எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, August 27, 2012

மகத் எக்ஸ்ப்ரஸில் ஒரு பயணம்

திரிவேணி சங்கமம்காசி பயணம்பகுதி 1[வாரணாசி - பட உதவி : கூகிள்]இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு அலுவலகம் செல்ல விருப்பமில்லாதிருக்கும் ஒரு திங்கள் கிழமைகேரளத்திலிருக்கும் நண்பரிடமிருந்து   “சாரேஅலஹாபாத்-ல் ஒரு பணியுண்டு. அங்கே போகணும். நீங்களும் கூட வாங்கோ சாரேஎன்று மலையாளமும் தமிழும் கலந்த அழைப்பு அலைபேசியில்.  அவருக்கு அலஹாபாத்காசி இரண்டு இடங்களிலும் வேலையிருந்ததால், 28-29, ஜூலை அன்று அலஹாபாத் - காசி செல்ல எனக்கு ஒரு வாய்ப்பு.

பல நேரங்களில் ஒழுங்காக வேலை செய்யாத www.irctc.co.in தளத்தை மேய்ந்ததில் அலஹாபாத் செல்ல எந்த ரயிலிலும் பயணச் சீட்டு இல்லைஎல்லாமே Waitlisted.  இது வேலைக்கு ஆவாதுன்னு வெள்ளி அன்று செல்வதற்கு வியாழன் அன்று காலை 10 மணிக்குதத்கால்மூலம் பயணச் சீட்டு முன்பதிவு செய்தேன்

புது தில்லியிலிருந்து பீஹார் மாநிலத்தில் உள்ள இஸ்லாம்பூர் என்ற இடம் வரை செல்லும் 12402 மகத் எக்ஸ்பிரஸ்-ல் தான் பயணச்சீட்டு கிடைத்தது.  இரவு 08.10-க்குக் கிளம்பும் இந்த ரயில் அலிகர், டுண்ட்லா [பயணத்தின்போது இதன் அருகே இருக்கும்ஏடா” [Etah] எனும் இடத்திற்குச் சென்று வந்த அனுபவங்களை நினைத்துக் கொண்டேன்], ஃபிரோசாபாத், ஷிகோஹாபாத், இடாவா, கான்பூர், வழியாக அடுத்த நாள் காலை 05.10 க்கு 634 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் அலஹாபாத் [இலாஹாபாத் என்றும் இவ்விடத்தைச் சொல்கிறார்கள்] சென்றடைகிறதுவழக்கம்போலவே ரயில் இரண்டு மணி நேரம் தாமதமாக 07.15 மணிக்கு செல்ல, எங்களை [என்னையும் கேரளத்திலிருந்து வந்திருந்த மூன்று நண்பர்களையும்] அலஹாபாத் இருகரம் கூப்பி வரவேற்றது.

நமக்குப் பிடித்த ஏதாவதொரு காய், இலை போன்றவற்றை உபயோகிப்பதை காசியிலேயே விட்டு விடவேண்டுமென பெரியவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்அங்கு போவதற்கு முன்னரேவெட்கத்தினை விட்டுவிடுஎனச் சொல்வது போல, மகத் எக்ஸ்பிரஸின் கழிவறைகளில் தாழ்ப்பாளே இல்லைஎப்போது தான் இவர்கள் ரயில்களையும், நிலையங்களையும் சரியாகப் பராமரிக்கப்போகிறார்களோ தெரியவில்லை!


[திரிவேணி சங்கமத்தில் குளிக்கும் பக்தர்கள்]


அலஹாபாத் நகரத்தில் இரண்டு மூன்று பெரிய ரயில்வே நிலையங்கள் இருக்கின்றனஅதில் அலஹாபாத் ஜங்ஷன் என்ற இடத்தில் இறங்கி வெளியே வந்தால் நிறைய தங்குமிடங்கள் இருக்கின்றனசெல்வதற்கு முன்னரே இந்த ஊரைச் சேர்ந்த வட இந்திய நண்பரிடம் சொல்லி ஏற்பாடுகள் செய்து விட்டோம்அவர் ஏற்பாடு செய்திருந்த தங்குமிடம் வெகு அருகிலேயே இருந்தது

ரயில் நிலையத்திலிருந்து வெளியில் வந்து வடக்குப் பக்கத்தில் நின்றிருந்த ரிக்ஷாக்களில் ஒன்றில் ஏறி   தங்குமிடம் சென்றோம்இரண்டு பேர் உட்கார்ந்து செல்ல கட்டணம் வெறும் ஐந்து ரூபாய் மட்டுமேநாங்கள் பத்து ரூபாய் கொடுத்துவிட்டோம் – “இரண்டு 85 கிலோ தாஜ்மகால்” அமர்ந்து சென்றால் அவருக்குக் கஷ்டம் தானேஐந்து ரூபாய் தானே கேட்டேன், பத்து ரூபாய் வேண்டாமென அவர் சொல்ல, வற்புறுத்தி வைத்துக் கொள்ளச் சொன்னோம்ஆசையில்லாத மனிதர்

ஹோட்டல் பிரயாக்-ல் எங்களுக்கு பதிவு செய்திருந்த அறையில் சென்று தயாராகி, நண்பரின் வேலையை முடித்துக் கொண்டபிறகு ஒரு டாடா இண்டிகோ வாகனத்தினை வாடகைக்கு அமர்த்திக்கொண்டோம். அலஹாபாத் நகரத்திலிருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது காசி, பனாரஸ் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் வாரணாசிமாலையிலேயே எங்களுடன் வந்திருந்த இரண்டு நண்பர்களுக்கு தில்லி திரும்ப வேண்டியதால் விரைவாகச் சென்று மாலைக்குள் அலஹாபாத் திரும்பவேண்டும்அதனால் தான் வாகனம் அமர்த்திக்கொண்டுவிட்டோம்
[வாரணாசி - “G"காட் - ஒரு பார்வை]அலஹாபாத் நகரத்திலிருந்து வாரணாசி வரை செல்ல நிறைய ரயில்களும், பேருந்துகளும் இருக்கின்றனபேருந்துகள் நமது ஊரைப் போல சுத்தமாகவெல்லாம் இருக்காதுமழை பெய்து பேருந்துகளின் பக்கங்களில் படும் சேறு சகதியெல்லாம், அடுத்த மழையில் தான் சுத்தமாகும்.  பயணிகளும் பான் போட்டு, பின் இருக்கையில் இருப்பவர்களுக்கு அபிஷேகம் செய்தபடியே வருவார்கள்அதனால் வாடகை வாகனம் தான் சரியெனப்பட்டது!

பயணத்தின் போது கிடைத்த இனிய அனுபங்கள், பார்த்த காட்சிகள், சுவைத்த உணவு போன்ற விஷயங்களோடு அடுத்த பகுதியில் சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


38 comments:

 1. திரிவேணி சங்கமம் – காசி பயணம் – பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 2. நான் செல்லாத இடங்கள் அவசியம் தொடருங்கள் காத்திருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொரு திங்களும் இதன் அடுத்த பகுதிகள் வெளி வரும்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்.

   Delete
 3. ரொம்ப குட்டியா இருக்கே . டைம் இல்லையோ ??

  ReplyDelete
  Replies
  1. அடுத்த பகுதிகள் சரியான நீளத்தில் இருக்குமென நினைக்கிறேன்...

   தங்களது தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி கார்த்திக்.

   Delete
 4. எனக்கும் இந்த இடங்கள் எல்லாம்
  போகவேண்டும் என்கிற திட்டம் உள்ளது
  ஆகையால தங்கள் பதிவு எனக்கு ஒரு
  நல்ல வழிகாட்டியாக உள்ளது
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ரமணி ஜி. செல்லும் போது சொல்லுங்கள். என்னால் முடிந்த உதவி செய்கிறேன்.

   Delete
 5. Replies
  1. தமிழ்மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி.

   Delete
 6. //நமக்குப் பிடித்த ஏதாவதொரு காய், இலை போன்றவற்றை உபயோகிப்பதை காசியிலேயே விட்டு விடவேண்டுமென பெரியவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கு போவதற்கு முன்னரே ”வெட்கத்தினை விட்டுவிடு” எனச் சொல்வது போல, மகத் எக்ஸ்பிரஸின் கழிவறைகளில் தாழ்ப்பாளே இல்லை! எப்போது தான் இவர்கள் ரயில்களையும், நிலையங்களையும் சரியாகப் பராமரிக்கப்போகிறார்களோ தெரியவில்லை!//

  நல்ல நகைச்சுவை வெங்கட்ஜி. மிகவும் ரஸித்தேன். தொடருங்கள். vgk

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி.

   Delete
 7. தங்களின் பயணக்கட்டுரை படித்தோம், ரசித்தோம்.

  தொடரட்டும் உங்கள் கட்டுரை. வாழ்த்துக்கள்

  விஜய்

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து படிக்க, ரசிக்க வேண்டும் ஜி....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 8. பிரயாண அனுபவம் சுவாரஸ்யமாக ஆரம்பித்திருக்கிறது. அந்த ரிக்ஷாக்காரரின் நேர்மை மனதுக்கு இதமளித்தது. தொடருங்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் ஜி.

   Delete
 9. அடுத்தப் பயணத் தொடரா..நல்லது.

  நல்ல சுவாரசியமானத் துவக்கம்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி சீனு [வெங்கட ஸ்ரீனிவாசன்]....

   Delete
 10. ஐந்து ரூபாய் தானே கேட்டேன், பத்து ரூபாய் வேண்டாமென அவர் சொல்ல, வற்புறுத்தி வைத்துக் கொள்ளச் சொன்னோம். ஆசையில்லாத மனிதர்…//

  ஆமா இல்ல! வட மாநிலங்களில் ஆட்டோக்காரங்களும் மிச்சம் சில்லறையைக் கரெக்டாக் கொடுப்பாங்க. நீங்க வைச்சுக்கோங்கனு சொன்னாக் கூட, ம்ஹும், நாம ஏதோ பிச்சை போடறாப் போல் அவங்களுக்கு அவமானமா இருக்கும். இங்கே எல்லாம் அந்த உணர்ச்சி வருமானே சந்தேகம்! :)))))

  ReplyDelete
  Replies
  1. ஒரு தடவை நெய்வேலில ஒரு காய்கறிக்காரம்மாவிடம் இப்படித்தான் ஆச்சு. 50 பைசா பாக்கி தரணும் - சில்லறை இல்லை அவங்ககிட்ட. பரவாயில்லைம்மா - வைச்சுக்கோங்கன்னு சொன்னவுடனே சண்டைக்கு வந்துட்டாங்க - எனக்கென்ன பிச்சையா போடறேன்னு. அவங்களா பக்கத்து கடைகளில் கேட்டு 50 பைசா தந்துட்டு தான் மறுவேலை!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete
 11. நாங்க 90களின் முடிவிலேயே காசிக்குப் போயிட்டு வந்துட்டோம். அப்போ கணினியை இயக்கத் தெரியும்னாலும் எழுத்தாளியா எல்லாம் ஆகலை. அதான் குறிப்போ, படங்களோ இல்லை. :)))))

  ReplyDelete
  Replies
  1. அடடா... எங்களுக்கு நல்லதொரு பயணக்கட்டுரை மிஸ் ஆயிடுச்சே!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete
 12. ரயில்வே பராமரிப்புக்குத் தென்னிந்திய ரயில்வேயும் சளைத்தது இல்லையாக்கும். கழிப்பறைகளில் கரப்பு, கொசு, மூட்டைப் பூச்சி எல்லாம் குடித்தனம் பண்ணும். ஏசி கோச்சிலேயே உள்ளே கரப்போட தான் படுத்துத் தூங்கும்படியா இருக்கும். எந்த பெர்த்திலும் கிழியாத சீட்டே இருக்காது. தண்ணீர் பாட்டில் வைக்கும் வசதி கொண்ட ஹாங்கர் அறுந்து தொங்கிக் கொண்டிருக்கும். இன்னும் எத்தனை எத்தனையோ வசதிகள். :)))) நம்ம இந்தியன் ரயில்வேயை மிஞ்ச ஆளே இல்லை.

  ReplyDelete
  Replies
  1. இந்தியா முழுதுமே இந்நிலைதான். வடக்கைப் பார்த்தா, தெற்கு கொஞ்சம் தேவலை. அதுவும் பீஹார் பக்கம் போற ரயில் எல்லாம் சுத்தம் பார்த்தால், நம்மால போகவே முடியாது!

   கஷ்டகாலம் - அங்கேயும் நான் போயிருக்கேன் - ஒரு தடவை பட்னா வரை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete
 13. நான் இதுவரைக்கும் காசிக்கு போனதில்லை. நீங்க ஒரு ப்ரொகிராம் போட்டு பதிவர்களையெல்லாம் காசிக்கு அழைத்துக் கொண்டுபோய் விட்டுவிட்டு,சாரி, கொண்டுபோய் கொண்டு வந்து சேர்க்கப் படாதோ?

  ReplyDelete
  Replies
  1. //நீங்க ஒரு ப்ரொகிராம் போட்டு பதிவர்களையெல்லாம் காசிக்கு அழைத்துக் கொண்டுபோய் விட்டுவிட்டு,சாரி, கொண்டுபோய் கொண்டு வந்து சேர்க்கப் படாதோ?//

   அட... இதென்ன பெரிய விஷயம்... நீங்க வாங்க மோகன் அண்ணா. நல்ல சுத்திப் பார்த்துட்டு வரலாம்....

   நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் கருத்துரை. எல்லாம் நலம் தானே....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன் அண்ணா.

   Delete
  2. //மோகன்ஜிAugust 28, 2012 2:44 PM
   நான் இதுவரைக்கும் காசிக்கு போனதில்லை. நீங்க ஒரு ப்ரொகிராம் போட்டு பதிவர்களையெல்லாம் காசிக்கு அழைத்துக் கொண்டுபோய் விட்டுவிட்டு,சாரி, கொண்டுபோய் கொண்டு வந்து சேர்க்கப் படாதோ?//

   ஹை... இது நல்ல ஐடியாவா இருக்கே மோகன் ஜீ...

   Delete
  3. நல்ல ஐடியா தான்... :) நேரமும் கடவுள் கிருபையும் கூடி வந்தால் நிச்சயம் செல்வோம் மோகன்/மஞ்சுபாஷிணி ஜி!

   Delete
 14. வாரணாசி வருகின்றோம்.:)

  ReplyDelete
  Replies
  1. வாங்க மாதேவி....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 15. காசி பயணம் மிக ரசனையுடன் பகிர்ந்திருக்கிறீர்கள் வெங்கட்....

  ஒரு வருடத்திற்கு முன்புவரை காசிக்கு போகணும் இறுதி காலத்தை காசியில் கழிக்கவேண்டும் முக்தி வேண்டும் இப்படி எல்லாம் சொல்லிக்கொண்டிருந்த நான் டிவியில் காசியின் அசுத்தத்தை காண்பித்தபோது மிரண்டு போய்விட்டேன்.. ஐயோ வேணாம் நான் காசிக்கு போகல போகலன்னு சொல்லிக்கிட்டேன்பா...

  ஆனால் நீங்க ட்ரெயின்ல போக ஆரம்பிக்கும்போதே உங்க கலாட்டாவை தொடங்கிட்டீங்களா :) வழக்கம் போல வண்டி இரண்டு மணி நேரம் தாமதம் ஆக :) ரசித்தேன்... அதோடு இலை காய் கனி விடுமும் வெட்கத்தை விட்டு விடுன்னு சொன்ன காரணத்தையும் ரசித்தேன்... ட்ரெயின்ல போகணும்னாலே எனக்கு அலர்ஜி இதனால் தான்...

  ஹாஹா.. எப்படி எப்படி???? இரண்டு 85 கிலோ தாஜ்மஹாலா உங்களுக்கே இது நியாயமா வெங்கட்??? 85 கிலோக்கு பெயர் தாஜ்மஹால் இல்லப்பா திருமலை நாயக்கர் தூண் மஹால்பா :) மனம்விட்டு சிரித்துவிட்டேன்... :)

  சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டின மனிதர் பாவம் :) ஆனாலும் ஆசையே இல்லாத மனிதர் என்ற அந்த டைமிங் பஞ்ச் ரசித்தேன்...

  ஹை... இனிமே காசிக்கு போகணும்னா தில்லி வந்து வெங்கட் வீட்டு கதவை தட்டினால் போறும்.. ஜம்முனு எங்களை கூட்டிட்டு போவீங்க.. இனிமே குவைத் - தில்லி - சென்னை தான்.. :)

  பேருந்துல கூட்டிட்டு போகாம டாட்டா சுமோ வெச்சு கூட்டிட்டு போவீங்க தானே??

  நகைச்சுவை இழையோட பகிர்ந்த இந்த பதிவு மிக மிக அருமை வெங்கட்...

  தொடர்ச்சி பார்த்துட்டு சொல்றேன்பா...

  ReplyDelete
  Replies
  1. // 85 கிலோக்கு பெயர் தாஜ்மஹால் இல்லப்பா திருமலை நாயக்கர் தூண் மஹால்பா :)//

   அது என்னங்க - எல்லாரும் தாஜ்மஹால் 50 கிலோன்னு பாட்டெல்லாம் எழுதறாங்க - சரி நானும் என்னோட எடை வைத்து தாஜ்மஹால்-னு சொல்லிட்டேன் - அது தப்பா :)))

   அது சரி திருமலை நாயக்கர் தூண் - இதை நான் ஆட்சேபிக்கிறேன் - எல்லோரும் இப்படித்தான் சொல்றாங்க - என் மகள் உட்பட - அவள் செல்லமாய் அழைப்பது “மோட்டே லாலா!” - மீ த பாவம்!

   வருகைக்கும் சுவையான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ மஞ்சுபாஷிணி.

   Delete
 16. முதலாவது வாசித்தேன் மற்றது பிறகு வாசிப்பேன். சவையாக உள்ளது.
  கருத்துகளும் படித்தேன் interesting . நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kpvaikkavi.wordpress.com

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாசிப்பிற்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!

   Delete
 17. //அது என்னங்க - எல்லாரும் தாஜ்மஹால் 50 கிலோன்னு பாட்டெல்லாம் எழுதறாங்க - சரி நானும் என்னோட எடை வைத்து தாஜ்மஹால்-னு சொல்லிட்டேன் - அது தப்பா :)))

  அது சரி திருமலை நாயக்கர் தூண் - இதை நான் ஆட்சேபிக்கிறேன் - எல்லோரும் இப்படித்தான் சொல்றாங்க - என் மகள் உட்பட - அவள் செல்லமாய் அழைப்பது “மோட்டே லாலா!” - மீ த பாவம்!

  வருகைக்கும் சுவையான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ மஞ்சுபாஷிணி.//

  ஹுஹும் தப்பே இல்ல மோட்டே லாலா :)

  ReplyDelete
  Replies
  1. //ஹுஹும் தப்பே இல்ல மோட்டே லாலா :)//

   சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொண்டாயே மோட்டே லாலா! :))

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....