புதன், 26 செப்டம்பர், 2012

பிரம்மஹத்தி தோஷம் போக்கும் மத்யார்ஜுனேஸ்வரர்



[கோவிலின் ராஜகோபுரம்]

திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்கள் பழமையான கோவில்களுக்குப் பெயர் போனவை.  திருச்சிகோவை நெடுஞ்சாலையில் உள்ள பேட்டவாய்த்தலை என்ற இடத்தினருகில் உள்ள தேவஸ்தானம் என்ற இடத்திலும் இப்படி ஒரு பழமையான கோவில் இருக்கிறது. பேட்டவாய்த்தலை கிராமத்தில் பசுமையான தோட்டங்களும், பச்சை மரங்களும், வயல்வெளிகளும் நிறைந்த இடத்தில் அருள்மிகு பாலாம்பிகை சமேத ஸ்ரீ மத்யார்ஜுனேஸ்வரர் குடிகொண்டிருக்கும் கோவில் இருக்கிறது.


[பச்சை நிறமே பச்சை நிறமே.... - வயல்வெளி]

ஒரு காலத்தில் வற்றாத நதியாக இருந்த காவிரி நதி பாயும் சோழநாட்டின் திருச்சி மாவட்டத்திலிருந்து கோவை செல்லும் நெடுஞ்சாலையில் திருச்சிக்கு மேற்கே சுமார் முப்பது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இத்திருக்கோவில், சோழ மன்னர் பரம்பரையில் வந்த மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்டது என்று கல்வெட்டுகள் மூலம் தெரிகிறது.


[உய்யகொண்டான் கால்வாய்]


மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் பொங்கி வந்த காவேரி நதியின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும், “சோழ வளநாடு சோறுடைத்துஎன்ற தொல்புகழை நிலைநாட்டவும் உய்யகொண்டான் என்னும் வாய்க்கலை வெட்டுவித்து, அவ்வாய்க்காலின் உற்பத்தி ஸ்தானத்தில் முன்யோசனையோடும் பக்தியுடனும் கட்டப்பட்டது தான் இந்த பேட்டவாய்த்தலை கோவில். கோவில் இருக்குமிடத்தைதேவஸ்தானம்என்றும் அழைக்கிறார்கள்.   கோவில் கட்டியது மட்டுமல்லாது இக்கோவில் பராமரிப்புக்கென பல நிலங்களை தானமாக அளித்திருக்கிறார் என்றும் அவையெல்லாமே இப்போது குத்தகைக்கு விடப்பட்டு அதிலிருந்து சொற்ப வருமானமே வருகிறது என்கிறார்கள்.

ஐந்து நிலைகளைக் கொண்ட இராஜகோபுரம் உள்ள இக்கோவிலில் சுவாமி கிழக்கு நோக்கியும் அம்மன் தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கிறார்கள்.  சுற்றுப்  பிரகாரத்தில், நர்த்தன விநாயகர், கன்னிமூல கணபதி, தட்சிணாமூர்த்தி, சுப்ரமணியர், கெஜலட்சுமி, துர்க்கா தேவி போன்ற சன்னதிகளும் உள்ளன.  கோவிலின் தல விருட்சம் வன்னி மரம்.


[வன்னி மரம்]


மழைக்காலத்தில் சுவாமி சன்னதியின் தரையிலுள்ள ஊற்றுகள் வழியாக நிலத்தடி நீர் மேலே வந்து நிரம்புவதால் திருவானைக்கால் ஜலகண்டேஸ்வரர் என்று எண்ணும்படியாக இருக்குமாம்.  பிரம்மஹத்தி தோஷம் காரணமாக குழந்தை பாக்கியம் இல்லாத மன்னனுக்கு, இக்கோவில் கட்டி முடித்த பின் குழந்தை பாக்கியம் உண்டாயிற்றாம்.  அதை நினைவு படுத்தும் வகையில் இங்குள்ள மண்டபத்தில் ஒரு தூணில் பிரம்ம ஹத்தி உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. 


[கோவில் விளம்பரப் பலகை]

பெண்களின் கர்ப்பப்பை கோளாறுகள் நீங்குவதற்கும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கும் இக்கோவில் அம்பாள் அருள்மிகு பாலாம்பிகைக்கு விரதம் இருந்து வழிபட்டால் பாதிப்பில் இருந்து விடுபட வழிபிறக்கும் என நம்புகிறார்கள்.  இக்கோவில் பற்றி அவள் விகடன், சக்தி விகடன் போன்ற இதழ்களிலும், தினத்தந்தி நாளிதழிலும் செய்திகள் வெளிவந்ததை கோவிலில் ஒட்டி வைத்திருந்தனர். கோவிலுக்கென்று ஒரு தேர் இருந்தது என்பது வெளியிலிருந்த இரண்டு சக்கரங்கள் கொண்டதோர் உருவத்திலிருந்து புரிகிறது.




[நாணல் புதர்]


அமைதி குடிகொண்டிருக்கும் இக்கோவிலுக்குச் செல்லும் வழியில் நாணல் புதர்கள் மண்டிக்கிடக்கின்றன.  கிராமத்து மக்களுக்கு வழியோரம் தான் கழிப்பறைகள் போல.  கிராமத்திலுள்ள வீடுகளுக்கு அரசாங்கமோ, உதவி நிறுவனங்களோ கழிவறைகள் கட்டிக்கொடுத்து அதன் சுத்தம் மற்றும் சுகாதாரத்தினையும் சொல்லிக் கொடுத்தால் நன்றாயிருக்கும்.




[நாளைய பாரதம் - 1]



[நாளைய பாரதம் - 2]

நான் சென்றது சுதந்திர தினம் அன்று என்பதால் கோவில் உள்ளே இருக்கும் சிறுவர் பள்ளியில் கொடியேற்றி கொண்டாடிவிட்டு வெளியே விளையாடிக்கொண்டிருந்தார்கள் சில மாணவிகள்.  புகைப்படங்கள் எடுப்பதைப்பார்த்துஅண்ணே எங்களையும்ஃபோட்டாபுடிங்கண்ணேஎனக் கேட்கவே, அவர்கள் அனைவரையும் எடுத்தேன்.  பிறகு இரண்டிரண்டு பேராக  எடுக்கவும் கோரிக்கை! அதனையும் நிறைவேற்றி  வெளியே வந்தோம்.  வழியில் உள்ள ஒரு கால்வாய் பாலத்தில் சில சிறுவர்களும் உட்கார்ந்திருக்க, அவர்களையும் புகைப்படங்கள் எடுத்துக் காண்பித்து விட்டு ஊரை விட்டு வந்தோம்.



[புதிய ஆஞ்சனேயர்....]


ஊரின் வெளியே இப்போது 45 அடியில் ஒரு பெரிய ஆஞ்சனேயர் சிலை நிர்மாணித்து வருகிறார் ஒருவர்.  இன்னும் சில மாதங்களில் திருச்சியிலிருந்து கோவை செல்லும்போது அபயஹஸ்தத்தோடு அருள்பாலிக்கும் ஆஞ்சனேயரை நீங்கள் காண முடியும்.   கோவில் அமைப்பதோடு கிராமத்திற்கென கழிப்பறைகளும் கட்டிக்கொடுத்தால் நன்றாக இருக்குமே என்ற நல்லெண்ணத்தினையும் அவர் மனதில் விதைத்து வந்தோம்.

திருச்சி வரும்போது நேரமிருந்தால் அருள்மிகு பாலாம்பிகை உடனுறை ஸ்ரீ மத்யார்ஜுனேஸ்வரர் கோவிலுக்கும் சென்று வாருங்களேன்.

மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம். அது வரை

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


34 கருத்துகள்:

  1. திருச்சி செல்லும் வழியில் பார்த்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. இதெல்லாம் வந்தியத்தேவன் கால்பட்ட இடமாக இருந்திருக்கும், இல்லையா!

    நல்ல பக்திப் பயண, பயனுள்ள பதிவு. சிவ! சிவ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்தியத்தேவன் கால்பட்ட இடம்... இருதிருக்கலாம். ஆனால் என் கால் பட்டது நான் சென்றபோது! :))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.

      நீக்கு
  3. ஸ்ரீ மத்யார்ஜுனேஸ்வரர் கோவிலைப்பற்றிய நல்ல விளக்கமான பகிர்வு.
    வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி.

    பின் குறிப்பு: மல்லிகார்ஜுனம் (தலை)(top) என்று ஸ்ரீ சைலத்தையும் (ஆந்திரா), மத்யார்ஜுனம் (இடை)(middle))என்று திருவிடைமருதுரையும் ச்புடர்ஜுனம் (கடை)(end) என்று திருப்புடைமருதூர் அம்பாசமுத்ரரையும் (திருநேல்வேலி மாவட்டம்)
    புராணங்களில் குறிப்பிடுவது உண்டு. (this is for your information).
    விஜய்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் விவரங்களுக்கும், பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

      நீக்கு
  4. புதிய செய்தி. அடுத்தமுறை ஸ்ரீரங்கம் போகும்போது போய்விட்டு வர வேண்டும்.
    உய்யக் கொண்டான் கால்வாய் புகைப்படம் ரொம்ப அழகாக இருக்கிறது.
    சிறப்பான பகிர்வு. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

      நீக்கு
  5. மத்தியார்ஜுனரைப் பார்க்கவேண்டும். அடுத்த விஸிட்டில் நிச்சயம் உண்டு. ஃபோட்டோகிராஃபி கலக்குறீங்க தலைநகரத் தலையே! :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைநகரத் தலையே.... அப்பாடா.... இதைக் கேட்டு எவ்வளவு நாளாச்சு மைனரே.... :)))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. வந்தியத் தேவன் பாதம் பதித்தாரோ இல்லையோ... நீங்கள் பாதம் பதித்த இந்த ஆலயத்தை தரிசிக்கும் ஆர்வத்தைக் கிளப்பி விட்டீர்கள். லிஸடில் மேலும் ஒன்று சேர்கிறது உங்களால். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கணேஷ். நேரம் கிடைக்கும்போது சென்று வாருங்கள்.....

      நீக்கு
  7. புதிய கோவில் பற்றி அறிந்து கொண்டேன்.அருமையான பகிர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குட்டன்.

      நீக்கு
  8. True.

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமரபாரதி.

    பதிலளிநீக்கு
  9. இப்படி இன்னும் எத்தனை கோவில்களோ.
    வந்தியத்தேவன் இன்னும் எத்தனை கோவிலில் கால்கள் பத்திதிருக்கிறாரோ. நீங்கள் எல்லாக் கோவில்களைப் பற்றியும் எழுதி விடுங்கள்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நான் கண்டது கைமண் அளவு கூட இல்லை. அதில் ஒரு பகுதி தான் வல்லிம்மா... காண வேண்டியது எத்தனையோ!

      நீக்கு
    2. மிக அருமையான கோயில். இங்கே பல வேண்டுதல் நிறைவேற்றி உள்ளார் சிவன் அம்பாள் சித்தர்.ௐநம சிவாயம்.

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே.

      நீக்கு
  10. பதிவு எங்கள் இடத்தில் ஏனோ அப்டேட் ஆகவில்லை!
    நல்ல தகவல். அழகிய கோவில். குத்தகை மதிப்புகள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவையோ? தற்கால மதிப்பீட்டில் பெரும்பாலான குத்தகை நிர்ணயம் இருப்பதில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில பதிவுகள் ஏனோ அப்டேட் ஆவதில்லை ஸ்ரீராம். என்ன செய்வதென்று புரியவில்லை.


      குத்தகை மதிப்பு நிச்சயம் இன்றைய மதிப்பில் இருக்காது! :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  11. நல்ல படங்களுடன், விளக்கங்களுடன் அழகிய பதிவு.

    திருச்சியிலேயே இருந்தும் கூட நானும் இன்னும் இந்தக் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை.

    பகிர்வுக்கு நன்றிகள், வெங்கட் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!


      எப்போது முடியுமோ அப்போது சென்று வாருங்கள்.

      நீக்கு
  12. அவ்வழி பலமுறை சென்றும் பார்த்ததில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த முறை செல்லும்போது பார்க்க முயலுங்கள் புலவர் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. பதிவினைக் கண்டேன். எனது பௌத்த ஆய்வு தொடர்பாக இக்கோயிலுக்கு முதன்முறையாக 1999இல் சென்றேன். பின்னர் தொடர்ந்து பல முறை சென்றுள்ளேன். இக்கோயிலின் அருகே இருந்த புத்தர் சிலையை தற்போது திருச்சியிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தியுள்ளனர். பதிவு மூலமாக கோயிலைப் பற்றி அறிந்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  14. விக்கிபீடியாவில் இக்கோயில் பற்றிய பதிவில் தங்களது வலைப்பூவை இணைப்பாகத் தந்துள்ளேன். https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D#.E0.AE.AA.E0.AF.81.E0.AE.A4.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.B0.E0.AF.8D_.E0.AE.9A.E0.AE.BF.E0.AE.B2.E0.AF.88 தொடர்ந்து அப்பதிவில் மாற்றங்களும், திருத்தங்களும் ஏற்பட வாய்ப்புண்டு. வணக்கங்களுடன், ஜம்புலிங்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஜி.

      நீக்கு
  15. மிக மிக அருமையான கோயில்.பல வேண்டுதல் நிறைவேற்றி உள்ளார் சிவன் அம்பாள் சித்தர் ௐ நம சிவாயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....