திங்கள், 24 செப்டம்பர், 2012

காசி – ஞானக் கிணறு


திரிவேணி சங்கமம் – காசி பயணம் – பகுதி 5

இப்பயணத்தொடரின் முந்தைய பகுதிகள்: பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4

சென்ற பகுதியில் ஞானக் கிணறு பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தேன்: 

"கோவிலின் முக்கிய பூஜாரியாக இருந்தவர் சிவலிங்கத்தோடு கோவிலின் பின்பக்கம் இருந்த ஞானவாபி கிணற்றுக்குள் குதித்து விடுகிறார்.  இப்போதும் இந்தக் கிணறு காசி விஸ்வநாதர் கோவிலில் இருக்கிறது." 


[பட உதவி: கூகிள்]

மிகவும் புனிதமானதாகக் கருதப்படும்  இக்கிணற்று நீரைப் பருகினால் ஞானம் கிடைக்குமெனச் சொல்கிறார்கள்.  வரும் பக்தர்களுக்கு, ஒரு சிறிய குவளையால் நீர் எடுத்துப் பருகத் தருகிறார்கள்.  கையில் விட்ட நீரை “அச்யுதாய நம:, அநந்தாய நம:, கோவிந்தாய நம:” எனச் சொல்லி மூன்று முறையாக நமது குடும்பத்தினரையும் மூதாதையர்களையும் நினைத்து அருந்த வேண்டும்.  பருகிய பிறகு கை கழுவ வேறு தண்ணீர் தருகிறார்கள். 

புண்ணிய நீர்  கொடுத்தவர்  அவர் உட்கார்ந்திருக்கும் இருக்கையின் துணியை விலக்கிக் காட்ட 500, 100, 50, 20, 10 என பலவகைகளில் ரூபாய் நோட்டுகள்.  “ஞானம் கொடுத்ததற்கு பைசா கொடுக்க வேண்டுமாம்!”  

கோவிலுள் விசாலாட்சிக்கும் அன்னபூரணிக்கும் சன்னதிகள் இருக்கின்றன.  எல்லா இடங்களிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.  வட இந்திய கோவில்களில் ஒவ்வொருவரும் பகவானைத் தனது கைகளினாலேயே பூஜிக்க முடியும்.  அனைவரையும் பூஜித்து, அபிஷேகம் செய்து வெளியே வந்தோம். 



[பட உதவி: கூகிள்]


கோவிலில் நமது முன்னோர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.  அவர்களுக்கு எவ்வித பயமும் இல்லை.  பயமெல்லாம் நமக்குத்தான்.  பகவானைப் பூஜிக்க எடுத்துச் செல்லும் பூஜைப் பொருட்களை ஒரு நொடியில் தட்டிப் பறித்து விடுகிறது.  நாங்கள் இரு தட்டில் பூஜைப் பொருட்களை எடுத்துச் சென்றோம்.  விசாலாட்சிக்கு சாற்ற வேண்டிய சிகப்புத் துணியில் மூடியபடியே சென்றதால் தப்பித்தது.  எங்களுக்கு முன்னால் சென்ற ஒரு காவடிக்காரர் பிளாஸ்டிக் பையில் எடுத்துச் சென்றது நொடியில் பறி போனது!



கோவிலில் திவ்ய தரிசனம் கண்ட திருப்தியில் மனதில் அமைதி குடி கொள்ள  வெளியே வந்தோம்.  காசியில் ”[G]காட்” என்று அழைக்கப்படும் நதியோரங்கள் நிறைய உண்டு.  ஒவ்வொரு [G]காட்டிற்கும் ஒரு பெயர், அதற்கான பெருமை என பல விஷயங்கள் உண்டு.  ராஜா ஹரிஷ்சந்திர [G]காட், டாக்டர் ராஜேந்திர பிரசாத் [G]காட், மன்மந்திர் [G]காட், ஷீத்லா [G]காட், தசாஷ்வமேத [G]காட் எனும் பெயர்களால் அழைக்கப்படும் [G]காட்களை ஒவ்வொன்றாய் பார்க்க முடியும். 

[G]காட்களுக்குச் சென்று ”கங்கா மையா” என அழைக்கப்படும் கங்கா மாதாவினைத் தரிசிக்கு முன் வயிற்றுக்கு ஏதாவது கொடுப்போம் என நினைத்து சுற்று முற்றும் பார்த்தோம்.  அங்கே இளநீர் விற்றுக் கொண்டிருந்த ஒரு பீஹாரி இளைஞரைக் கண்டோம்.  ”இளநீர் எவ்வளவுப்பா?” என அவரிடம் தமிழில் விசாரித்துக் கொண்டிருந்தார் ஒரு பெரியவர்.  “ச்சோட்டா வாலா பச்சீஸ், [B]படா வாலா தீஸ்” என ஹிந்தியில் பதில் சொன்னார் இளைஞர்.   



சரி எங்களுக்கு தீஸ் வாலாவே கொடு எனச் சொல்ல, இளநீரை எடுத்து வெட்ட ஆரம்பித்தார்.  நம் ஊரில் இளநீரின் மேல் பக்கம் வெட்டுவார்கள், இரண்டு மூன்று வெட்டில் நம்மிடம் தந்து விடுவார்.  இங்கே கீழ்பக்கம் வெட்டுகிறார்கள்! போராடி பல வெட்டுகளுக்குப் பிறகு ”வெற்றி! வெற்றி!” எனக் கூச்சலிடாத குறை தான்.  பொதுவாகவே இந்த மாதிரி இடங்களில் கொடுக்கும் “Straw” [அதை பைப் என அழைக்கிறார்கள் இங்கே” சுத்தமானதாக இருக்காது என்பதால் நாங்கள் அப்படியே குடித்து விட்டோம்.  அதை விநோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அம்மக்கள். 

எங்களுக்கு நேரம் அவ்வளவாக இல்லாத காரணத்தினால் நாங்கள் மன்மந்திர் [G]காட் மட்டுமே சென்றோம்.  மற்ற இடங்களின் பெருமைகளைப் பற்றியும் இக்கட்டுரையின் அடுத்த பகுதியில் பார்ப்போம்.

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


50 கருத்துகள்:

  1. // அச்யுதாய நம:, அநந்தாய நம:, கோவிந்தாய நம// அந்த கிணற்றில் இருப்பது சிவன், சொல்வது விஷ்ணு நாமம் அது எப்படி?

    //வெற்றி! வெற்றி!// ஹா ஹா ஹா

    TM2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

      நீக்கு
  2. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கார்த்திக்.

    பதிலளிநீக்கு
  3. ஞானம் பெற்றோம்!

    (புண்ணிய நீர் கொடுத்தவர் Service Tax கட்டுகிறாரா?)

    //ஒரு காவடிக்காரர் பிளாஸ்டிக் பையில் எடுத்துச் சென்றது நொடியில் பறி போனது!//

    பிளாஸ்டிக் பை கொண்டு வந்து கங்கையைக் கெடுக்காதே என்று சொல்லிக்கொண்டே பிடுங்கி இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பிளாஸ்டிக் பை கொண்டு வந்து கங்கையைக் கெடுக்காதே என்று சொல்லிக்கொண்டே பிடுங்கி இருக்கும்.//

      சரியாச் சொன்னீங்க அண்ணாச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.

      நீக்கு
  4. தங்கள் எழுத்து நடையில் நாங்களும் உங்களோடு பயணிக்கிறோம் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

      நீக்கு
  6. நாம் எதிர் பார்த்துச் சென்ற அளவு காசி கவரவில்லை! அங்கு பூசாரிகள் அடிக்கும் கொள்ளை தாங்க முடியாத ஒன்று!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நாம் எதிர் பார்த்துச் சென்ற அளவு காசி கவரவில்லை! //

      உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  7. ஞானத்திற்கும் பணம் கொடுக்க வேண்டியதாயிருக்கிறது இக் கலிகாலத்தில். விந்தைதான். ‘முன்னோர்‘களின் தொல்லை அங்குமா? பயண அனுபவங்களை நீங்கள் பகிர்வது வெகு சுவாரஸ்யம். தொடரட்டும், தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ‘முன்னோர்‘களின் தொல்லை அங்குமா?//

      இல்லாத இடமே இல்லை! :)))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

      நீக்கு
  8. //ஞானம் கொடுக்கக் காசு....அஞ்சு ரூபாய் முதல் நூறு ரூபாய், ஐநூறு ரூபாய் வரை!// அதானே பார்த்தேன்! நம்ம நாடாச்சே...! எவ்வளவு ஞானம் குறையுதோ அதுக்குத் தகுந்தாற்போல குறைச்சுகிட்டுக் குடுப்பாங்க போல!

    இளநீரை எப்படி வெட்டுவது என்று சொல்லிக் கொடுத்து விட்டு வந்திருக்கக் கூடாதோ? அங்கேயும் தீஸ்வாலா தான் என்பதும் ஒரு ஆறுதல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இளநீரை எப்படி வெட்டுவது என்று சொல்லிக் கொடுத்து விட்டு வந்திருக்கக் கூடாதோ? //

      சொன்னேன். அதற்கு அவர் சொன்ன பதில் - ‘எல்லாம் எங்களுக்குத் தெரியும்! பெரிசா சொல்லிக்கொடுக்க வந்துட்டாரு!” :)) “இது தேவையா உனக்குன்னு” என்னை நானே கேட்டுட்டு வந்தேன்.... :)))

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. நாளாச்சுங்க ப்ளாக் போஸ்ட்ஸ் படிச்சு... இன்னைக்கி தான் ஆரம்பிச்சு இருக்கேன்... நல்லா இருக்கு பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட இடைவெளிக்குப்பிறகு தங்களது வருகை... மிக்க மகிழ்ச்சி அப்பாவி தங்கமணி.

      நீக்கு
  10. // பொதுவாகவே இந்த மாதிரி இடங்களில் கொடுக்கும் “Straw” [அதை பைப் என அழைக்கிறார்கள் இங்கே” சுத்தமானதாக இருக்காது //

    முக்கியமான தகவலுக்கு நன்றி. இனிமேல் இளநீருக்கு ஸ்ட்ரா கொடுத்தால் யோசனை செய்ய வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

      நீக்கு
  11. அய்யய்யோ, நான் காசியில் ஞானம் பெறாமலேயே வந்து விட்டேனே? அந்த தீர்த்தத்தைக் குடிக்கவில்லையே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா.... :))

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

      நீக்கு
  12. ஞானக்கிணறு விபரம் அறிந்து கொண்டேன். நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  13. ஏற்கனவே பார்த்த இடம் என்றாலும் நல்ல வர்ணனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு [வேங்கட ஸ்ரீனிவாசன்]

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      நீக்கு
  15. கிணறுல தண்ணி குடுக்கிறாங்களா விசயம் தெரியாமப்போச்சேன்னு நினைக்கும்போதே.. 100,500 ந்னதும்..சரி நல்லவேளைன்னு ஆகிப்போச்சு..:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //100,500 ந்னதும்..சரி நல்லவேளைன்னு ஆகிப்போச்சு..:))//

      :)))


      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.

      நீக்கு
  16. பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குட்டன்.

      நீக்கு
  17. நல்லாப்போகுது வெங்கட்ஜி. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி!

      நீக்கு
  18. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கே.பி.ஜனா சார்.

      நீக்கு
  19. மிக மகிழ்வு .நாம் போகாவிடிலும் வாசித்தாவது பயன் பெறுவோம். மிக்க நன்றி வெங்கட். நேரமின்மையால் கருத்திட முடியவில்லை. நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.
    http;//kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!

      நீக்கு
  20. இன்னும் போகவில்லை,நேரம் வாய்க்கும் போது ஒருமுறை போகவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வடுவூர் குமார்.

      சீக்கிரமே போக வாய்ப்பு கிடைக்கட்டும்.

      நீக்கு


  21. / அச்யுதாய நம:, அநந்தாய நம:, கோவிந்தாய நம// அந்த கிணற்றில் இருப்பது சிவன், சொல்வது விஷ்ணு நாமம் அது எப்படி?''

    இது நல்ல கேள்வி. இந்தக் கேள்விக்கு ஒரு சீரியஸான பதில்தேடு முகத்தான் சில சாத்திரம் வேதம் படித்த வல்லுனர்களை அணுகினேன்.

    அவர்கள் சொன்னவற்றில் ஒரு மையக்கருத்து மட்டுமே இங்கு தருகிறேன்.

    பிரும்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் இவ்வுலகத்தே இருப்பவர்களுக்கு முறையே பிறப்பு, காப்பு, இறப்பு ( மோட்சம் = வீடு) ஆகிய‌
    தொழில்களுக்கு ஆணைக்குட்பட்டவர்.

    பிறந்துவிட்டோம் என்பதால், இனி பிரும்மாவின் தேவை நமக்கெல்லாம் அவ்வளவு இல்லையோ என்னவோ, அவருக்கான கோவிலும்
    ஒன்றோ இரண்டோ தான் இருக்கிறது.

    சர்வம் விஷ்ணு மயம் ஜகது.. என்று சொல்லும் மறை படி, இவ்வுலகம் ( மனிதர்கள் வாழும் இவ்வுலகு எனப்பொருள் கொள்க . பிரபஞ்சம்
    அல்ல.) விஷ்ணுவின் காப்புக்கும் கட்டளைக்கும் உட்பட்டது.

    மஹா விஷ்ணு எனப்பட்டவர் பத்து அவதாரங்கள் எடுத்தது இந்தப் பூமியில் பிறந்தவருக்காக. ஆகவே புவியில் பிறந்த எல்லோருமே
    ஒரு வகையில் விசிஷ்டாத்வைதிகள் தான். விஷ்ணுவை அவரது பத்து அவதாரங்களை ( புத்தரையும் சேர்த்தே) வணங்குபவர்
    மஹாவிஷ்ணுவின் அன்புக்கு பாத்திரமாகிறார்கள். இந்த உலகில் வேண்டுபவை எல்லாம் தர வல்லவர் கிட்டத்தட்ட ஒரு ஸி.யி.ஓ.
    விஷ்ணு / அவரது பல்வேறு அவதாரங்களாக பூசிக்கப்படும் நரசிம்மர், பலராமர், ராமர், கிருஷ்ணர், புத்தர் எல்லோருமே.

    ஆகையால் நம்மை நாமே சுத்தம் செய்துகொள்வதை ( அதாவது உடலையும் உள்ளத்தையும் சுத்தப்படுத்தும் செயலாக இந்த‌
    ஆசமன மந்திரம் இருக்கிறது. இந்த மந்திரம் நல்ல, கெட்ட காரியங்கள் எல்லாவற்றிற்கும் முன்னாலே செய்யப்படுவது. இந்த‌
    மந்திரம் கால, நேரம், மதம் ( அதாவது இந்து மதத்திலே சொல்லப்படுகின்ற ஷண்மதம் , ஜாபாலிகர்கள் உட்பட எல்லோராலும்)
    எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டதெனவும் மறை சொல்கிறது.

    ஆசமனம் செய்ய இயலவில்லை எனினும் கோவிந்த கோவிந்த என்றோ அல்லது ராம ராம என்றோ க்ருஷ்ண க்ருஷ்ண என்றும்
    சொல்லலாமாம்.

    ஆன் த அதர் ஹான்டு, சிவன் மோட்ச சாதகன். சிவனை தியானம் செய்பவர் அவனாகவே ஆக விரும்புபவர் இகலோக இன்பங்களை
    நாடுவது இல்லை. அது தான் அல்டிமேட் என்றாலும், இன்னிக்கு என்னாடா பண்றது என்ற எண்ணத்திலேயே நம்மில் பலர் ஏன்!
    99.999 விழுக்காடு இருக்கின்றனர்.

    சிவன் த்யானம் = ஸ்டேட் ஃபர்ஸ்ட். அப்படி என்றால் விஷ்ணுவை வேண்டுவது அட் லீஸ்டு ஒரு ஃப்ர்ஸ்ட் க்ளாஸ். என் பையனுக்கு
    மெடிகல் இல்லைன்னா, எஞ்சினீரிங் சீட் கிடைக்கணும் அது போல.

    எய்ம் ஹை. ஆனால் பி ப்ராக்டிகல் ஆல்சோ.

    இது இருக்கட்டும் ப்ராக்டிகல் ஆகவும் ஒரு ஆன்ஸர் தருகிறேன்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  22. பதில்கள்
    1. காசு கொடுத்தா தான் ஞானமும் கிடைக்கும்... :))) இந்த ஞானம் பொறுமையாதான் கிடைத்தது!

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

      நீக்கு
  23. அன்பு வெங்கட், காசிப் பயணம் எப்போது செய்தீர்கள். ஞான(பண)க்கிணறு நல்ல தெளிவைக் கொடுக்கும் போலிருக்கே. தங்கள பயணங்கள் எங்களுக்கு அரிய அனுபவங்கள்.

    பதிலளிநீக்கு
  24. காசி-அலஹாபாத் இரண்டு மாதங்களுக்கு முன் சென்றிருந்தேன் வல்லிம்மா.

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
  25. விளக்கமான தகவல்கள். பின்னூட்டங்களில் கூட சுவாரஸ்யம். உங்கள் பதிவின் ஆகர்ஷணம் புரிகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....