எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, September 23, 2012

ஸ்ரீரங்கத்துச் சூரியன்…


என்னங்க தலைப்புப் பார்த்து உடனே ஸ்ரீரங்கத்தின் பிரபலங்களாகிய சுஜாதா, வாலி போன்றவர்கள் பற்றிய பகிர்வுன்னு நினைச்சுட்டீங்களா?.... 

காலையில் ஸ்ரீரங்கம் வீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்த்தபோது சூரியன் தனது ஒளிக் கதிரை பரப்ப மேகக் கூட்டங்களிலிருந்து மேலெழுந்து வந்தான்.  சரி படம் எடுப்போம்னு காமரா கொண்டு எடுத்த ஸ்ரீரங்கத்து சூரியன் படம் இங்கே….


[”சீக்கிரம் மேலே வா, உன்னைச் சாப்பிட்டு விடுவேன்” 
என்று சொல்வது போல வாயைத் திறந்து 
காத்துக் கொண்டிருக்கிறது மேகம்][”உன்னை மாதிரி எத்தனையோ பேரை பார்த்துட்டேன்” 
என்று சொல்லாமல் சொன்னது சூரியன்.  
வியப்பில் மேகம் இன்னும் வாயைத் திறந்தபடியே!]

அது என்ன ”ஸ்ரீரங்கத்து சூரியன் மட்டும் என்ன ஸ்பெஷலா?” எங்களையெல்லாம் போட மாட்டீங்களா என்று கேட்டது தில்லியிலிருந்து ஜபல்பூர் செல்லும் வழியில் இருக்கும் பட்வாரா கிராமத்துச் சூரியன்…..  நமக்கு எல்லாச் சூரியனும் ஒண்ணு தான்.


இது கிராமத்துச் சூரியன்!

என்ன நண்பர்களே, படங்களை ரசித்தீர்களா?  மீண்டும் சில படங்களோடு அடுத்த ஞாயிறு சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


44 comments:

 1. தடை சொல்லும் மேகங்களுக்கு விடை கொடுத்தனுப்பி மேலேறி ஒளி தரும் சூரியன்! சுட்டெரிப்பதெங்கள் தொழில் என்று புறப்பட்ட சூரியக் குழந்தையை அடமாகப் படம் பிடித்துத் தந்திட்ட உங்களுக்கு நன்றி!

  (சூரியனைப் பார்த்தாலே வசன கவிதையாக வருகிறதே ஏங்க?!)

  ReplyDelete
  Replies
  1. //(சூரியனைப் பார்த்தாலே வசன கவிதையாக வருகிறதே ஏங்க?!//

   கவிதையா பொழியறீங்க!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. தமிழ்மணம் இன்னும் சப்மிட் ஆகவில்லை போலும்! பிறகு வருகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. பதிவு ஆட்டோ பப்ளிஷ் செய்து வைத்திருந்தேன். பிறகு தான் தமிழ்மணத்தில் சேர்த்தேன்.... :))

   தங்களது இரண்டாம் வருகைக்கு நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. ஞாயிறு ஞாயிறின் படமா நன்று

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கார்த்திக்.

   Delete
 4. சுட சுட !

  தமிழ் மணம் ரெண்டு நாளாவே தகராறு பண்ணுது :(

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன் குமார்.

   Delete
 5. வெள்ளம் புரண்டு ஓடியது எங்கள் காவிரி நதியிலே அறுபத்து ஒண்ணிலே !!
  வேகமாக அது எங்கள் வீதிக்கும் வந்துவிடுமோ என்ற பயமும் இருந்தது நினைவில் இருக்கிறது.
  இன்றோ
  வரண்ட காவிரி !!
  நீரும் இல்லை. மக்கள் மனதிலே
  ஈரமும் இல்லை.

  சுப்பு ரத்தினம்.

  பின் குறிப்பு: அது சரி. இதை நீங்கள் பார்க்கவில்லையோ !!

  http://youtu.be/lZvotZ40C8s

  ReplyDelete
  Replies
  1. இன்று தான் நீங்கள் பாடிய காந்தி பாடலைக் கேட்டு ரசித்தேன். மிகவும் நன்று...

   வரண்டு போயிருக்கும் காவிரி நதி பார்த்து கண்ணில் நீர்!

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   Delete
 6. ஸ்ரீரங்கத்துச் சூரியன் என்றவுடன் “ கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான்; கனைஇருள் அகன்றது, காலை அம் பொழுதாய், ... ... ...….அரங்கத்து அம்மா, பள்ளி எழுந்தருளாயே! என்ற தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சிதான் ஞாபகம் வந்தது. நீங்கள் சிறந்த போட்டோகிராபர் என்பதை எப்போதும் போல் இந்த படங்களும் சொல்லுகின்றன.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 7. சூரிய தரிசனம் நன்றாக இருந்தது....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கே.பி.ஜனா சார்.

   Delete
 8. சூரியன்களைப் பார்க்கப் பார்க்க மனதில் மகிழ்ச்சி. அடுத்து உங்களைப் பார்க்க இன்னும் ஒரு வாரம் காத்திருக்கணுமா... கர்ர்ர்ர்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கணேஷ். அடுத்த திங்களன்று சென்னை வருகிறேன்!

   Delete
 9. காலை வேளையில் சூரியனைப் பார்த்து நமஸ்காரம் பண்ணியாச்சு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆர்.வி.எஸ்.

   Delete
 10. அருணோதயம் மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 11. அழகிய மனதிற்கு இதமான காட்சியைப் பகிர்ந்துகொண்டமைக்கு
  மிக்க நன்றி !.......

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், படங்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 12. Replies
  1. ரசிப்பிற்கு நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 13. இயற்கை எழில் கொஞ்சும் அருமையான படங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸாதிகா ஜி!

   Delete
 14. ஸ்ரீரங்கத்து சூரியன்னு பார்த்ததும் யாரைப் பத்தியோ எழுதப் போறிங்கன்னு நினச்சு.. ஓ.. சூரிய நாரயணனா.. நல்ல தரிசனம்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்.. சூரிய நாராயணன் தான்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 15. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 16. அருமையான படங்களைப் பகிர்ந்ததற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 17. அருமையான படங்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 18. புத்துண‌ர்வை பெருக்குவ‌தில் சூரியோத‌த்துக்கு நிக‌ரேது?! யாதும் ஊரே சூரிய‌னுக்கு! போட்டோக்க‌ளும் க‌மெண்ட்க‌ளும் வ‌ழ‌க்க‌ம் போல் அம்ச‌ம். 'உன்னைப் போல் எத்த‌னை பேரைப் பார்த்திருக்கேன்' சிரிக்க‌வும் சிந்திக்க‌வும் வைத்த‌ வைர‌வ‌ரி ச‌கோ...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 19. மிகவும் அருமையான பகிர்வு....உங்கள் பகிர்வுக்கு நன்றி......

  நன்றி,
  பிரியா
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப்ரியா.

   Delete
 20. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்.

   Delete
 21. //'உன்னைப் போல் எத்த‌னை பேரைப் பார்த்திருக்கேன்'//
  சிரிக்க‌வும் சிந்திக்க‌வும் வைத்த‌ வ‌ரிகள் வெங்கட் ஜி. பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....