திரிவேணி சங்கமம் – காசி
பயணம் – பகுதி 4.
சென்ற பகுதியில் வாரணாசியை உலகின் பழமையான நகரங்களில் ஒன்று எனச் சொல்லியிருந்தேன். கிட்டத்தட்ட மூவாயிரத்து ஐநூறு வருடங்களுக்கான விவரங்கள் இருக்கிறதாம். எத்தனை பழைய நகரம்… இதைப் பற்றி மேலும் பார்க்கலாமா?
1669-ஆம் வருடம் அரசாட்சி புரிந்த ஔரங்கசீப் காசி விஸ்வநாதர் கோவிலை முற்றிலும் இடிக்க ஆணையிடுகிறார். கோவில் தரைமட்டமாக்கப்பட்டு அவ்விடத்தில் கியான்வாபி மாஸ்க் என்ற மசூதி கட்டப்படுகிறது. கோவிலின் முக்கிய பூஜாரியாக இருந்தவர் சிவலிங்கத்தோடு கோவிலின் பின்பக்கம் இருந்த ஞானவாபி கிணற்றுக்குள் குதித்து விடுகிறார். இப்போதும் இந்தக் கிணறு காசி விஸ்வநாதர் கோவிலில் இருக்கிறது. எப்போதும் சிவன் கோவில்களில் சிவலிங்கத்திற்கு எதிரே அவரது வாகனமான ரிஷப வாகனம் இருக்கும். தற்போதைய மசூதியை நோக்கி அக்காலத்தில் இருந்த ரிஷப வாகனம் இருக்கிறது.
இப்பயணத்தொடரின் முந்தைய பகுதிகள்: பகுதி 1 பகுதி 2 பகுதி 3…
சென்ற பகுதியில் வாரணாசியை உலகின் பழமையான நகரங்களில் ஒன்று எனச் சொல்லியிருந்தேன். கிட்டத்தட்ட மூவாயிரத்து ஐநூறு வருடங்களுக்கான விவரங்கள் இருக்கிறதாம். எத்தனை பழைய நகரம்… இதைப் பற்றி மேலும் பார்க்கலாமா?
ஸ்கந்த புராணத்தின் காசி காண்டத்தில் காசி விஸ்வநாதர் கோவில் பற்றிய குறிப்பு இருப்பதாகத் தெரிகிறது. பல மன்னர்களால் கட்டப்பட்டு முகாலயர்களின் ஆட்சியின் போது பலமுறை இடிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் கட்டப்பட்டதாம்.
கி.பி. 490 ஆம் வருடம் காசி விஸ்வநாதர்
ஆலயம் கட்டப்பட்டது. பதினோறாம் நூற்றாண்டில் மீண்டும் ஹரிச்சந்திர மஹாராஜா ஒரு கோவிலைக் கட்டியிருக்கிறார். 1194 ஆம் அண்டு முகம்மது கோரி நடத்திய படையெடுப்பின் போது இந்தக் கோவிலையும், வாரணாசியில் இருந்த மற்ற கோவில்களையும் இடித்துத் தரைமட்டமாக்கிவிடவே,
இது மீண்டும் கட்டப்பட்டிருக்கிறது.
பிறகு வந்த குத்புதின்
ஐபக்கால் மீண்டும் இடிக்கப்பட்டு, அவரது மறைவிற்குப் பின் பல அரசர்களால் இக்கோவில் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. 1351-ம் ஆண்டு ஃபீருஸ் ஷா துக்ளக் என்பவரால் மீண்டும் இடிக்கப்பட மறுபடியும் நிர்மாணிப்பதில் நீண்ட இடைவெளி. அக்பரின் ஆட்சியில் வருமானத் துறை மந்திரியாக இருந்த தோடர் மால், 1585-ம் வருடம் மீண்டும் ஒரு கோவிலைக் கட்டியிருக்கிறார்.
[க்யான்வாபி மஸ்ஜித் - பட உதவி - கூகிள்]
1669-ஆம் வருடம் அரசாட்சி புரிந்த ஔரங்கசீப் காசி விஸ்வநாதர் கோவிலை முற்றிலும் இடிக்க ஆணையிடுகிறார். கோவில் தரைமட்டமாக்கப்பட்டு அவ்விடத்தில் கியான்வாபி மாஸ்க் என்ற மசூதி கட்டப்படுகிறது. கோவிலின் முக்கிய பூஜாரியாக இருந்தவர் சிவலிங்கத்தோடு கோவிலின் பின்பக்கம் இருந்த ஞானவாபி கிணற்றுக்குள் குதித்து விடுகிறார். இப்போதும் இந்தக் கிணறு காசி விஸ்வநாதர் கோவிலில் இருக்கிறது. எப்போதும் சிவன் கோவில்களில் சிவலிங்கத்திற்கு எதிரே அவரது வாகனமான ரிஷப வாகனம் இருக்கும். தற்போதைய மசூதியை நோக்கி அக்காலத்தில் இருந்த ரிஷப வாகனம் இருக்கிறது.
கிணற்றுக்குள்
இருக்கிற பழைய சிவலிங்கம் மீண்டும் எடுக்கப்படவில்லை. தற்போதைய கோவில் 1780 – ஆம் வருடம் மஹாராணி அகில்யா பாய் ஹோல்கர் என்பவரால் கட்டப்பட்டது. 1835-ஆம் வருடம் சீக்கிய மஹாராஜா ரஞ்சித் சிங் என்பவர் கோவில் கோபுரத்திற்கு தங்கத்தகடுகள் பொருத்த 1000 கிலோ தங்கத்தினை அளித்திருக்கிறார். கோவிலில் இருக்கும் மூன்று கோபுரங்களில் இரண்டில் இந்தத் தங்கத்தகடுகள் பொருத்திவிட, மூன்றாம் கோபுரம் சாதாரணமாக இருக்கிறது.
இரு மதத்தினரும்
சர்வ சாதாரணமாக தத்தமது பிரார்த்தனை ஸ்தலங்களுக்குச் சென்று பிரார்த்திக்க முடிந்தது. பாப்ரி மஸ்ஜித் பிரச்சனைக்குப் பிறகு, இங்கே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டு இருக்கின்றன. கேமராக்கள், அலைபேசிகள், பென் ட்ரைவ், சாவி, பேனா என பல பொருட்களை உள்ளே எடுத்துச் செல்ல தடை. மிகுந்த சோதனைகளுக்குப் பிறகே உள்ளே செல்ல முடிகிறது. கேமரா எடுத்துச் செல்ல முடியாததால் உள்ளே புகைப்படங்கள் எடுக்க வில்லை.
இடுகையில் சேர்த்த படங்கள் கூகிள்-லிருந்து எடுக்கப்பட்டது.
மீண்டும் அடுத்த பதிவினில் சந்திக்கும் வரை…
இடுகையில் சேர்த்த படங்கள் கூகிள்-லிருந்து எடுக்கப்பட்டது.
மீண்டும் அடுத்த பதிவினில் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.
வாடா இந்தியக் கோவில்கள் பலவும் தாக்குதலுக்கு உட்படுத்தப் பட்டவைதானே
பதிலளிநீக்குஉண்மை கார்த்திக்...
நீக்குவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
காணொளி நீக்கப்பட்டுள்ளது...
பதிலளிநீக்குசிறப்பான பகிர்வுகல்.. பாராட்டுக்கள்..
பார்த்தேன். அந்த காணொளியை தரவேற்றம் செய்தவரே நீக்கி இருக்கிறார். தகவலுக்கு மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
மத நல்லிணக்கத்துடன்
பதிலளிநீக்குஅமைக்கப்பட்ட காசி ஸ்தலத்தைப் பற்றிய பதிவு நன்று நண்பரே...
நல்லது மகேந்திரன்..
நீக்குவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
அழகான படங்களுடன் அருமையான தகவல்கள். பாராட்டுக்கள் வெங்கட்ஜி.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குஒய் சுவாமி, காசியைப்பற்றி பெரிய ரிசெர்ச் பண்ணி விட்டிர்கள் அய்யா. அருமையான பகிர்வு. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவிஜய்
ஆஹா... இன்னும் கூட பண்ணியிருக்கலாம்...
நீக்குவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!
எத்தனை முறை இடிக்கப்பட்டு, எத்தனை முறை கட்டப்பட்டதோ என்று வியக்க வைக்கிறது, காசி விஸ்வநாதர் ஆலயம்.
பதிலளிநீக்குதாஜ்மஹால் போல இல்லாமல் நம் கோவில் என்று சொல்லிக் கொள்ள முடிகிறதே, அதுவே சந்தோஷம் தான்!தாஜ்மஹால் பற்றி நான் எழுதிய கட்டுரை இனனைப்பு இதோ:
http://wp.me/p244Wx-z
பாராட்டுக்கள்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.
நீக்குதாஜ்மஹால் பற்றிய உங்கள் பகிர்வினை படிக்கிறேன்.
நல்ல விளக்கமான பதிவு
பதிலளிநீக்குவிவரங்கள் அருமை.
நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குநல்ல தகவல்கள். வாழ்க.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.
நீக்குநம்ம பக்க கோவில்களை நினச்சுண்டுபோனா காசி விஸ்வனாதர் கோவில் நமக்கு கொஞ்ச்ம் விதயாசமாகவே தெரியும்.வடக்கேல்லாம் இப்படித்தானே
பதிலளிநீக்கு//வடக்கேல்லாம் இப்படித்தானே//
நீக்குஆமாம்மா....
வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.
வாராணாசி காசி செல்ல வேண்டும் என்பது என் நெடுநாள் விருப்பம் சார்... பல கலைசெல்வங்களை படை எடுப்புகளின் மூலம் இழந்து நிற்கிறோம்... என்ன செய்வது ?
பதிலளிநீக்கு//வாராணாசி காசி செல்ல வேண்டும் என்பது என் நெடுநாள் விருப்பம் சார்... //
நீக்குசீக்கிரமே செல்ல வாழ்த்துகள் சீனு...
தங்களது வருகைக்கும் கருத்திர்கும் மிக்க நன்றி.
பல வரலாற்று தகவல்களை அறிந்து கொள்ள வைத்த பகிர்வு... நன்றி...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குபலமுறை அழிக்கப்பட்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது அறிய ஆச்சர்யமாய் இருக்கிறது. எந்த அளவுக்கு அவர்கள் ஆர்வமாய் இருந்திருக்கிறார்கள் என்று.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!
நீக்குமசூதியின் அடித்தளம் இந்து முறைப்படி கட்டப்பட்டுள்ளது கோயிலின் சுற்று வேலியிலிருந்து பார்த்தாலே தெரிகிறது. இவ்வளவு இடர்பாடுகளுக்கிடையேயும் ஹிந்து மதம் இன்றும் இருப்பது தான் அந்த மதத்தின் மீது ஒரு மரியாதை தருகிறது. 4 முறை காசி விசிட் செய்தாச்சு.
பதிலளிநீக்குஓ நீங்க நான்கு முறை காசி சென்று வந்திருப்பதால் இத் தொடரில் பல விஷயங்கள் நீங்களே பார்த்திருப்பீர்கள்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா ஜி!
தெரியாத தகவல்கள்... சுவாரஸ்யமான தகவல்கள் ஜி....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குபார்த்த இடம் தான் என்றாலும் அருமையான தகவல்கள்...
பதிலளிநீக்குஆமாம் சீனு... முன்பே நீ சென்று வந்த இடம் தான்!
நீக்குவருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு [வேங்கட ஸ்ரீனிவாசன்].
முந்தைய பகுதிகளைத் தவறவிட்டிருக்கிறேன் என்பது புரிகிறது. படித்து விடுகிறேன். பயண அனுபவங்களை நீங்கள் அழகாகப் பகிரும் விதமே அலாதி. தொடரட்டும் பயணங்கள் மற்றும் பகிர்வுகள்.
பதிலளிநீக்குஇது நான்காம் பகுதி தான். நேரம் இருக்கும்போது முதல் மூன்று பகுதிகளையும் படித்து விடுங்கள்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கணேஷ். வரும் வியாழன் அன்று சந்திப்போம்.....
வாரணாசி,காசிவிஸ்வநாதர் விபரங்கள் அறிந்து கொண்டோம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குபயண அனுபவங்களை பகிர்ந்துக்க உங்களை விட்டா யாருமில்லை சகோ. அம்மாக்கு காசி போகனும்ன்னு ஆசை. பார்ப்போம் கடவுள் என்ன சொல்றாருன்னு
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜி. பயண அனுபவங்களைச் சொல்ல எனக்கு முன்னோடி துளசி டீச்சர் தான்!
நீக்குஎத்தனை முறை இடிந்து விழுந்தாலும் இடிக்கப் பட்டாலும் மீண்டும் மீண்டும் மீண்டும் எழுந்து நின்றது அதிசயம்தான்.நல்ல தகவல்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.
நீக்குஅந்த அர்ச்சகரின் பக்தி மெய்சிலிர்க்கச் செய்கிறது. கிணற்றுக்குள் இருக்கும் சுவாமி எப்போ கரையேறுவாரோ...இத்தனைக் காலம் கடந்து வந்த வரலாறு நிலைத்திருக்க எந்த புண்ணியவான் கரையேற்றுவாரோ!
பதிலளிநீக்குஅந்த மசூதிக்கும் போய் ஒரு கும்பிடு போட்டுவிடலாமா...:))
மதங்களுக்கு 'மதம்' பிடித்தால் மனிதர்கள் ஆடும் ஆட்டம்...!
//இத்தனைக் காலம் கடந்து வந்த வரலாறு நிலைத்திருக்க எந்த புண்ணியவான் கரையேற்றுவாரோ!//
பதிலளிநீக்குநேரம் வந்தால் அதுவும் நடக்கும்....
//மதங்களுக்கு 'மதம்' பிடித்தால் மனிதர்கள் ஆடும் ஆட்டம்...!//
ம்ம்ம்ம்... என்னத்த சொல்ல....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.
வட நாட்டுக் கோவில்கள் சிறியதாக இருப்பினும்
பதிலளிநீக்குஏன் அதிகச் சிறப்புடன் இருக்கின்றன என்பதற்கு
அவைகள் சந்தித்த அதிக அழிவுகள்தான காரணம்
என நினைக்கிறேன்
அறியாதன மிக அறிந்தேன்\
தொடர வாழ்த்துக்கள்
தங்களது வருகைக்கும் சிறப்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குtha.ma 10
பதிலளிநீக்குதமிழ் மணம் பத்தாம் வாக்கிற்கு நன்றி ரமணி ஜி!
நீக்குபயணக்கட்டுரை மிக அருமை! நிறைய புதிய செய்திகலைத் தெரிந்து கொள்ள முடிந்தது! நன்றி நண்பரே!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.
நீக்குmmm...
பதிலளிநீக்குnalla thakaval!
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.
நீக்குஅறியாத பல தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குபொதுவாக நான் இம்மாதிரி கருத்துகளில் நுழைவதில்லை. நீங்கள் நல்ல நண்பர், சரியான விதத்தில் புரிந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்...
பதிலளிநீக்குமன்னர்கள் - முகலாயர்கள், பல்லவ, சேர, சோழ, பாண்டியர்கள், யாரென்றாலும் - ஒரு நாட்டின்மீது படையெடுக்கும்போது அந்நாட்டின் கலைச்செல்வங்களையும், பொருட்செல்வங்களையும் அழித்துவிடுவர் என்பது நாம் அறிந்ததே. சமண, வைணவ கருத்து வேறுபாடுகளிலும் மன்னர்கள் இதுபோல எதிர்பிரிவின் கோயில்களை அழித்திருக்கிறார்கள் என்பது தெரியாததல்ல. காஞ்சி கோயில்கூட சமணக் கோயிலை அழித்துதான் கட்டப்பட்டது என்று சொல்லப்படுகீறது. (http://amarx.org/?p=348). திருப்பதி கோயில் முன்பு முருகன் கோவிலாக இருந்ததெனச் சொல்ல்படுவதாக (ஒரு பின்னூட்டத்தில்) எழுதிருந்தீங்க.
இதுபோல்தான் முகலாய மன்னர்களும் தம் அதிகாரத்தை நிலைநிறுத்த, செல்வங்களைக் கொள்ளையடிக்க என்று கோயில்களை அழித்திருக்கலாம். ஆனால், அதில் மத உணர்வு இல்லையென்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில், முகலாய மன்னர்கள் பெயருக்குத்தான் முஸ்லிமாக இருந்தார்களொழிய, இஸ்லாமைக் கடைப்பிடிப்பவர்களாயில்லை. குடி, பெண் என்று அழிந்தவர்களும் உண்டு. மேலும், செல்வச் செழிப்பில் உழன்ற போதும், அவர்களில் ஒருவர்கூட ஹஜ் எனும் புனித யாத்திரை சென்றதாக ஆதாரங்களில்லை. அந்தளவுக்கு இஸ்லாமிய உணர்வற்றவர்களாகவே இருந்தனர். அவர்கள் மத துவேஷத்தில் கோவில்களை இடித்திருப்பார்கள் என்று நம்பமுடியவில்லை. வெற்றி தந்த மிதப்பில் அதிகார துஷ்பிரயோகமாகச் செய்தார்களோ என்னவோ.
எதுவாகிலும், நல்ல முடிவாக, தற்போது கோயில் சிறப்பாகக் கட்டப்பட்டுவிட்டது எனும்போது, வேதனைப்படுத்தும் பழங்கதைகளை மறப்போமே.
உங்களுக்கு என் கருத்தில் விருப்பமில்லை எனில் பிரசுரிக்க வேண்டாம். நன்றி.
தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி ஹுசைனம்மா. மின்னஞ்சல் கண்டேன். பதில் அனுப்புகிறேன்....
நீக்கு//எப்போதும் சிவன் கோவில்களில் சிவலிங்கத்திற்கு எதிரே அவரது வாகனமான ரிஷப வாகனம் இருக்கும். தற்போதைய மசூதியை நோக்கி அக்காலத்தில் இருந்த ரிஷப வாகனம் இருக்கிறது. //
பதிலளிநீக்குநேரில் பார்த்து மனம் நொந்தேன் வெங்கட்!.மதுராவிலும் இதே கதைதானே!
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குட்டன்.
நீக்குநிச்சயமாக சகோதரி ஹுசைனம்மா சொன்னது நூறு சதவீதம் உண்மை, முகலாய மன்னர்கள் பெயரளவுக்குதான் முஸ்லிம்களாக இருந்தனர்.இப்போதைய ஹிந்தி சினிமா நடிகர்களைப்போல,ஒரு கானுக்கும் பம்பாயில் பள்ளிவாசல் எங்கே இருக்கிறது என்று தெரியாது.
பதிலளிநீக்குஉங்கள் திருத்தலங்கள் பயணக்கட்டுரை அருமையாக இருந்தது நன்றி.
தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அசீம் பாஷா.
நீக்கு