எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, September 3, 2012

அப்துல் கலாமுடன் ஒரு பயணம்


திரிவேணி சங்கமம்காசி பயணம்பகுதி 2

இப்பயணத் தொடரின் பகுதி 1 இங்கே

காலை 09.30 மணிக்கு நண்பர் பணி நிமித்தம் சந்திக்க வேண்டிய வழக்குரைஞரை சந்தித்துவிட்டு திரும்பினார்ஹோட்டல் பிரயாக்வாசலில் நாங்கள் செல்ல வேண்டிய ரதம் தயாராக இருக்க, கிளம்பினோம்இரவு கிளம்பும்போது கொஞ்சமாய் சாப்பிட்டது அதன் பிறகு வெறும் சாய் மட்டுமே குடித்ததால்ஹலோ எச்சுஸ்மீ! என்னைக் கொஞ்சம் கவனிக்கிறாயா?” என வயிறு கேட்டதால், ஓட்டுனரிடம் வழியிலிருக்கும் நல்ல ஹோட்டலுக்குச் செல்ல வேண்டினோம்

நெடுஞ்சாலையில் நல்ல உணவகங்கள் இல்லை எனச் சொல்லி, அவர் வீட்டினருகில் இருக்கும்பாபா ஹோட்டல்அழைத்து சென்றார்ஆளுக்கொரு ஆலு பராட்டா, தொட்டுக் கொள்ள ஊறுகாய், தயிர் என சொல்லிக் காத்திருந்தோம்இருபது நிமிடங்களுக்குப் பிறகே கண்ணில் காட்டினார்கள் ஆலு பராட்டாவைபசியோடு உணவுக்குக் காத்திருப்பது கொடுமைஎத்தனையோ பேர் பசியோடு இருப்பதன் கஷ்டம், இப்படி உணவகங்களில் உணவுக்காகக் காத்திருக்கும்போது நிச்சயம் புரியும்


[பாலத்திலிருந்து ஒரு பார்வை - திரிவேணி சங்கமம்] 


கொண்டு வந்த ஆலு பராட்டாவினை [எப்படிச் செய்வது என்று கேட்டால் அதற்கான விளக்கம்இங்கே] ருசித்து சாப்பிட்ட பின் பயணம் தொடர்ந்ததுசெல்லும் வழியில் கங்கையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரு நீண்ட பாலத்தின் மேலிருந்து திரிவேணி சங்கமத்தினைப் பார்க்க முடிந்தது.  ’நாளை இங்கு செல்லவேண்டும்என்ற நினைவுகளோடு கடந்தோம்.


[காவட் எடுத்துச் செல்லும் பக்தர்... ] 


சாவன்என்று அழைக்கப்படும் ஆடி மாதம் வட இந்தியர்களுக்கு மிக முக்கியமான மாதம். கங்கையிலிருந்து, ”காவட்மூலம் புனித நீரெடுத்து, நடந்தே வந்து தங்களது ஊரில் உள்ள சிவன் கோவிலிலோ பெரிய சிவன் கோவில்களிலோ சிவனுக்கு அபிஷேகம் செய்வது இவர்களுக்கு பழக்கம்.  [காவட் பற்றி நான் முன்பெழுதிய பதிவு இங்கே].  ஆயிரக்கணக்கில் பக்தர்கள் நடந்து செல்வதால், தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பக்கத்தினை முழுவதும் இவர்களுக்காகவே ஒதுக்கி வாகனங்களை அடுத்த பக்கத்தில் செல்லும்படி செய்திருப்பார்கள்அதனால் சற்றே மிதமான வேகத்தில் தான் செல்ல முடிந்தது


[பள்ளி வாகனம் - உள்ளே இருப்பவர்கள் படிப்பது எந்த பள்ளியிலோ?] 


நமது ஊரில் ஷேர் ஆட்டோக்கள் போல, உத்திரப் பிரதேசம் முழுவதுமே விக்ரம், கணேஷ் என்று அழைக்கப்படும் வண்டிகள் தான் பிரயாணத்திற்குப் பயன்படுத்துவார்கள். ஒரு சிறிய வண்டியில் இத்தனை பேர்கள் எப்படிப் பயணம் செய்கிறார்களோநாங்கள் செல்லும் போது முன்னே ஒரு பள்ளி வாகனம் சென்று கொண்டிருந்ததுஉள்ளே அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தால்அனைவருமே வயதானவர்கள். ஒரு வேளை முதியோர் கல்வி நிலையத்திற்குச் செல்கிறார்களோ!


[குல்லட் காத்திருக்கிறது - இவர் செய்யும் தேநீருக்காக!] 


[ஒரு குல்லட் தேனீர் உங்களுக்குத்தான்...  எடுத்துக்கோங்க !] 


வாரணாசிக்குச் செல்லும் வழியிலிருக்கும் ஒரு சிறிய சாலையோரக் கடையில் தேநீர் அருந்துவதற்காக வண்டியை நிறுத்தினார் ஓட்டுனர்.  ”குல்லட்என அழைக்கப்படும் மண்பாண்டத்தில் தான் தேநீர் தருகிறார்கள்ஐந்து ரூபாய்க்கு ஒரு குல்லட் தேநீர். குடித்து முடித்தபின் கீழே போட்டு உடைத்து விட்டுச் செல்ல வேண்டியதுதான்லல்லு பிரசாத் யாதவ் ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது எல்லா ரயில்களிலும் குல்லட்-ல் தான் தேநீர்/காபி தரவேண்டுமெனச் சொல்லியது உங்களுக்கு நினைவிலிருக்கலாம்சில மாதங்களுக்குப் பிறகு பிளாஸ்டிக் அரக்கன் மீண்டு[ம்] வந்துவிட்டான்.

தேநீர் அருந்திய பின் மீண்டும் பயணம் தொடர்ந்ததுஎங்கள் ஓட்டுனர் தொடர்ந்து குட்கா போடும் வழக்கமுடையவர்பாக்கெட் பாக்கெட்டாக உள்ளே தள்ளுகிறார்அவரை அது அழித்து விடும் என்ற உணர்வில்லாது சாப்பிடுவது மட்டுமல்லாது, வண்டி அறுபதுகளில் பயணிக்கும்போது ஒவ்வொரு ஐந்து மணித்துளிகளுக்கொரு முறை ஒரு கையால் ஸ்டியரிங் பிடித்தபிடி, மற்ற கையால் தனது பக்கத்துக் கதவினைத் துறந்து துப்புகிறார்எத்தனை பெரிய ஆபத்து/விபத்திற்கு வழிவகுக்கும் செயல்! இப்படிச் செய்யாதீர்கள் நண்பரே என்று சொன்னால்ஒன்றும் ஆகாது, எனக்கு இதில் நல்ல அனுபவம்!” என்கிறார்.


இப்படியாகப் பயணம் செய்து நாங்கள் அடைந்த வாரணாசியைப் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்அது சரி தலைப்பைஅப்துல் கலாமோடு ஒரு பயணம்என வைத்துவிட்டு அது பற்றி ஒன்றுமே சொல்லலையே என்பவர்களுக்கு! – எங்களது வாகன ஓட்டுனரின் பெயர் அப்துல் கலாம்!

[அப்துல் கலாமுடன் ஒரு பயணம்!] 

அடுத்த பகுதியில் வாரணாசியில் சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

46 comments:

 1. கடைசில ஒரு பஞ்ச் ...செம...அப்துல் கலாம்....

  ReplyDelete
  Replies
  1. உடனடி வருகைக்கும் ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி கோவை நேரம்.

   Delete
 2. உறங்கிக்கொண்டிருக்கும் உ.பி பற்றிய நினைவுகளைக் காதை முறுக்கி எழுப்பி வைத்து விட்டீர்கள். ( ஹலோ,உ.பி-ன்னா உத்திரப் பிரதேசம்; உடன் பிறவா சகோதரியில்லீங்க, யாரும் கேஸ் போட்டுராதீங்க!)

  ReplyDelete
  Replies
  1. சுவையான கருத்துரைக்கு நன்றி சேட்டை ஜி! உங்கள் பாணியில் உ.பி. பற்றிய பதிவுகள் வரும்னு சொல்லுங்க! நான் உத்திரப் பிரதேசம் -னு தான் சொல்றேன்! உடன் பிறவா சகோதரின்னா யாருங்க! :)))

   Delete
 3. எல்லா ஒடுனர்கலுமே இப்படி ஒரு பழக்கம் வெச்சிருக்காங்க.. அங்கயும் தண்ணி இல்லையா

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கார்த்திக்.

   Delete
 4. Replies
  1. ஓகே.....

   வருகைக்கும் தமிழ்மணம் வாக்கிற்கும் மிக்க நன்றி மோகன் குமார். மாலையில் மீண்டும் சந்திப்போம்! :)

   Delete
 5. தலைப்பை இணைத்த விதம் அருமை
  புகைப்படங்கள் நேரடியாகப் பார்ப்பதைப்போன்ற
  உணர்வை ஏற்படுத்திப்போகிறது
  அடுத்த ஆண்டு வாரணாசிப் பயணத் திட்டம் உள்ளதால்
  உங்கள் பதிவை அதிகக் கவனத்துடன்
  பரிட்சைக்கு படிப்பதைப்போல்
  படித்துவருகிறேன்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து படிப்பதற்கு நன்றி ரமணி ஜி. அடுத்த வருடம் வரும்போது சொல்லுங்கள். என்னால் இயன்ற உதவிகளை நிச்சயம் செய்கிறேன்....

   வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 6. Replies
  1. தமிழ்மணம் ஐந்தாம் வாக்கிற்கு நன்றி ரமணி ஜி!

   Delete

 7. நலமா! நணபரே!
  நீண்ட நாளுக்குப்பின் வருகிறேன். காரணம் தங்களுக்கே தெரியும்!
  இனி வழக்கம் போல் வருவேன். தாங்கள் பார்த்த இடங்களை நானும் ஒரு
  முறை பார்த்திருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. நலமே புலவர் ஐயா....

   தொடர்ந்து வருகை தருவதற்கு நன்றி. ஓ நீங்களும் பார்த்திருக்கிறீர்களா? நல்லது... பதிவின் சில பகுதிகள் உங்கள் பயண நினைவுகளை நிச்சயம் மீட்டெடுக்கும்.

   வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
  2. //எங்களது வாகன ஓட்டுனரின் பெயர் அப்துல் கலாம்!//

   ஆஹா! அருமை வெங்கட்ஜி! ;)

   Delete
  3. தங்களது வருகைக்கும் ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 8. சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 9. Replies
  1. நன்றிடா சீனு [வெங்கட ஸ்ரீனிவாசன்].

   Delete
 10. தலைப்புல கலக்கறீங்க சார்.எல்லா இடத்திலேயும் இந்த குல்லட் முறையே பயன்படுத்தலாமே!
  சுவாரஸ்யம்.வாரணாசிக்கும் தொடர்வேன்!

  ReplyDelete
  Replies
  1. வடக்கில் நிறைய இடங்களில் இந்த குல்லட் தான்.

   தங்களது முதல் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி குட்டன்....

   Delete
 11. ஆஹா அப்துல் கலாம் டிரைவர் சகோதரரா??எப்படி எல்லாம் தலைப்பு வைக்கிறீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... அமுதா கிருஷ்ணா அவர்கள் தலைப்பினைப் பார்த்து நம்ம பக்கத்திற்கு நீண்ட நாட்கள் கழித்து வந்திருக்கிறார்கள்... :)

   அதான் தலைப்பு! :)

   தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ அமுதா கிருஷ்ணா.

   Delete
 12. ”அப்துல் கலாமோடு ஒரு பயணம்” - நீங்கள் அப்துல் கலாமோடு பயணித்தீர்கள். நாங்களும்தான் வெங்கட்ராமனோடு பயணிக்கிறோம். எப்ப்பூடி!

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... என்னமா யோசிக்கிறீங்கப்பு!

   சற்றே இடைவெளிக்குப் பிறகு எனது தளத்தில் உங்கள் கருத்துரை. மிக்க மகிழ்ச்சி பத்மநாபன் [ஈஸ்வரன்].

   Delete
 13. நம் முன்னால் ஜனாதிபதியுடன் பயணமோ என்று வந்தால்......:-)

  பயண அனுபவமும் படங்களும் நன்றாக இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்று சுவனப் பிரியன்.

   Delete
 14. நான் நினைச்ச அப்துல்கலாம் இல்லையா... இப்படி ஏமாத்தப்புட்டீங்களே... ஹி... ஹி...

  ReplyDelete
  Replies
  1. ஹி.ஹி... ஏமாந்துட்டீங்களா?

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பாலகணேஷ்.

   Delete
 15. //எங்களது வாகன ஓட்டுனரின் பெயர் அப்துல் கலாம்!//

  இதெல்லாம் ரொம்ப ஓவரு :))

  ReplyDelete
  Replies
  1. //இதெல்லாம் ரொம்ப ஓவரு :))//

   அடடா... நெசம்மாவா சொல்றீக! :))

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன்குமார்.

   Delete
 16. குல்லட் தேநீர் குடித்த சுறுசுறுப்பு உங்கள் பதிவில்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 17. ஆஹா ஆஹா அப்துல்கலாம் சாரோட பயணமா.. அருமைப்பா தலைப்பு இப்படி போட்டு என்னை இங்கே கொண்டு வந்துட்டீங்கப்பா....

  பசியின் கொடுமை உணவகங்களில் காத்திருந்தபோது தான் தெரிந்தது.. ஆமாம் உண்மை தான்.. உணர்ந்திருக்கிறேன்.. முக்கியமா நார்த் சைட் டூர் போகும்போது நான் சந்திக்கும் பிரச்சனைகள் (சுத்தம், உணவு) கொடுமைப்பா... ஆலுபரோட்டா, ஊறுகா, தயிர் செம்ம காம்பினேஷன் தான்... வெங்கட் வயிற்றுப்பசியை தீர்த்த பாபா ஹோட்டல் வாழ்க...

  ஆடிமாதத்தில் இப்படி ஒரு விஷேஷமா.. புதிய விவரம்பா இது எனக்கு...

  அப்ப விக்ரம் கணேஷ் துணையோடு தான் ஊர் சுற்றி பார்த்தேன்னு சொல்லுங்க... ஷேர் ஆட்டோவிலும் இதே கொடுமை தான்... ஸ்கூல் வாஹனா இல்லை முதியோர் வாஹனா? :) டைமிங் டயலாக் ரசித்தேன் வெங்கட்... :)

  இடை இடையே நீங்க பொருத்தமாக படங்கள் இட்டது எங்களுக்கு நேரிலேயே சென்று கண்ட இடங்கள் போன்று தோன்றுகிறதுப்பா..

  லால் என்ன தான் தனக்குன்னு செய்துக்கிட்டாலும் குல்லட் அறிமுகப்படுத்தினது எத்தனை வசதி பாருங்க. ப்ளாஸ்டிக் உடலுக்கு கேடு விளைவிப்பது. மண்பாண்டத்தில் தேனீர் குடிப்பது உடலுக்கு நல்லது.. அதே சமயம்.. நிறைய பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும் தானே இதனால்.. அரசாங்கம் தான் இதற்கு நல்ல வழி கண்டுப்பிடிக்கணும்.. எங்க போனாலும் ப்ளாஸ்டிக் மயமாகிவிட்டது கொடுமைப்பா... குல்லட் பார்க்க அழகா இருக்கு...

  அப்துல் கலாம் என்று பெயர் வைத்துக்கொண்டு இப்படி பான் சாப்பிட்டு சாப்பிட்டு கதவை திறந்து துப்புகிறாரே.. இதே கொடுமை நாங்க துல்ஜாப்பூர் போனப்பவும் அனுபவித்தோம்.. ஆனால் நான் விடலை... ட்ரைவரிடம் நல்லபடி பேசி இறங்கும்வரை அவன் பான் போடவில்லை ( ஆப் மேரி மா ஜெய்சே ஹோ) அப்டின்னு சொல்லிட்டான்பா... பெற்றோருக்கும் மூத்தோருக்கும் அதிக மதிப்பு தருவார்கள் நார்மலா நார்த் சைட் நான் கேள்விப்பட்டவரை....

  ஒருவழியா வாரணாசி வந்து சேர்ந்தீர்களா? உங்களோடு நாங்களும் வந்து சேர்ந்தோம்பா...

  ரசனையுடன் பகிர்ந்த பகிர்வு.... படங்கள் எல்லாம் மிக மிக அருமை... அதோடு டைமிங் டயலாக்... இதெல்லாம் ரசிக்கவைத்தது வெங்கட்...

  அன்பு நன்றிகள் பகிர்வுக்கு வெங்கட்... தொடருங்கள்...


  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ.

   விக்ரம் கணேஷ் வடக்கில் எங்கும் நிறைந்திருக்கும் ஒன்று... குல்லட் நல்ல விஷயம் தான். அதிலும் சில பிரச்சனைகள் என்று தடுத்து நிறுத்திவிட்டார்கள்.

   எங்களது வாகன ஓட்டியுடன் நிறைய பேசினேன். குட்கா போடுவதன் எதிர் விளைவுகள் பற்றிச் சொன்னபோது அவரிடம் அது பற்றி சலனமே இல்லை. கேட்டுக் கொண்டார் - அவ்வளவுதான். அவரது இரட்டைப் பெண் குழந்தைகளும், மனைவியும் கூட சொல்வதாகச் சொன்னார். ம்... திருந்த மனதில்லை.

   தொடர்ந்து படித்து உங்கள் கருத்துகளைத் தொடரவும்.

   Delete
 18. தலைப்பை படிக்கும்போதே சந்தேக பட்டேன். bevakuf banadiya yar.
  விஜய்

  ReplyDelete
  Replies
  1. //bevakuf banadiya yar//

   :)))

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 19. திருவேணி சங்கமத்தில் தொடங்கி காசி பயணிக்கின்றோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 20. //எங்களது வாகன ஓட்டியுடன் நிறைய பேசினேன். குட்கா போடுவதன் எதிர் விளைவுகள் பற்றிச் சொன்னபோது அவரிடம் அது பற்றி சலனமே இல்லை. கேட்டுக் கொண்டார் - அவ்வளவுதான். அவரது இரட்டைப் பெண் குழந்தைகளும், மனைவியும் கூட சொல்வதாகச் சொன்னார். ம்... திருந்த மனதில்லை.//

  உண்மையேப்பா... யாராச்சும் நம்ம கண்முன்னாடி இப்படி கஷ்டப்படும்போது நம்மால சும்மா இருக்கமுடியாது தானே? ஆனா அவங்களுக்கு இது பழக்கமாகி அடிக்டாகி தவிர்க்கவோ நிறுத்தவோ முடியாத எக்ஸ்ட்ரீம் லெவலுக்கு போய்டறாங்கப்பா அதான் :(

  ReplyDelete
  Replies
  1. // ஆனா அவங்களுக்கு இது பழக்கமாகி அடிக்டாகி தவிர்க்கவோ நிறுத்தவோ முடியாத எக்ஸ்ட்ரீம் லெவலுக்கு போய்டறாங்கப்பா அதான் :(//

   உண்மை சகோ. இவரிடம் பேசிய விஷயங்கள் பற்றி கூட எழுத நினைத்திருக்கிறேன்.. பார்கலாம்... வரும் பதிவுகளில் எழுதுகிறேன்.

   Delete
 21. நாங்கள் முதன் முறை 1978லில் காசி போன போது மண்ணால் செய்யப்பட்ட கப்பில் பால், தேநீர் குடித்த நினைவுகள் மறக்க முடியாது. அப்போது ரயில் நிலையத்தில் உள்ள உணவகத்தில் இட்லி சாம்பார் வாங்கிய போது சாம்பார் செம்பு மாதிரி மண் குடுவையில் கொடுத்தார்கள்
  அதை உடைக்க மணம் இல்லாமல் கழுவி வைத்துக் கொண்ட நினைவுகள் வருகிறது உங்கள் பதிவை படித்தவுடன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது நினைவுகளையும் இப்பதிவு மீட்டிருக்கிறது நினைத்து மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 22. கில்லாடி ஐயா...
  ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு போபால் ரயில் நிலையத்தில் குல்லட்டில் டீ குடித்தது நினைவுக்கு வந்தது. அப்போது அதற்கும் எத்தனை எதிர்ப்பு என்பதும் நினைவுக்கு வந்தது.

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான்... குல்லட் வந்த புதிதில் நிறைய எதிர்ப்பும் வந்தது. இப்போதும் வடக்கின் சில பகுதிகளில் குல்லட் தான்!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஷாஜஹான் ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....