுவாங்க.
  பார்க்கப்போறீக

  யாருன்னா கேட்கறீக !!
  இவக தான்நம்ம
  எதிர்கால
  சசினும் தோனியும்  சுப்பு ரத்தினம்.
  http://arthamullavalaipathivugal.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. //யாருன்னா கேட்கறீக !!
   இவக தான்நம்ம
   எதிர்கால
   சசினும் தோனியும்

   சுப்பு ரத்தினம். //

   படம் வெளியிடும்போது எழுத மறந்த ஒரு விஷயம்...

   “அண்ணே என்னை இப்பவே ஃபோட்டோ எடுங்கண்ணே, பெரிசானப்புறம் நான் சச்சின் மாதிரி பெரியாளாயிடுவேன், அப்ப உங்களால என்னை ஃபோட்டோ எடுக்க முடியாது!” சொன்னது கையில் பேட் வைத்திருக்கும் சிறுவன்!

   உங்கள் வாக்கும் பலிக்கட்டும்!

   Delete
 30. ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் அப்பட்டமான உற்சாகம் தெரிகிரது.
  ஒளிமயமான எதிர்காலம் அவங்க கண்களுக்குதெரியுது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

   Delete
 31. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 32. வருங்கால பாரத தரிசனம் வழங்கிய தங்களுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 33. அசத்தலான படங்கள்.நானும் இந்த மாதிரி படங்கள் எடுப்பேன் ஆனால் அந்த படங்களில் நானும் இருப்பேன்!! இது நல்ல ஐடியா சார்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா ஜி!

   Delete
 34. குழந்தைகள் எல்லாம் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
  பாம்பை பிடித்து இருக்கும் பையன் மட்டும் சோகமாய் இருக்கிறான். வயிற்று பிழைப்புக்காக அவன் மகிழ்ச்சி தொலைந்து போனதோ!
  இளமையில் வருமை கொடுமை.
  எல்லா குழந்தைகளுக்கும் நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தஙக்ளது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   பாம்பு பிடித்திருக்கும் சிறுவன் - எனக்கும் கஷ்டம்தான் அவனைப் பார்த்தபோது.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....